ட்விட்டரில் நான்..!
ட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால் பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா.."ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடா?ஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா?"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே......?!
இந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..!கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:
-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும்.! ஒன்னத்தையும் காணோம்!! வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்!#சிங்கம்2
-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோ!But'பாத்து சேத்து சீவிட போறீங்க"&"கப்பல் தரை தட்டுது" செம!#சிங்கம்2
-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..!#சிங்கம்2
-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க?#சிங்கம்2
-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்!இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல!#சிங்கம்2
-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம்! பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா?#சிங்கம்2
-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..!#சிங்கம்2
-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன்! செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3
-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க!#சிங்கம்2
-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!#சிங்கம்2
-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுக!சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்!#சிங்கம்2
-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா?#சிங்கம்2
-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது! #சிங்கம்2
-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்!#சிங்கம்2
-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது..! ஐ ஜஸ்ட் லவ் இட்!#சிங்கம்2
-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்!#சிங்கம்2
-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போல!சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்!#சிங்கம்2
-----------------------------------------------------------------------------------------
டிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.
அன்புடன்,