Showing posts with label சைட். Show all posts
Showing posts with label சைட். Show all posts

Tuesday, February 4, 2014

நண்பிகளுடன் ஒரு கலாட்டா..! 16+

               
                     

'யாரையும் பார்த்தவுடனேயே சூப்பர் பிகரா அட்டுப்பீஸான்னு பார்ப்பது தான் உன்வேலையா?'என்று கடிந்தாள் நண்பி.

'கூடவே என்ன ஜிமிக்கி போட்டிருக்கிறாள்,என்ன கலர் கியூடெக்ஸ் அடிச்சிருக்கிறாள்,என்ன ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கிறாள்,'ஐ ப்ரோ' ஷேப் பண்ணியிருக்கிறாளா,கண்ணுக்கு மை அடித்திருக்கிறாளா,அவள் ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி என்பது பற்றி எல்லாம் கவனித்துவிடுவேன்..

என்ன,சூப்பர் பிகரா அட்டு பிகரான்னு ஒரு அவுட்லைன் சொன்னதுக்கே இப்பிடி திட்டுறியே,மிச்சம் எல்லாம் சொன்னா எவ்ளோ டீப்பா போறாய் நீயி? அப்பிடின்னு கடிச்சு வைச்சிடுவியேன்னு தான் சொல்றதில்லை' ன்னு சொன்னேன்..

ஒரு கணம் மயான அமைதி..
மேசையிலிருந்த பஞ்சர் எங்கோ எறியப்பட்டு நிலத்தில் விழுந்து கிடந்தது...
என் நெற்றியில் லேசாய் இரத்தம்..!

----------------

நண்பர்களுடன் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.நண்பி வீட்டிலிருந்து வடை செய்து கொண்டுவந்திருந்தாள்.

'உப்பு சற்று தூக்கல் தான்..இந்தாங்க எடுத்துக்கோங்க' என்று நீட்டினாள்.
நான் எடுத்துக்கவில்லை.

'ஏன் வடை பிடிக்காதோ?'

'இல்லை,உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லியிருக்காங்க.. உங்க உப்பு வடைய சாப்பிட்டிட்டு,நாள் முழுக்க உங்களையே நினைச்சிக்கிட்டிருக்க முடியாது பாருங்க..நான் சமந்தா கூட ஆல்ரெடி கமிட்டட்'ன்னேன்.

வடையிலிருந்த உப்பும் மிளகாயும் அவள் கோபத்தீ பட்டு வெடித்துச் சிதறின..அப்போது ஆயிரம் குறியீடுகள் ஒன்றுசேர உணர்ந்தேன்.ஆனால் அதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான்..;
..
....
.......

'வடை போச்சே..!

--------------------------------------

தட்டிப்பார்த்தேன்...எழும்பவில்லை.
உலுக்கினேன்..ம்ம்ஹும் எழும்புற மாதிரி தெரியல.

காலங்காத்தால எந்திரிக்கணுமே..என்னாச்சு?
மறுபடி தட்டு தட்டென தட்டி உலுக்கிப்பார்த்தேன்..
ம்ஹும்..ஒருவேளை.....?
ச்சே..அப்படியாய் இருக்காது.சிங்கக்குட்டிலே..!!

அப்புறம் ஏன் எந்திரிக்கல?வெளில தெரிஞ்சா அசிங்கமாயிருமே.. கட்டிக்கப்போற பொண்ணுக்கு தெரிஞ்சா?ம்ம்ஹும் இது சரிப்பட்டு வராது..

பாத்ரூம் போய் ஒரு பக்கட் தண்ணீர் எடுத்துவந்து மேலே ஊத்தினேன்.. 'எந்திரிடா பரதேசி..எட்டு மணியாச்சு..வேலைக்கு போகவேணாம்?'


------------------------------

எப்போதும் பெற்றார்,உறவினர்,அயலவர்களுடன் செல்லும் வைபவங்களில் சைட் அடிப்பதற்கும் சுதந்திரமாக கதைப்பதற்கும் வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவிடுகிறது.எங்கு கண்ணை திருப்பினாலும்,நம் கண்களுடன் சேர்ந்து கூடவே பல ஜோடிக்கண்கள் அந்த பக்கமாக திரும்பும்..!

கடந்த சில காலமாக மேற்கொண்டுவரும் ஆய்வுகளின் பிரகாரம்,இளம் பெண்களைவிட திருமணமாகி ஒரு சிறு குழந்தைக்கு தாயாக இருக்கும் பெண்கள் மிக அழகாக இருக்கின்றார்கள் என உள்மனது சொல்கிறது.

இல்லை,அழகான இளம் பெண்கள் அனைவருமே வெகு சீக்கிரம் திருமணம் முடித்து மிக அழகான அம்மாக்களாக மாறிவிடுகிறார்களா என்ன? பீலிங்க் கொன்பியூஸ்ட்...!


---------------------------------

விளக்கு அடித்திரியில் ஊசலாடி எரிந்துகொண்டிருந்தது..

அணைக்கவா..?நூக்கவா..? என்றேன்..

நூத்துவிடு என்றாள் நண்பி..;எதிர்பார்த்தது தான்!!அணைத்துவிடு என்றால்,எங்கே தன்னை அணைத்துவிடுவான் என்கின்ற பயமோ?

மைந்தன் கொடூரமானவன் தான்..ஆனா பொண்ணுகளுக்கு கிடையாது..!


----------------------------------

            Nazriya Nazim hd Photos
'அங்க கைய வைக்காதே..'என்றேன் கண்டிப்பாக.
அவள் வைத்தாள்...
'ம்ம்ம்ஹும் அப்பிடி வருடாதே...'என்றேன் கூச்சமாக..
வருடினாள்..!

'ஏய்ய்...ஏன் ஆலிவ் Oil தடவிக்கிறே?எனக்கு பிடிக்காது..!'என்றேன்.
'சும்மா இரு உனக்கொண்னுமே தெரியாது..Oil தடவினாத்தான் நல்லா வருடி விடலாம்..!'என்றாள்.வாய் தான் பேசிக்கொண்டிருந்ததே தவிர,கைகள் வருடிக்கொண்டிருந்தன.

'அடியே..இழுத்துவிடாதை..கையோட வந்திட போகுது..'நுள்ளினேன்.
ம்ம்ஹும்,அவள் வேண்டுமென்றே இழுத்துவிட்டாள்..வலித்தது..!

'பரதேசி..பாத்துடி...வலிக்குது..!'
இன்னும் வேகமாக இழுத்தாள்..
அவள் கையோடு வந்தேவிட்டது..!
எழுந்து கண்ணாடியில் பார்த்தேன்..
தலையில் இருந்த கால்வாசி முடியில் அரைவாசி காணாமல் போயிருந்தது..!


-----------------------------------

'போடா லூசு..'என்று நண்பிகள் திட்டும்போது அதில் ஒரு வெட்கமும்,அன்பும்,வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாத ஆயிரத்தெட்டு உணர்வுகளும் கலந்திருக்கும்..!
----------------------------------
ஆடை நீக்கி பருகவா எனக்கேட்டேன்...
ஆடையுடனேயே பருகு என்றாள்;பால்
பெண்பால்..!

-------------------------

                

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்..!
எனக்கு அசைவம் ரொம்ப பிடிக்கும்..

நீ சைவத்துக்கு மாறிவிடு..!
எனக்கு,அசைவதற்கு ரொம்ப பிடிக்கும்..அதனால் முடியாது..

எனக்கு அசைவம் பிடிக்காது..என்னைப்போல் பல பெண்கள் இருக்கிறார்கள்..அசைவம் பிடிக்காமலேயே..!
அசைவம் சாப்பிடாவிட்டாலும்,நீ அசைவம் பற்றி பேசுகின்றாய்.. அசைவம் தவிர்க்க முடியாதது சைவமே..!

நான் சைவம் இருக்கட்டும்..நீ வெறும் சவமே...!
சவத்தில் தான் உன் சைவம் இருக்கிறது பெண்ணே..

சவத்தில் இருந்தாலும் பரவாயில்லை..உன் வசத்தில் இருக்காத வரை.!
என் வசத்தில் நீ இல்லையெனிலும் உன் வாசத்தில் தான் நான் வாசம் செய்கிறேன் தினமும்..!

வாசம் பற்றி பேசாதே..அது நிச்சயம் பூ வாசம் கிடையாது..!
பூ வாசம் புறப்படும் பெண்ணே..அதற்கு 'நாம்'பூ வரைய வேண்டுமாமே?

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்........!


-------------------------------------

                Sugar Lips

'உன்கிட்ட வாய குடுக்கக்கூடாதுடா..நீ ரொம்ப மோசம்'என்றாள் நண்பி.

இது டபுள் மீனிங்கா சிங்கிள் மீனிங்கா என்று இன்னமும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன்..! 
கில்லாடிப் பெண்கள்...!!

----------------------------------

'கீழே பதிச்சு விடுங்கோ..'என்றாள்.

'போதும் போதும்,நேரா விடுங்கோ'என்றாள்.
'மேல கீழ மாறி மாறி விடுங்கோ..'என்றாள்.
'இடைக்க நிப்பாட்டி நிப்பாட்டி போடுங்கோ..'என்றாள்.

'உன்னோட ஏலாது..இந்தா பிடி ரிமோட்டை நீயே வைச்சிக்க'ன்னு சொல்லி ஏ/சி ரிமோட்டை அவள் கையில் திணித்துவிட்டு,விட்டத்தைப் பார்த்து வெறுமனே சிரித்துக்கொண்டான்..!


-------------------------------------
Nazriya Nazim hd Photos

அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள் தான்.

என்ன,80வீதமான பெண்களுக்கு தங்களுக்கு பொருத்தமான ஆடை அணிகலன்களை சரியாக தெரிவுசெய்யத் தெரியவில்லை..!

----------------------------------

'நாயே...குரங்கு..பன்னி..கழுதை'ன்னு ஒரு பொண்ணு என்னை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தாள்.

'பொண்ணுக திட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்..கோபத்தில் அவங்க முகம் கொடுக்கும் Expressions'ஐ ரசித்து,கவனித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் திட்டுவது என் காதில் விழுவதில்லை'என்றேன்.அவள் திட்டுவதை விட்டுவிட்டு என்னசெய்வதென்று முழுசினாள்.

நான் மறுபடி கண்ணடித்தேன்.இம்முறை திட்டு விழவே இல்லை,மாறாக ஒரு புன்னகை..! 


----***-----

Post Comment

Friday, September 7, 2012

தோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா?

                    

ரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்.

சைட் என்றால் என்ன?வீதியிலோ ஆபீசிலோ நீங்கள் செல்லும்,இருக்கும் எந்தவொரு இடத்திலும்,எதிரில் உங்களை கவரக்கூடிய வகையில்  எதிர்பாலினர் யாராவது செல்லும்போது அவர்களை நோக்கி உங்கள் பார்வை செல்லுமாயின் அதனை சைட் எனலாம்.ஆண்கள் சைட் அடிப்பார்கள்,பெண்கள் அப்படி இல்லை என்று இன்னமும் ஆதிகால மனநிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.சைட் அடிப்பது என்பது முன்னைய காலங்களில் ஒரு கெட்ட வார்த்தையாக(!!) கருதப்பட்டு இன்று ஒரு ஸ்டைலிஷான வார்த்தையாகி போய்விட்டது.ஆனால் சங்க காலத்திலிருந்து இது நடந்து வருகிறது என்பது பலருக்கு  தெரிந்த விடயம்.

கிளி என்று சொன்னால்;
பறவையை குறிக்கலாம்
பச்சையை குறிக்கலாம்
மூக்கை குறிக்கலாம்
பெண்ணை குறிக்கலாம்
சமயத்தில் அது 
கிளியையும் குறிக்கலாம்..!(யாரோ)
இதனை போல தான் சைட்டும்.ஒவ்வொருவரை பொறுத்து விளக்கம் மாறுபடலாம்.

ஒரு ஆணுக்கு பெண்கள் மீதும் பெண்ணுக்கு ஆண்கள் மீதும் ஒருவகையான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி.இல்லை இது இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கூற முடியாது.அந்த இயற்கையின் நியதியை நாமாக உருவாக்கி கொண்ட "நட்பு" என்கின்ற உறவால் கட்டுப்படுத்த முடியுமா?ஏலவே காதலின்னு வந்திட்டா நண்பர்களை கழற்றி விட்டுவிடுவார்கள் என்று ஒரு "கெட்ட(?!)" பெயர் காதலிப்பவர்கள் மீது காலம் காலமாய் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.இதற்குள் இது வேறையான்னு பலர் ஜோசிக்கலாம்.

அந்த பிரச்னையை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு இந்த நட்பு வட்டத்துக்குள் வருவோம்.ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனதில் நட்பு நட்பு & நட்பு மட்டும் தானா இருக்கும்,அல்லது ஒருவர் மீது மற்றையவருக்கு ஒரு வித "கிரஷ் (Crush)"ம்  அந்த நட்புடன் சேர்ந்திருக்குமா?குறிப்பாக நான் கூற வருவது காதல் அல்ல,ஒரு வகையான ஈர்ப்பு மட்டுமே.வடிவாய் இருக்கிறான் இருக்கிறாள் என்று ரசிப்பது/சைட் அடிப்பது பற்றி மட்டும் தான் நான் கூறுகிறேன்.அவ்வாறு நண்பனை/நண்பியை சைட் அடிப்பது தப்பா?

நட்புக்குள் காதல் வரக்கூடாது என்று நட்பின் வைராக்கியத்தை கடைப்பிடித்து நட்புக்கு இலக்கணமாய்(?!) இருக்கும் நட்பு "நட்சத்திரங்கள்" கட்டாயம் இதற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டு வரத்தான் போகிறார்கள்.ஆண்களின் குணம் யார் அழகாய் இருந்தாலும் ரசிப்பது தான்."அழகை ரசிப்பது தப்பு கிடையாது" என்று தங்களுக்கே கூறிக்கொண்டு அதனை பெண்கள் மனதில் பதிப்பதிலும் ஆண்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்.அதனால் தான் அவர்களால் பிஞ்சு முதல் கொண்டு பாட்டி வரைக்கும் பயமில்லாமல் ரசிக்க முடிகிறது.அதனை அனுமதிக்கவும்,அனுபவிக்கவும் பெண்கள் கூட பழகிவிட்டனர் இன்றைய காலங்களில்.


தன்னை ஒரு பெண் ரசிக்கிறாள்,சைட் அடிக்கிறாள் என்று பெருமை கொள்ளும் சந்தோசமடையும் ஆணைப்போலவே பெண்களும் தங்களை யாரும் ஆண்கள் சைட் அடிக்கிறார்கள் என்று சந்தோசப்படுகிறாள்,பெருமையடைகிறாள் தன் அழகை நினைத்து.இதை விட இன்னமும் "பெர்போமான்ஸ்" வெளிப்படுத்த வேண்டும் என்று இருபாலாரும் முனைவது இயல்பு.காதலனோ,நண்பனோ,வீதியால் செல்பவனோ,அலுவலகத்தில் வேலை செய்பவனோ,பக்கத்தி வீட்டு லொள்ளு மனிதர்களோ அனைவருமே பெண்களுக்கு "ஆண்கள்" என்கின்ற ஒரு  பெரிய வகுப்புக்குள்ளே அடங்கி விடுகின்றனர்.அதே போலத்தான் பெண்களும்.ஆத்துக்காரியில் இருந்து அடுத்த வீட்டு மாமி வரைக்கும் அனைவரும் ஆண்களை பொறுத்தவரை"பெண்கள்" தான்.

இவ்வுலகை படைத்தது கடவுள் என நம்புவோர்களுக்கு இந்த கண்களையும் அந்த கடவுள் தான் படைத்தான் என்பது சொல்லி தெரியதேவை இல்லை.அவ்வாறு கண்களை படைத்த கடவுள் ஒருவன் யார் யாருடன் நட்பாக இருக்க போகிறான்/போகிறாள் என்பதை முதலே அறிந்து அவர்கள் மீது அந்த "ஈர்ப்பு"/சைட் வராமல் முன்னமேயே அவர்களது மூளையில் பிளானிங் செய்துவிட்டிருப்பாரா என்ன?அல்லது அந்த நட்பு முறிவடைந்த பின்னர் குறித்த முன்னாள் நண்பர்கள்/நண்பிகளை சைட் அடிக்க கூடிய வகையில் ப்ரோக்ராமிங் செய்து விட்டிருப்பாரா?


கடவுளை விடுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு அத்தகைய எண்ணம் மனதில் தோன்றியது?அல்லது ஏலவே திறம்பட சைட் அடித்துக்கொண்டு அதனை வெளியில் மறைத்துக்கொண்டு தான் இங்கு பெரும்பாலான/அனைத்து நண்பர்களும் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.நீங்கள் அவ்வாறு இல்லையானால் கீழே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.உங்கள் உணர்ச்சி நரம்புகளை நிறுத்திவைத்துவிட்டா நண்பர்களுடன் பழகுவீர்கள் என்று அவர்களிடம் கேட்பதாக உசிதம்.

நண்பனோ/நண்பியோ வடிவாய் இருக்கிறான்/ள் என்று பார்க்கையில் தோன்றுவது கூட ஒருவகையான சைட் தான்.இல்லை அதுவல்ல,வெறும் பார்வையோடு இன்னமும் சில மசாலாக்கள் தூவப்பட்டு வெளிப்படுவது சிலரது சைட் என்றும் கூறலாம்.சில பெண்கள் நாங்கள் செய்வது சைட் அடிப்பது தான் என்று தெரியாமலேயே நாங்கள் நண்பர்களை  சைட் அடிப்பதில்லை என்று கூறிக்கொண்டு அந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

நான் உங்களை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு சைட் அடித்து நட்புக்குள் குழப்பங்களை உண்டுபண்ண நான் விரும்பவில்லை.சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம்.இது காதலை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்று பெண்கள் பயப்பிடக்கூடும்.ஆனால் நட்புக்குள் "சைட்டிங்" ரகசியமாய் இருப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் உணர்ச்சிகள் என்பவை பெரும்பாலும் நம் மனதுடன் மூளையுடன் சம்பந்தப்பட்டு வேலை செய்கின்றன.சில உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் ஆனால் முற்றாக இல்லாது ஒழிக்கமுடியாது.அந்த வகையான ஒன்று தான் இந்த நட்புக்குள் "சைட்டிங்".

                                                                    

நான் உன்னை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டே நல்ல நண்பர்களாக இருக்கமுடிகிறது பலரால்.அது ஒவ்வொரு நண்பர்களுக்கும் இடையில் இருக்கும் அந்த நட்பின் வலிமையை பொறுத்து இது அமைகிறது.இல்லை நாங்கள் நண்பர்கள்.இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று ஆகமத்தில் கூறி இருக்கிறார்கள்,ஆச்சியம்மா கூறி இருக்கிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இதனை புரியவைக்க முடியாது.

இன்னமும் சில நண்பிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது,"நட்புக்குள் அப்பிடி தோன்றாது,தோன்றினாலும் நண்பன் என்ற எண்ணம் அதனை தடுத்துவிடும்" என்றார்கள்.சைட்டிங் என்பது ஒரு கண நேர ஒர்மோன் விளையாட்டு.அந்த உணர்வு தோன்றிய பின்னர் தான் அந்த நண்பன்/நண்பி என்கின்ற எண்ணம் வந்து அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போவதை தடுக்கிறது.சைட்டிங் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது.ஆனால் நட்பு என்கின்ற உணர்வால் அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போகாமல் தடுக்கமுடியும். 

இந்த நட்புக்குள் சைட்டிங் தப்பில்லை,தவிர்க்கமுடியாதது  என்று நான் கூறுகிறேன்,தப்பு என்று யாராவது கூற இருப்பின் தெளிவான விளக்கங்களுடன் கூறுங்கள்."ஆஹா இவன் இப்பிடியானவனா,இவன் கூடவா நட்புடன் இருந்தோம்"னு நினைக்கின்ற நண்பிகள் தங்களது நட்பு ஒப்பந்தத்தை இத்துடனே கிழித்து எறிந்துவிடலாம்.உங்களுக்கு பூரண அனுமதி உண்டு.ஆனால் நானும் ஒரு ஆண்,எதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்க போகும் நண்பனும் ஒரு ஆண் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஒன்றை மட்டும் அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்;
 "அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!!

என்றும் இயல்பான நட்புடன், 


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...