பொழுதுசாய,கடற்கரை வீதியில் தாம் பிடித்த இறால் நண்டு மீன் போன்றவற்றை சில மீனவர்கள் வைத்து விற்பது வழக்கம்.அப்படித்தான் ஒருவர் நண்டு வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரும் வாங்குவதாக தெரியவில்லை.
என்ன விலை என்று விசாரித்தால் 400ரூபாய் என்றார்.படிந்து 300 ரூபா கிலோ என்றார்.இதுவே வெள்ளவத்தை மீன் கடைகளிலோ,சூப்பர் மார்க்கெட்டிலோ வாங்குவதாயின் எப்படியும் கிலோ 800 தேறும்.வத்தல் தொத்தல் போக,எஞ்சுவது லாபம் என்று 'இரண்டு கிலோ போடுங்கோ' என்று கேட்டேன்.
என் அனுமதி இல்லாமலே 3கிலோ போட்டு பையை முடிச்சுப்போட்டு நீட்டினார்.4,5 நாட்களாவது ப்ரிட்ஜில் வைத்து சமைக்கலாம்தானே என்று அதை வாங்கிக்கொண்டு நடக்க வெளிக்கிட்டேன்.அவரும் என் பின்னாலே வந்தார்.ஆடு சிக்கிரிச்சுன்னு நினைத்தாரோ என்னமோ,'தம்பி இதையும் பிடியுங்க,இனி யாருக்கு விக்கிறது..200ரூபா தாங்கோ'என்றார்.
எப்படியும் அதில் 2கிலோ தேறும்போல் தெரிந்தது.சரி ஐந்து நாளைக்கு நண்டுமயம் தான் என்று அதையும் வாங்கிக் கொண்டேன்.வீட்டிற்கு கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஸ்டேடஸ் போடுவோமென்று உட்கார்ந்தால், குசினியில் நண்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார். என்னவென்று எட்டிப் பார்த்தால்,ஐந்துகிலோ நண்டில் இரண்டு கிலோ தான் தேறுமாம்.மிச்சம் எல்லாம் வத்தல்,தொத்தல்,கழிவுகளாம்.சரி, எப்படிப் பார்த்தாலும் லாபம் தானேயென்று இல்லாத மீசையை உருவிவிட்டுக்கொண்டேன்.எல்லாம் அனுபவம் தானே!
ஆடுகள் உருவாவதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்.ஆங்ங்க்!
0 comments:
Post a Comment