Monday, January 31, 2011

பெண்கள் கவிதையா உங்களுக்கு?


கவிதையாம் பெண்!!
கவிதையாய் சிரிக்கிறாய் நீ..
பாடசாலையில் ஒருவன்..
கவிதையாய் இருக்கிறாய் ..
சீரியசாய் திரிந்த ஒருவன்..
கவிதைக்கு இலக்கணம் நீயடி..
உரிமையோடு இவன்..
கவிதையே நீ தான் என்றார்கள்..
உங்களில் சிலர்..

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

என்னை பிடித்திருந்தது
பலருக்கு..
எனக்கு என்ன பிடிக்குமென்று
தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!
கவிதையே நீயடி எனில்..
என்ன தான் புரியும் எனக்கு?

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

என் நடையிலே கவிதையாம்..
கால்கள் என்ன ஏந்துகை மோனையா?
என் கூந்தலே கவிதையாம்..
கூந்தல் என்ன குறளோவியமா?
என் வதனமே கவிதையாம்..
வதனமென்ன வளர்மதியா?
உதடுகள் ஹைக்கூ கவிதையாம்..
உங்கள் ஹைக்கூ போலே கேவலமாயா?

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

ஆண்களுக்கு பெண்ணென்றால்
கவிதை தானா?
பின்னர் எதற்கு கவிஞர்கள் தான்
பின்னெதற்கு கவிதைகள் தாம்!!
கவிதையாம் பெண்..!

டிஸ்கி:ஒரு பெண்ணின் கேள்வி...எனதல்ல!
என்னடா இவன் இப்பிடி எழுதுறானே எண்டு ஜோசிக்க கூடாது பாருங்க!

Post Comment

Friday, January 28, 2011

ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி??Plz Ans??



இலங்கை அவுஸ்திரேலியா மேட்ச் எண்டு அடுத்த மாசம் அந்தரப்பட்டு அவசரப்பட்டு மிச்ச வேலை எல்லாம் முடிச்சு நொறுக்குத் தீனி,தாகத்துக்கு எதாச்சுமேண்டு கொண்டு வந்து டி வி'க்கு முன்னால உக்கார்ந்தா டில்ஷான் அந்தரப்பட்டு ரெண்டாவது போல்'லையே தூக்கி குடுத்திட்டு போவார்...
அப்புறம் சர சர எண்டு விக்கட் போயி ஒரு கட்டத்தில 65 /4 எண்டு நிக்கும் ஸ்கோர் போர்ட் பாருங்க..
ஏன் நமக்கு மட்டும் இப்பிடி நடக்குது?

எங்காச்சும் ரோடு'ல அங்க இங்க எண்டு ஒண்டு ரெண்டு சூப்பர் பிகருகள் தான் வருங்க ஒரு நாளைக்கு ..அதுகள சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா அந்த நேரம் பார்த்து நம்மட மொக்க பிரண்டு யாராச்சும் வந்து இவளையாடா சைட் அடிக்கிறாய் இவள் ஒரு சப்ப பிகருடா எண்டு காரியத்த கெடுப்பான் பாருங்க..
ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?

எவனாச்சும் வந்து நம்கிட்ட அட்வைஸ் கேட்டுகிட்டு நிப்பான் நம்மளையும் பெரிய மனுஷனாட்டம் மதிச்சு..அந்த நேரத்தில ஒரு கொரங்கு பய வந்து அடே ஒரு தம் இருந்தா குடுடா எண்டுவான் பாருங்க..ஏன்டா இவனுக்கெல்லாம் ப்ரெண்டா இருக்கம்னு தொணும்க..

அப்ப தான் ஏதாச்சும் பதிவு போடுவமே..நாலஞ்சு நாளாச்சு பதிவு போட்டு ஒரு ஈ காக்கா வருதில்ல நம்ம ப்ளாக்'குக்கு எண்டு கம்பியூட்டர் முன்னாடி உக்கார்ந்தா அந்த நேரம் பார்த்து அம்மா ரூமுக்க வந்து வெட்டிப்பயலே ஒவ்வொரு நாளும் இதே தொழிலாப் போச்சு எண்டு பரவை முனியம்மா ரேஞ்'க்கு அறிக்கை விடுவா பாருங்க.. ஏன்டா மனுசனா பிறந்தோம்னு இருக்கும்க எனக்கு..



நாமளும் ஊர்ல ரொம்ப பவுசான ஆளுன்னு காட்டுறதுக்காக வெள்ளை வேளேர்ன்னு சட்டை போட்டுக்கிட்டு போவம்..அன்னைக்குன்னு சும்மா இருந்த காக்கா வடை கிடைக்காத கடுப்பில என் மேல வேலைய காட்டும் பாருங்க..பவுசுக்காக இதுகளோட பண்ணுற ரவுசு போதும்னு ஆகிடும் எனக்கு.ஏன் எனக்கு மட்டும் இப்பிடி?

சூடு சூடா பேஸ் புக்கில ஏதாச்சும் ஸ்டேடஸ் போடுவம் நல்லா கமெண்டு வரட்டுமே எண்டு போட்டா ..அன்னிக்கிண்டு எல்லா பய புள்ளைகளும் எங்க போவாங்கன்னே தெரியாது ஒரு பய வரமாட்டான் கமெண்டு பண்ண..
ஒரு ஸ்டேடஸ்'ஸ போட நாம எம்புட்டு பாடு படுவம்ன்னு ஜோசிக்காமலே போய்டுவாங்க பயலுக..ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?


இது எனக்கு மட்டும் தானா இல்ல உங்களுக்குமா??


Post Comment

Thursday, January 27, 2011

ஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's!!

ஹன்சிகா மோத்வானி.........
தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி...
வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அதை விட முக்கியமாக கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுக்கிறாராம்.
பிரபுதேவாவுடன் கிசு கிசு என்று வேறு பிரபலம்...
தனுஷுடன் மாப்பி்ள்ளை படத்தில் ஜோடி சேர்ந்த ஹன்சிகா, அடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக விஜய்யுடன் வேலாயுதம் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்.
அப்படி பிரபலமான நம்ம (இனி நம்ம தானே!) ஹீரோயின் ஹன்சிகா மொத்வானியின் புதிய படங்கள்...

1)
2)
3)
4)
5)
6)
மூச்சு எடுக்க மறந்திட்டீங்க நண்பர்ஸ்..மூச்செடுத்திட்டு...நெக்ஸ்ட்'டு!
7)
8)
9)
10)
11)
12)
13)
14)
15)
இறுதியா நம்ம ஐசு...
\

இப்ப லேட்டஸ்ட்'டா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "ஒரு கல் ஒரு கண்ணாடி" திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா ..
நீங்க மட்டும் குளு குளுன்னு இருந்தா போதுமா??மத்தவங்களும் இருக்க வேணாம்?அப்பிடியே ஒரு ஓட்டு போட்டிட்டு போங்க..
படங்கள பாத்தவுடன ஏதாச்சும் சொல்ல தோணிச்சுன்னா கீழே கிறுக்கீட்டு
போங்க பாஸ்!

Post Comment

Wednesday, January 26, 2011

சிங்கை அரசர்களின் அறுவை மருத்துவம்-நூல் வெளியீடு

அருந்தமிழ்க் கலைகளுள் அரியதான மருத்துவ விஞ்ஞானம் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.மானிட,தேவ மருத்துவங்கள் இன்றும் உயர்ந்த நிலையில் பேணப்பட்டு வருகின்றன!மருத்துவக் கல்விமுறையும் கலாநிதிப் பட்டம் வரையில் வளர்ந்துள்ளது.ஆசுர மருத்துவம் எனப்படும் அறுவைச்சிகிச்சை முறை மறக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

அந்நியர் ஆட்சியில் எமது பண்டைய மருத்துவம் மறுக்கப்பட்டதாலும்,இடையூறுகள்,தடைகள் ஏற்படுத்தப்பட்டமையாலும் ஆசுர மருத்துவம் வழக்கிழந்தும் சிறப்பிழந்தும் வருகிறது.
அறுவை மருத்துவத்தில் பெயரும் புகழும் பெற்றிருந்த சிங்கை அரசர்கள் இருபதாம் நூற்றாண்டு வரை மேன்னாட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்களைக் கூட வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்குக!



அரசர்கள் அறுவைச்சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்ய பயன்படுத்திய கத்தி,கருவிகள்,உடலை விறைக்கச் செய்ய பயன்படுத்திய மருந்துகள்,அறுவைக்குரிய நேரங்கள்,உணவு பத்தியங்களை,இத்துறையில் ஆழ்ந்த புலமையும் அறிவும் கொண்ட சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் வழிவந்தவருமாகிய இளவரசர் இராஜசேகரம் மனித சமுதாய நன்மைக்காகவும்,மேன்மைக்காகவும் இந்த நூலை வெளியிடவுள்ளார்.
தமிழ் அறுவை மருத்துவம் மீண்டும் உயிர் பெறவும்,தமிழர் நன்மையடையவும் இந்த நூல் பெரும் உதவி புரியுமென்பது திண்ணம்.

இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு சி.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்து நூலை வெளியிட்டுவைக்கவுள்ளார் .
எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளோர்,ஆர்வலர்கள் வந்து பங்குபெற்ற அழைக்கப்படுகின்றனர்.

Post Comment

Monday, January 24, 2011

பதான் அதிரடி!தென்னாபிரிக்கா தொடர் வெற்றி!!

தென்னாபிரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.ஏற்கனவே 2-2என்று சமப்பட்டிருந்த தொடரில் இறுதிப் போட்டியை வென்றால் தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றிய சாதனையை படைக்கலாம் என்ற முனைப்போடு இந்திய அணி நேற்றைய போட்டியில் களமிறங்கியது.

டாஸ்'இல் வென்ற தோனி கலைத்து அடிப்பது இலகு என்று நினைத்து
களத்தடுப்பை தேர்வுசெய்ய துடுப்பாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கட்டாக தலைவர் ஸ்மித் ஜாகிர் கானின் பந்தில் எழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வான் வயிக்'குடன்(என்ன பெயருகளோ!)ஜோடி சேர்ந்த அம்லா 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றார்.அந்த ஜோடியை விழுத்த வேகப்பந்துவேச்சாளர்களுக்கு முடியாமல் போக யுவராஜ் சிங் வான் வயிக்'கை 56 ஓட்டங்களுடனும்,பின்னர் வந்த டீ வில்லியர்ஸ்'ஐயும் பவிலியன் திருப்பினார்.அடுத்து வந்த டுமினியும் அம்லாவும் நான்காம் விக்கட்டுக்காக சத இணைப்பாட்டம் புரிய,42 ஆவது ஓவரில் மழை வந்து குழப்பியது.
46 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு மழை முடிய மீண்டும் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி தான்!!
இறுதி நான்கு ஓவர்களில் ஆறு விக்கட்டுகள் பறிபோய் இருந்தன!சஹீரும் பட்டேலும் தலா 2 ,3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.அம்லா இறுதிவரை ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களை குவித்திருந்தார்!!
இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பண்ணி இருந்தார் மனிதர் இந்த தொடரில்!

பாய்ந்து பாய்ந்து அடிப்பதென்பது இது தானோ??

46 ஓவரில் 268 என்னும் இலக்கு டக் வேர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.அடுத்து களமிறங்கியது இந்திய அணி.
ரோகித்,க்ஹோலி,டோனி,ரெய்னா.யுவராஜ் என இந்தியாவின் முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி ஒரு கட்டத்தில் 74 /6 எனவும்,ஹர்பஜன்,சாவ்லா ஆட்டமிழக்க 119 ஓட்டங்களுக்கு 8 விக்கட் என்று பரிதாபமாக காணப்பட்டது.
களத்தில் அதிரடி யூசுப் பதானும்,சாகிர் கானும்!
தொடங்கினார் பாருங்கள் யூசுப்,தென்னாபிரிக்க அணியினர் மட்டுமன்றி பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் கலக்கமோ கலக்கம்.
சிக்ஸ் சிக்ஸ் என ஆறு ஓட்டங்கள் பறந்தன.உடம்பில் என்ன ஒரு சக்தி!!முரட்டு உடம்பு,நம்ம மத்தியூஸ் மாதிரி..
அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்கியது.தென்னாபிரிக்காவின் புதிய புயல் சொத்சொபெயின் ஓவர் ஒன்றுக்கு இரண்டு ஆறு ஓட்டம்,இரண்டு நான்கு ஓட்டமென 21 ஓட்டங்களை பெற்றபோது இந்திய அணி ரசிகர்களை பார்க்கவேண்டும்!!
அந்த ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார் வெறுமனே 68 பந்துகளில்!!

முரட்டு மனிதன்!

யூசுப் நிற்கும் மட்டும் வெற்றி நிச்சயமில்லை என்ற நிலையில்,௦ 50 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் பந்து வீச மோர்க்கலை ஸ்மித் அழைத்தார்.
அப்புறமென்ன அந்த ஓவரில் மோர்க்கல் தனது நான்காவது விக்கட்டாக யூசுப்'ஐ பெற்றார்!ஒன்பதாவது விக்கட்டுக்காக யூசுப்'பும்,சஹீரும் 100 ௦௦ ஓட்டங்களை பெற்றனர்!!
அம்மாடி என்று பெருமூச்சு விட்டனர் தென்னாபிரிக்க வீரர்கள்!பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிக்குள்ளாலே அந்த மூச்சு சத்தம் கேட்டதென்றால் பாருங்கள் எப்படி என்று!
இறுதியாக நாற்பதாவது ஓவரில் 35 ஓட்டங்கள் தேவையான நிலையில் தோல்வியைத் தழுவியது இந்தியா!
தோனி,யுவராஜ்,ரோகித்,ரெய்னா,விஜய் என ஒருவர் கூட சோபிக்கவில்லை இந்தத் தொடரில்.துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்!
ஹோலியும்,பதானும் ஓகே.
ஷேவாக்,கம்பீர்,சச்சின் வந்த பின்னர் உருப்படுமா?பார்ப்போம் பொறுத்திருந்து.

போட்டி நாயகனாக அம்லாவும்,தொடர் நாயகனாக மோர்க்கலும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடர் 3 -2 என்று தென்னாபிரிக்கவசமானது.இந்தியாவின் கனவு கலைந்தது.இந்தியா வென்ற இரண்டு போட்டிகளுமே மிகச் சொற்ப வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.இரண்டு அணியினதும் பலம்,பலவீனங்களை அறிய இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

ஒன்றிணைந்த வெற்றி!!

கவலை:
-உலகக்கிண்ணம் நெருங்கும் வேளையில் அவுஸ்திரேலியா
பூஸ்ட்,போன்விட்டா,ஹோர்லிக்ஸ் என்று உற்சாகம் வழங்கிவிட்டு வந்திருக்கிறது இங்கிலாந்து..இனி என்ன ஆகப் போகுதோ...மீண்டும் மஞ்சள் சட்டை இறுதிப் போட்டிகளில் தென்படப் போகிறதோ?

-உலகக்கிண்ண முப்பது பேர் குழாமில் இணைத்து பின்னர் இறுதி குழாமில் இணைக்கப்படாத சமிந்த வாஸ்,அண்மையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விக்கட்டுகளை சாய்த்துள்ளார்.
சும்மாவேனும் எடுத்திருக்கலாமோ இறுதி அணியில்..உதவியிருக்கக் கூடும்!


Post Comment

Saturday, January 22, 2011

பிரபல பிரபலங்களின் வீடியோக்கள்-(1)!!


பிரபலங்களின் பிரபல நிகழ்வுகளின் வீடியோக்கள் மற்றும் நெஞ்சை விட்டகலாத பிரபல நிகழ்வுகள் சிலவற்றின் நினைவுகள் போன்றனவற்றை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

1.ஐஸ்வர்யா ராய்..
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதியில் கர்நாடகாவில் பிறந்த அழகு தேவதை!
உலக அழகிப் பட்டம் சூடி 1994 இல் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.அன்று இருந்ததைப் போலவே இன்றும்..அழகு குறையாமல்!!
பதினாறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது!பதினாறு வருடங்களின் முன்னர் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்..சிலர் பிறந்து கூட இருந்திருக்கமாட்டார்கள்!!




2.1996 கிரிக்கட் உலகக்கிண்ணம் இலங்கை அணி வென்ற போது..!
நேற்று நடந்தது போல் உள்ளது இன்னமும் கண்களுக்குள்.இம்முறை மீண்டும் நடக்குமா?
இந்திய துணைக் கண்ட நாடுகள் போட்டிகளை நடத்துவதால் அவற்றிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.பார்க்கலாம்!
இந்தியாவுக்கு கிடைத்து இருபத்தேழு வருடங்களுக்கு மேலாகிவிட்டன!!..



3.இளவரசர் சார்ல்ஸ்,டயானா திருமணம் (1981)
அப்பவே ஆடம்பரத்தை பாருங்கள் திருமணத்தில்!டயானா எனும் தேவதை...இப்போது இல்லை!பிரிட்டிஷ் அரச குடும்பமே அவரால் அழகுபெற்றிருந்தது!துரதிர்ஷ்டவசமாகவோ திட்டமிடப்பட்டோ அவரின் மரணம் கார் விபத்தொன்றில் 1997 ஆகஸ்ட் 31 இல் பாரிஸில் முடிவடைந்துவிட்டது.அந்தக் காரில் அவருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட டோடி பயிட்'டும்,கார் ஓட்டுனர் ஹென்றி போல்'லும் இருந்திருந்தனர்.!


4.புரூஸ் லீ'யின் மரணச்சடங்கு ..
இப்போதும் கவலை அடையச் செய்யும் அவரின் மரணத்தை நினைத்தால்.பல மர்மங்கள் அந்த மரணத்துள்.
அதிக காலம் வாழ்ந்திருந்தால் எத்தனை கராத்தே படங்களை ரசித்திருக்க முடியும்!
"எண்டு ஒப் த டிராகன்"..எனக்கு மிகவும் பிடித்த அவரின் படம்!

5.ஆர்னோல்ட் ச்வாஷ்னேகரின் உடல் கட்டு Mr.olympia 1975
1975 இல்!!எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!அவர் படங்கள் நடிக்கும் காலத்தில் நாங்கள் ரசிகர்களாக இருந்ததில் பெருமை!
இவரின் அரசியல் பிரவேசம் அவரது படங்களுக்கு மூடுவிழாவாய் அமைந்துவிட்டது!
வரும் காலத்தில் அமெரிக்க சனாதிபதியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!கலிபோர்னியாவின் ஆளுநர்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில் அமெரிக்காவின் சனாதிபதியாகிய வரலாறுகள் அதிகம்!!


6.கடலினுள் அமிழ்ந்த டைட்டானிக் கப்பலின் இன்றைய நிலை !!
சோகம்..
பிரித்தானியாவின் ஆடம்பர கப்பலான டைடானிக் தனது முதல் பயணத்தை சவுத்தம்ப்டனிலிருந்து நியு யார்க் சிட்டிக்கு பயணிக்கும் வேளையில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ,13 ஆம் தேதிகளில் கடலினுள் மூழ்கியது.1517 பேர் மரணித்திருந்தனர்!
பல ஆஸ்கார் விருதுகள் பெற காரணமான மிகப் பெரிய மரணம்!!
இப்போது இரும்பு தின்னும் பக்டீரியாக்களினால் உணவாக உன்னப்படுகிரதாம்.இன்னமும் சில வருடங்களில் காணாமல் போய்விடுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்!!


பதிவு பிடித்திருக்குமென நினைக்கிறேன்..இவ்வாறு ஒவ்வொரு வாரமும் பிரபலங்களின் பிரபல்ய வீடியோ காட்சிகள் உங்களுக்காக தரலாமென இருக்கிறேன்.காரணம் பல பிரபலங்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத்தொடங்கிவிடுகிறனர்.அத்துடன் சம்பவங்களும் கூட!
அதனால் அதனை மீளவும் ஞாபகப்படுத்தினால் மீள சப்பைகொட்ட உதவியாக இருக்குமே என்று தான் ஹிஹி !!

Post Comment

Wednesday, January 19, 2011

காவலன்-தளபதிக்கு எப்படி அனுபவம்??




காவலன்...
எத்தனை எதிர்ப்புகள் எத்தனை வஞ்சனைகள்..எத்தனை தடைகள்..
அத்தனையையும் தாண்டி உலகெங்கும் திரையில் வெற்றிநடை போடுகிறது.(லண்டனில் வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ்)!
பிரபல எழுத்தாளரும் "துக்ளக்"பத்திரிகை ஆசிரியருமான "சோ"ராமசாமி காவலன் பற்றி குறிப்பிடுகையில்,
"எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜனி,கமல் போன்ற எந்தவொரு நடிகருக்கும் இந்தளவு எதிர்ப்பு இருந்ததில்லை.ஆளும் கட்சியே எதிர்க்கட்சியாக இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை.ஒரு குடும்பம் தனி ஒரு மனிதனுக்கு தந்த இடையூறுகளுக்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்..இனியும் கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சோ" யார் ஆதரவாளன் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அவர் கூறியது முற்றிலும் உண்மை.பொங்கல் ரிலீஸ் என்று இருந்த படம்(அதற்கு முன்னரேயே வர வேண்டியது)பொங்கல் தாண்டி தான் வெளியாகி இருக்குமளவுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன!

ஒன்று இரண்டு அல்ல,அனைத்துப் பக்கத்தாலும் எதிர்ப்புகள்.
உண்மையில் விஜய் இப்போது அரசியல் வருவது விஜய் ரசிகனான எனக்கு முற்றிலும் பிடித்திருக்கவில்லை.சினிமாவில் ஒரு தளம்பாத இடத்தை பிடித்துவிட்டு வேண்டுமானால் அதன் பின்னர் அரசியல் போகட்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.ஆனால் காவலன் படத்திற்கு கிடைத்த எதிர்ப்புகளைப் பார்த்துவிட்டு விஜய் அரசியலில் தீவிரம் காட்டினால் எனக்கு மௌனமே பதில்.முடிவை ஆட்சேபிக்க முடியாது.

விஜய்க்கு எதிரான இந்த சதிகள் யாவற்றிற்கும் காரணம் பின்னணியில் அரசியலே ஆகும்.விஜய்யே நேரில் தலையிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுமளவுக்கு முயற்ச்சிகள் நடந்தேறியுள்ளன.
விஜய்யின் ரசிகர்கள் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி ஆறாம் தேதி திருச்சியில் கூடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நிச்சயமாக அனைத்து ரசிகர்களும் திரள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்த தினத்தில் வெளியாகாததால் கடுப்பான ரசிகர்கள் பேரூந்துகளை உடைத்தும் சன் போஸ்டர்களை கிழித்தும் ஆவேசமடைந்துள்ளனர்.
ஆட்சி ஆட்டம் பிடிக்கும் இந்தத் தருணத்தில் தி மு க அரசு இன்னமும் எதிர்ப்புகளை சந்திக்கப் போகிறது என்பதே உண்மை.
காவலன் திரையிடுவதற்கு திரையரங்குகள் தர மறுத்த உரிமையாளர்கள் வீட்டிலே ரூம் போட்டுத் தான் அழவேண்டிய நிலை.
அடுத்த படமான வேலாயுதம் படமும் அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் பெருத்த இலாபத்தை அரசியலுக்காக இழந்த பெருமை அவர்களையே சாரப்போகிறது.

திரையரங்குகளே கிடைக்காது என்ற நிலையிலிருந்த காவலன் தான் இறுதியில் 350௦-400௦௦ திரையரங்குகளில் வெளியாகிஉள்ளது.மற்றைய பொங்கல் வெளியீடுகளான ஆடுகளம்,சிறுத்தை போன்றன அதை விட குறைந்த தியேட்டர்களிலேயே வெளியாகியுள்ளது.இத்தனைக்கும் ஆடுகளம் சன் பிக்செர்ஸ்'ஆல் வெளியிடப்பட்டிருந்தும் கூட.....என்னத்தை சொல்ல?வேலாயுதத்துக்கு வருவீங்க இல்லே!!அப்ப பார்த்துக் கொள்கிறோம்!
இதைப்பற்றி எழுதினால் பல அரசியல் பதிவுகள் போடக்கூடிய அளவுக்கு எழுதலாம்.அத்தனை விடயங்கள் நடந்தேறியுள்ளன.
தி மு க,அ தி மு க சாராத புதிய கூட்டணி ஒன்று தமிழ் நாட்டில் எதிர்பார்க்கிறேன்..ஆனால் இலவசங்களை நம்பியே ஓட்டுப் போடும் மக்கள் இருக்கும் மட்டும் அது நிச்சயமாக சாத்தியமாகப் போவதில்லை.ஏனெனில் எம் ஜி ஆர் திரும்பவும் பிறக்கப்போவதில்லையே!!

எல்லாம் சரி காவலன் படம் எப்படி??
மாபெரும் வெற்றி!!சூப்பர் ஹிட் படம்!!மெகா ஹிட் படம்!!
விஜய் ரசிகன் என்பதனால் அப்படி என்று சொல்லமாட்டேன்..வெற்றி கிடைக்கும் படம் தான் காவலன்!
நிச்சயமாக தோல்வி இல்லை.அது மாபெரும் வெற்றியா சாதாரண வெற்றியா என்பதை முதல் இரண்டு மூன்று நாட்களில் கூறிவிட முடியாது.ஒரு இரண்டு மூன்று கிழமை போன பின்னர் கூறுவோம் அதன் வெற்றி பற்றி!
தொடர் தோல்விகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி.அது போதும் இப்போது விஜய்க்கு,ரசிகர்களுக்கும் தான்..
அடுத்து வரும் படங்கள் மேல் குறிப்பிட்ட வெற்றி பெறுவதற்கான ஆரம்பம் இது என என்னால் கூற முடியும்.

அடிமட்ட விஜய் ரசிகனாக அடிதடிகள் ஆர்ப்பாட்டங்கள் தான் விஜய் என்று நம்பும் ரசிகர்களுக்கு காவலன் பிடித்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாக உண்மையான சினிமா ரசிகன் மற்றும் லவ் ஸ்டோரி படங்கள் பார்க்கப் பிடிக்கும் ரசிகர்களுக்கு,அவர்கள் விஜய்க்கு எதிரானவர்கள் என்றாலும் கூட கட்டாயமாக படம் பிடித்திருக்கும்.
வழமையாக விஜய் படங்களுக்கு வரும் பெண்கள்,குழந்தைகள் கூட்டம் இம்முறை சற்று அதிகமாகவே கண்ணுக்குப் படுகின்றது.
குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய நகைச்சுவை,காதல்,செண்டிமெண்ட் கலந்த அழகிய தமிழ் சினிமா படம் காவலன்!!
கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் விடாதவர்கள் குறைவு!விஜய்யை முழுமையாக மாற்றியிருந்தார் சித்திக்!!
அழகாகவும் தெரிகிறார் விஜய்.நடித்திருக்கிறார்.அசின்,ராஜ்கிரணும் நடிப்பில் பிரகாசித்திருக்கிறனர்.வடிவேலு வரும் காட்சிகள் கலகல.
சித்திக் படம் என்பதால் படம் முழுவதுமாய் காமெடி பரவிக்கிடக்கிறது.அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம்.
போட்டிக்கு சிறுத்தை,ஆடுகளம் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அனைத்தையும் தாண்டி காவலன் வெற்றி பெறும் என்பது திண்ணம்.

கேபிள் அண்ணன் கூட தனது விமர்சனத்தில் காவலன் அவரேஜ்(விஜய் ரசிகர்களுக்காக) அப்படி குறிப்பிட்டிருந்தார்.பெரும்பாலானோர் சந்தேகக் கண்ணோடு படம் பார்க்கச் சென்று குறைகள் பெரும்பாலும் இல்லை(குறைவு)என்றபோதிலும் தங்கள் திறமையால் கண்டுபிடித்து விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.விமர்சனம் எழுதுபவர்கள் நடிகர்கள் மீதுள்ள வெறுப்பை பட விமர்சனங்களில் காட்டாதீர்கள்.உண்மையான சினிமா ரசிகனாக விமர்சனங்களை வெளியிடுங்கள்.உங்களை போன்ற பிரபலங்களின் எழுத்தை வாசித்து விட்டுத்தான் பலர் படம் பார்ப்பதா இல்லையா என்று கூட முடிவு செய்கின்றனர்.உங்களுக்கென்று ஒரு பொறுப்பு உள்ளதென்பதை மறந்துவிடாதீர்கள்.
காவலன்-தளபதிக்கு பல விஷயங்களுக்கு உண்மையை வெளிச்சம் போட்டும் சில விஷயங்களுக்கு நல்ல வழியும் காட்டியுள்ளது!!


ஸ்டேப் ஸ்டேப் பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜனி நடித்திருந்தால்...??
அருமையாக பொருத்தி உள்ளார் நண்பர் ஒருவர்..அருமையாக உள்ளது..நிச்சயம் ரசிப்பீர்கள்!!

பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்..மற்றவர்களை சென்றடைய.கருத்துகளை பின்னூட்டல்களாய் விட்டுச்செல்லுங்கள்.

Post Comment

Wednesday, January 12, 2011

"காவலன்" வெளிவந்த பின்னர் அவர்கள்!!


பொங்கலுக்கு வெளியாகவிருக்கும்,பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் படம் தான் விஜய்,அசின்,வடிவேல்,ராஜ்கிரண்,ரோஜா மற்றும் பலர் நடித்து சித்தீக்' இயக்கியிருக்கும் படம் "காவலன்"!!
எதிர்பார்ப்பு மிக அதிகம் ஏனெனில் விஜய் தொடர்ச்சியான தோல்விப்படங்கலையே கொடுத்துவந்த நிலையில் இந்தப் படமாவது வெற்றி பெறாதா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்க,இந்தப்படம் வெற்றிபெற்று விஜய் மீண்டும் பழைய இடத்திற்கு வந்திடுவாரோ என்ற பயத்தில் அதை முதல் ஷோ பார்த்து தமிழ் சினிமாவின் குறைகளை விஜயின் குறைகள் என கீழ்த்தரமான விமர்சனங்களை வெளியிடுவதற்கு விஜய் எதிர்ப்பாளர்களும் எதிர்பார்ப்பதால் மற்றைய பொங்கல் படங்களை விட காவலனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் பெயர் தீர்மானித்த நாளிலேயே தங்களது வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு காவலனை முடக்குவோம் என்று பலர் கிளம்பியிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது பொன்னான நேரத்தை இதற்காகவே ஒதுக்கீடு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடையூறுகளை விளைவித்துக்கொண்டிருக்கிறனர் !!

காவலன் வெளிவரும் தேதி வரையிலான அவர்களது நடவடிக்கைகள்:
1 .அது வடிவேல் நடிப்பதால் ஓடும்,ராஜ்கிரண் நடிப்பதால் ஓடும் என்று தொடங்கிவிட்டார்கள்.
2 .காவலனை விட சிறுத்தை,ஆடுகளம் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் என்றார்கள்.
3 .கேரளாவில் மலையாள ரசிகர் மத்தியில் பாப்புலரான தமிழ் நடிகர் விருது விஜய்க்கு வழங்கிய போது அது விஜயின் அப்பா சந்திரசேகர் பணம் கொடுத்து வாங்கியதாக கிளப்பி விட்டனர்.
4 .பேஸ்புக்'இல் காவலன் விஜய் படங்களை போட்டு அதற்கு ஏதும் நக்கல் விமர்சனங்கள் எடிட் பண்ணி வெளியிட்டுள்ளனர்.
5 ."காவலன் படத்தை எதிர்ப்போர் சங்கம்" அப்பிடீன்னு சங்கம் வேறு ஆரம்பித்துள்ளனர்.
6 .அசின்'ஐ காரணம் காட்டி காவலனை புறக்கணிப்போம் என்று கோஷம் வேறு.உங்கள் கோஷத்தை காட்ட வேறு நேரான வழிமுறைகள் எத்தனையோ இருக்கின்றனவே!!
காவலன் வெளிவந்த முதல் நாளிலிருந்து அவர்களது நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்.
1 .முட்டி மோதி போய் முதல் ஷோ பார்ப்பது .
2 .பார்த்துவிட்டு வந்து அங்க முதல் ஷோ'லையே சனம் இல்லை எண்டுவது (அதுவும் சிலர் ஆரம்பத்தில் சொல்ல மாட்டார்கள்.படம் வந்து 2 ,3 மாதங்களின் பின் தான் கூறுவார்கள்!).
3 .சினிமா ஆரம்பித்ததிலிருந்தே தமிழ் சினிமாவில் உள்ள லாஜிக் மீறல்களை பெரிதாக்கி அது விஜயின் பிழை என்கின்ற அளவுக்கு பீத்துவார்கள்.இதே ரஜனி படத்தில் என்றால் மூச்சு இல்லை.
4 .டைரக்டர்,அசிஸ்டன்ட் டைரக்டர் கூட பாக்காத அளவுக்கு ஒவ்வொரு ஷாட்'டாக நுணுக்கமாக அவதானிப்பார்கள்!!
5 .திறமையாக நடனமாடினால் அதை தவழ்கிறான்,குதிக்கிறான் என்பார்கள்.
6 .பொங்கலுக்கு வெளிவரும் மற்றைய படங்கள் சோடை போனாலும் அது அருமையான படம்..சூப்பர் படம் என்று வதந்தியை ஊர் முழுக்க பரப்புவார்கள்.
7 . ஸ்டண்ட் காட்சிகளில் அப்படி பாய்கிறான் இப்படி பாய்கிறான் என்று தொடங்குவார்கள்.
8 .இம்முறை மியூசிக் நன்றாக இல்லை என்பார்கள்.(வேறு காரணங்கள் இருக்கலாம்..அவர்களால் தான் ஜோசிக்க முடியும்!!)
9 .எதிரான பதிவர்கள் மொக்கை விமர்சனம் எழுதி விடுவார்கள் முதல் நாளே!!எழுதத் தெரியாதவர்கள் அவன் படத்தை எல்லாம் விமர்சனம் செய்ய முடியாதென்று தம்பட்டம் அடிப்பார்கள்!
10 .இதை விட இன்னும் பல~!!

ஒரு ட்ரெய்லர் பாருங்க நீங்க இப்ப..

அனைத்தையும் உடைத்து காவலன் இம்முறை வெற்றி பெரும் என்கின்ற நம்பிக்கை என் போன்ற விஜய் ரசிகர்கள் மனதில் உறுதியாக உள்ளது!!பார்ப்போம் பொங்கல் சரவெடி தான்!!
ஐயோ பாவம் இப்பவே கொன்பியூஸ் ஆகிட்டாங்க!!



Post Comment

Monday, January 10, 2011

பதிவர் "கௌ-பாய்" ஆன மொக்கை வரலாறு!!




மாட்டுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தங்க!
சிறுவனா இருந்ததில இருந்து இன்று மட்டும் பசுப்பால் குடிக்கிறேனுங்க..
இதில இருந்தே தெரியனும் மாட்டுக்கும் எனக்கும் எவ்வளவு நீடிய தொடர்பு இருக்குன்னு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்'இண்ட மாட்டுக்கார வேலன் படத்த எப்ப பாத்தேனோ அண்டேல இருந்து மாடு மேல எனக்கொரு அது'ங்க!
அடிக்கடி எங்கம்மா திட்டுவாங்க உன்ன பெத்ததுக்கு ஒரு மாட்டை வளத்திருந்தாலாவது பிரியோசனமாய் இருந்திருக்கும்னு!அப்பிடி இல்லாட்டி நான் எங்காச்சும் ஊர் சுத்திட்டு வந்தா பேசுவாங்க எங்கடா மாடு மாதிரி ஊர் சுத்திட்டு வாராய் எண்டு!எங்கம்மாவுக்கு எப்பயோ தெரிஞ்சு போச்சுங்க எனக்கும் மாட்டுக்கும் அப்பிடி ஒரு லிங்க்'குன்னு!

எனக்கு ரொம்ப நாளா ஆசை..ஒரு தடவை ஆச்சும் மாட்டிண்ட கொம்ப பிடிச்சு விளாடனும்ன்னு!ஆனா ஒவ்வொரு முறையும் மாடு சிக்கிறப்போ கொம்ப பிடிக்க ட்ரை பண்ணி மண்ணைக் கவ்வுறது தான் வேலையாப் போச்சுங்க..
நாலு கழுதை வயசாச்சு இன்னும் மாட்டிண்ட கொம்ப கூட பிடிக்க முடியல நீ எல்லாம்...அப்டீன்னு திட்டிக்கொண்டே இழுப்பாங்க பாருங்க எண்ட உயிர் தோழன்'க..ஏன்டா ஆம்பிளையா பிறந்தோம்னு எனக்கே கவலையா போய்டும் எனக்கு!!

எப்பிடியாச்சும் மாட்டிண்ட கொம்ப பிடிச்சு "கௌ பாய்" ஆகிடனும்னு எனக்குள்ள ஒரு வெறி வந்திடிச்சு!!இப்பிடி மாட்டிண்ட கொம்ப பிடிக்கிறவங்களுக்கு தானாம் ஊர் மக்களெல்லாம் சேர்ந்து "கௌ பாய்" பட்டம் கொடுப்பாங்களாம்ன்னு எண்ட வடை சுட்ட பாட்டி சாகுறதுக்கு முன்னாடி சொல்லிட்டு செத்திருச்சு!!
சும்மா செத்தாலாவது பரவால,கௌ பாய் பட்டம் வாங்கினாத்தான் எண்ட ஆத்மா சாந்தியடையும்னு சத்தியம் வேற வாங்கிட்டு கண்ண மூடிருச்சு!

பாட்டி மேல போனப்புறம் அத காரணம் காட்டி நான் ஸ்கூல்'ல நாலஞ்சு தடவ லீவ் போட்டதோ என்னமோ எனக்கு இப்ப கொஞ்ச நாளாவே தொட்ட காரியமெல்லாம் நாசமா போய்க்கிட்டிருந்திச்சு!
அதால பாட்டிட கடைசி ஆசைய நிறைவேத்தி வைச்சாலாச்சும் கொஞ்சம் பிரச்சனை தீரும்ன்னு எண்ட மனசுக்கு தோணிச்சு..அதால கௌ பாய் பட்டம் தான் எண்ட வாழ்க்கைண்ட இலக்குன்னு எண்ட நெஞ்சில கஜனி மாதிரி பச்சை குத்திட்டு அலைஞ்சிட்டிருந்தன்..
களவெல்லாம் கற்று மற எண்டு சொல்லித்தராம,"மாடெல்லாம் பிடிச்சு மற" அப்பிடீன்னு தான் எண்ட தாத்தா சின்ன வயசில பக்கத்தி வீட்டு பாட்டிய காட்டி காட்டியே சொல்லித்தந்தாரு..

நான் ஊர்ல வேற கொஞ்சம் பவுசான ஆளு..இப்பிடி ஏதாச்சும் பெயர் வாங்கினாத்தானே நம்ம பயலுக மிரளுவாங்க!
அப்ப தான் எண்ட நண்பன் ஒருத்தன் ஒரு சைக்கில் ஒண்ட எனக்கு தந்து கௌ பாய் ஆகுறதுக்கு பிள்ளையார் சுழி போட்டான்..நல்ல நாள் பெரிய நாள் எண்டு ஒரு நாளில எண்ட பயணத்த ஆரம்பித்தேன்!

இடைவேளை (இனி கொசுக்களெல்லாம் பசுக்களாகும்!)

அப்பத்தான் எண்ட பாட்டிண்ட ஒன்னு விட்ட அக்காண்ட புருஷண்ட தம்பிண்ட காதலி படிச்ச ஸ்கூல்'ல படிப்பிச்ச ஹெட் மாஸ்டர்'ட மாமனார் நம்ம ஏரியால நடமாடிக்கிட்டிருந்தப்போ நானா போய் அவர்கிட்ட கேட்டேன் எப்பிடி நான் எண்ட வேலைய முடிக்கலாம் எண்டு..அதுக்கு அவர் என்ன சொன்னார்ன்னா..
"தம்பி,பொதுவா எந்த மாடுமே தண்ட கொம்ப மனுஷன் பிடிக்கிறத விரும்புறேல..மொதல்'ல நீ கொம்பு பிடிக்கிறதா இருந்தா மாடு பிடிக்கணும்..மாட்டு கூட்டம் ஒண்டோட ஒண்டா கலந்தாத் தான் அதில ஏதாச்சும் ஒரு மாடு பாவம்னு மனமிரங்கி தன்ட கொம்ப பிடிக்க விடும் அதனால மாப்பு இன்னில இருந்து உனக்கு ஆப்பு "அப்டீன்னாரு!

சரீன்னு மாட்டுக் கூட்டத்த தேடினா எங்க பாத்தாலும் நம்ம பயலுக தான் கூட்டம் கூட்டமா திரியுறாங்க!
அப்ப தான் சக பதிவர் அஸ்வின்,தான் ஒவ்வொரு சனியும் விளையாடப் போறவராம்,(கிரிகெட்டு!) அங்க தனக்கு ரொம்ப மாடுகள் கிடைச்சிருக்கு வந்தா தாறதா சொன்னாரு.
அது ஒரு மைதானம்!அங்க தானாம் வழமையா இலங்கையின் பிரபல பதிவர்கள் கிரிகெட் விளையாடுறவங்களாம் !

பாருங்க நண்பன் என்ன மாடு மேய்க்க விட்டிட்டு பின்னால விளையாடுறாரு பதிவர் அஸ்வின்!

அங்க போயி பாத்தா ஒரு மாட்டுக் கூட்டமே நின்னிச்சு!அதில "தல" மாட்ட கண்டு பிடிச்சு ஏன்டா விசயத்த சொல்லி,கெஞ்சி,(சாணி அள்ளிவிட்டதெல்லாம் சும்மா ப்ரெண்ட்ஷிப்'க்காக!) கேக்க,தல மாடு சொல்லிச்சு தங்கள எல்லாம் மேச்சு விட்டாத்தான் அது சாத்தியப்ப்படும்ன்னு!


கருவாச்சிய கட்டினா காடு வெட்டித்தானே ஆகணும்!மேய்ச்சன் !!அப்ப தான் ஒரு பசு மாட்ட பாத்தன்..ஒரே வெள்ளை வெளேர்ன்னு கலரு!அதுண்ட லவ்வர் மாடு பக்கத்தில நிண்டு ரொமான்ஸ் பண்ணிச்சு எப்பிடி தெரியுமா?

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தான்களா
இல்ல
வெயிலுக்கு காட்டாம வளத்தான்களா.."

நா அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்!!
நம்ம பாட்டு மாடுங்க வரைக்கும் ரீச்சாயி இருக்குன்னா,மாடுகளுக்கும் நம்ம மனுசப் பயலுங்க யாருக்கும் லிங்க் இருக்கோணும்னு தானே அர்த்தம்?நாம கௌ பாய் ஆனப்புறம் அந்த களவாணிப் பயலுக யார்ன்னு கண்டுபிடிக்கணும்னு மனசுக்க ப்ளான் பண்ணிக்கிட்டன்!
................
.........................
..................................
.............................................
.......................................................என்னடா கௌபாய் இன்னும் முடியலேன்னு பாக்கிறீங்களா?
மிகுதிக் கதை பல எதிர்பாராத திருப்பங்களுடன் வெளிவரும்!!

குறிப்பு:இது மொக்கை கதை இல்ல நண்பெர்ஸ்..உண்மையான ஆதாரபூர்வமான கதை..அதற்காகத்தான் படங்களை இணைத்திருக்கேன்..மொக்கை கதைன்னு சொல்லிடக்கூடாது பாருங்க..!!

Post Comment

Friday, January 7, 2011

தென்னாபிரிக்க -இந்திய டெஸ்ட் தொடர்(மூன்றாவது போட்டி)!




பல காரணங்களால் இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் பிரபலம்,விறுவிறுப்பு பெற்றது..
  • இந்தியா தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றியொன்றை பதிய எதிர்பார்த்தமை.
  • டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளுக்கிடையிலான போட்டி..
  • துடுப்பாட்ட பிதாமகனுக்கும் தென்னாபிரிக்கப் புயல் ஸ்டேயினுக்குமிடையிலான போட்டி..
  • ஸ்மித்'க்கும் சாகிர் கானுக்கும் இடையிலான போட்டி..
  • துடுப்பாட்ட தரவரிசையில் முதல் பதினைந்து வீரர்களில் எழு பேர் பங்குபெற்றிய போட்டி
  • பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் பதினாறு வீரர்களில் ஆறு பேர் பங்குபெற்றிய போட்டி

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெல்ல,இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெல்ல,தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஜனவரி இரண்டாம் திகதி நியுலண்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது .நியுலண்ட்ஸ் மைதானம்(cape town ) தான் தென்னாபிரிக்காவில் 338 .2 என்னும் அதிக துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருக்கும் மைதானம்!நாணயச் சுழற்ச்சியில் கொஞ்சம் கூட ராசியில்லாத தோனி ஒரு மாதிரியாக மூன்றாவது போட்டியின் போது சரியாக கூறி களத்தடுப்பை தேர்வு செய்தார்.!!(கடந்த பதினைந்து டெஸ்ட்'டுகளில் இரண்டாவது தடவை நாணய சுழற்ச்சியில் வெல்லும் சந்தர்ப்பம்!)

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா,அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றது.ஒரு கட்டத்தில் எட்டு விக்கட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் என்று இருந்த தென்னாபிரிக்காவை கலீஸ் இறுதி நிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து 79 ஓட்டங்களை பகிர்ந்தார்!
ஸ்டெயின் எட்டாவது வீரராக ஆட்டமிழக்கும் போது 99 ஓட்டங்களுடன் இருந்த கலீஸ்,இறுதி 79 ஓட்டங்களில் 62 ஓட்டங்களை பெற்றார்!

பூரண உடல்தகுதி இல்லாமல் விளையாடிய கலீசின் அபார துடுப்பாட்டம் அவரை அதிக சதம் பெற்றோர் வரிசையில் பாண்டிங்'கோடு இரண்டாமிடத்துக்கு உயர்த்தி விட்டது.ஒரு காலத்தில் சச்சின்'னின் சத்தங்கள் சாதனையை பாண்டிங் தான் உடைப்பார் என நம்பப்பட்ட போதிலும் இப்பொழுது அது கலீஸ் பக்கம் திரும்பியுள்ளது!
பந்துவீச்சில் ஸ்ரீசாந்த் ஐந்து,சாகிர் மூன்று,ஷர்மா இரண்டு என்று கைப்பற்றினர்.ஸ்ரீசாந்த் தற்போது இந்தியாவின் பந்துவீச்சு நட்சத்திரமாக மாறி வருகிறார்.கொஞ்சம் ஆக்ரோஷத்தை குறைத்தால் இன்னும் பெயர் வாங்கலாம்.
ஸ்மித் சஹீரின் பந்துக்கு ரொம்பவே பயப்பிடுகிறார்.பதினோராவது தடவை சஹீரின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.(முன்னர் வாஸ் ஸ்டீபன் பிளெம்மிங் போல).
தொடர் ஆரம்பிக்கும் முன்னர் ஸ்மித் கூறியது போல அம்லாவை ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் இந்தியாவால் வெற்றி பெறமுடியாது என்பது ஓரளவு உண்மைதான்.ஒவ்வொரு இன்னிங்க்ஸ்'இலும் தலையிடி கொடுத்திருந்தார்.அதை விட பெரிய தலையிடி கலீஸ்!!


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடரில் பிரகாசிக்காத ஷேவாக் ஸ்டேயினின் பந்துக்கு ஆட்டமிழக்கவும் , திராவிட் ரன் அவுட் முறையி வெளியேற 28 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட் பறி போயிருந்தது.அடுத்து களமிறங்கிய சச்சினோடு கம்பீர் மெல்ல மெல்ல கட்டிய இணைப்பாட்டம் 176 ஓட்டங்கள் இந்தியாவை கொஞ்சம் நல்ல நிலைக்கு கொண்டு வந்தது.(முன்னர் 2000 'இல் ஜெயவர்த்தனா,சங்ககாரா அடித்த 168 ஓட்டங்கள் தான் சாதனையாக இருந்தது.)

நூறு அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 93ஓட்டங்களுடன் ஹரிஸ்'ஸின் பந்துக்கு ஆட்டமிழக்க,பின்னர் வந்த லக்ஸ்மன்,புஜாரா,தோனி என மூவரும் சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப போட்டி தென்னாபிரிக்க வசம் மாறியது.லக்ச்மனின் ஆட்டமிழப்பு துரதிஷ்டவசமானது.ஹரிசின் பந்துக்கு சச்சின் ஹரிசை நோக்கி அடிக்க அது ஹரிசின் கையில் பட்டு விக்கட்டில் பட,லக்ஸ்மன் கிரீஸ்'ஐ விட்டு வெளியே நின்றமையால் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.வேகமாக அடிக்கப்பட்ட பந்து ஹரிஸ்'ஸின் விரலில் இரத்தம் வரவைத்து அடங்கியது.

பின்னர் வந்த ஹர்பஜன்,சாகிர்'ரோடு சச்சின் இணைப்பாட்டம் புரிந்து இறுதியில் இந்தியா தென்னாபிரிக்காவை விட இரு ஓட்டங்கள் அதிகம் பெற்று ஆட்டமிழந்தது.சச்சின் 146 ஓட்டங்களையும்(51 ஆவது சதம்),ஹர்பஜன் 40 ,சாகிர் 23 ஓட்டங்களையும் பெற்றனர்!
ஸ்டெயின் ஐந்து விக்கட்டுகளையும் மோர்கல் இரண்டு விக்கட்டுகளையும் பெற்றனர்.
ஸ்டேயினின் பந்துவீச்சு அனைவராலும் புகழப்பட்டது.துடுப்பாட்ட பிதாமகன் சச்சினே தடுமாறி தடுமாறி விளையாடியதை அவதானிக்க முடிந்தது!
என்னைக் கேட்டால் டெஸ்ட்'டில் மக்ராவை விட ஸ்டெயின் சிறந்த பந்துவீச்சாளர் என்பேன்!(hatsoff டு ஸ்டெயின்!)

அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு எதிர்பார்த்ததை போலவே ஹர்பஜன் தலையிடி கொடுத்தார்.சர சரவென அவர் ஸ்மித்,பீட்டர்சன்,ஹரிஸ்,அமலா விக்கட்டுகளை சாய்க்க,ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்கா தடுமாறி 130 'க்கு ஆறு விக்கட்டுகளை இழந்து தவித்தது.போட்டி அந்தக் கணம் இந்தியாவின் பக்கம் செல்ல அடுத்து வந்த பௌச்சர்(அநேகமாக இறுதி டெஸ்ட் இன்னிங்க்ஸ்) கலீசுடன் இணைந்து மிகவும் இன்றியமையாத இணைப்பாட்டம் ஒன்றை புரிந்து தென்னாபிரிக்காவை காத்திரமான நிலைக்கு கொண்டு சென்றார்.

என்றாலும் பவுச்சர் தனது பாணியில் ஐம்பதுகளிலே ஆட்டமிழக்க..(விக்கட் எடுத்தது டெண்டுல்கர்!!அதிக காலத்துக்கு பிறகு!ஜனவரி 2009 'இக்கு பிறகு!)பின்னால் வந்த ஸ்டேயினும் மோர்க்கலும் கலீசுக்கு பக்கத்துணையாக நின்று கொடுக்க கலீஸ் தனது நாற்பதாவது சதத்தைக் கடந்தார்!இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை!ஹர்பஜனின் பந்துக்கு ரிவேர்ஸ் ஸ்வீப் அடித்தார் பாருங்கள்..அத்தனையும் பிரம்மாதம்.என்னதான் களத்தடுப்பாளர்கள்;ஐ மாற்றினாலும் மறு திசையில் கலீஸ் ஓட்டங்களை பெற்றார்!

ஒரே போட்டியில் இரண்டு அபார சத்தங்கள்..இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் தென்னாபிரிக்காவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய சத்தங்கள்!!போட்டித்தொடரில் மூன்றாவது சதம்!!ஸ்ரீசாந்த் பந்தினால் முதல் இன்னிங்க்சில் அடிவாங்கிய கலீஸ் ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட கலீஸ்,களத்தடுப்பிட்கு வராத கலீஸ்..வந்து நின்று தனது நாற்பதாவது சதத்தை அடித்தார் என்றால் அதை விபரிக்க வார்த்தைகள் இல்லை!தென்னாபிரிக்க மண்ணில் ஒரே டெஸ்ட்'டில் இரு சத்தங்கள் அடித்த முதலாவது தென்னாபிரிக்க வீரராக கலீஸ் பதிவானார்.

டெண்டுல்கர் மட்டும் பிறந்திடாவிடில் கலீஸ் தான் கிரிக்கட்டின் பிதாமகன்!!ஏன் இப்போதும் கூட என்னைப் பொருத்தமட்டில் அவர் தான் கிரிக்கட்டின் பிதாமகன்..!!
ப்ரட்மனோ,சச்சினோ இல்லை.சச்சின் துடுப்பாட்டத்தில் பிதாமகனாக இருக்கலாம்.ஒரு திறமையான முழு நேர பந்துவீச்சாளர் பெற்றிருக்கக்கூடிய விக்கட்டுகள்..ஒரு தலை சிறந்த துடுப்பாட்டவீரரின் ஓட்டக்குவிப்புகள்,சராசரிகள் என சகலதுறை வீரராக வலம்வரும் கலீசே கிரிக்கட்டின் பிதாமகன் என பிரகடனம் செய்யுங்கள்!

ஹர்பஜன் சிங் எழு விக்கட்டுகளை பதம் பார்த்தார்.ஆரம்பத்தில் மைதானம் அவருக்கு மிகவும் சாதகமாக இருந்தது.பிட்ச்'இன் வெடிப்புகளால் பந்து நன்றாக டேர்ன் ஆனது.சாகிர்,ஸ்ரீசாந்த்,சர்மாவினால் ஹர்பஜனுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்க முடியவில்லை.120 ஓட்டங்களுக்கு எழு விக்கட்டுகள் தான் பாஜியின் வெளிநாட்டு மைதானமொன்றில் பெறப்பட்ட சிறந்த விக்கட் பெறுதியாகும்!
அதே நேரம் ஸ்ரீசாந்த் அபராதம் விதிக்கப்பட்டார்.அடிக்கடி ஆட்டமிழப்புகளை நடுவரிடம் கேட்டதால் போட்டி ஊதியத்தில் பத்து வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

340 ௦ ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு இறுதிநாள் களமிறங்கியது இந்தியா.மிகக் கடினமான இலக்குத் தான்.
இந்த மைதானத்தில் நான்காம் இன்னிங்க்ஸ்'இல் அதிகப்படியாக பெற்று வெற்றியீட்டிய ஓட்டங்கள் 334 ஆகத்தான் இருந்தது(அவுச்திறேலியாவால்).அதனை விட ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தான் இருநூறுக்கு மேற்பட்ட ஓட்டம் பெற்று வெற்றிஈட்டப்பட்டிருந்தது.
அந்தப் பயமோ என்னமோ இந்தியாவின் இன்னிங்க்சில் அது நன்றாகவே தெரிந்தது.வழமையாக அடித்தாடும் சேவாக்'கே பொறுமை காத்தார்.விளைவு?மோர்க்களின் பந்தில் ஆட்டமிழந்தார்.40 பந்துகளில் வெறுமனே 11 ஓட்டங்களே பெற்றிருந்தார் ஷேவாக்.அடுத்துவந்த திராவிட்'தோடு கம்பீர் இணைப்பாட்டம் புரிந்து கொஞ்சம் ஆறுதல் அளித்தார்.

ஆனால்,போட்டியின் இரண்டாவது அரைச்சதமடித்தபின் அறுபதுகளில் கம்பீரும்,திராவிட் 31 'இலும் ஆட்டமிழந்து செல்ல,பின்னர் வந்த சச்சினும்,லச்மனும் ஆட்டமிழக்காமல் முறையே 14 ,32 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை போட்டி முடிவுக்கு வந்தது.
சச்சின் 91 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற்றிருந்தார்.!!
போல் ஹரிஸ் முப்பது ஓவர்களில் வெறுமனே 29 ஓட்டங்களை மட்டுமே வழங்கி இருந்தார்.அதற்குள் 19 ஓட்டமற்ற ஓவர்கள் என்றால் பாருங்கள் இந்தியா போட்டியை சமநிலை செய்ய எவ்வளவு முயட்சித்திருக்கின்றது என்று!

தொடர் நாயகனாகவும் போட்டி நாயகனாகவும் ஜாக்ஸ் கலீஸ் தெரிவானார்!
போட்டித்தொடர் சமநிலை அடைந்தமைக்கு தோனி மகிழ்ச்சியும்,ஸ்மித் கவலையையும் வெளியிட்டிருந்தனர்.
இந்தியா ஒரு அறிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டதேன்றே கூறமுடியும்.
இரு அணிகளுமே போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழக்கக்கூடாது என்று விளையாடியமையை அவதானிக்க முடிந்தது.ஸ்மித் உள்ளூர சந்தோசப்பட்டிருந்தாலும் வெளியே கவலையடைந்திருப்பார்..கலீஸ் இருந்திருக்காவிடில் தோல்வி தான்.ம்ம்

ஆஷஸ் ஆரவாரத்தில் பெரும்பாலானோர் இந்த முக்கியத்துவம் மிக்க தொடரை மறந்தே விட்டிருந்தனர்.
என்ன செய்ய..

தொடரில் சிறந்த பெறுபேறு
கலீஸ் மூன்று சதங்கள் அடங்கலாக 498 ஓட்டங்களை 166 என்னும் சராசரியில் பெற்றிருக்கிறார் ஐந்து இன்னிங்க்ஸ்'களில்.பின்னால் சச்சின்..ஆனால் நெருங்கமுடியாத தூரத்தில்(326)!

அதிக விக்கட்டுகள் எடுத்தோர் வரிசையில் ஸ்டெயின்(21),மோர்க்கல்(15) முதலிரண்டு இடங்களிலும் அணிவகுத்து நிக்கின்றனர்.
ஹர்பஜன்(15),ஜாகிர்(10) பின்னால்!


சோகம்
  • இது சச்சினின் தென்னாபிரிக்க மண்ணிலமைந்த இறுதிப் போட்டியாக இருக்கலாம்...(எப்போது ஓய்வோ தெரியாது).அதே போன்றே திராவிட்,லச்மனுக்கும்!
  • கரி கேர்ச்டனின் பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்..
  • மார்க் பவுச்சரின் இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்..

பாராட்டு
வரலாறு மிக்க ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து இங்கிலாந்து 3 -1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சாதனை,வரலாறு
படைத்திருக்கும் இங்கிலாந்து அணிக்கும்,தலைவர் ஸ்ட்ராஸ்,பயிற்றுவிப்பாளர் அண்டி ப்ளவர் மற்றும் என் சக இங்கிலாந்து ரசிகப்பெருமக்களுக்கும்!!
ஆரம்பத்திலேயே கூறினோம் படித்து படித்து நாங்க தான் வெற்றி பெறுவோம் என்று..இல்லை அவுஸ் தான் என்றீர்கள்..என்ன நடந்தது??
ஹஸ்ஸி மட்டும் இருந்திருக்காவிடில்..ஐந்தையும் தந்திருப்போம் முறையாக..
யாருக்கிட்ட!!
(நம்ம அனலிஸ்ட் இப்ப ஒரு காரசாரமான பதிவோட வெய்டிங் எண்டு நினைக்கிறன்.பார்ப்போம்!!)
சச்சின்,கலீஸ் தொடர்பில் ஒரு பூரண ஆராச்சி,அலசல் பதிவொன்றை நான் அனலிஸ்ட் கைகளால் எதிர்பார்க்கிறேன்..நேரமிருந்தால் அனலிஸ்ட்...??


ஆமா இதே உட்சாகத்த,முயற்சிய உலகக்கின்னத்தொடர் பக்கம் திருப்பினால் எப்பவோ உலகக்கிண்ணத்தை வென்றிருப்பார்கள் இங்கிலாந்து அணியினர்!!

குறிப்பு;அவசர அவசரமாக எழுதியது..பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்..ஆனால் மன்னிக்கவும்.


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...