கொள்ளுப்பிட்டியில் வேலை விசயமாக சிங்கள நண்பரின் காரில் போய்க்கொண்டிருக்க,சிவப்பு சமிக்ஞை காரணமாக பாதசாரிகள் கடவைக்கு நிறுத்தவேண்டிய தேவை.இரண்டு பெண்கள்,22-25 வயதிருக்கும்,கையைப் பிடித்துக்கொண்டு வீதியை கடந்துசென்றார்கள்.அதனைப் பார்த்த என் நண்பன் உடனே சொன்னான்,'மே தென்னம லெஸ்பியன்ஸ் மச்சான்'..!
போதாதற்கு,கார் கண்ணாடியை இறக்கிவிட்டு,'யூ டூ லெஸ்பியன்ஸ் நோ?'என்று அவர்களிடமே கேட்டான்.அடி விழுமென்று பார்த்தால்,யெஸ் என்று தலையாட்டிவிட்டு நண்பேண்டா என்று சந்தானம் சொல்வது போல மாறிமாறி தோள் மீதி கையைப்போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு சென்றார்கள் அந்தப் பெண்கள் உரிமையுடனும், சந்தோசத்துடனும்..!
எனக்கு ஒரே ஆச்சரியம்,'எப்பிடி மச்சான் கண்டுபிடிச்சே?'என்று கேட்டபோது,'மச்சான் UK'ல இருக்கும்போது இதுபோல எக்கச்சக்கமான கப்பிள்ஸை பார்த்திருக்கிறேன்,சில பெண்கள் மிக மிக அழகாக இருப்பார்கள்..ஆனால் லெஸ்பியன்ஸ். ஆண்களை நிமிர்ந்துகூட பார்க்கமாட்டார்கள்'என்றான்.
பெண்கள் பாடசாலைகளில் இது மிக அதிகமாக,ஒரு பேஷனாக இன்றைய காலப்பகுதிகளில் பரவிக்கொண்டிருப்பதாக அண்மையில் ஒரு ஆசிரியர் கூறியிருந்தார்.இவற்றைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே தனிப்படை வேண்டும் என்கின்ற அளவில் இருந்தது அவர் பேச்சு.எல்லாம் உண்மைபோல் தான் தெரிகிறது..!
0 comments:
Post a Comment