திரைப்படம்:வேட்டைக்காரன்
பாடலாசிரியர்:கபிலன்
இசை:விஜய் அந்தோனி
பாடியவர்கள்:சுசித்திரா,சங்கீதா ராஜேஸ்வரன்
நம்ம அனைவரையும் "கவர்ந்த" இளைய தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் கபிலன் அவர்கள் மிக அருமையாக உவமானம்,உவமேயம் போன்றவற்றை கையாண்டு இந்த பாடலை எழுதி இருப்பார்.இன்றைய காலத்தில் வெளிவரும் பாடல்களில் உவமான,உவமேயங்களை பூதக்கண்ணாடி வைத்து தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தப்பாடல் ஒரு சிறப்பு வாய்ந்த இடத்தை பெறுகிறது என்பது வெட்ட வெளிச்சம்!
என்ன அனுஷ்காவின் இடையை பார்த்து சுருக்குப்பை என்று பாடி விட்டாரே கபிலன் என்று தான் சற்றுக் கோபம் எனக்கு!!
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு
பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு
சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு
கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
எங்கடா பாடலின் ஆரம்பத்தில வாற ஆங்கில வரிகளை காணேல எண்டு தானே தேடுறீங்க ...சும்மா ஒரு கிக்'ஆ இருக்கட்டுமே எண்டு இங்க கொண்டு வந்து போட்டன்..உங்களுக்கு இந்த கிக் எல்லாம் எம்மாத்திரம்!விஜய் எண்டு ஒரு சொல் போட்டாலே அதுவே பெரிய கிக்கு தானே சகோதரங்களே!!
Hey come on and get me with your loving machan
Undress me and then caress me aththan
And I’m feeling the sikkal and show me your love
Nananana......
பிடிச்சா ஓட்டு போடுங்க..சுறா,வேட்டைக்காரன் மீதான கோபத்தை இதிலே காட்டாதீங்க நண்பர்களே!!