Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, August 4, 2014

ஜனாதிபதி தேர்தல்..!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

எது எப்படி இருந்தாலும்,ஆட்சிமாற்றமொன்றை உண்மையாகவே எதிர்பார்த்தால் பொதுவேட்பாளரை வெகு சீக்கிரம் முடிவு செய்துவிட்டு,வெற்றிக்காக ஒன்றுபட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக உழைக்கவேண்டும்.


அல்லது இறுதிவரை பொறுத்திருந்து,பொதுவேட்பாளரை அறிவித்து,அதன்பின்பும் குத்துவெட்டுகளை தொடரச்செய்து, பொதுவேட்பாளர் மீதான நம்பிக்கையை சிதைத்து,ஆதரவாக ஓட்டுப்போட இருந்த வாக்காளர்களையும் தேர்தல் தினத்தன்று வீட்டிலிருக்க வைப்பதன்மூலம் மேன்மைமிகு சனாதிபதி அவர்களையே மீண்டும் சனாதிபதி ஆக்கிவிடலாம்.

சரி யார் பொதுவேட்பாளர்?சந்திரிக்காவா ஷிராணியா ரணிலா சஜித்தா இல்லை வேறுயாருமா?பொதுவேட்பாளருக்கு எந்தெந்த கட்சிகள் ஆதரவு கொடுக்கும்?ஐ.தே.க,த.தே.கூ ஓகே, ஜே.வி.பி?சரத் பொன்சேகா தரப்பு?முக்கியமாக முஸ்லிம் காங்கிரஸ்?அப்போது அளுத்கம சம்பவங்கள் அவர்களுக்கு ஞாபகமிருக்குமா?

சந்திரிக்கா மீண்டும் சனாதிபதி வேட்பாளாரென்றால்,அவர் முதன் முதலில் சனாதிபதி தேர்தலில் நிற்கும்போது கொடுத்த வாக்குறுதிகளும்,வெற்றிக்குப்பின் கொடுத்த அடிகளும் சென்றதடவை சரத் பொன்சேகா போட்டியிட்டபோது வந்த குற்ற உணர்ச்சிபோன்று ஞாபகம் வந்து தொலைக்கும்.

அப்படிப்பார்த்தால் நான் தான் களமிறங்க வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினர் சனாதிபதி ஆகமுடியாது என்கின்றார்கள். சென்ற தடவை சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்த 9662 ஓட்டுக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறது..!!


Post Comment

Wednesday, December 28, 2011

வடகொரிய தலைவர் இறுதி ஊர்வலம்-சொல்வது என்ன?


அமெரிக்க வல்லரசுக்கு எதிராக கடைசி வரை போராடிய வடகொரிய தலைவர் கிம் ஜாங்'இன் இறுதி ஊர்வலம் இன்று வடகொரிய தலைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.எந்த ஒரு உலக நாடுகளுக்கும்,தலைவர்களுக்கும்,மீடியாக்களுக்கும் அழைப்பு விடுக்காது மிகுந்த அவதானத்தோடு நடைபெற்றுக்கொண்டிருக்க்கும் இந்த இறுதி ஊர்வலமானது உலகுக்கு பலவிடயங்களை எடுத்து கூறிக்கொண்டிருக்கிறது என்பது அதனை பார்க்கும் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

ஒரு தலைவரின் இறுதி ஊர்வலம்...மக்கள் அபிமானம் பெற்ற மனிதரின் இறுதி ஊர்வலம் எந்த வகையில் நடத்தப்படவேண்டுமோ அதனை விட பலமடங்கு மேன்மையாக நடத்திக்காட்டிக்கொண்டிருக்கின்றனர் வடகொரியர்கள்.கிம் ஜாங் இன் மரண இறுதி ஊர்வலம் வடகொரிய தேசிய தொலைகாட்சியிலேயே காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதனை சி என் என் தொலைகாட்சி உலகமெங்கும் ஒளிபரப்புகிறது.

மிகவும் திறமையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இறுதி ஊர்வலம்.அதிகமாய் பொழியும் பனியின் நடுவே லட்சக்கணக்கான வடகொரிய படைவீரர்கள் ஒருபக்கம்,லட்சக்கணக்கான வடகொரிய மக்கள்,ஆதரவாளர்கள் மறுபக்கம் கண்ணீர்வடிக்க அழுகுரல் ஓங்கி ஒழிக்க மக்களின் அபிமானம் பெற்ற தலைவன் ஒருவனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

இன்னமும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர் இந்த இறுதி ஊர்வலம் இப்போது தான் நடைபெறுகிறதா அல்லது ஏலவே நடந்து முடிந்து அதன் காட்சிகள் மட்டும் இப்போது ஒளிபரப்பப்படுகிறதா என்று!எத்தனை தான் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டாலும்,உலகமே எதிர்த்து நின்றாலும் அந்த தலைவருக்காக,தலைவரின் மாட்சியை போற்றி இத்தனை லட்சக்கணக்கான மக்களின் ஒன்றுகூடல் வடகொரியாவின் வன்மையை வல்லரசுகளுக்கு காட்டி இருக்கும் மீண்டும் ஒரு தடவை!!


காலம்சென்ற கிம் ஜாங்,தனது தகப்பனார் 1994 இல் இறந்த போது அவரின் இறுதி ஊர்வலத்தில் கிம் ஜாங் கலந்து கொள்ளவில்லை.பாதுகாப்பு காரணங்களுக்காக என்று கூறப்பட்டது.ஆனால் இன்று கிம் ஜாங் இறப்பு ஊர்வலத்தில் அவரது மூன்றாவது மகனும் எதிர்கால வடகொரிய தலைவருமான கொம் ஜாங் உன் கலந்துகொண்டிருக்கிறார்.

நேரம் கிடைத்தால் பாருங்கள் அந்த வரலாற்று நிகழ்வை!!





Post Comment

Friday, September 23, 2011

அரசியலில் குதிக்கும் சக பதிவர் மருதமூரான் !!



தினசரி காலை மதியம் மாலை இரவு என்று நாலு ஸ்டாண்டர்ட் ஸ்டேடஸ்(நம்மள மாதிரி கொய்யாலே பிக்காலி எண்டு எல்லாம் வராது) போட்டு வரும் பதிவர் மருதமூரான் என்றழைக்கப்படும் புருசோத்தமன் தங்கமயில் அண்மைக்காலமாக அதிகப்படியாக அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக அடிக்கடி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் போன்றவற்றில் வெளிப்படுத்தி வருகிறார்.முன்னமே அரசியலில் நடுநிலையான கருத்துக்களை அப்பப்போ கூறி வந்த மருதமூரான்,சமீப காலங்களாக பல கருத்துக்களை கூறி வந்தமையானது பலரின் முக்கியமாக பல அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.பழைய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது,எதிர்கால அரசியல்வாதிகளும் சித்தம் கலங்கி பித்தம் தெளிந்து மறுபடி கலக்கத்திலிருப்பதாக செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

காந்திய வழியே தன் வழி எளிய நடை,எளிய உடை என்று சிம்பிளாக மக்கள் மனம் கவர்ந்தவர்(கன்னியர் கள்வன் கூட!) மருதமூரான்!இலங்கை ஊடக கல்லூரியில் பயின்றவர்!ஆனால் சில பல காரணங்களால் அன்னா ஹாசரேயை சற்றும் மதிக்காதவர்!

எத்தனை நாட்களுக்கு தான் நடுநிலமையான கருத்துக்களை வெறுமனே முன்வைத்துக்கொண்டிருப்பது என்று தீர்க்கமாக சிந்தித்து இன்றைய தமிழர் அரசியல் மேடையில் காணப்படுகின்ற வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு பதிவுலகம் மற்றும் ஊடகத்துறை,பொதுச்சேவை துறைகளில்,மற்றும் இன்னா பல துறைகளிலும் உள்ள செல்வாக்கையும் பயன்படுத்தி பாழாப்போன அரசியலில் விடி வெள்ளியாக பிரகாசிக்க அரசியல் களத்தில் மருதமூரான் குதித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு தெரிய வருகிறது.
இதற்க்கு மேலும் ஊக்கம் தரும் விதமாக அவரின் பின்வரும் பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் அறுதி கூறுகின்றன!



தோற்றுப்போன அல்லது கைவிடப்பட்ட ஒரு சமூகத்தினை எப்படி சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேறுகின்ற சமூகமாக மாற்ற முடியும் என்பதற்கு இலங்கையில் அஷ்ரப்பைத் தவிர கடந்த ஐம்பது வருடங்களில் யாரையும் நல்ல உதாரணமாகச் சொல்ல முடியாது!

உண்மைதான்! பல்லினமே எங்களின் பலம். அது 1900இன் ஆரம்பத்திலேயே உணரப்பட்டிருக்க வேண்டும்!!

இன்று இரவு அரசியலில் இறங்குவது பற்றி படு பயங்கரமான சிந்தனைகளில் ஈடுபட்ட மருதமூரான்,ஆரம்பத்திலேயே பல அரசியல் வேலைகளை காட்டி தான் அரசியலுக்குள்ளே இறங்க வேண்டுமென்று ஒரு முடிவுக்கு வந்தவராய் அதனை பேஸ்புக்கில் ஸ்டேடஸ்'ஆக போட்டிருந்தார்.இதன் மூலம் தனது ஆதரவாளர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்று அறிய.அந்த பெரிய சுப்பர் ஸ்டாரே அரசியல் இறங்கலாமா என்று பார்க்க ஒரு தேர்தலில் அவர்களுக்கு போடாதீர்கள் இவர்களுக்கு போடுங்கள் என்று வெளிப்படை அறிக்கை விட்டு மண் கவ்விக்கொண்டவர்.ஆனால் எங்கள் மருதா அண்ணன்(இனி அப்பிடி தான்..இனிமேல் எல்லாமே அப்பிடித்தான்!)சாதாரண தொண்டனின் கருத்தை அறிய,போட்ட ஸ்டேடஸ் பலத்த வரவேற்பை பெற்றது!

இத்தகைய கண்மண் காணாத வரவேற்பை சற்றும் எதிர்பாராத அண்ணன் எங்கள் மன்னன் தன்னடக்க சிங்கம் மருதா அண்ணன் என்னை(பதிவர் மைந்தன் சிவா)அவர்களை தனது புதிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்திருக்கிறார் என்பது இன்று இரவு எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமாகும்!

இன்னமும் கட்சியின் பெயர்,இலச்சினை,கொடி,கட்சி யாப்பு,உறுப்பினர் தெரிவு என பல விடயங்கள் செய்யப்படவேண்டி இருப்பதால் இந்தப்பதிவு போடும் சமயம் ஒரு தனிப்பட்ட பேட்டி தர இருந்த மருதா அண்ணன் நேரம் போதாமையால் பின்னர் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்படும் போது உங்களுக்கும் அழைப்பு தருகிறேன் என்று அன்பாக கூறியமையால் அவரின் கட்சிப்பணிகளை குழப்பாமல் விட்டுவிட்டோம்.

எதிர்கால இலங்கை அரசியலில் கொடி கட்டி பறக்க இருக்கும் அண்ணனை வாழ்த்தி அவருடன் சேர்ந்து கை கோருங்கள்.எதிர்கால இலங்கையில் ஒரு தலைசிறந்த அரசியல் தலைமையின் அத்திபாரத்தை எழுப்பியோரில் நீங்களும் ஒருவன் என மார்தட்டுங்கள்!!!

அண்ணன் தோள்களை பலப்படுத்துவோம்!கரங்களை முறுக்கேற்றுவோம்!!(என்ன அண்ணன் ஜிம்'முக்கா வந்திருக்காரு!)

குறிப்பு: நீண்ட நாட்களாக பதிவெழுதாமல் இருந்த நான் மருதா அண்ணன் அரசியலில் குதிக்கிறார்னு சொன்னதுமே தலை கால் புரியாமல் ஐந்து நிமிடத்தில் போடப்பட்ட பதிவு தான் இது!அந்த ஐந்து நிமிடத்தினுள் அங்கே எழுபத்தைந்து கமெண்டுகள் இந்த ஐம்பதுக்கு மேலாக வந்து குவிந்திருக்கின்றன என்பதிலிருந்து அண்ணனின் மக்கள் சக்தியை நீங்கள் கணிச்சு பாருங்களேன்!



Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...