காட்சி ஒன்று:
முன்னொரு காலம்...இற்றைக்கு இருபது முப்பது வருடத்துக்கு முன்னர்,எம் ஜி ஆர் என்கிற மாபெரும் சக்தி தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.அதே காலத்தில் தான் சிவாஜி எனும் நடிப்பு திலகம் மறுபக்கம் ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கிக்கொண்டிருந்தது.ரசிகர்கள் ,தமிழர்கள் சிவாஜியின் நடிப்பை போற்றினார்கள்.புகழ்ந்தனர்.ஆனால் எம் ஜி ஆரை தூக்கி வைத்து கொண்டாடினர்.காரணம் என்ன?சிவாஜி சீரியசான,காத்திரமிக்க கதைகளில் நடித்துக்கொண்டிருந்தார்.எம் ஜி ஆர் தியேட்டர் செல்லும் மக்களை குஷிப்படுத்தும் வகையிலான படங்களில் நடித்தார்.மக்கள் நடிப்பை(சிவாஜியை) பார்த்தனர்.எம் ஜி ஆரை கொண்டாடினர்.முதல்வராக்கினார்.
காட்சி ரெண்டு:
அதற்க்கு பிந்திய காலம்...ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னர் தொடங்கி இன்று மட்டும்,ரஜனி என்ற மந்திரம் தமிழர்களையும் தமிழ்சினிமாவையையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.இதே காலகட்டத்தில் பெருத்த ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கி உலகநாயகன் என்ற அந்தஸ்தோடு அங்கீகரிக்கப்பட்டவர் தான் கமல் ஹாசன்.கமலின் நடிப்பை புகழ்ந்தனர்.அடுத்த சிவாஜி என்றனர்.ஒஸ்கார் நாயகன் என்றனர்.ஒஸ்காரை தாண்டிய நடிப்பு என்றனர்.ஆனால் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை வழங்கவில்லை அவர் படங்கள்.நடிப்புக்காக போற்றப்பட்டது.ஆனால் ரஜனியோ,மசாலா படங்கள்,ஹீரோயிச படங்கள் போன்றவற்றில் நடித்தார்.சூப்பர் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார்.வசூல் நாயகன் ஆனார்.அனைத்து தலைமுறை மக்களுக்கும் சிறுவர் முதல் பெரியோர் வரை பிடித்த நாயகன் ஆனார்.
முதல் காட்சிக்கும் இரண்டாம் காட்சிக்கும் ஒற்றுமைகள் பல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்!நடிப்பு,வித்தியாசமான நடிப்பு என்று இருந்த நடிகர்களின் நடிப்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டது,போற்றப்பட்டது.இவர்கள் ரசிகர்கள் பெருமளவான ஆர்ப்பாட்டாமில்லாத,சத்தம் இல்லாத வகையில் படங்களை ரசித்தனர்.மசாலா கதைகள் ,மாஸ் ஹீரோ திரைப்படங்கள் நடித்தவர்கள் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகள் படைத்தன.மக்கள் மனதில் கொள்ளை இடம் பிடித்தவர்களும் இவர்கள் தான்.இவர்கள் ரசிகர்கள் என்றாலே ஆர்ப்பாட்டம் சரவெடி தான்!
இதை கூற காரணம்:இளைய தளபதி விஜய் எப்பவுமே மசாலா திரைப்படங்களில் தான் நடிக்கிறார்.இதை விட வேறுபட்ட கதைகளை எதிர்பார்த்தோம் என்று படம் பார்த்துவிட்டு கருத்து கூறுபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.விஜய்க்கு என்று ஒரு "way " இருக்கிறது.அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.அது தான் மசாலா திரைப்படங்கள்.மசாலா திரைப்படம் என்றால் சின்ன குழந்தையும் சொல்லும் அது விஜய் படம் தான் என்று.மசாலா திரைப்படங்கள் தோற்றிருக்கலாம்.காரணம் இருக்கிறது.
மசாலா திரைப்படம் என்பது இயக்குவது மிக கடினம்.மிகுந்த அவதானம் தேவை.ரசிகர்கள் ஆட்டம்,பாடல்,சண்டை,காமெடி,செண்டிமெண்ட் என்று அத்தனையையும் எதிர்பார்ப்பார்கள்.ஒன்று குறைந்தால் கூட படத்தை குப்பையில் போட்டுவிடுவார்கள்.சாதாரண ஒரு கதை கொண்ட உதாரணத்துக்கு:நாணயம்,மங்காத்தா போன்ற படங்களில் அடி நாதம் ஒன்றாக இருக்கும்.அதாவது அந்த மிஷன்'ஐ முடிப்பது.அதனால் அந்த மாதிரியான கதைகளில் அதிகம் பரந்து பட்டு ஜோசிக்க வேண்டிய தேவையும் இருக்காது.ரசிகர்களும் பரந்துபட்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.விஜய் அடுத்து கவ்தம் மேனனோடு நடிக்கும் "யோகன்" படமும் இதே வகையறாவுக்குள் தான் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசாலா நாயகர்களின் படங்களில் போய் லாஜிக் பார்ப்பவர்களை என்ன சொல்வது?அன்றிலிருந்து இன்று வரை மசாலா படங்களில் லாஜிக் இருக்கவே இருக்காது.எம் ஜி ஆர் படங்களோ அல்லது ரஜனி படங்களோ லாஜிக் மீறல்கள் இருக்கும்,ஆனால் அவை கண்டும் கண்டுக்காமல் விடப்பட்டது காரணம் அவர்கள் மசாலா நாயகர்கள்..மாஸ் ஹீரோக்கள்.அதே மசாலா நாயகன்,மாஸ் ஹீரோ விஜய் படத்தில் சிறிதாக ஒரு லாஜிக் மீறல் வந்தாலே ஊத்தி பெருப்பித்துவிடுவார்கள்.உதாரணமாக ரஜனியின் என்திரனில்,ஒரு ரயில் சண்டை வரும்.சிட்டி ரோபோ தான் அடிபடும்.ரோபோ இரும்பில் செய்யப்பட்டது.ஒவ்வொரு அடியும் இடியென இறங்கியும் கூட அடிவாங்கி விழுந்த வில்லன்கள் அடுத்த கணம் எழும்பி மீண்டும் சண்டை பிடிப்பார்கள்.எந்தவகையில் லாஜிக் இது?அது அப்படித்தான்.!!மசாலா படங்களில்,மாஸ் ஹீரோ கரெக்டர் படங்களில் லாஜிக் மீறல்களை பெருதுபடுத்தி கதைப்பது உங்களின் இயலாமை அல்லது வில்லத்தனம்.
விஜய் என்றால் அவர் என்ன என்ன விடயங்களை முன்னிலைப்படுத்துவார் அவரின் படங்களில் என்று அனைவருக்குமே தெரியும்.அந்தந்த விடயங்கள் பிடிக்காதவர்கள் எதற்கு விஜய் படம் பார்க்க போகிறீர்கள்?அதுவும் அடித்துபிடித்து முதல் நாள்,இரண்டாம் நாள் ஷோ?உங்களுக்குள்ளும் ஒரு விஜய் ரசிகன் இருக்கான் அல்லது படத்தை பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை ஊதிப்பெருதாக்கி விமர்சனம் செய்து ஆதாயம் தேடத்தானே?இந்த புளைப்புக்கு போயி உங்கட சொந்த பிழைப்பை பார்க்கலாமே!
விஜய் என்றால் இளக்காரம்.அவரின் ரசிகர்கள் என்றால் இளக்காரம்.எந்த ஒரு நடிகருக்கும் இத்தனை பரந்துபட்ட எதிர்பார்ப்பு இல்லையென்றே தோணுகிறது.காரணம் விட்டில் பூச்சிகளை போல விஜய் படம் வெளிவரும் போது தான் சிலர் கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழும்புகிறார்கள் போலும்!அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரே தமிழ்சினிமா நாயகன் விஜய் தான்.காரணம்?பொறாமை?என்ன இழவோ,பலருக்கு விஜய் தூக்கத்தை கெடுக்கிறார் என்பது உண்மை தான்.அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.:
இத்தனை நாட்களாக விஜய் படங்கள் பார்த்திருப்பீர்கள்.பிடிக்கவில்லையா?பார்க்காதீர்கள்.மசாலா நாயகன் என்று தெரியும் தானே.ஏன் அதற்க்கு அப்பால் எதிர்பார்க்கிறீர்கள்?நீங்கள் விமர்சிப்பதற்கு பிழை செய்தவர் விஜய் அல்ல.நீங்கள் தான்!!!
எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும் ஒரு காலத்தில்.விஜய்யின் அந்த காலம் சுறா திரைப்படத்துடன் முடிந்துவிட்டது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.