Showing posts with label நடிகர். Show all posts
Showing posts with label நடிகர். Show all posts

Tuesday, October 11, 2011

பவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு!

கொஞ்ச நேரம் சிரிக்கணுமா?அதுவும் மனம் விட்டு??அப்போ மேல படிங்க..


தமிழ் நாட்டுக்கு ஒரு சூப்பர் காமெடியன் கிடைச்சுட்டன் எல்லாம் காமெடியனும் சிரிக்க வைபங்க இவரு அழ வைப்பாறு,...என்ஜாய் தமிழ் மக்களே.........

என்ன பண்றது பணம் இருந்தா பண்ணியும் ஹீரோதான்

உங்க வளர்ச்சி மக்களுக்கு பிடிக்கலைனா அதனால நீங்க.........எனக்கு அழுகையா வருது ன்ன.

"படத்துக்குகே இப்படி செலவு பண்ணி இருக்காரே.. அப்பா DR பட்டத்துக்கு எவளவு பண்ணி இருப்பாரு!....பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான்........"

"என்ன கொடுமை சார்"

"அல்டிமேட் ஸ்டார்க்கு போட்டியா பவர் ஸ்டார் இது தான் ஈக்குவலான போட்டி"

"இவங்களுக்கு எல்லாம் அப்பா பணத்தை என்ன பண்றதுன்னு தெரியல ....அவங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச கஷ்டம் தெரியும் . இந்த மாத்ரி வேஸ்ட் செலவு பண்றதுக்கு நாலு ஏழை க்கு சாப்பாடு போட்ட நல்ல இருபங்க........"

"வருங்கால முதல்வர் ! வருங்கால பிரதம மந்திரி ! வருங்கால ஜனாதி பதி ! அப்புறம் ..... ..............( தெரியலையே !)"

"மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க! இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா?"

"சினிமா யார் வேணும் வரலாம் பப்ளிக் முடிவு எடுக்கணுஎம் ஹீரோவா காமெடியன் வில்லன நல்லவேளை அரசியல் குடும்பா சப்போர்ட் எல்லை ஈவர் ஒரு ஹீரோவா நம்பா பார்க்க வேண்டி ஏற்றுக்கும் ஆட்சி மாற்றம் எல்லனிய என்றைய ப்ரோடுசெர் நேர்த்ரிய ஹீரோ ஆயி இருப்பாரு ஒரு கல் ஒரு கண்ணாடி"

"இதே போலா "அந்தகாலம் " தொட்டு பண்ரைங்க !!!! 'தமக்கு தாமே ..வள்ளல் , செம்மல், தர்மத்தின் ..தலைவன் என்னனமோ ....பினாத்தி கிறங்க ....அப்புறம் "விசில் குஞ்சுகள் பூரா சேர்ந்து "இதய தெய்வம் " என்று தமிழ் நாட்டையே ......... அறிவு வளர்ச்சில் "பின்னோக்கி இழுத்திடு போய்டாங்க ...

"பக்கத்துக்கு கேரளா காரனுக சிரியாய்....சிரிக்கிறங்கி .....'

"who is that dog?"

"வீட்டில இருந்தா தன் மனைவி மட்டும்தான். சினிமாவில், தினம் ஒரு பெண்ண தொடலாமலா...பணத்தை வேசிகிட்டு என்ன பண்றது.'"

"இது எல்லாம் ஒரு கொடுமையா சார் டிவில இந்தியத்தொலைகட்சிகளில் முதல் முரயாகனு படம் போடுறதுதான் கொடுமைலயும் கொடுமை'

"ஐயோ!!! என்னால சிரிப்பு தாங்க முடியலே...எங்க தலைவர் சாம் அன்டர்சன் அவர்களை இவர் மிஞ்சிடுவார் போல."

"பவர் ஸ்டார் படத்துக்கு உன்னமையான வெற்றி தான் சார்.உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு?."

"இவங்கள எல்லாம் ஆள வெச்சு அடிக்கணும்.'

'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் !!!!!!!'

இதெல்லாம் என்னத்துக்குன்னு ஜோசிக்கிரீங்களா மக்களே?இத கொஞ்சம் பாருங்க,













இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?


மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?

ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.

இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.

பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.

இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.

இதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்!


சில விசயங்கள பகிர்ந்துக்கனும்னு தோணும் பாருங்க..அதே மாதிரி இத நக்கீரன்ல பார்த்தோன எனக்கும் அது தான் தோணிச்சு..என்ன பவர் ஸ்டார் ரசிகர் ஐடியா மணி தான் கடுப்பாக போறார்..ஹிஹி

Post Comment

Friday, September 2, 2011

மங்காத்தா-சுட்ட வடை!!





ஒரு ஊர்ல மங்காத்தான்னு ஒரு பாட்டி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பேரப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்த மங்காத்தா பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).
இப்பிடித்தான் ஒரு தடவ "மெட்ராஸ் ஐ" வந்தப்போ பாட்டிக்கு மட்டும் வரல..ஏனென்டா அந்த சமயம் பாட்டி அத்திப்பட்டி கிராமத்தில ஒரு பங்சனுக்கு வடை சுட போயிருச்சு.(பாட்டிட வடை ஒத்து வராமத் தான் அத்திப் பட்டி கிராமமே அழிஞ்சது யாருக்குமே தெரியாது..நீங்க சிட்டிசன்'ல பாத்ததெல்லாம் சுத்தப் பொய்)

பாட்டி ஸ்பெஷல் வடை ஒண்ணு சுடும்.அதிண்ட ஸ்பெஷல் என்னெண்டா சாதா வடையோட ஒரு வாழைப்பழமும் சேர்த்து விக்கிறது தான்.அந்த சாப்பாட்டில மயங்கினான்களோ இல்லையோ தின்னு போட்ட வாழைப்பழ தோல்'ல வழுக்கி விழுந்தவங்க ஏராளம் பேர்!!
அவ்வாறு வழுக்கி விழுந்தவங்களுக்கு பாட்டி வெள்ள நிவாரண நிதியில இருந்து நஷ்ட ஈடு குடுப்பாங்க.

பாட்டிக்கு தினசரி வருமானமே எக்கச்சக்கம்..அதால புருஷன் வேலை செய்யனுமேண்டு தேவை இருக்கல.
அதால தினசரி நாட்டுச் சரக்கு அடிப்பதும் நடு ரோட்'டில படுப்பதும் தான் தலையாய கடமை எண்டு வாழ்ந்து வந்தார்..மங்காத்தா படம் வந்த போது பாட்டியின் ஏரியா ரைட்ஸ் பாட்டி வசம் தான் இருந்தது!மங்காத்தா டா'ன்னு சொல்லி சொல்லி வடையை தூக்கி தூக்கி தாச்சிக்குள் போடும் ஸ்டைலே அழகுதான்!


இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).

உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..


(இவர் தான் மிஸ்டர் சின்னப்பு,One and only husband)

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)


(ஆயிப் போன காக்கா)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..


ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்.............மறுபடியும் முதல்லேருந்தா!!

குறிப்பு:இந்த வடை சுட்ட கதைக்கும் மங்காத்தா ரிலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!


Post Comment

Wednesday, August 3, 2011

அஜித் விஜய் படத்தில் ஹன்சிகா!!!

குசும்பு:அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்:


நம்ம ஹன்சிகா மேடம் பாரிஸ்'ல இரவு ஷாப்பிங் பண்ண வீதியால நடந்து போய்கிட்டிருக்காங்க..திடீர்னு பார்த்தா ஒரு பெரிய லாரி படு வேகமா வருது ஹன்சிகாவ நோக்கி மோதிறதுக்கு!ஒரு அஞ்சு செக்கன்ட் டைம் தான் இருக்கு காப்பாத்துறதுன்னா..இதுதாங்க சிச்சுவேசன்...இப்போ விஜய்யும் அஜித்தும் இந்த இடத்தில இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க?

முதல்'ல நம்ம தளபதி விஜய்:
ஹன்சிகா மேடம் கீழ நடந்து போய்கிட்டி இருக்கேக தளபதி பக்கத்தில இருக்கிற பெரிய பில்டிங் ஒன்றின் நூத்தி பதினஞ்சாவது மாடில நிக்கிறாரு.இந்த சம்பவத்த பார்த்தோன ஒண்ணுமே அவர் மனசுக்க ஓடேல...உடன பழைய அனுபவம் அவருக்கு கைகொடுக்குதுங்க இந்த சந்தர்ப்பத்தில.குருவி படத்தில பாய்ந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதால கொஞ்சம் கூட ஜோசிக்காம ரெண்டு ஸ்டேப் பாக் போய் ஓடி வந்து பாயிறார் ஹன்சிகாவ நோக்கி..அந்த உசரத்தில இருந்து பாய்ந்து கூட நல்ல safe 'ஆ தரையிறங்கிறார்.

தளபதி இறங்கின இடத்தில அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!
ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க..!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில டான்ஸ் ஆடிகிட்டே..நான் நடந்தால் அதிரடி..என் பேச்சு சரவெடி..

அப்புறம் நம்ம தல அஜித்!
ஹன்சிகா மேடம் நடந்து வரேக்க தல எதிர் பக்கத்தால நடந்து வாராரு..வழமை போல கோர்ட் சூட் ,டை எல்லாம் போட்டு,முக்கியமா மறக்காமல் கூலிங் கிளாசும் போட்டு வாராரு..இரவு நேரம் எண்டதால கூலிங் க்ளாஸ் வடிவா வேலை செய்யாம மக்கர் பண்ணுது தலைக்கு..தலைக்கு உடன எம் எம் எஸ் ஒன்னு வருது இதுதான் சிச்சுவேசன் உடன காப்பாத்துங்க அப்பிடின்னு பிரபு அனுப்புறாரு..பாவம் தல என்ன செய்வாரு,ஓடி போயி காப்பாத்தலாம்னா உடம்பு காண்டிசன் இடம் கொடுக்கல..


அதனால "துஷ்யந்தா பாடல்'ல அவர் ஆடுறதுக்கு பதிலா ஆட வைச்ச அல்லக்கை டான்சர்ஸ் அத்தனை பேரையும் உடனடியா கூப்பிட்டு ஹன்சிகா முன்னால ஆட சொல்றாரு...அவங்கட பச்சை மஞ்சள் டிரஸ்'ஐ பாத்து கண் கூசி அந்த லாரி டிரைவர் வண்டிய மத்த பக்கமா திருப்பிட்டாரு..தல அப்பிடியே பாக்கட்ல இருந்து ஒரு சுருட்டு எடுத்து பத்த வைச்சுகிட்டே நடந்து போறாரு...(கூலிங் க்ளாஸ் கழட்டாமலே!)
இங்கயும் ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க!!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில..தல ஓரமா நிக்கிறாரு சுவரோட சாஞ்சுகிட்டே...அந்த காப்பாத்த வந்த அல்லக்கைகள் அவருக்கு பதிலா ஆடுறாங்க...இடையில வரும் மியூசிக்குக்கு எல்லாம் ஹன்சிகாவே ஆடுறாங்க....பில்லா தீம் மியூசிக் போகுது..

அப்புறமா நம்ம பவர் ஸ்டார் எப்பிடி காப்பாத்தி இருப்பார்னு நெனைச்சேன்...ஹிஹி வழுக்கி விழுந்திட்டேங்க!!

Post Comment

Saturday, July 9, 2011

காப்பியடித்த ரஜனி மற்றும் 'போராளி"சசிக்குமார்!!!

பெரிய இது ஒரு நீளமான சினிமா பதிவுங்க...நேரமிருந்தா வாசியுங்க..ஏன் இவ்வளவு நீளமா இருக்குன்னு வாசிக்கும் போதே உங்களுக்கு தெரிய வரும்..!!

தீபாவளி,பொங்கல், மாதிரி டிசம்பர் 12ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு பண்டிகை திருநாள்... சூப்பர் ஸ்டார் பிறந்த அன்று நடந்த நிகழ்சியை பற்றி அவரது அண்ணன் சத்யநாரயணராவ்கெய்குவாட் அவர்களிடம் பேசினோம்.

'' நல்லா ஞாபகம் இருக்கு... 1950, டிசம்பர் 11ம் தேதி ராத்திரி. அம்மா பிரசவ வலியால துடிக்குறாங்க அப்படியும், இப்படியும் புரண்டவங்க கொஞ்ச நேரத்துல கண்ணசந்து தூங்கிட்டாங்க. அப்போ அவங்க கனவுல மகான்கள் வர்றாங்க... கடவுள், 'கவலைப்படாதே... உனக்கு நல்லபடியா மகன் பிறப்பா..' என்று ஆசீர்வாதம் பண்றார். மறுநாள் காலை மறுபடியும் பிரசவவலி. அப்போ எனக்கு 19வயசு... அப்பா ராமோஜிராவ்கெய்குவாட் போலீஸ்காரர். கார்ல கூப்பிட்டு போகணும்னு ஆசை... ஆனா அதுக்கு கையில காசு, பணம் இல்லை. தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கிற அளவுக்கு எங்க குடும்பத்துல அப்படி ஒண்ணும் வசதி கிடையாது. பெங்களூர்ல இருக்குற வாணிவிலாஸ். அரசு மருத்துவனைக்கு அம்மாவை நானும், அப்பாவும் அழைச்சிட்டு போனோம்.

காலைல 11 மணிக்கு அம்மாவுக்கு வலி வந்துடுச்சு... 12.12.1950 மதியம் 12 மணிக்கு பொறந்தார் ரஜினி.. நான், நாகேஸ்வரராவ், சகோதரினு இருந்த எங்க குடும்பத்தோட கடைக்குட்டி ரஜினி...

அம்மா கண்விழிச்சு பார்க்குறாங்க... பக்கத்துல என் தம்பி சிணுங்கலோட... மலங்க... மலங்க முழிச்சு பார்க்குறான். அப்பத்தான் நான் ஆரம்பத்துல சொன்ன கனவு என்கிட்டேயும், அப்பாவிடமும் அம்மா சொன்னாங்க... அம்மாவை பார்க்கறதுக்கும், தம்பி பொறந்ததை பார்க்கறதுக்கு சொந்த பந்தம், சாதி சனம் எதுவுமே வரலை.. என்னையும், அப்பாவையும் தவிர அம்மாவுக்கு ஆறுதலா யாருமே இல்லை..

ஒண்டியா படத்துக்கிட்டு என்னை உத்து உத்து பார்த்துட்டு பொக்கை வாய் காட்டி சிரிச்சான்... இன்னிக்கு டிசம்பர் 12ம் தேதி ரஜினி பொறந்த நாள் அன்னிக்கு உலகமே திருநாளா கொண்டாடுது... ஆனா அவன் பொங்களுரூ அரசு மருத்துவமனையில பொறந்தப்ப ஒருத்திரும் வரலை... அன்னிக்கும் சரி... இன்னைக்கும் சரி ஏழைக்கு ஏதுங்க நாதி...

11 வயது பிரைமரி ஸ்கூலு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். அப்பத்தான் அம்மா இறந்துட்டாங்க. எங்க வீட்டு கடைக்குட்டி ரஜினி, அப்பவுமே துறுதுறுன்னு இருப்பான் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல அம்மான்னா ரஜினிக்கு உசுரு... ரஜினிக்கு உயிர் கொடுத்த அம்மா உடம்பு உயிர் இல்லாம இருந்துச்சு... ஸ்கூல் விட்டு வந்த ரஜினி அப்படியே அம்மா முகத்தை பார்த்து உறைஞ்சு போயிட்டான்.. எப்பவும் சுறுசுறுப்பா வேகமா இருக்கிறவன் அம்மா இறந்த சோகத்துல கொஞ்சநாள் அமைதியாகிட்டான்.

சென்னைக்கு வந்து சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சார். அப்பாவை அடிக்கடி சென்னைக்கு அழைச்சுட்டு போய் பாசமா தன்னோட தங்க வச்சுக்குவார். ரஜினிக்கு 30வயது இருக்கும்... அப்பா ராமோஜிராவ் இறந்துட்டார். 'அபூர்வராகங்கள்' 'மூன்று முடிச்சு' படங்கள்ல தம்பி நடிப்பை பார்த்து ரசிச்சார். என்ன ஒண்ணு... வில்லனா நடிச்சத பார்த்தவர், பிற்காலத்துல ... ஹீரோவா... இப்போ சூப்பர் ஸ்டாரா உசந்து நிக்கறதை பார்க்காம போயிட்டார்...

எந்த சூழ்நிலை பொறந்தோம்னு அவருக்கு நல்லாத் தெரியும்... இப்பக்கூட ஒவ்வொரு டிசம்பர் 12ம் தேதி அன்னிக்கு தன்னோட பழைய ஞாபகத்துல மூழ்கிடுவார்... அதனால் தான் முன்னாடி எல்லாம் 'என் பிறந்த நாள் அன்று வெளியூரில் இருப்பதால் ரசிகர்கள் என்னைத்தேடி வரவேண்டாம்' என்று அறிக்கையை பேப்பர்ல கொடுத்து வந்தார்.

கடைக்குட்டி ரஜினிமேல் எங்கம்மாவுக்கு ரொம்ப பிரியம். நல்ல உத்தியோகத்தில் கை நிறை சம்பாதிக்கனும் என்பது அம்மாவோட ஆசை.. இன்னிக்கி என் தம்பி சூப்பர் ஸ்டாரா இருக்கற காட்சியை பார்க்கரத்துக்கு எங்கம்மா உயிரோட இல்லையேனு நினைக்கும் போது கண் கலங்குது... மனசு பதறுது...

ரசிகருங்க எல்லாம் ரஜினி அரசியலுக்கு வரனும்னு ஆசைப்படுறாங்க... அவருக்கு என்னவோ அதிலே அவ்வளவு இஷ்டம் இல்லை.. சாதாரண நடிகனா நாலு படத்துல தலையை காட்டணும்னுதான் சினிமாவுல நடிக்க சென்னைக்கு வந்தார்.. இப்போ பெரிய நடிகரா உசந்து நிக்கிறான்.. எல்லாத்துக்கும் ஆண்டவனோட ஆசீர் வாதம் காரணம். அதுபோல அரசியலுக்கு வரணும்னு அவர் தலையில ஆண்டவன் எழுதியிருந்தா அதை யாரால தடுக்க

முடியும்...'' என்று மனமுருகினார்..

===========================================================================

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!'' : புதிய போராளி சசி

ளவான தாடியும் அழகான சிரிப்பும் சசிகுமாரின் அடையாளம். அடர்ந்தும் படர்ந்தும் கிடக்கும் தாடி... அள்ளிக் கட்டும் தலைமுடி... மறந்தும் சிரிக்காத உதடுகள்... என வழக்கமான அடையாளத்தை அப்படியே துடைத்து எறிந்துவிட்டு, உக்கிர உருவம் உடுத்தி இருக்கிறார் சசிகுமார். 'போராளி’ - தலைப்பின் தகிப்பைச் சொல்லும் புகைப்படங்கள்.

''ஈசனுக்குப் பிறகு ஆள் எங்கே எனத் தேடுகிற அளவுக்கு அமைதியாகிட்டீங்களே?''

''படங்களைத் தவிர்த்து வேறு எந்த விஷயங்களையும் நான் பேசுறது இல்லை. பேச வேண்டிய சேதிகளை என்னோட பாத்திரங்களின் மூலமாகவே பேசுறேன். ஒவ்வொரு படம் முடிஞ்ச பிறகும், இதே அமைதியில்தான் அடுத்த வேலையில் இருப்பேன்... இருக்கேன்!''

'' 'சுப்ரமணியபுரம்’ என்கிற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவரின் இரண்டாவது படம் 'ஈசன்’... ஏன்டா இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என வருந்துகிறீர்களா?''

''நிச்சயமா இல்லை!

என் படத்தின் முதல் ரசிகன் நான்தான். படத்தை எடுக்கும்போதே, இது அனைத்துத் தரப்பினருக்குமான படமா... இல்லை, குறிப்பிட்ட ஒரு சாராருக்கான படமா என்பது தீர்மானமாகிவிடும். 'சுப்ரமணியபுரம்’ அனைத்துத் தரப்புக்கான படம். அணையை உடைச்சுவிட்ட மாதிரி, அது பாய்ந்து பரவியதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், எத்தனையோ பேருடைய வாழ்க்கைக்கு நுழைவு வாயிலா இருக்கிற சென்னை நகரம், சிலரோட வாழ்வைச் சிதைச்சு சின்னாபின்னமாக்கும் மண்ணாகவும் இருக்கு. அந்த பயங்கரத்தைப் பதிவுபண்ணினால், பெற்ற வயிறுகளுக்கான எச்சரிக்கையாக இருக்கும் என எண்ணினேன். 'படம் நீளம்’னு சிலர் சொன்னாங்க. படத்தின் நீளத்துக்காகக் கவலைப்பட வேண்டியது ஒரு தயாரிப்பாளர்தான். 'சுப்ரமணியபுரம்’ மாதிரியே பட்டையைக் கிளப்புற கதை இருக்கு. ஆனால், அதை என்னோட இரண்டாவது படமாப் பண்ண நான் விரும்பலை. 'ஈசன்’ படத்தைப் பார்த்து, நெஞ்சு துடிக்கக் கதறிய ஒரு தந்தையின் கண்ணீர்த் துளிதான் எனக்கான பரிசு. அதைவிடப் பெரிய விருது தேவை இல்லை!''

'' 'ஈசன்’ தோல்விக்குப் பிறகு 'சசி அவ்வளவுதான்’ எனப் பேச்சு கிளம்பியதே... எப்படி உணர்ந்தீர்கள்?''

''நான் யாரைப்பற்றியும் பேசியது இல்லை. எல்லோருக்கும் பிடிச்ச நல்ல பிள்ளையாத்தான் இருந்தேன்; இருக்கேன். 'ஈசன்’ தோல்வியால் யாரும் நஷ்டப்படலை. யாரோட தோல்வியையும் ரசிக்கும் மனோபாவம் எனக்கு இல்லை. அப்படியும் என்னுடைய சறுக்கல் ரசிக்கப்படுதுன்னா, அதிலும் எனக்குச் சந்தோஷம்தான். ஏன்னா, இன்னிக்கு என் தோல்வியை ரசிச்ச வங்க, அன்னிக்கு என் வெற்றியையும் ரசிச்ச வங்கதான். 'சுப்ரமணியபுரம்’, 'பசங்க’, 'நாடோடி கள்’னு நான் திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஓடியதை ஆச்சர்யமாப் பார்த்து இருக்காங்க. அதே வேகத்தில் நான் தேசிய விருது வாங்கியதைப் பார்த்து அவங்க திகைச்சு இருக்கலாம். ஆனால், நான் எல்லோருடைய வெற்றிகளையும் ரசிக்கிறேன். இந்த வருஷம் தமிழ் சினிமா நிறைய தேசிய விருதுகளை வாங்கினப்ப, என் மண்ணுக்கான விருதா நெனைச்சுப் பூரிச்சேன். தமிழக மக்களும் இதைக் கொண்டாடணும். மண்ணின் பிரதிபலிப்புகளைப் படம் பிடித்ததற்காக, எந்தக் கலைஞனும் விருதுகளுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்கிற பக்குவம் எப்ப பிறக்குதோ, அப்பவே நாம ஜெயிச்சிட்டோம்னு அர்த்தம். அனுராக் காஷ்யப் ஆபீஸ் போயிருந்தேன். அவரோட 'நோ ஸ்மோக்கிங்’ படத்தின் ஸ்டில்லை ஒட்டி '26 ஆன் ஸ்க்ரீன்’, 'அவுட் ஆஃப் ஸ்க்ரீன் 30’-னு போட்டு இருந்தார். 'என் படம் நாலே நாள்தான் ஓடியது’ என்பதை அவர் பகிரங்கமாகச் சொல்லி இருந்ததைப் பார்த்து மிரண்டுபோனேன். அடுத்து, பாலாஜி சக்திவேல் சார்... 'கல்லூரி படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு ஒரு நண்பர் சொன்னப்ப, 'நான் அந்தப் படத்தைச் சரியா பண்ணலைங்கிறது எனக்கே தெரியும். அடிக்கிற காயத்தைவிட, சொறிகிற காயத்துக்கு நான் ஆளாக விரும்பலை’ன்னு சொன்னாராம். இதைக் கேட்டப்ப, எனக்குச் சிரிப்பு வரலை. தோல்வியை மகுடமா நினைக்கிற மனப் பக்குவம்தான் வந்துச்சு. ஆரம்பத்திலேயே ஜெயிக்கிறதைவிட ஒரு தோல்விக்கு அப்புறம் ஜெயிச்சுப் பாருங்க... காயத்தின் மீது பூசப்பட்ட களிம்பா, அந்த வெற்றி உங்களைப் பூரிக்கவைக்கும்!''

'' 'போராளி’ங்கிற டைட்டிலும் ஆவேசமான படங்களும் ஈழம் சம்பந்தமான கதையோன்னு யோசிக்கவைக்குதே?''

''இது ஒரு தனி மனுஷனோட போராட்டக் கதை. மக்களுக்காக - மண்ணுக்காக - சோற்றுக்காக - சுதந்திரத்துக்காகன்னு போராடுற எல்லோருமே போராளிகள்தான். பொழுதைக் கழிக்கப் போராடுறவங்களுக்கு மத்தியில், போராட்டமே ஒவ்வொரு பொழுதுமா விடியும் ஒருத்தனோட கதை. கருவேல மரங்களுக்கு மத்தியில் நடிச்சப்பதான், அந்த மரத்தையே நிழலா நினைச்சு வாழும் மக்களோட வலி தெரிஞ்சது!''

''நீங்கள் இயக்க, சமுத்திரக்கனி நடிக்க... அவர் இயக்க நீங்கள் நடிக்க... இந்த நட்புச் சங்கிலி நல்லா இருக்கே?''

''இரண்டு பேர் பிரிஞ்சிட்டாங்கன்னா... அதை அதிர்ச்சியா விசாரிக்கலாம். இரண்டு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறதை ஆச்சர்யமாப் பார்த்தால் எப்படி? முன்பே போட்ட ஒப்பந்தப்படி, இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா ஓடிக்கிட்டு இருக்கோம். இதே மாதிரி எல்லாரும் சேர்ந்து ஓடணும்கிறதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. 'நட்பே ஜெயிக்கட்டும்’னு, 'நாடோடிகள்’ படத்தில் பாட்டாகவும் காட்சியாகவும் விரிந்தது எல்லாமே மனசுக்குள் இருக்கிற நட்பால்தான். ஈகோவும் பொறாமையும் இல்லைன்னா... எல்லாருமே நண்பர்கள்தான்!''

''ஸ்ரீதேவி வீட்டில் டின்னர்... த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை... அமலா பாலை ஜோடியாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தல்... என 'மன்மதன்’ அளவுக்கு உங்களைச் சுற்றி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்?''

''ஒரு படத்தை முடிச்சிட்டு நான் இடைவெளிவிட்டால், என்னைப்பற்றி அப்போதும் ஏதாவது பேசணும்னு எதிர்பார்க்கிறாங்க. நான் சைலன்ட்டா ஒதுங்கிடுறதால், ஏதேதோ எழுதுறாங்க. ஸ்ரீதேவியை இதுவரைக்கும் நான் நேர்ல பார்த்ததே இல்லை. ஆனா, அவங்க மகளை என் படத்துக்காக நான் பார்க்கப்போனதா எழுதினாங்க. படத்தில் புக் பண்ணுவது சம்பந்தமா எந்த நடிகையிடமும் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. அப்படி இருக்க, த்ரிஷாகிட்ட பேச்சுவார்த்தை நடக்கிறதா பரபரப்பு... அப்புறம் என் பெயரைச் சொல்லி, அமலா பாலுக்கு யாரோ போன் பண்ணியதா செய்தி. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல்தான் போலீஸுக்குப் போய் புகார் பண்ணினேன். இப்போ படத்தில் சுவாதி, வசந்தா, நிவேதான்னு மூன்று ஜோடி. இனி எனக்கு யாரும் ஜோடி தேட வேண்டிய அவசியம் இல்லை!''

''உங்க குரு அமீர் அத்தனை விவகாரங்களிலும் பட்டையைக் கிளப்புறார். ஆனால், நீங்க சினிமா தவிர்த்து பொதுவான விஷயங்களில் எப்பவுமே தலையைக் காட்ட மாட்டேங்கிறீங்களே?''

''அமீர் அண்ணன் ஆரம்பத்தில் சில விவகாரங்களில் பேசினப்ப, 'உங்களுக்கு இது தேவையா?’னு ஆதங்கப்பட்டவன் நான். ஆனால், இன்னிக்கு அண்ணன் பண்றது சரின்னுதான் தோணுது. ஒரு குடும்பத்தில் மூணு அண்ணன் தம்பிகள் இருந்தால், எல்லாருமே ஒருத்தரைப்போல் இருக்கிறது இல்லை. அமைதியையே அடையாளமா வெச்சிருக்கார் என் மூத்த அண்ணன் பாலா. எதையும் துணிச்சலா தட்டிக்கேட்கிறார் என் சின்ன அண்ணன் அமீர். இதை எல்லாம் ஆச்சர்யமாப் பார்த்தபடி சினிமா வைச் செய்றதுதான் இந்தத் தம்பியோட வேலை. என்னால் 10 இயக்குநர்கள் உருவாகணும்கிறதுதான் என்னோட ஆசை, இலக்கு எல்லாமே!

எனக்கு 'பசங்க’ பண்ணித் தந்த பாண்டிராஜ் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தப்ப மனசுக்குள் உருவான வைராக்கியம் இது. அடுத்து என்னோட அசிஸ்டென்ட் பிரபுவை இயக்குநரா மாத்தப்போறேன். விடியலுக்கான கயித்தைப் பிடிச்சிட்ட சந்தோஷத்தில் கொண்டாடுறான். பிறக்கிறதைவிட, பிரசவிக்கிறதுதான் பெரிய சுகம்!''

நன்றி-சினிமா விகடன்
கடந்த வாரம் முழுவதுமாய் பதிவு போடவில்லை..பெரிதாக நண்பர்கள் தளங்களுக்கும் செல்லவில்லை..அடுத்த கிழமையிலிருந்து எல்லாம் சரியாகுமென்று நம்புகிறேன்..

Post Comment

Friday, September 17, 2010

அரைச்ச மாவ அரைப்போமே...!!


(ரஜனி மனசுக்குள்ளே)
வயசானாலும் உன்
அழகும் சிரிப்பும்
உன்ன விட்டு போகலையே
ஐசு...!!

(ஐஸ் மனசில்)
அறுபதிலேயும் உங்களுக்கு
ஆசை போகலையே
பாஸ்'சு..!!

(பார்த்தீபன்)
கருங்கல்லுக்கு
ஒளியேற்றிய
சூப்பர் பிகர்
நீ...எனக்கு
முன்னொரு காலம்!

(சீதா)
நிறம் கூட
மேட்ச் ஆகல நமக்கு..
சதீஷ்'இன் பிகர்
நான்
இப்போ நீ அமுக்கு!

(சிம்பு)
எப்பிடி எல்லாம்
கடிச்சேன்டி...
இப்பிடி
கழட்டி விட்டிட்டியேடி..
அம்மாடி ஆத்தாடி..!

(நயன்)
நீ தானே கேட்டவன்
தாடி மாமா வல்லவன்
நான் பாதி தடி(தாடி)பாதி
சேர்ந்து இருந்தா
ஜாலி தாண்டா
அதே...
அரைச்ச மாவ
அரைப்போமே..
தொவைச்ச துணிய
தொவைப்போமே!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...