Tuesday, February 5, 2013

அனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..!!



          

கால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா...!

பட்டாபட்டி ஆண்ட்ராயர்,பனியன் சகிதமாக கிளு கிளுவென அனுஷ்காவின் கால்களை ரசித்து எப்பம்விடக்கூடிய மாதிரி,அனுஷ்கா காலடியில் மனோ பாலா...!

அனுஷ்காவின் ஒரு கை மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.மனோ பாலாவின் இரு கைகளுமே கட்டப்பட்டிருக்கின்றன.பாவம் மனோ!வெண்ணைக்குடமே பக்கத்திலிருந்தாலும்,கைகள் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்துவிட முடியும்...!

"என்னோட பாடிய பார்க்காதை "ப்ரெய்ன்"னை பார் என்று பன்ச் அடிக்கும் மனோ பாலா,தான் ஒரு ஐடியா குடோன் என்பதை நிரூபிக்கிறார்.எப்படி என்பதை திரையில் காணுங்கள் என்று கூறி ஆவலாக வந்த உங்கள் வாயில் அல்வா கொடுக்க மனம் இடம்தரவில்லை எனக்கு.

அனுஷ்கா கால்களை அப்படியே பார்த்தால் யாருக்கு தான் கிறக்கம் ஏற்படாது!படத்தில் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.நேரில் பார்த்த மனோ பாலா?வெட்கத்தை விட்டு அனுஷ்காவிடம் "சட்டு புட்டின்னு உன்னோட காலை என்னோட பனியனுக்க விடு" அப்பிடின்னு ஒப்பினா கேட்டிடுறார் மனோ!ஏது பனியனுக்க காலா????


என்னடா இதுவரை தமிழ் சினிமாவில் ஆம்லெட் போட்டிருக்கிறார்கள், பம்பரம் விட்டிருக்கிறார்கள் ஏன் பட்டாசு கூட போடுவதை தான் பார்த்திருக்கிறோம்.பொதுவாக இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டி இப்படியான விஷயங்களை வைத்து தான் அளவிடப்படுகிறது.ஆனால் இவை எல்லாமே ஹீரோயின்களுக்கு ஹீரோக்களால் செய்யப்பட்டவை.காமெடியன்கள் செய்ததே கிடையாது.அதுவும் அனுஷ்கா மாதிரி ஹீரோயின் போயி மனோ பாலாவின்ட பனியனுக்க....ச்சா சா நடக்கவே நடக்காதின்னு தான் நானும் நெனைச்சேன் பாஸ்..ஆனால் நடந்தது??

பெரும்பாலான பெண்கள் போலவே ஒன்றும் ஜோசிக்கவில்லை அனுஷ்கா(அவளும் பெண் தானே!!)., மனோ பாலா பனியனுக்குள் காலை விட்டால் மனோ பாலாவின் உசிர் போவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூட கருணை வரவில்லை.சரி அந்த நினைப்பு வராத வரையில் நமக்கு சந்தோசமே என்று காத்திருக்க,ஏற்கனவே தொடை தெரிய போட்டிருந்த குட்டை பாவாடையை கூட மறந்து,கீழே இருந்த மனோ பாலாவின் பனியனுக்குள் தனது காலை தூக்கி போடுகிறார் அனுஷ்கா!(விடுகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள், கிளுகிளுப்பாக இருக்கும்!)

உள்ளே விட்டு குடைய,வெளியில் கால்விரலால் தடவ...மனோ பாலா நெளிய கூனி குறுக...பார்க்கிறவன் கடுப்பிலே கருக...என்று மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஸீன் அது.இயக்குனர் சுராஜ்'க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.எங்களை விட மனோ பாலா தான் பாராட்டி தீர்த்திருப்பார்.ஏன் எக்ஸ்ட்ராவா அமவுண்ட் செட்டில் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை !!

சினிமாவுக்குள் நடிக்க வந்ததற்கு இந்த சீனில் நடித்த பின்னர் தான் முழுப்பயன்,பிறவிப் பெரும்பயன் அடைந்திருப்பார் மனோ பாலா என்று அடித்து கூறலாம்.ஏன்னா படத்தின் ஹீரோ கார்த்திக்கே இந்தளவு நெருக்கமான ஸீன் படத்தில் இல்லைன்னா பார்த்துக்கோங்க!!

           

அலெக்ஸ் பாண்டியன் பற்றி..!

அலெக்ஸ் பாண்டியன் படம் வெளிவர முன்னரே மசாலா ஹிட் அடிப்பதற்கான அனைத்துவித தகுதிகளையும் படம் கொண்டிருந்ததாக கருதியிருந்தேன்!காரணம் சிம்பிள்.இதுவரை தோல்விப்படமே கொடுக்காத ஹீரோ(சகுனி அவரேஜ்),சந்தானம் என்கின்ற காமெடி கிங், "கார்த்திக்-சந்தானம்" ஜோடி கல்லா கட்டிய படங்கள் பல! அப்புறம் ஹாட் ஹீரோயின் அனுஷ்கா,மசாலாவுக்கே உருவான இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஏற்கனவே வந்து ஹிட் ஆனா "பேட் பாய்"பாடல்(ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒருதடவை மீள மீள ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது), பிரமாண்ட ப்ரோமோசன் நடவடிக்கைகள்-பிரமாண்ட பாடல் வெளியீட்டு நிகழ்வு என்பன படம் நிச்சயம் வெற்றி தான் என்கின்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தது எனக்கு! 

படம் வெளிவந்தது முதல் கொண்டு வெளிவந்த விமர்சனங்களை வைத்து பார்த்தபோது அல்டிமேட் "சுறா","வில்லு" மற்றும் "ஏகன்","ஆழ்வார்" போன்ற படங்களை எல்லாம் மறக்க வைக்க கூடிய அவதார படம் வந்துவிட்டதாகவே அனைவரும் பேசிக்கொண்டனர். சுறா படத்தை முண்டியடித்து போய் முதல் ஷோ பார்த்த அனுபவம் இருந்தமையால் இதற்க்கெல்லாம் பயப்பிடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.ஆனால் தியேட்டர் போய் பார்க்க எனக்கும் பிடித்திருக்கவில்லை;என்னுடன் வருவதற்கு நண்பர்கள் எவருமே தயாராக இருக்கவும்மில்லை.ஏற்கனவே அவர்கள் அனைவரினது பேச்சிலும்,மூச்சிலும்  'ப்ளட்' வந்துகொண்டிருந்ததை பார்த்த போது அவர்கள் ஏற்கனவே பாண்டியனை பார்த்துவிட்டனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது!அப்புறம் என்ன,வீட்டில் 'சிடி' தான்!!



படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்த ஒரே சீனையும் மேலே சொல்லியாகிவிட்டது.வேறு ஏதாவது சொல்லியாகணுமே என்று கேட்போருக்கு:

*தெலுங்கு படங்கள் போன்றது என்று கூறியிருந்தனர் பலர்.ஆனால் அவர்கள் கூட எதோ சற்று நம்ப கூடிய வகையில் காட்டுவார்கள்.பத்தடி தூரத்தில்,பத்து பஜரோ ரக வாகனத்தில் அம்பது பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வர,அலெக்ஸ் பாண்டியனும் அனுஷ்காவும் ஓடி தப்புவதை பார்க்கும் போதே ரவுடிகள்  மேல இருந்த மதிப்பு சுத்தமா போச்சுயா எனக்கு!இனிமேல் நானும் யாராவது ரவுடியோட போயி வம்புக்கு இழுக்கலாம்னு இருக்கேன்..யார் வர்றீங்க?

*ஆரம்பத்தில கொஞ்சம் கலகலப்பாக இருந்தாலும் பின்னாடி பெரும்பாலான சந்தானம்-தங்கச்சிகள் மூணு பேர்-கார்த்தி அடிக்கும் லூட்டி கடுப்பேத்துது.செம போர்.அதில கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் என்று பார்த்தால் சில காட்சிகள் கூட... ஒரு காட்சியில் தங்கச்சிகளை குனிய வைத்து...(..!!? )எதோ விளையாட்டு விளையாடுவார் கார்த்தி.வழமை போல சந்தானம் போய் தடுக்க,சரி நீ குனி அவங்களுக்கு பதிலாக என்று சந்தானத்தை குனிய வைத்து.... மிகுதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

**வில்லன்கள் துரத்த,ஒரு வாகனத்தில் அலெக்ஸ் சந்தானம்,அனுஷ்காவுடன் பறக்கிறார்.இடையே ஒரு பெரிய மதில்(தூண்)வருகிறது.அப்படியே பாய்கிறார் வாகனத்துடன்.பாருங்கள் எந்த சேதாரமின்றி மதிலை உடைத்துக்கொண்டு மூவரும் வந்து இறங்குகின்றனர் மதிலுக்கு மறுபக்கம்!இதில் ஏற்கனவே வாகனத்தின் முன்,பின் கண்ணாடிகள் உடைந்திருந்தன.வாகனத்தின் முன்னாடி கார்த்தி,சந்தானம் இருந்தார்கள். நேரே வந்த மதில் கற்கள் இருவரையும் தொட்டு தடவிவிட்டு சென்றமையால் காயமே இல்லை இருவருக்கும்!

                                (அந்த மயிர் குச்-குச்செறியும் காட்சி இது தான் ) 

** துப்பாக்கி பட க்ளைமாக்ஸ்'ல் விஜய்யின் கையை அவிழ்த்துவிட்டு அடி பார்ப்போம் உண்மையான ஆம்பிளையாக இருந்தால் என்று ஒரு சீன் வருமே?அவிழ்த்துவிட்டு அடிவாங்கி வில்லன் இறப்பது போன்ற காட்சி?அது துப்பாக்கியில் வரும் போதே அதிகமாய் கலாய்க்கப்பட்டது ஞாபகமிருக்கலாம்.அதே க்ளைமாக்ஸ் தான் இங்கும்!அது தான் சன்டிவியில் பாஸ்கி சொல்வார்,மிக அருமையான,புதுமையான ஐடியா,இதை போல எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள் க்ளைமாக்ஸ் என்று!இனிமேல் "உண்மையான ஆம்பிளையாக இருந்தால் அவிழ்த்து விடு அடி பார்க்கலாம்"என்று யாரும் கேட்டால் ஏன் கெஞ்சினால் கூட வேண்டாம் பாஸ் போயிராதீங்க..உங்களுக்கு தான் ஆபத்து..!!  

படத்தின் ப்ரோமோ பாடல் "பேட் பாய்ஸ்" படம் வெளிவர முன்னமே வெளியாகி ஓரளவுக்கு ஹிட் ஆகியிருந்தாலும் கூட,அது படத்தில் இடம்பெறவில்லை.படத்தில் இடம்பெற்ற மிகுதி அத்தனை பாடல்களும் சுமார் ரகம் என்று தான் கூற முடியும்.ஒன்று கூட தேறவில்லை.மசாலா படம் ஒன்றுக்கு பாடல்கள் ஹிட்டாக அமைவது முக்கியமான விடயம்.விஜய்யின் பல மசாலாக்கள் ஓடியதற்கு பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது முக்கிய காரணம்.இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது வழமையான கடமையை செய்யவில்லை போல் தான் தெரிகிறது.அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மசாலா படங்கள் தான்.அவற்றிலும் சொதப்பலாமா!

                       

இவ்வளவும் தாண்டி படத்தின் கதை என்ன என்று கேட்கும் மகராசன்கள் படத்தின் முதல் பதினைந்து நிமிட காட்சியை மட்டும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.அப்புறம் தெரியும்யா படம் முழுசா பார்த்தவனோட வலி...!!

குறிப்பு:பதிவின் தலைப்புக்கு காரணம் அந்த பாழாப்போன இயக்குனர் சு.......னா பானா சுராஜ் தான். "பிட்டு" பிரியர்கள் இதற்க்கு எதிராக தடையுத்தரவு கேட்டு கோர்ட்டு கேஸுன்னு போயிராதீங்கப்பா!



Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கலான விமர்சனம்! நன்றி!

K said...

அலெக்ஸ்பாண்டியன் பார்த்த போதுகூட இவ்வளவு கிளுகிளுப்பு ஏற்படவில்லை! ஆஹா என்ன ஒரு வர்ணிப்பு? என்ன ஒரு எழுத்துக் கோர்வை!

மைந்தன் நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க..............!!!!

“,கீழே இருந்த மனோ பாலாவின் பனியனுக்குள் தனது காலை தூக்கி போடுகிறார் அனுஷ்கா!(விடுகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள், கிளுகிளுப்பாக இருக்கும்!)”

வரலாற்றுச் சிறப்பு மிக்க வரிகள் :)

K.s.s.Rajh said...

அனுஸ்கா காலைவிடும் சீனை பார்த்து நம்மால் கை.............அட கையை தலையில் அடித்துக்கொண்டு அழத்தான் முடியும் மனோ பாலாவுக்கு இப்படி ஒரு சான்ஸ் என்று சொல்ல வந்தேன்

கிஷோகர் said...

அனுஸ்கா மனோபாலா பிட்டு ஸீன் எழுதினதோடடவே நிறுத்தி இருக்கலாம். அப்புறம் அலக்ஸ் பாண்டியன்னு ஆரம்பிச்சது.... ஜிவ்வின்னு ஏறியது சப்புன்னு எறங்கிடிச்சு... நான் உற்சாகத்தை சொன்னேன்.... ஏன் பாஸ் நல்லா தானே எழுதுறீக? அப்புறம் ஏன் அலக்ஸ் பாண்டியன பத்தியெல்லாம் எழுத போறீக/

Ragu said...

சுராஜ் இண்ட வீக்னெஸ் எதையோ தெரிஞ்சு வைச்சுக்கொண்டு அவரை மிரட்டி, இந்த மனோபாலா தனகேத்த மாதிரி சீன் அமைச்சிருகிறார், உண்மையிலேயே ப்ரைன் உள்ள மனுசன்தான்ய இவரு :)

கூடிய சீக்கிரம் பல மாட்டர்களை (மேல ஒருவர் சொன்னது போல என்னா எழுத்து நடயையா உமக்கு !!) புனை பெயரில் எழுத வாழ்த்துக்கள் மைந்தன்.

செங்கோவி said...

Ayyo..paavam.

Related Posts Plugin for WordPress, Blogger...