Showing posts with label மெல்லினமே. Show all posts
Showing posts with label மெல்லினமே. Show all posts

Wednesday, August 11, 2010

மெல்லினமே மெல்லினமே!

இந்தப்பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது..அந்தளவுக்கு மென்மையான இசையும் கவித்துவமான வரிகளுமாய் ஷாஜகான் திரைப்படத்தில் அமைந்தது இந்தப்பாடல்.ஹரிஷ் ராகவேந்திராவின் குரலில் மணி ஷர்மாவின் இசையில் மக்கள் மனங்களை வருடிச்சென்ற மெல்லினமே மெல்லினமே பாடல் மீண்டும் உங்கள் ஞாபகங்களை மீட்டிப்பார்ப்பதற்காக..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..
(மெல்லினமே மெல்லினமே)

மீண்டும் ஒரு முறை பாருங்கள்..நிச்சயம் உங்களை மறப்பது உறுதி!!


நெஞ்சங்களே நெஞ்சங்களே
கொஞ்சம் ஓட்டினை போட்டு செல்லுங்கள்
உங்கள் எண்ணங்களை ஒரு பின்னூட்டலாய்
அங்கங்கே விட்டு செல்லுங்கள்..!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...