அவுஸ்திரேலிய ரசிகர்களின் சத்தம் கேட்கவில்லையாம்!!
கடந்த வாரம் நடைபெற்றதை மறப்பதே ஆஷஸ்'இல் வெற்றி பெறுவதற்கான ரகசியம் என மெல்போர்ன் போட்டி தொடங்குவதற்கு முன்னரேயே கெவின் பீட்டர்சன் கூறியிருந்தார்.அதற்க்கேற்றவகையில் அடிலெயிட் தோல்வியை மறந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
இருபத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து ஆஷஸ்'ஐ தக்கவைத்துக்கொண்டுள்ளது!1956 'ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற மாபெரும் வெற்றி!!இன்னிங்க்ஸ் மற்றும் 157 ஓட்டங்களால் அபார வெற்றி!!2010 /2011 ஆஷஸ்'இல் இரண்டாவது இன்னிங்க்ஸ் தோல்வி அவுஸ்திரேலியாவுக்கு..ஆஷஸ்'இல் அதிகம் அடிபட்ட தலைவராக பாண்டிங்..!!
மெல்போர்ன்'இல் கடந்த பத்துப் போட்டிகளில் ஒன்பதில் வெற்றி,மூன்றாவது ஆஷஸ் போட்டியில் 267 என்ற மாபெரும் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதகமான சூழ்நிலையில் போக்ஸ்சிங் டே (Boxing Day )போட்டி ஆரம்பமானது.
மெல்போர்ன்'இல் கடந்த 12 போட்டிகளும் வெற்றி,தோல்வி முடிவை தந்திருந்தமையால் இந்தப் போட்டியிலும் ஏதாவது முடிவு கிடைக்குமென நம்பப்பட்டது.
போர்ம் இன்றி தவித்து வரும் பாண்டிங்'கு இந்த மைதானத்தில் சராசரி 62 .42 ,எனவே இந்தப் போட்டியிலாவது பாண்டிங் போர்ம்'கு திரும்புவார் என எதிர்பார்த்தேன்.
கடந்த போட்டியில் காயமடைந்த பாண்டிங் விளையாடாவிட்டால் உஸ்மான் காவஜா விளையாடக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் காயத்தில் பாண்டிங் குணமடைந்தமையால் காவஜா'க்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.கிளார்க் அல்லது பாண்டிங்'கு பதிலாக காவஜாவை முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.
இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக களைப்படைந்த பின்'னுக்காக(Finn ) டிம் ப்ரெஸ்னன் களமிறக்கப்பட்டார்.காயத்தால் அவதிப்பட்ட அன்டர்சன் மீண்டு வந்து விளையாடினார்.
டாஸ்'சில் வென்ற ஸ்ட்ராஸ் அவுஸ்திரேலியாவை துடுப்பாட பணித்தார்.அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் ஓவர்'ரிலேயே தடுமாறத்தொடங்கி 98 ஓட்டங்களுக்கு முற்றாக ஆட்டமிழந்தது.
தடுமாறிய வாட்சன் அன்டேர்சனின் பந்துக்கு இருமுறை வாய்ப்பு வழங்கி பீட்டர்சன்,கொலிங்க்வூத் தவறவிட இறுதியாக 5 ஓட்டங்களுக்கு ற்றேம்லேட்'இன் பந்துக்கு ஆட்டமிழந்து விழாவைத் தொடக்கி வைத்தார்.
அடுத்து வந்த பாண்டிங் ஆரம்பத்தில் மிக அவதானமாக 33 பந்துகளில் 2 ஓட்டங்களை பெற்றார்..என்றாலும் ற்றேம்லேட் விட்டுவைக்கவில்லை.பத்து ஓட்டங்களுடன் ஸ்லிப்'இல் சுவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து போர்ம் இல்லாமல் தவிக்கும் ஹியூக்ஸ்'ம் செல்ல அவுஸ்திரேலியாவின் நம்பிக்கைத் தூண் ஹஸ்ஸி இறங்கினார்.(இம்முறை ஹஸ்ஸி அவுஸ்திரேலியாவை காப்பாற்றக் கூடாது என Fb 'இல் ஸ்டேடஸ் போட்டேன்).
வேண்டுகோள் பலித்து.அன்டர்சன் தனது முதலாவது விக்கட்'டாக ஹசியை அனுப்பிவைத்தார்.முதல் நாளில்
மழை வந்து வந்து குறுக்கிட முன்னர் அன்டேர்சனின் சுவிங்க்ஸ் பந்துக்கு இரையானார் ஹசி.
58 /4 என்று இருந்த போது மழை வந்து குழப்பியது.
ஆடுகளம் எதிர்பார்த்ததை விட அதிக பௌன்ஸ்'ஆனது.
நம்பிக்கையாக ஆடிக்கொண்டிருந்த கிளார்க்,ஸ்மித்,ஹாடின் என மூன்று பேரும் அடுத்தடுத்த மூன்று ஓவர்களில் ஆட்டமிழக்க(34 ,35 ,36 ) 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது அவுஸ்திரேலியா.இது மெல்போர்ன்'இல் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.(இதற்க்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 1981 ' ஆம் ஆண்டு 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது).அத்துடன் கடந்த 74 வருடங்களில் ஆஷஸ் போட்டியொன்றில் சொந்த மைதானத்தில் பெற்ற குறைந்த ஓட்டங்களாகும்.
அனைத்து விக்கெட்டுகளும் இங்கிலாந்து seemers 'ஆலேயே வீழ்த்தப்பட்டன.அன்டர்சன் நான்கு,ற்றேமேலேட் நான்கு,ப்ரெஸ்னன் இரண்டு என கைப்பற்றியது போக ஆறு விக்கெட்டுகள் விக்கெட் காப்பாளர் மட் ப்ரயொர்'இடம் பிடி கொடுத்தும்,இரண்டு விக்கெட்டுகள் ஸ்லிப்பில் பிடி கொடுத்தும்,மிகுதி இரண்டும் கலி(gully ) பிரதேசத்தில் பிடி கொடுத்தும் ஆட்டமிழப்பு செய்யப்பட்டது.(ற்றேம்லட் பரோட்'டுக்கான பதிலீட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.)
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவின் போது விக்கட் இழப்பின்றி 157 ஓட்டங்களை பெற்றது.குக்,ஸ்ட்ராஸ் ஆரம்ப இணை பத்தாவது தடவையாக 100 கடந்தது.ஸ்ட்ராஸ் 46 ஓட்டங்களை பெற்ற வேளையில் டெஸ்ட் போட்டிகளில் 6000 என்ற ஓட்ட இலக்கை அடைந்த 52 'ஆவது வீரராக பதிவானார்.(11 'வது இங்கிலாந்து வீரர்).
அடுத்த போட்டியிலாவது..??
அடுத்த போட்டியிலாவது..??
இரண்டாவது நாள் ஆரம்பிக்க,முதல் மணித்தியாலத்திலேயே ஆரம்ப ஜோடியை அரங்கிற்கு அனுப்பி வைத்தார் சிடில்.
கொஞ்சமாவது மிரட்டக்கூடிய ஒரே பந்துவீச்சாளர் சிடில்'ஆகத் தான் காணப்பட்டார்.தகுந்த உதவி மறுபக்கத்திலிருந்து ஜோன்சனாலேயோ,ஹரிஸ்,ஹில்பென்ஹாஸ்'ஆலேயோ வழங்கமுடியவில்லை.அரைச்சதம் கடந்த பீட்டர்சனையும் சிடில் களையெடுக்க,போர்ம் இல்லாத கோல்லிங்க்வூத் மற்றும் பெல் ஜோன்சன்'நின் பந்தில் சிடில்'லிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.
இடையிலே பாண்டிங்'இன் திருவிளையாடலும் நடைபெற்றது..ரொம்பவே சூடாக காணப்பட்டார் தலைவர் பாண்டிங்.(வீட்டே அனுப்பப்போகிறார்கள் என்று யாராச்சும் காதில் ஊதிவிட்டிருந்தார்களோ?).நடுவர்களுடன் வாக்குவாதப்பட்டார்..
அதன் காணொளியை இங்கே பாருங்கள்!!
பின்னர் வந்த ப்ரயொர்'ம் ற்றோட்'டும் அருமையான இணைப்பாட்டம் ஒன்றைப் புரிந்து இங்கிலாந்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றனர்.இருவருமாக 173 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்ற வேளையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது சிடில் ப்ரயொர்'ஐ அனுப்பி வைத்தார்.பின்னர் ஸ்வான் கொஞ்சம் தாக்குபிடித்து செல்ல இறுதி மூன்று விக்கெட்டுகளும் ற்றோட் 168 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டன.
ஸ்வானை ஆட்டமிழக்க ஹடின் பிடித்த பிடி இன்னும் என்னால் நம்பமுடியவில்லை.இரு கைகளையும் ஒன்று சேரப் பிடித்தார் பாருங்கள்..நான் நினைத்தேன் அவருக்கு மேலால் போய் பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது என்று!!
சிடில் சிறப்பாக ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியாக 513 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து.முதல் இன்னிங்க்ஸ்'இல் அவுஸ்திரேலியாவை விட இங்கிலாந்து 415 ஓட்டங்களைப் பெற்றமையானது ஆஷஸ் வரலாற்றில் அதிகப்படியான ஓட்ட முன்னிலையாகும்.(அதிகப்படியானது இலங்கை அணியால் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கொழும்பில் பெற்ற 587 ஓட்டங்களே காணப்படுகிறது.அத்துடன் முதல் இன்னிங்க்ஸ் அனைத்து அணிகளாலும் பெறப்பட்ட அதி கூடிய 6 ஓட்ட முன்னிலைகளில் 4 சந்தர்ப்பங்கள் இலங்கை அணியாலேயே பெறப்பட்டன என்பது சிறப்பு!)
மூன்றாம் நாள் மதிய போசனத்துக்கு பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 98 /1 என்று இருந்தது.வட்சன் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மூன்றாம் நாள் முடிவின் போது ஆறு விக்கட்டுகளை இழந்து வெறுமனே 169 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்திரேலியா.(கடந்த பதினோரு இன்னிங்க்ஸ்'களில் வட்சன் 50'களில் ஆட்டமிழக்கும் ஐந்தாவது சந்தர்ப்பம் இது!)
பாண்டிங் 20 ௦,கிளார்க் 13 என்று போக,அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஹசி பூச்சியத்துடன் அரங்கு திரும்பினார்.
வாட்சன்,பாண்டிங்,ஹசி என முக்கிய விக்கட்டுகளை ப்ரெஸ்னன் வீழ்த்தினார்.
ரயன் ஹரிஸ் அடுத்த போட்டியில் விளையாடப்போவதில்லை.சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.அவருக்கு பதிலாக யார் விளையாடப் போகிறார்கள் என்பது கஷ்டமான கேள்வி.ஜோன்சன்,சிடில்,ஹில்பென்ஹாஸ் தான் இப்போது மிஞ்சியுள்ள கூட்டணி.அதிலும் ஹில்பென்ஹாஸ் மூன்று போட்டிகளில் நான்கு விக்கட்டுகள்,73 .5 என்ற சராசரியுடன் காணப்படுகிறார்.அடுத்த போட்டியில் இவரை சேர்ப்பார்களா என்பதும் சந்தேகம்.ஸ்டீபென் ஸ்மித் பாண்டிங்,கிளார்க்'ஐ விட கொஞ்சம் பரவாயில்லை துடுப்பாட்டத்தில்!!பந்துவீச்சு பரிதாபம்.ஹோரிட்ஸ்'ஐ அடுத்த போட்டியில் கட்டாயம் களமிறக்குவார்கள்.(கடந்த இரண்டு ஸ்டேட் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார்.பந்துவீச்சாளராக இல்லாவிடிலும்,துடுப்பாட்டவீரராக களமிறக்கலாம்..ஹிஹி).
அல்லது ஸ்டீவ் o 'கீபி(steve o 'keefe ),ஜாசன் க்றேசா'வை பரீட்சிக்கலாம்..
துடுப்பாட்டம் பாண்டிங்,கிளார்க்,ஹியூக்ஸ் சொதப்புகின்றனர்.பாண்டிங் 16 ,கிளார்க் 21 என்று சராசரியை வித்துக்கொண்டிருக்கின்றனர். பில் ஜாக்ஸ்,காவஜாவை அடுத்த போட்டியிலாவது களமிறக்கலாம்.பாண்டிங் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என நம்பப்படுகிறது.அவரது விரல் காயத்தை காரணம் காட்டி விளையாடாமல் இருக்கப்போகிறார்.அதை தான் அனைவரும் விரும்புகிறனர்.ஹிஹிபாண்டிங்'இன் எதிர்காலம் கேள்விக்குறி.துடுப்பாட்டம் சொதப்பல்..மைதானத்தில் நடத்தை சொதப்பல்.இயன் சப்பல் பாண்டிங்'கு போட்டித் தடை விதித்திருக்க வேண்டும் என்று கூறியதிலிருந்தே எவளவு கடுப்பாக இருக்கிறார்கள் என்று புலனாகும்.
இங்கிலாந்தில் பெரிதாக மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.கோல்லிங்க்வூத் தான் மாற்றம் தேவையெனில் மாற்றப்படவேண்டிய ஆள்.குக்,ஸ்ட்ராஸ்,பெல்,பீட்டர்சன்,ப்ரயொர் என்று அனைவரும் வெளுத்துக்கட்ட தயாராகவே உள்ளனர் சிட்னியில். ஆனால் வெற்றி பெற்ற அணியையே அடுத்த போட்டியில் களமிறக்க அண்டி பிளவர் விரும்பக்கூடும்.நானும் அதையே விரும்புகிறேன்.கடைசிப் போட்டியிலாவது கோல்லிங்க்வூத் போர்ம்'க்கு வரமாட்டாரா என்ற நப்பாசை தான்!!அடுத்த போட்டியிலும் குக் ஒரு அரைச்சதம் ஆவது அடித்தால் நான் முதலே கூறியது போலே தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்லலாம்.அல்லது அண்டேர்சனுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வந்து இந்தப் போட்டியில் அன்டர்சன் முதல் இன்னிங்க்ஸ்'இல் வீழ்த்திய நான்கு விக்கெட்டுகள் அபாரம்!!சுழலுக்கு சாதகமான சிட்னியில் ஸ்வான் சாதிப்பார் என நம்பலாம் ..ஆனால் அவுஸ்திரேலியாவின் சார்பாக யார் சாதிக்கப்போகின்றார் என்பதே கேள்வி.சிடில் இரு இன்னிங்க்ஸ்'களில் தலா ஆறு விக்கட்டுகள் வீழ்த்தினாலும்,மற்றைய இன்னிங்க்ஸ்'களில் சொதப்பல் தான்.
பதிலீட்டு வீரர்களான ற்றேம்லேட்,ப்ரெஸ்னன் ஆகியோர் இங்கிலாந்து வெற்றிக்கு சிடப்பாக பங்களிக்கின்றனர்.ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு அவர்களது முக்கிய வீரர்களே(key players ) தடுமாறுகிறனர்.
சிடில் நாற்பது ஓட்டங்களை எடுத்தார் இறுதியில் ஹடினோடு சேர்ந்து..அவ்வாறு கூட ஆட முடியவில்லை பாண்டிங்,கிளார்க்,ஹியூக்ஸ்'ஆல்!!இம்முறை படு அவமானமாக போனதற்கு காரணம் ஹசி ஒரு அரைச்சதமாவது அடிக்காததே காரணம்.
வெற்றிக்களிப்பு!!இங்கிலாந்து ரசிகரான எனக்கு உணர்ச்சி பொங்குகிறது!!
மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம் ஜோன்சனின் எழுச்சியே என்று முன்னர் கூறியிருந்தேன்..இந்த போட்டியில் தோற்றதற்கு காரணம் யாருமே எழுச்சி பெறவில்லை!!நித்திரை போலும் அனைவரும்!
பெரும்பாலும் இங்கிலாந்து இந்த ஆஷஸ் தொடரை வென்றுவிட்டது என்றே கூற முனைப்பு வருகிறது..ஆனால் மீண்டும் அவுஸ்திரேலியா எழுச்சி கொள்ளுமா?சிட்னி வரை பொறுத்திருப்போம்!!
அவுஸ்திரேலிய அணியினரின் பலம் பலவீனங்களை லோஷன் அண்ணாவும்,அனலிஸ்ட் கன்கொனும் நன்றாக விளக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்!!(பாவம் இருவரும்..விடிய விடிய ஒரே அழுகையாம்!!)
அடுத்த ஆஷஸ்...கட்டாயமாக நீங்கவரமாட்டீங்க கை குலுக்க பாண்டிங்!!