
பொது அறிவு என்பது அஞ்சு ரூபாய்க்கு கடையில கிடைக்கிற ஐட்டம் கிடையாது..பொது அறிவை வளர்க்க நாமெல்லாம் ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு நியூஸ் பாக்கிறம்,பத்திரிகைகள் வாசிக்கிறம்,முக்கியமா நண்பர்களின் ப்ளாக்'குகள் வாசிக்கிறம்..அப்பிடி இருந்தும் இன்னமும் பல ஏரியா'க்களில நாம வீக்கு தான்..

இப்போ நான் உங்களோட பகிர்ந்துக்க போறது ஒரு உண்மையான சம்பவம்.
நான் வேலை பாக்கிற கம்பெனியில மதிய உணவு சாப்பிட கொஞ்ச பசங்க பொண்ணுங்க சகிதமா லஞ்ச் ரூம் போனாங்க..அந்த பசங்களில நானும் ஒருத்தன்.
கல கலன்னு சாப்பிட்டு முடிச்சு வெறுமனே வெட்டிப்பேச்சு பேசுவமே லஞ்ச் டயிம்'ல..அப்பிடி ஒரு நேரம்.அப்போ எங்க கூட வேலை பண்ணுற பொண்ணு ஒன்னு டூத் ஸ்டிக்'னு சொல்லுவாங்களே பற்களுக்கிடையே உணவு சிக்கிக்கிட்டா எடுக்க பயன்படுத்துவமே,அத வைச்சு வாயில லாவகமா சுழட்டிக்கிட்டிருந்திச்சு.சும்மா இருக்கமுடியாம நான் கேட்டேன் 'என்ன சிகரட் ஊதி நல்ல பழக்கம் போல'எண்டு.
அவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் தெரியாதேன்னு.
பிடல் காஸ்ட்ரோ'வை தெரியுமா அவர் தான் சுருட்டோட பேமஸ் எண்டன்.என்னது பிடல் காஸ்ட்ரோவா அவர் யார்னு அப்பாவியா கேட்டாள் அந்த நண்பி.இவள் சும்மா நடிக்கிறாள் இந்த பிடல் காஸ்ட்ரோவ தெரியாம யாராச்சும் இருப்பாங்களான்னு நெனைச்சுகிட்டே மீண்டும் ஒருக்கால் கேட்டேன் உண்மையாவே தெரியாதான்னு.ம்ம்ஹும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..அவளோட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க...அவங்ககிட்டே கேட்டேன் உங்களுக்கு தெரியுமான்னு..
கொடுமை..அவங்களுக்கும் தெரியாதாம்...என்கூட வந்த ரெண்டு பசங்களுக்கும் தெரிந்திருந்தது.
யார் யார்ன்னு நச்சரிக்க,அவர் தான் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் ஆட்சியிலிருந்தவர்னு சொன்னேன்..அப்புறமா எனக்கொரு டவுட்டு வந்திரிச்சு..கேட்டிடுவமோ?சரி பரவால கேட்டிடுவம்னு கேட்டேவிட்டேன்."கியூபான்னு ஒரு நாடு இருக்குன்னு தெரியுமா??"
நான் தற்கொலை செய்யாத குறை..அந்த மூணு பொண்ணுங்களுக்கு அது கூட தெரியவில்லை!!இவன் பொய் சொல்றான் எண்டு தானே நீங்க நினைப்பீங்க??அப்பிடித்தான் நானும் நினைச்சேன்.சும்மா பொய் சொல்றாங்கள்னு.அதுக்குள்ளே ஒரு நண்பி சொன்னாள்,எது அந்த பிலிப்பைன்ஸ் பக்கம் எக்கச்சக்க தீவுகள் இருக்கே அங்க தானே இருக்கு அப்பிடின்னு.
அதுக்கு மேல பேசி வேலை இல்லைன்னு கைய கழுவிட்டு கிளம்பிட்டன்..எனக்கு கடைசி மட்டும் நம்பவே முடியல இப்பிடியும் இந்தக்காலத்தில இருக்காங்களான்னு.அல்லது பொண்ணுங்க தான் பெரும்பாலும் பொது அறிவுன்னு வந்திட்டா வீக்கா இருக்காங்களோன்னும் எனக்கு டவுட்டு.பெரும்பாலான பொண்ணுங்க இப்பிடித்தான் இருக்காங்க.முன்னேறுங்க மக்களே..உலகம் எங்கேயோ வேகமாக போயிக்கிட்டிருக்கு.நீங்க இன்னும் அப்பிடியே இருங்க!!
| சேகுவேரா யார்னு கேப்பம்னு தான் பாத்தேன்...இன்னொரு பதிவு எழுத வைச்சிடுவாங்கள்னு தெரிஞ்சு போச்சு ஆணி பிடுங்க கெளம்பிட்டேன்!! அந்த படம் கூகிள் சேர்ச் மூலம் பெறப்பட்டது. |
