Showing posts with label ரஹ்மான். Show all posts
Showing posts with label ரஹ்மான். Show all posts

Wednesday, September 15, 2010

விளையாட ஜோடி தேவை !!

1997 ஆம் ஆண்டு வெளி வந்த மின்சாரகனவு திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் ரஹ்மான் இன்னொரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.அத்துடன் flimfare விருதும்,தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தன.அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரஹ்மானின் இசையிலும்,ஹரிஹரனின் இனிமையான குரலிலும்,வைரமுத்துவின் வரிகளாலும் அனைவர் மனதையும் கொள்ளையடித்தது..இன்று கூட பலரின் நெஞ்சங்களின் ரிங் டோன் ஆக வெண்ணிலவே இருக்கிறது என்றால் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த பாடலுக்கு நடனமாடிய படத்தின் நாயகன் பிரபுதேவாக்கு நடன அமைப்புக்கு தேசிய விருது கிடைத்தது ஞாபகமிருக்கலாம்!!
பெரும்பாலானவர்களுக்கு முழுப்பாடல் வரிகளுமே மனப்பாடமாக இருக்கும் என்பது திண்ணம்!!
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதன் வரிகள் இதோ..

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பல தேசிய விருதுகளுக்கு சொந்தமாகிய அந்தப்பாடலை நீங்களும் இன்னொரு முறை பார்த்து ரசியுங்களேன்!!சரி சரி மெய்மறந்து இருந்தது போக ஒரு ஒட்டு போட்டு போங்கப்பா!!

Post Comment

Tuesday, August 17, 2010

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ?


பாடல்களுக்காக நான் படம் பார்த்த காலமுண்டு..அதுவும் முக்கியமாக இசைப்புயலின் பாடல்களுக்காக..அந்த வரிசையில் எனக்கு பிடித்த ஒரு படம் தான் தாளம்.தமிழிலும்,ஹிந்தியிலும் வெளியான இத் இத்திரைப்படம் ரஹ்மானுக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது என்றால் மிகையாகாது.ரஹ்மானின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் தாளம் திரைப்பட பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதை அவதானித்திருக்கலாம்..தமிழில் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் கவித்துவ வரிகளாலும் ரஹ்மானின் மனம் வருடும் இசையாலும் என்னை மிகவும் கவர்ந்தன.உங்களையும் கவர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் ..

பாடலாசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து

பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம்,ஷோபா

இசை:இசைப்புயல் A .R .ரஹ்மான்

வெளியாகிய தேதி:30-Aug-1999

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை ...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாயில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை)

எங்கே என் புன்னகை பாடலுடன் உங்களை இணைத்து உங்கள் ஞாபகங்களை மீட்டுங்கள்!.



பதிவு பிடித்திருந்தால் உங்கள் பின்னூட்டல்களும் ஓட்டுகளும் விழட்டுமே!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...