Showing posts with label பேஸ்புக் காமெடி. Show all posts
Showing posts with label பேஸ்புக் காமெடி. Show all posts

Friday, September 26, 2014

பேஸ்புக் பெண்கள்..!


'அதென்ன உங்க ஸ்டேடஸ்ச,உங்க போட்டோவ மத்தவங்க லைக் பண்ணனும்னு எதிர்பாக்கிறீங்க ஆனா ஏன் மத்தவங்க போட்டோவ லைக் பண்றீங்க இல்ல?'ன்னு புதுசா சாட்க்கு வந்த பொண்ணு கேட்டிச்சு.

'எது அந்த பர்பி டோல் போட்டோவையா லைக் பண்ணல?'
'இல்லை.'ன்னிச்சு.

'அந்த ரோஜாப்பூ போட்டோவையா?'
'இல்லைங்க..'

'அந்த நாய்குட்டி போட்டோவ சொல்றீங்களா?'
'இல்லைப்பா...'

'ஓகே ஓகே புரிஞ்சிரிச்சு..போன வாரம் ஒரு பிள்ளையார் போட்டோவ ப்ரொபைல்ல போட்டிருந்தீங்களே அதத்தானே கேக்கிறீங்க?'
'இல்லைங்க..'

'அப்புறம் எதத்தான் நான் லைக் பண்ணல?'
'போன மாசம் போட்டிருந்தனே?'

'அந்த கார்ட்டூனா?'
'இல்லப்பா..'

'காஜலா?'
'இல்லப்பா..'

'அனுருத் போட்டோவா?'
'இல்லப்பா..'

'அப்போ எதத்தான்பா போட்டீங்க?'

'அதாங்க என்னோட சின்னி விரல்ல கலர் கலரா நெயில் பொலிஷ் டிசைன் பண்ணி போட்டிருந்தனே?என்னோட ப்ரெண்ட் பூஜா கூட வந்து கியூட்ன்னு சொல்லி ரெண்டு ரெட் ஆப்பிள்   கமெண்ட் வேற போட்டிருந்தாளே..நீங்க பாக்கல?


Post Comment

புத்தக வெளியீட்டு காமெடிகள்..!


நண்பர்,அதிகளவாக வாசிப்பு,புத்தகங்கள்,இலக்கியம் சம்பந்தமாய் அறவே ஆர்வமற்றவர் என்று அறியப்பட்டவர். நேற்று அதிசயமாய் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.அடிக்கடி போனில் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன்.

'பொன்னியின் செல்வன்'வாசிச்சிருக்கீங்களா பாஸ்?போன வாரம்தான் வாசிச்சு முடிச்சேன்.செம புக்கு தல.அதபத்தி தான் விவாதிச்சிட்டிருக்கோம் பேஸ்புக்ல' என்றார்.எட்டிப் பார்த்தேன்.'its a great novel..very very interesting' அப்பிடின்னு ஆங்கிலத்தில் மிகத்தீவிரமாக விவாதம் போய்க்கொண்டிருந்தது.
'ம்ம்..வாசிச்சிருக்கேன்'என்றேன்.

'எப்போ?
'ஆறாம் ஆண்டு படிக்கும்போது முதல்தடவை'

'முழுசா வாசிச்சீங்களா?மொத்தமா அஞ்சு பாகம் இருக்கு பாஸ்!'
'ம்ம்..முழுசா வாசிச்சேன்..'

'செம இண்டெரெஸ்ட்டிங்க்லே?'
'ம்ம்ம் ஆமா ஆமா'

'டைட்டில் தான் சாட்டர் பாஸ்..சோழரின் வீர சாகசம்..சோழரின் பெருமை..அப்பிடின்னு ஏதும் டைட்டில் வைச்சிருந்தா நிறையப்பேர் வாங்கிவாசிச்சிருப்பாங்க'என்றார்.

'அப்பிடியா?நல்ல காலம் கல்கி செத்துப்போய்ட்டார்'என்று நினைத்துக்கொண்டேன்.
'அடுத்ததா சிவகாமியின் சபதம் வாசியுங்க பாஸ்'
'ம்ம்ம்..'

'கடல் புறா கூட வாசிக்கலாம் நீங்க..சாண்டில்யன்ன்னு ஒரு ரைட்டர்.செமயா எழுதியிருப்பார்!'
'ம்ம்..'
'கொஞ்சம் இருங்க பாஸ்..வெளில போய்ட்டு வர்றேன்..'என்று வராத கோலை அட்டெண்ட் பண்ணிக்கொண்டே திடீரென எழுந்து சென்றார்.

என்னவாய் இருக்குமென்று யோசித்தேன்.புத்தகம் விற்றுக்கொண்டு வந்தவர்கள் எனக்கு அருகே வந்துவிட்டிருந்தனர்.அடுத்த முறை அவரோடது..!

-------------------------------------------------------------------------------------------------------------------

சரி விசயத்திற்கு வருவோம்.

'திரை விலகும்போது..'என்கின்ற திருச்செந்தூரனின் வானொலி மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்.

குறைந்தது 250-300பேராவது வந்திருப்பார்கள்.சிறப்பாக ஒழுங்கமைத்து நிகழ்ச்சியை நடாத்தியிருந்தார்கள்.ஒரு 200 புத்தகங்களேனும் குறந்தபட்சம் நிகழ்ச்சியில் விற்று முடிந்திருக்கும்.விலை 500ரூபாய் என்றாலும் 400க்கே விழா மண்டபத்தில் பெற்றுக்கொள்ளமுடிந்தது.பலரை புத்தகம் வாசிக்க,வாங்கத் தூண்டவேண்டும் என்கின்ற காரணத்தினாலும்,பலரை சென்றடையவேண்டும் என்கின்ற எண்ணத்தினாலும் கழிவு விலையில் கொடுப்பதாக நூலாசிரியர் தெரிவித்திருந்தார்.

அப்துல் ஹமீதின் பேச்சை பலரும் தங்களது தொலைபேசிகளில் பதிவுசெய்துகொண்டிருந்தனர்.உலக அறிவிப்பாளர் என்று அழைத்தால்,எந்த விதத்தில் இவர் உலக அறிவிப்பாளர் என்று பலரும் பட்டிமன்றம் வைப்பதால் தன்னை அன்பு அறிவிப்பாளர் என்றே அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் அப்துல் ஹமீட்.தங்கள் வானொலி/ ஊடகத்துறை சார்ந்த சாதனைகள்,முயற்சிகள் அனைத்தும் பதியப்படாமலே காலத்தினால் அழிந்துவிட்டன என்று கவலைப்பட்டார்.

ஊடகத்துறையினர் பலரும்,நாடகத்துடன் சம்பந்தமான பலரும் வந்திருந்தனர்.சரஸ்வதி மண்டபம் நிரம்பியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.சிறப்பான திட்டமிடலும் ஒழுங்கமைப்பும்,சமூக வலைத்தள ஆதரவும் இருந்தால்,புத்தக வெளியீட்டுக்கு கூட இலங்கையில் 500 பேரை திரட்டலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

ஷண்முகாஸ் சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்துடன் உபசரிப்பு வேறு..!வாழ்த்துக்கள் Senthooran Thiruchchenthooran..!



Post Comment

Saturday, June 18, 2011

வன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்!!!

பேஸ்புக்,டுவிட்டார்,ப்ளாக் என்று பல ஐட்டங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது பிரசித்தம் பெறுவதற்கு ஒரு சில மணி நேரமே போதுமானது!!!வீதியில் கட்டிப்புரண்டு முத்தத்தில் திளைத்த காதலர்களுக்கும் இதே கதி நடந்திருக்கிறது வன்கூவரில்!!

அவுச்திரேலியனான ஸ்காட் ஜான்ஸ் மற்றும் கனேடிய கல்லூரி மாணவி அலெக்ஸ் தாமஸ் ஆகியோரே இந்த முத்த சண்டையில் ஈடுபட்டு தற்பொழுது
உலகப்பிரசித்தி பெற்றிருக்கின்றனர்.அந்த கீழே காட்டப்பட்டுள்ள படம் எடுத்து முடியும் தறுவாயில் மாணவி அலெக்ஸ் தாமஸ் காயப்பட்டிருக்கிறார் முத்தத்தின் கோரத்தால் என்றால் பாருங்கள்!!
இன்று இவர்கள் டிவி,பத்திரிகைகள்,பேஸ்புக்,டுவிட்டர்,ப்ளாக் என்று பேமஸ் ஆகி இருக்கின்றனர்!!


The identity of Vancouver’s famous kissing couple is revealed


வன்கூவர்'இல் நடைபெற்ற ஸ்டான்லி கப் இறுதிப் போட்டியை பார்க்கவந்திருந்தனர் இவர்கள் இருவரும் தனித்தனியாக..
அந்த போட்டி முடிந்தவுடன் வீதியில் சந்தித்துக்கொண்ட இருவரும் இந்த முத்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்!!

இவர்கள் யார் என முதலில் அடையாளம் கண்டது ச்கொட்டின் சகோதரி தான்..அப்புறம் ச்கொட்டின் தந்தையார் தனது பேஸ்புக்கில் இந்த போட்டோவை இணைத்து ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் "காதல் செய்யுங்கள் ,யுத்தம் செய்யாதீர்கள் என்று!!!


This is my Son hows that for making love not war!
  • 10 people like this.
    • Nash d'Peng Yu To all Leaders all around the world please take note that LOVE is very important than WAR...
      about an hour ago
    • Nelly Berger Yes make love, not war haha
      24 minutes ago


"But despite some of our initial assumptions, the kiss seen 'round the world wasn't the product of a riot-fueled, uncontrollable passion. Brett Jones instead notes that Thomas was injured and his son was coming to her aid"

அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்..


For those asking if I am proud of Scott absolutely that he can bring love to a situation like that and help turn a negative news story to a very positive one. Maybe we need the media to always look for the positive as it shows that good news does sell.
about an hour ago
  • 14 people like this.
    • Brian Goodwin ur familly has such a wonderful positive outlook
      about an hour ago
    • Janette Nicholson i just saw it...brought a tear to my eye, such a neat pic too!! :)
      about an hour ago
    • Troy Namath The photo is absolutely brilliant.
      54 minutes ago
    • Daniel Imer Its a great picture.
      54 minutes ago
    • Ana Del Pozo Cusic that's right! turning a negative news story to a very positive one, is the way it is going... so thanks to your son to start this
      47 minutes ago
    • Andrew Bliss Cain This is what we need in the World today,positive people doing positive things.The most intriguing thing is that it was spontaneous,not planned,way to go.Good story!!!
      37 minutes ago


இது தாங்க இறுதி பஞ்ச்!!!
Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. "Love amoungst the Chaos". Its so true that Love can shine anywhere. Check out the page "Lets make a Difference" as well and "like" it.

இவர்கள் தான் அந்த இருவரும்!!!!
Scott Jones and Alexandra Thomas share a laugh in Vancouver on Friday.

ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!

“Relationships do buckle under that pressure unless you have the ability to be very centred. Even if it wasn’t Scott, the guy who took the picture captured a moment in time that is iconic.”

Post Comment

Friday, June 3, 2011

பதிவு கொடுத்த பெருவள்ளல் மங்குனி!!பேஸ்புக் மொக்கை-2

பேஸ்புக் மொக்கை ஒன்றை பார்க்க கிளிக்குங்கள்

பதிவர்கள் சமூக வலைத்தளங்களில் கூடிவிட்டால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!!!
இப்பிடி தான் அண்மையில் நாஞ்சில் மனோ சிக்கி சின்னாபின்னமானார்...
நேற்று மங்குனி போட்ட மொக்கையில் ஒரே ஒரு மொக்கையை நான் காப்பி பண்ணி பேஸ்புக்கில்
போட்டேன்...வலைச்சரம் நடத்தும் தம்பி கூர்மதியன் பறந்து வந்திட்டாரு விஜயகாந்தை விட வேகமாக...
நம்ம கார்த்தி பய புள்ளையும் வந்திட்டார்..வடிவா படியுங்க..இறுதியில கேள்வி கேப்பன்..

வீட்டுல எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்தா சுகர்ல கொஞ்சம் சில்லி பவுடர் கலந்து தூவி விடுங்க . அது சுகர்னு நினைச்சு சாப்பிட்டு அப்புறம் காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க வாட்டர் டேங்க்கு வரும் நீங்க அப்படியே தெரியாம பின்னாடியே போயி தண்ணிக்குள்ள தள்ளி விட்ருங்க எறும்பு செத்துப் போகும் .
44 minutes ago · Privacy: · ·
    • தம்பி கூர்மதியன் பழைய படத்த ஓட்டாத மக்கா..
      44 minutes ago · · 2 people
    • Mynthan Shiva இதை இன்னிக்கு மங்குனி ஒட்டினாரு..ஹிஹி
      41 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் மங்குனி ஒரு ஆளு.. அத காப்பி அடிச்சு இங்க வேறயா.? அங்கேயே அந்த ஆளு அலப்பறை தாங்காது..
      41 minutes ago · · 2 people
    • Mynthan Shiva ஹிஹி அந்தாளு ரோடு'டால போற வார ஆக்களை எல்லாம் பிடிச்சு இழுக்கிராராம் ப்ளாக் வா ப்ளாக் வான்னு!!
      39 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் நல்ல வேள நான் ரோட்ல போல.. வீட்ல தான் இருக்கேன்.. நீ ஏன் மக்கா ரோட்ல போன.. ஒருவேள அங்கதான் தங்கி இருக்கியோ.?
      37 minutes ago · · 1 person
    • Mynthan Shiva இதென்ன விக்கிலீக்ஸ் விசயமா புதுசா தெரிஞ்சிக்க??வழமையா அது தானே நடக்குது..
      மொக்கை பதிவு போடுரவனுகள் எல்லாம் நாடு ராத்திரில ரோட்ல தானே ஒன்னு கூடுறாங்க..ஹிஹி
      36 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் ஓ.. நல்ல வேள நான் மொக்கை பதிவுகள் போடுறது இல்ல.. ஏனா நான் எப்பவும் சீரியஸ்..
      33 minutes ago · · 1 person
    • Mynthan Shiva ஹிஹி அது தான் தெரியுமே!!புளைச்சு போங்க பாஸ் ஹிஹி
      32 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் என்னை பொழைத்து போக சொல்ல நீ யார்.? நான் யார் என்று தெரியுமா.? என் பேச்சை பற்றி தெரியுமா.?
      31 minutes ago · · 1 person
    • தம்பி கூர்மதியன் ‎#செட் ஆகுதா.? சீரியஸ்?
      31 minutes ago ·
    • Mynthan Shiva ஹிஹி ஏன் ஏன் ஏன்!!!!!
      30 minutes ago ·
    • Carthigan Gopalasingam இல்லை சார் என்ர எறும்பு சுவிமிங் அடிக்குதே என்ன செய்யலாம???
      26 minutes ago · · 1 person
    • தம்பி கூர்மதியன் யோவ் சிவா.. ஏன்யா விசயகாந்த் மாதிரி கூவுற.?
      25 minutes ago ·
    • Mynthan Shiva Carthigan Gopalasingamஉங்க வீட்டு எறும்பு பரிணாம வளர்ச்சி அடைந்சிருக்குன்னு நெனைக்குரன்..
      இனிமேல் சுனாமி வந்தா எறும்புகள் தான் மிஞ்சுமாம் என்கிறார் பிரபல விஞ்ஞானி ஐசாக் நியூட்டன்!!
      22 minutes ago ·
    • Mynthan Shiva ‎@விசயகாந்த் எப்ப சார் கூவி இருக்கார்??கர்ஜித்து தானே இருக்கார் ஹிஹி
      21 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் கர்ஜிக்கிறதா.? பன்னி கூட கர்ஜிக்க ஆரம்பிச்சுடுச்சா.?
      21 minutes ago · · 2 people
    • Carthigan Gopalasingam ஆய் ஐசாக்கின்ர தத்துவத்த கேட்டு ஐ(I) சாக்(shock) ஆகிட்டன்!
      20 minutes ago · · 1 person
    • Mynthan Shiva ஐயோ அரசியலா??ஆள விடப்பா..ஹிஹி
      20 minutes ago ·
    • Mynthan Shiva Carthigan Gopalasingamநீங்க காமெடில பின்னுறீங்க பாஸ்!!
      19 minutes ago ·
    • தம்பி கூர்மதியன் அரசியலா.? யாரு இங்க அரசியல் பேசுனது.? பன்னி பத்தி தானே பேசுறேன்.. பன்னிலாம் அரசியல் பண்ணுதா.?
      18 minutes ago · · 1 person
    • Carthigan Gopalasingam இப்பிடியே இன்னும் புகழுங்க சார்! எனக்கு கேக்க நல்லா இருக்கு!!1
      17 minutes ago · · 1 person
    • Mynthan Shiva Carthigan Gopalasingamபுகழ்ச்சி பிடிக்காத மனுசனப்பா!!
      16 minutes ago ·
    • Mynthan Shiva தம்பி கூர்மதியன் :ஹிஹி நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய!!
      16 minutes ago ·
    • Carthigan Gopalasingam காணாது இன்னும் உற்சாகமாக வேகமா விபரமாகா வடிவாக அழகாக புகழுங்க!
      15 minutes ago ·
    • Mynthan Shiva Carthigan Gopalasingamஆள விடப்பா..நாளைக்கு போடவேண்டிய பதிவு தயார் பண்ணனும்..என்ன போடலாம்னு ஜோசிக்கிரன்..ஏதும் ஐடியா??
      14 minutes ago ·
    • Carthigan Gopalasingam இதயே கொப்பி பண்ணி போடுவிங்க எண்டுதான் மினக்கெட்டு இருந்து காமண்டு போடுறம். இது கூட விளங்கலயா???
      13 minutes ago · · 1 person
    • தம்பி கூர்மதியன் பீதியை கிளப்புகிறேனா.? இப்படியெல்லாப் பேசாத பா.. ஒன்று மட்டும் சொல்லிகிடுறன். எங்கள் விசயகாந்த் புயல் கடல் கடந்தும் வீசும்..
      12 minutes ago · · 1 person
    • Mynthan Shiva ஹிஹி இதுவும் நல்லா இருக்கே..ஆனா கிழமைக்கு ஒருக்கா இப்பிடியே பண்ணிட்டு இருந்தா ரசிகங்க(??) கோபிச்சிடமாட்டாங்க!!
      12 minutes ago ·
    • Carthigan Gopalasingam யாரு ரசிகங்களா? யாருக்கு???
      8 minutes ago ·
    • Mynthan Shiva ஹிஹி நாம தான் வேர்ல்ட்டு பேமஸ் ஆச்சே...
      7 minutes ago ·
    • Carthigan Gopalasingam ஏன் கூட try பண்ணுறீங்க இதே ஒரு பதிவுக்கு கூட. அப்பிடியே Screen shot எடுத்திட்டு பதிவுக்கு எங்கட 2பேரின்ர பெயரையும் நன்றி என்று சொல்லி போட்டா காணும்!
      about a minute ago · · 1 person


தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)
பதிவர் கார்த்தி (பால் வடியுதா??ஒண்ணுமில்ல நேத்து ராவா அடிச்சிட்டாராம்..ஹிஹி பாவம் நல்ல பையன் அவரு)

இது பத்தாதுன்னு ஆன்லைனுக்கு வந்து சாட்டிங் வேற கூர்மதியன்...
பன்னி தொடக்கம் மனோ வரை இழுத்து பன்னிக்கும் ஒண்ணுக்கும் முடிச்சுப்போட்டார்..எப்பிடீன்னு பாருங்க!!
oday
9:47pm
வணக்கம்..­ ­

வணக்கம் பாஸ்

நல்லா இருக்கீங்களா.?­ ­
எப்படி போகுது.?­ ­
அங்க க்ளைமேட் எப்படி இருக்கு..­ ­
சமீபத்திய பதிவுகள் அனைத்தும் அருமை..­ ­
வரலாறு பூந்து கலக்குது..­ ­

ஹிஹி கிளைமேட்டா??
ஒரே மழையும் வெயிலுமா போகுது..
உங்க ஏரியா'ல??
ம்ம் நன்றிகள் ..
வலைச்சரத்தில் அருமையான வேலை பாக்கிறீங்க!!

நன்றி.. பாக்குறீங்க வேணாம்... நான் உங்களைவிட சிறியவன் தான்.. அதற்காக நான் மரியாதை கொடுப்பேனு நினைக்கவேண்டாம்.. இங்கிருந்தும் மரியாதை வராது..­ ­

hehehe

இங்கு நேற்று மட்டும் ஏதோ தூறல் போச்சு.. மத்தபடி சூரியனார் பல்ல காட்டிகிட்டு சிரிக்கிறார்..­ ­

நாமேல்லா ஒண்ணுக்க ஒன்னு தானே ஹிஹி

ஒண்ணுக்கா.?­ ­
அட கருமம்­ ­

யோவ் கடிக்காம இரும்யா

அந்த கருமத்த ஏன் யா கடிக்கணும்.?­ ­

யோவ்......................................................................மவனே...கொலை தான் அப்புறம்...மனோகிட்ட சொல்லி அருவா அருவா தான்

அவரு என்ன கண்டா பயபுடுவாறு..­ ­

ஸ்மால் மேன்..­ ­

ஹிஹி மனோ??ஸ்மால் மென்??
ஆளு தான் ஸ்மால்!!ஆனா...


ஆளு ஸ்மால் ஆ.?­ ­
கண்ண துடச்சிட்டு பாருயா..­ ­


hehe
ஆளு ஸ்மால்...ஸ்டாமக் மட்டும் தான் பெருசு ஹிஹி


அது அவர சுத்தி இருக்குற கேரள பெண்களால..­ ­
ஹி ஹி..­ ­

மன்மத குஞ்சோ அவரு??


அட என்னயா பேச ஆரம்பிச்சதிலிருந்து ஒண்ணுக்கு சம்பந்தமாவே பேசுற.?­ ­


ஒன்னுக்கா??ஹிஹி ஆமாலே!!


ஓ அதுவே மறந்திடுச்சா.?­ ­
நம்ம பன்னிகிட்ட டியூசன் போ..­ ­


பன்னி ப்ராபசர்னு கேள்விப்பட்டேன்..ஆனா என்ன ப்ராபசர்??

ஹி ஹி.. வில்லங்கமா கேக்காத யா..­ ­


அப்பிடி என்ன வில்லங்கமா கேட்டுட்டேன்??


ஒன்னுக்கு பத்தி பேசும் போது, பன்னி என்ன ப்ராபசர்னு கேட்டா என்ன சொல்லுறது.?­ ­


அப்போ சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்க??


அட போயா..

தலைப்பு சரிதானே ??பதிவு கொடுத்தது மங்குனி பெருவள்ளல் தானே??

ஓகே சொன்ன மாதிரி,
கேள்வி நம்பர் ஒன்னு:மனோவின் பெரிய வண்டி/வயிறு/ஸ்ட்டாமக்'க்கு காரணம் என்ன??
நாஞ்சில் மனோ
கேள்வி நம்பர் ரெண்டு:பன்னிக்கும் ஒன்னுக்கும் என்ன சம்பந்தம்??
My Photo
கேள்வி நம்பர் மூணு:மங்குனிக்கும் மூளைக்கும் எம்புட்டு தூரம்??

கேள்வி நம்பர் நாலு:கூர்மதியன் உண்மையிலேயே தம்பியா??
கேள்வி நம்பர் அஞ்சு:பதிவர் கார்த்தி முகத்தில் பால் வடிய காரணம் ஏது??

சரியான பதில் வழங்குபவர்கள் பதிவை ஒழுங்காக படித்தவர்கள் என வாழ்த்து பெறுவார்கள்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...