'கலகலப்பு' கூட்டணியான சுந்தர் சி,சந்தானம்,யூடிவி மோஷன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் 'தீயா வேலை செய்யணும் குமாரு'.நடிக நடிகையர் யார் என்று பார்த்தால் சித்தார்த், ஹன்சிகா,சந்தானம்,பாஸ்கி,மனோபாலா,டெல்லிகணேஷ், தேவதர்ஷினி என்று பெரிய லிஸ்டே நீளும்.பெயரை பார்த்தபோதே காமெடி படமாக தான் இருக்கும் என்று தெரிந்திருந்தாலும்,சுந்தர் சி'க்கு காமெடி கைவந்த கலை என்பதால் படம் சற்றே எதிர்பார்ப்பை கூட்டிவிட்டிருந்தது.சந்தானமும் அதற்கு ஒரு காரணம்.
பாட்டன்,பூட்டன்,அப்பா அம்மா,அக்காமார்கள் என்று நாயகன் சித்தார்த்தின் குடும்பமே லவ்வோ லவ்வுன்னு லவ்வி கல்யாணம் செய்துகொண்ட குடும்பம்.ஏரியாவிலேயே லவ்வுக்கென்று ஒரு ட்ரேட் மார்க்குடன் வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்த சித்தார்த்துக்கு ஏனோ லவ் என்றாலே பிடிப்பதில்லை.காரணம் சில ப்ளாஷ்பேக்'கள்.இப்பிடியே இருந்திடாதேடா, யாரையாவது லவ் பண்ணுடான்னு வீட்டிலும் சரி,வேலை செய்யும் ஐ.டி ஆபீசிலும் சரி ஏகப்பட்ட ஆட்வைஸ்கள்.ஆனால் சித்தார்த்துக்கு பொண்ணும் அமையல,லவ் பண்ணவும் பிடிக்கல..ஏன்,எப்பிடி லவ் பண்றதுன்னு கூட தெரியாம சொதப்பிகிட்டிருக்கார்.அந்த நேரத்தில் தான் ஆபீசுக்கு புதுசா ஒரு பொண்ணு வருது.ஆமா,அது நீங்க நெனைக்கிற மாதிரியே நம்ம ஹன்சிகா தான்.
அவங்கள பாத்தவுடனேயே நம்மாளுக்கு பட்டர்ப்ளை பறக்குதாம்..மெல்லிய காத்து மெதுவா வீசுதாம்..அதாங்க,லவ்வு ஸ்டார்ட் ஆயிருச்சு.ஆனா அங்க தான் ஒரு பிரச்சனை,ஆபீசிலயே ஒரு ஜிம்& ஹாண்ட்சம் பாய் ஹான்சிகாவ பிக்கப் பண்ணிக்க முயற்சிக்கிறான்.ஒரு வழியும் தெரியாத சித்தார்த்க்கு அத்தான் பாஸ்கி ஐடியா குடுக்கிறார்,ஊர்ல 'நோக்கியா' அப்பிடின்னு ஒரு லவ் குரு இருக்கார்.அவர்கிட்ட போனா எல்லாம் சரியாகிடும் அப்பிடின்னு.அந்த லவ் குரு வேற யாருமில்லைங்க..நம்ம சந்தானமே தான்.அந்த பாய்ண்ட்ல இருந்து ஆரம்பிக்கும் லவ் கோர்ஸ் என்னாகிறது,எப்படி ஹான்சிகாவை சித்தார்த் கைப்பிடிக்கிறார் என்பதை மிகவும் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் சுந்தர் சி.
படம் நீளத்துக்கும் காமெடி பரவிக்கிடக்கிறது.ஒவ்வொரு சீனிலும் சிரிப்பதற்கு ஏதாவது ஒரு மேட்டர் இருக்கும்.அதனால் படம் தொடங்கும்போது சிரிப்பதற்காக திறந்த வாய் படத்தின் இறுதி சீன் வரைக்கும் மூடவேயில்லை. சந்தானத்துக்கு 'ஓகேஓகே'இன்ரோ மாதிரி பைக்கில் இன்ரோ கொடுத்திருக்கிறார்கள்.ஹீரோக்களுக்கே இல்லாத அமர்க்களம் இப்போதெல்லாம் சந்தானத்துக்கு தான் கிடைக்கிறது.தியேட்டரில் விசில் பறக்கிறது.காஸ்டியூம்ஸ் கூட சித்தார்த்தை விட சந்தானத்துக்கு தான் எடுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.அம்மணி குஷ்பு தான் காஸ்டியூம்ஸ்க்கு பொறுப்பு.
'எங்கேயும் எப்போதும்' சத்யா தான் இசை.சுந்தர் சி தனது காமெடி பலத்தை நம்பி இறங்குவதனாலோ என்னமோ,இசைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஓரிரு பாடல்கள் ரசிக்கலாம்.'அழகென்றால் அவள் தானா சஞ்சனா..'ஹிட் ஆகும் வாய்ப்புகள் பிரகாசம்.இசை ஓரளவுக்கு சோடை போனாலும்,பாடல் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.இரண்டு பாடல்கள் ஜப்பானில் எடுத்திருக்கிறார்கள்,பாடல்கள் அத்தனையையும் பா.விஜய் தான் எழுதியிருக்கிறார்.
கலகலப்பில் அங்காங்க்கே சீரியலாக மரண காமெடி இருக்கும்.ஆனால் இங்கு படம் முழுவதும் லேசான காமெடி வந்திட்டே இருக்கும்.திரைக்கதை வசனத்தில் 'சூதுகவ்வும்' நலன் குமாரசாமி உதவியிருக்கிறார்.படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்வதற்க்கு இதுவும் ஒரு காரனமாய் இருந்திருக்கலாம்.நீ.பொ.வ'வில் சந்தானம் ஜோடியாக வரும் குண்டு பொண்ணு இதிலும் வருகிறார்.ஆபீசில் சித்தார்த் நண்பராக வருபவர் படத்தின் ஆரம்பத்தில் பட்டைகிளப்புகிறார்.கலகலப்பில் வரும் பாட்ஷா அடியாள் முதல்கொண்டு பலர் இதிலும் பிரசன்னம்.சமந்தாவும் விஷாலும் ஒரு காட்சிக்கு வந்துவிட்டு செல்கிறார்கள்.
படத்துக்கு முக்கிய பலம் சந்தானம் தான்.ஹன்சிகா அதே வெள்ளை தக்காளி,என்ன பாடல் காட்சிகளில் நன்றாக இடுப்புக்கு கீழே கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார் சுந்தர் சி.தியேட்டரில் முன் இருக்கைகளில் அமர்ந்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு ஒரு முழு நீள காமெடி கலாட்டா..!கட்டாயம் பார்த்து ரசிக்கலாம்.என்னுடைய மார்க் 65/100.
5 comments:
This comment has been removed by the author.
அப்போ நாளைக்கே பார்த்துடுவோம்!!
நீங்க சொன்னா, அதுல ஒரு “இது” இருக்கும் சிவா :)
ஸோ, நான் தியேட்டர் போயி பார்க்கலாம்னு இருக்கேன் - படத்தைத்தான் :))
காமெடி போதும் .. நல்ல பொழுது போகும் ...
என்ன தலைவரே ஒரே சினிமா விமர்சகராகிவிட்டீர்கள்?
Post a Comment