"இருக்கின்றதா இல்லையா" என்பதை கண்டுபிடிப்பவன் உண்மையிலேயே ஒரு திறமைசாலி தான்.தொடர்ந்து பல வருடங்களாக தனது கூர்ந்த அவதானிப்பின் மூலமும், தேடல்கள், ஆய்வுகள் அதன் மூலம் மனம் நிலைநிறுத்திக்கொண்ட முடிபுகள் அடிப்படையில் தான் பெரும்பாலானவர்கள் "இருக்கின்றதா இல்லையா?" பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுக்கின்றனர்.
இது நிச்சயமாக ஒரு சிக்கலான பிரச்சனை;அதுமட்டுமல்ல பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் இந்த "இருக்கின்றதா இல்லையா" பிரச்சனையின் பதில் தான் தீர்மானிக்கும் சக்தியாக அமைகிறது. காரணம்,பெரும்பாலானோர் இல்லாமலிருப்பதை மறைக்க "அது" இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள், சிலர் இருப்பதை மறைத்து "அது" இல்லாமலிருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.
அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை.காரணம் எங்களில் தானே பல வகையினர் இருக்கின்றார்கள்.சிலருக்கு "அது"இருப்பது பிடிக்கும்.சிலருக்கு இல்லாமலிருப்பது தான் பிடிக்கும்!இரண்டாவது வகையறாவை சார்ந்தவர்களை சந்திக்கும்போது,'ஏன் இவர்களுக்கு இப்படியான ரசனை" என்று கேட்டுக்கொள்வேன்.நான் எப்போதும் முதல் வகையறாவுக்குள் தான்."அது"இருந்தால் தான் பிடிக்கும். இல்லாவிட்டால் சப்பென்று இருக்கும்.அதனால் பிடிப்பதே இல்லை.
இதனால் தான் என்னமோ,சிறுவயதிலிருந்தே தினசரி நான் பார்ப்பனவற்றை, அவதானிப்பனவற்றை மனதில் பதித்து வந்திருக்கிறேன்.அது இப்போது எனக்கு பெரிதும் கைகொடுக்கின்றது. "இருக்கின்றதா..இல்லையா"என்று எனது நண்பர்கள் குழம்பும் சந்தர்ப்பங்களில் என்னால் இலகுவாக கூறிவிட முடிகிறது அது இருக்கிறது அல்லது அது இல்லை என்று.முதலில் என்னுடன் முரண்பட்டுக்கொள்ளும் நண்பர்கள்,பின்னர் தங்களது கூர்மையான நுண் பார்வையினால் தெளிவடைந்து 'ஆமாண்டா அது இருக்கிறது"என்று தலையாட்டிக்கொள்வார்கள்.
ஆனால் எப்போதாவது என்னையே 'இருக்கின்றதா...இல்லையா'என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பிய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.நாம் பார்ப்பவர்கள் காலமாற்றத்துக்கேற்ப எப்படி மாறிக்கொள்கிறார்கள், மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் படிப்படியான வளர்ச்சியை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்.ஆனால் சிலரின் நடத்தை எப்போதும் குழப்பகரமாகவே இருக்கும்.நம்ம மணிரத்தினம் மாதிரி!(அப்பாடி மேட்டர் முடிஞ்சு மேட்டருக்கு வந்தாச்சு.)
------------------------
சிறுவயதுகளில் கெட்டவர்களோடு சேராதே,கெட்ட நண்பர்கள் சகவாசம் வைத்துக்கொள்ளாதே என்று படித்து படித்து வீட்டில் கேட்கும் அறிவுரைகளால் சில காலம் சிலரை விட்டு பிரிந்தே இருப்போம்,முக்கியமாக பள்ளி பருவத்தில்.ஆனால் நாம் வளர,எம்முடன் சேர்ந்து கூடவே வளரும் சிந்திக்கும் திறன் 'இது தாண்டா யதார்த்தம்'என்று பல உண்மைகளை உணரவைத்துவிடுகின்றது.கெட்டவர்களுடன் சேராதுவிட்டால் சமூகத்தில் தனித்துவிடப்பட்டுவிடுவோம் என்கின்ற உண்மையும்,எப்படியோ எங்களை சுற்றி இப்படியானவர்கள் தான் இருக்கப்போகின்றார்கள்,அவர்களை சமாளித்து செல்லும் வழியை நாங்கள் தான் கண்டுகொண்டு அதன்படி வாழவேண்டும் என்பதை வாழ்க்கை கற்றுத்தருகிறது.ஆமா இதற்கும் கடலுக்கும் என்னா சம்பந்தம்?படத்தின் கதை-விமர்சனம் படிக்கலாம்னு வந்தவர்கள் இந்த இடத்துடன் நிறுத்திவிட்டு கிளம்புங்கள்.
படத்தில 'டச்' பண்ணினது ரஹ்மான் மற்றும் ராஜீவ் மேனன் தான்.இருவரும் தங்கள் பங்கை திறம்பட முடித்து கொடுத்திருக்கிறார்கள்.அது படத்துக்கு பொருந்தியதா இல்லையா என்பது இயக்குனர் மணியின் தலை மேல் போடவேண்டிய பிரச்சனை.அங்காங்கே ஜெயமோகன் 'மதம்"சார்பாக வரும் வசனங்களில் ஜொலிக்கிறார்.அரவிந்தசாமியை பாதிரியார்/சர்ச் சார்ந்த கதைகளில் பார்த்து போதும் என்றாகிவிட்டது.அதே பழைய அரவிந்த சாமி தான்.எந்த மாற்றமும் இல்லை டயலாக் டிலிவரி,ஆக்சனிலிருந்து அனைத்திலுமே!அர்ஜூன் மற்றும்,கார்த்திக் மகன் கெளதம் இருவரும் என்னை கவர்ந்தனர்.
எத்தனையோ பெரிய பெரிய கடல் போன்ற விடயங்களை தொடுவதற்கு மணிரத்னம் முயன்றிருக்கின்றார்.ஆனால் அந்த விடய தலைப்புகளை மட்டுமே தனது 'கடல்' படத்தில் கொடுக்க முடிந்திருக்கிறது.இதுவே ஒரு புதுமுக இயக்குனரோ,அந்தளவு பெயர் பெறாத இயக்குனரோ இயக்கியிருந்தால் சிலசமயம் பேசப்பட்டிருக்கும்.ஆனால் இது 'மணி'சார் படம் என்கின்ற இடத்தில் தூக்கிவைத்து பார்ப்பதனால்/பார்த்திருப்பதால் அந்த ஏமாற்றம் தான்,படத்தில் இருந்த சில நல்ல விடயங்களையும் பேசாமல் முடங்க வைத்திருக்கிறது.
படம் ஆரம்பித்து ஒரு அரை மணிநேரம் எதோ ஒரு பெரிய 'ட்ரீட்' காத்திருக்கிறது என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுவிட்டு அதற்க்கு பின்னர் மணி சார் தனது அண்மைய படங்களை சுட்டிக்காட்டி நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி திரும்ப கேட்கிறார்..
'நான் எதிர்பார்ப்பை தூண்டினால் நீ எதிர்பார்த்து காத்திருப்பியா"?
(நான் காத்திருந்தேன் கடலில் கதை"இருக்கின்றதா-இல்லையா"என்கின்ற எதிர்பார்ப்போடு!)
**
**
**
**
**
**
**
**
**
**
****
********
**********
********************
என்ன நாக்கு தொங்குதா?சரி சொல்லிடறேன்.விடமாட்டீங்களே!நாயகி துளசி அந்தளவுக்கு ஒன்னும் 'ஒர்த்'கிடையாது.படத்தில அந்த கிஸ்ஸு ஸீன் கூட கிடையாது."துளசி" எல்லாமே 'ஈஸ்ட்'போட்டு பொங்கவைத்த பாண் பாஸ்.அவங்க அக்காவ போல ஒண்ணிரண்டு படங்கள் நடிக்கலாம். அதற்க்கப்புறம் 'பெருக்க வைத்தவற்றை சிறுக்க'வைக்க முயற்ச்சிக்கலாம். பிரச்னையை முடித்துவிடுகிறேன்.சொன்னால் வல்கரா பேசிறான்னு சொல்லிடமாட்டீங்களே!
'இருக்கின்றது...ஆனால் செயற்கையாக...!!"
| படத்தில் கதை -துளசியில் சதை|