Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, August 23, 2012

நிச்சயிர்த்த திருமணம் பெண்களுக்கு ஆபத்தா?


பெத்தவங்க பார்த்து தரும் மாப்பிள்ளையை கட்டிக்க இருக்கும் பொண்ணுங்களுக்கான  பதிவு.அதே சமயம் அதே பெத்தவங்க பார்க்கும் பெண்ணை கட்டிக்கொள்ளும் மாப்பிளைகள் நான் சொல்லப்போவது உங்களை சில சமயம் நோகடித்தாலும் நோகடிக்கும்.அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.ஏதாச்சும் சொல்லனும்னா அதன் மூலம் ஒரு தரப்பு கட்டாயம் பாதிக்கும்.அது தவிர்க்கமுடியாதது.ஓகே மேட்டருக்கு போகலாம் வாங்க..

பெத்தவங்க பார்த்து நிச்சயிக்கும் திருமணம் எவ்வாறு இருக்கும்?ஜாதகங்கள் தொடக்கம் கிரக நிலைகள் வரை அலசி ஆராய்ந்து சோதிடமணிகளின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு தேடி அலைந்து பிடித்த "மாப்பிள்ளை"யை பெண்ணுக்கு அறிமுகம் செய்வார்கள்.பெண் தனக்கு முதலில் பார்வைக்கு நன்றாக இருந்தால் ஒத்துக்கொள்வாள். பின்னர் அவர்களை பழக அனுமதிப்பார் சிறிது நாட்களோ அல்லது சில மாதங்களோ.அதன்போது பிடித்திருந்தால் கல்யாணம் நடக்கும்.குறித்த காலப்பகுதியில் பிடிக்காவிட்டால் வேறு மாப்பிள்ளை பார்ப்பதெல்லாம் மிக அரிதாகவே நடக்கும்.

ஓகே,இதன் விளைவுகளை பார்ப்போம்.நிச்சயம் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பழகும் அந்த சில நாட்கள்-சில மாதங்களில் ஒருவரை பற்றி மற்றையவர் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா?ஒருவன் எத்தகைய கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருந்தாலும்(வெளியே தெரியாமல் தனக்குள்ளே) அவற்றை வெளியில் வெளிக்காட்டிக்க கூடாது என்று நினைத்தால் எவராலும் அந்த குறிப்பிட்ட "பழகும் காலத்தில்" அவற்றை கண்டுபிடிக்க முடியாது.இந்த பழகும் காலம் இரண்டு மாதங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.அந்த இரண்டு மாதங்களும் நல்லவனாக யாரால் நடிக்க முடியாது?

சில சம்பந்தங்கள் தெரியாத இடங்களில் இருந்து எல்லாம் வரக்கூடும்.அதிக வயது வித்தியாசத்தில் இருக்ககூடும்.சில வேளைகளில் குறிப்பிட்ட பையனை பற்றி விசாரித்து அறிய முடியாமல் கூட போகலாம்.அவ்வாறான சந்தர்ப்பத்தில் எப்படி அந்த பையனை பற்றி தெரிந்து கொள்வார்கள்?அந்த பழகும் காலத்தை வைத்து தானே?அதுவும் சில பெற்றோர் தான் இத்தகைய பழகும் காலம் ஒன்றை தங்கள் பிள்ளைகளுக்குவழங்குகின்றனர் .மாப்பிள்ளை பார்த்தோமா,பிடித்ததா,நிச்சயம் செய்தாகிவிட்டதா,கல்யாணத்தை கட்டி அனுப்பினோமா என்று இருக்கும் பெற்றோர்கள் எவ்வாறு இவ்வளவு இலகுவாக தங்கள் பிள்ளைகளை தெரியாத ஒரு இடத்தில் தள்ளிவிட முயலுகின்றனர்?

பிள்ளை வளரும் காலம் முழுவதும்,ஆண்களுடன் பழகாதே,கண்டவனை காதலிக்காதே என்று கூறி கவனமாக பொத்தி பொத்தி வளர்த்த பெற்றோர்,திருமணம் என்று வந்ததும் அதனை தங்கள் கடமை ஆக்கி அவசர அவசரமாக முடித்துவிடுகின்றனர்.இவை பெரும்பாலும் நடப்பது வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு தான்.அதற்காக வெளிநாட்டில் இருப்பவர்களை குறை கூறவில்லை.அனைவரும் கெட்டவர்கள் கிடையாது.உள்நாட்டிலும் அதே.ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து மாப்பிள்ளை வந்து நிற்கும் அந்த இரண்டு வார காலத்தில் நிச்சயம்,கல்யாணம் என அனைத்தையும் முடித்து அனுப்பிவிடுகிறார்கள்.எனது மகள் இப்போ வெளிநாடு என்று உறவுகளுக்கு கூறி பெருமைப்படும் தருணங்களை எண்ணிக்கொண்டு விரைவாக முடித்து அனுப்பிவிடுகின்றனர்..

மகளுக்கு தனது எதிர்கால கணவன் யார்?எப்படிப்பட்டவன்?என்று அறிந்து கொள்ள கிடைக்கும் கால அவகாசம் மிக சிறியதே.பெற்றோரின் விருப்புக்கிணங்க சம்மதித்து அவளும் திருமணம் செய்து கொள்கிறாள்.இவ்வாறு திருமணம் செய்தவர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று அங்கு படும் அல்லல்பாடுகள் எத்தனையோ எத்தனையோ.இதனை பற்றி தங்களது மகளின் திருமணத்துக்கு முன்னர் மற்றையோருக்கு அறிவுரை கூற வாய் கிழிய கதைத்திருப்பார்கள் .ஆனால் தங்களுக்கு என்று வரும் போது அவற்றை மறந்துவிடுகின்றனர்.

       

பெரும்பாலான சந்தர்ப்பத்தில் தங்களது வாழ்க்கை குறித்த எந்தவொரு அவதானிப்புகளும் இல்லாமல் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் சம்மதித்து விடுகின்றனர்.ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று கூறுவார்கள்.ஆனால் சில முக்கியமான ஒரு பொய்யோ அல்லது ஓரிரு பொய்களோ திருமண வாழ்க்கையை துவம்சம் செய்துவிடுகின்றன.பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணங்களில் தான் பெரும்பாலான "கெட்ட நடத்தைகள்/பழக்கவழக்கங்கள்" மழுங்கடிக்கப்பட்டு,மறைக்கப்பட்டு மாப்பிள்ளையின் கல்வி,வருமானம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன.

ஏதும் பிரச்சனை வந்தால் அதனை பின்னர் சமாளித்து கொள்ளலாம்.கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி பிறந்த பிறகு இதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.பிரிந்து செல்லமாட்டார்கள் என்பது தான் வழமையான பெற்றோர்களின் ஒருமித்த கருத்து.ஆனால் திருமணத்தின் பின்னர் அப்படி ஏதும் தெரியவந்தால் மிகவும் பாதிக்கப்பட போவது என்னமோ தங்களது மகள் தான் என்பதை உணர மறுத்துவிடுகிறார்கள்.அனைத்தையும் தங்களது "பாயிண்ட் ஒப் வியூ"வில் வைத்து பார்ப்பதால் மகளின் வாழ்க்கை-அதில் ஏற்பட கூடிய பிரச்சனைகள் அவர்களது கண்ணில் தெரிவதில்லை .

நிச்சயித்து திருமணம் முடிக்கும் அனைத்து சந்தர்ப்பத்திலும் இது நடக்கும் என கூறவில்லை.ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்னமோ கசக்கும் உண்மை தான்.ஒரு பெண்ணுக்கு பார்க்கும் மாப்பிள்ளை இருபத்தெட்டு,முப்பது வயதோ அல்லது அதற்க்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் தெரியாத ஒரு சம்பந்தம் என்றால் எவ்வாறு குறிப்பிட்ட மாப்பிள்ளையை அவரின் கடந்தகால விடயங்களை மதிப்பிடுவார்கள்?

சாதாரணமாய் ஒரு ஆணுக்கு இன்றைய காலத்தில் முப்பது வயதுக்குள் குறைந்தது ஓரிரு "மறைக்கப்பட்ட உறவுகள்" இருந்திருக்கும்.இது சாதாரணம்.அவ்வாறு இல்லையெனில் குறித்த நபருக்கு எதோ பிரச்சனை இருக்கவேண்டும்.அல்லது வாழ்க்கையில் ஏதும் இலட்சியத்தை நோக்கி முன்னேறிய இலட்சிய புருஷராய் இருப்பது அவசியம்.இதனையும் தாண்டி முப்பது வயது வரை எதுவகையான காதல்களோ/கள்ளங்களோ இல்லாமல் இருப்போர்கள் நூற்றுக்கு ஐந்து வீதத்துக்கும் குறைவானோரே.

இது தவிர அறியாத நோய்கள்,குடும்ப பிரச்சனைகள் என்று எத்தனையோ விடயங்கள் ஆராயப்பட்டு நிதானமாய் செய்யப்படவேண்டிய திருமணங்கள் எவ்வாறு இவ்வளவு சீக்கிரமாய் நடந்தேறுகின்றன என்று பார்க்கையில் எதோ ஒரு ஜீவனின் ஆசைகள் அமுக்கப்படுகின்றன அல்லது வாழ்வு சிதைக்கப்படுகிறது என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

இது பெண்களின் பார்வையில் எழுதியதால் தான் ஆண்களை பற்றி இவ்வளவு கூற வேண்டி ஏற்பட்டது.இது வகையில் ஆண்கள் பக்கமும் இருந்து எழுத முடியும்.மேலே கூறிய விடயங்கள் அத்தனையும் பெண்கள் மேலே மாற்றி பார்த்தால் அங்கும் இதே பிரச்சனை தான்.ஆனால் தினசரி கேள்விப்படும் கதைகள் ஒவ்வொன்றும் "பெண்கள் முட்டாள்கள்"என்பதை மனதில் பதியவைத்துவிடுகின்றன.கண்ணீர் என்னும் ஆயுதத்தால் எவ்வாறு ஆண்களை பணியவைக்கிரார்களோ இதேபோல தெரிந்தோ தெரியாமலோ செண்டிமெண்ட் என்னும் ஆயுதத்தால்  பெண்கள் அடக்கப்படுகின்றனர்/அடங்கி போகின்றனர்.

          

"பெண் மனதின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை"என்று பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வேளையிலும் உலகின் எதோ ஓர் மூலையில் பெண்கள் இலகுவாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

 நிச்சயம் செய்யப்படும் திருமணம் பெண்களை செய்யவேண்டாம் என்று நான் கூறவில்லை.நிச்சயித்து திருமணம் செய்து எம் கண்முன்னே அழகான வாழ்க்கை வாழ்வோர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.அவ்வாறான திருமணமாய் இருந்தால்,இது உங்களது வாழ்க்கை;தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.முடிந்த வரை உங்களுக்கு வர இருப்பவர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முற்படுங்கள்.அதற்க்கு முன்பதாக உங்கள் மனதை பறிகொடுத்துவிடாதீர்கள்.உங்கள் வாழ்க்கையை பெற்றோருக்காக அடைமானம் வைத்துவிடாதீர்கள்.என்னால் கூற முடிந்தது இவ்வளவே.தீயின் பிரகாசம் கண்டு தானே போய் விழும் விட்டில் பூச்சிகள் போல இருப்பவர்களை திருத்த முடியாது.அவர்களுக்கான பதிவல்ல இது.

"வாலிபங்கள் ஓடும்..வயதாக கூடும்..ஆனாலும் அன்பு மாறாதம்மா..
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா..
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி..நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..."

Post Comment

Sunday, June 10, 2012

காதலில் சொதப்பலாம் வாங்க !!


காதல் திருமணங்கள் எப்போதும் ஏதாவது ஒரு வகையான பிரச்னையை எதிர்நோக்குவது தவிர்க்கமுடியாதது.பிரச்சனைகள் இல்லாத காதல் திருமணம் என்பது சுவாரசியம் அற்றதும் கூட!!எழுந்து வரும் பிரச்சனைகளை குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் இணைந்து எதிர்கொண்டு சமாளிப்பது கட்டாயமாகின்றது.ஓகே,இப்போ கதைக்கு வருகிறேன்.

அண்மையில் என்னோடு கடந்த வருடம் வேலை பார்த்த சகோதர மொழி பெண்ணொருவருடன் அண்மையில் கதைத்தேன்.கடந்த வருடம், வேலை பார்க்கும் போது இந்த வருட ஆரம்பத்தில் தனது திருமணம் என்று கூறி இருந்தார்.அப்போதே ஆறு வருடமாக காதலித்துக்கொண்டிருந்தார்.இருவருமே அழகு.தந்தையிடம் அனுமதி பெற வேண்டும்.அடுத்த வருடம் திருமண அழைப்பிதழ் அனுப்புகிறேன் என்று கூறி எனது நிறுவனத்தை விட்டு விலகி சென்றிருந்தார்.

என்னடா இன்னமும் திருமண அழைப்பு வரவில்லையே என்று இந்த சில மாதங்களாக நானும் எதிர்பார்த்திருந்த போது தான் அண்மையில் அந்த பெண்ணுடன் கதைக்க முடிந்தது."எங்கே, திருமணம் முடிந்துவிட்டதா" என்று கேட்டேன்.இல்லை என்றாள். ஏன் என்ன நடந்தது என்று கேட்டேன்.இன்னமும் அப்பாவிடம் சொல்லவில்லை.சொல்ல பயமாக இருக்கிறதாம்.அப்போ இந்த வருடம் கல்யாணம் என்று கூறிவிட்டு இன்னமும் அப்பாவிடம் கூறவில்லையா,பேசாமல் கொழும்புக்கு வெளிக்கிட்டு வாங்கோ பதிவு திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன்.அவள் கெட்ட வார்த்தைகளால் திட்டாத குறை.


"எனக்கு என்ட அப்பா தான் முக்கியம்,.அவர் ஓம் என்று சொன்னால் தான் கட்டுவேன்.ஆனால் சொல்ல பயமாக இருக்கிறது, அவர் கடைசி வரைக்கும் சம்மதிக்கமாட்டார்" என்றாள்.

அப்போ கடைசி வரைக்கும் சம்மதிக்க மாட்டார் என்றால் உனக்கு கல்யாணமே நடக்காதேடி என்று கேட்க,
பரவாயில்லை கடைசி வரைக்கும் கட்டாமலே இருந்துவிடுகிறேன் எனக்கு அப்பா தான் முக்கியம் என்று அடம்பிடித்தாள்.

அப்போ உன்னை நம்பி இருக்கிற,உன்னோட தனது வாழ்க்கை அமையணும் என்று உன்னை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்துக்கொண்டிருக்கும் அந்த பையன் என்ன செய்வது ?அவன் வேறு பெண்ணை கட்ட சொல்கிறாயா அல்லது அவனும் கல்யாணம் கட்டாமலே காலம் முழுவதும் இருக்க சொல்கிறாயா என்று கேட்டேன்.

"வேணுமென்றால் அவனது தொலைபேசி இலக்கம் தருகிறேன்;நீயே கதைத்து பார் எனக்கு தெரியாது" என்றாள்.

அதுவரை பொறுமையாக இருந்த மனசு பொங்க ஆரம்பித்து வெடித்துவிட்டது எனக்கு.

பின்ன என்ன ******************* நீங்க எல்லாம் காதலிக்க வெளிக்கிட்டனீங்க.அப்பா தான் முக்கியமென்றால் வீட்டோட இருக்க வேண்டியது தானே அப்பாவ கட்டிக்கொண்டு என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.கடைசி வரைக்கும் நான் சொன்னது புரியாமலேயே கிளம்பி சென்றுவிட்டாள் அந்த நண்பி!

எந்த ஒரு பெண்ணும் தனது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்களாக தனது தந்தையையும் கணவனையும் தான் கூறுவார்கள்.அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் தந்தை-கணவன் வகிக்கும் பங்குக்கு வராவிட்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த உறவுகளும் சில பெண்களின் வாழ்வில் உறுதுணையாக இருந்திருக்கலாம்,.இருக்கலாம்.பொதுவாக ஒரு பெண் தனது தந்தையை ஒத்த மனப்பாங்கு,நடத்தையை கொண்ட ஆண் ஒருவனை கண்டால் இயல்பான ஒரு ஈர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது.

தனது துணையை தேடும் போதும் கூட தனது தந்தையிடம் காணப்படும் நல்ல பண்புகளை கொண்ட ஒரு ஆணை தான் பெண் கற்பனை செய்து வைத்திருப்பாள்.அதே போன்று பெரும்பாலான வீடுகளில்,அம்மாக்கள் ஆண் பிள்ளைகள் மீதும்,அப்பாக்கள் பெண் பிள்ளைகள் மீதும் ஒரு அதிகப்படியான அன்பை வெளிக்காட்டுவதை காணலாம்.இது இயற்க்கை.


ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்,அதுவும் உண்மையான காதல் என்றால் அவளை திருமணம் செய்ய வேண்டும்,அவளுடன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்க்கு அடிப்படையாக இருக்கும்.நீண்ட கால பந்தத்தை எதிர்நோக்கி அதனோடு பின்னிப்பிணைந்த பல எதிர்பார்ப்புகள் தான் அந்த காதல் என்ற பந்தம் மூலமாக ஆரம்பிக்கிறது.

பெண்ணுக்கு தந்தை எத்தனையோ உதவிகளை செய்திருக்க கூடும்.அதிகப்படியான பாசத்தை கொட்டியிருக்க கூடும்.ஆனால் அந்த பெண் காதல் என்று வந்துவிட்டால்,ஒரு கட்டத்தில் சுயமாக ஒரு முடிவெடுப்பது அவசியமாகிறது.பாசமான தந்தை என்றால் தந்து மகளின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதில் நிச்சயம் அக்கறை இருக்கத்தான் செய்யும்.அதை புரிந்துகொண்டு அதற்க்கேற்றால் போல் பேசிப்பார்ப்பது அவசியம்.கடைசி தருணத்தில் கூட துணிவு வராதவர்கள் காதலிப்பதில் பயனில்லை.இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரலாம் என்று முதலே தெரிந்து கொண்டு தானே காதலிக்க தொடங்குகிறீர்கள்.
-----------------
தந்தை மீது பாசம் வைப்பது தவறு என்று கூறவில்லை.ஒரு பொண்ணுக்கு தன் வாழ்வில் பல கட்டங்களில் தந்தையின் அரவணைப்பு தேவைப்படுகிறது.ஒரு மகள் பல வழிகளில் தந்தையின் அரவணைப்பை எதிர்பார்க்கிறாள்.




1 .தந்தையின் பாதுகாப்பு மகளுக்கு தேவைப்படுகிறது.


மகளுக்கு தந்தையின் பாதுகாப்பு என்பது பல வழிகளில் உருவாக்கம் பெறலாம்.பெண்கள் சிறு பராயமாக இருக்கும் போது உடல் சார்ந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் வளரும் போது மகளின் தன்னம்பிக்கை,அறிவு வளர்ச்சியில் தந்தை உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது. ஒரு தந்தையின் வழிகாட்டல் ஏன் அவசியமாகிறது என்பதற்கு அடுத்து நான் தரப்போகும் தரவுகளே பதில் கூறும்.

-14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 % 'க்கும் அதிகமான பெண்கள், தந்து காதலன் கோபப்படுவான் என்கின்ற பயத்தில் அவசியமற்ற/தேவையில்லாத செக்சுவல் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.
-அண்ணளவாக 12 %'மான இளம் பெண்கள் வற்புறுத்தி கட்டாயத்தின் பெயரில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுத்தப்படுகிறனர்.
-35 வீதமான கல்லூரி,காலேஜ் பெண்கள் இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலத்துக்கு ஏதாவது ஒரு கவலை,நம்பிக்கையற்ற தன்மைகளினால் அவதியுறுகிறனர்.
- 11 வீதமான பெண்கள் தற்கொலை பற்றி சிந்தித்தோ,அல்லது முயற்சித்தோ இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Group of beautiful girls drinking wine by yekophotostudio - Stock Photo

இந்த மாதிரியான எண்ணிக்கைக்குள் தனது மகளும் வராமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தந்தைக்கும் அவசிய கடமையாகிறது.தந்தையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்ற பெண்கள் தற்கொலை முயற்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது என்கிறது மேல் கூறிய ஆய்வு.

2 . தந்தை தன் மீது பாசம் கொண்டிருக்கிறார் என்று அறிய பெண் விரும்புகிறாள்.

தந்தை ஒருவரின் மகள் மீதான அன்பு மகளை நல்வழிப்படுத்துகிறது. ஒரு திறமையான தந்தை தனது சிறிய மகள் சிறிய பல பிரச்சனைகளில் சிக்குப்படுவதை தவிர்க்க வைப்பதன் மூலம் வளரும் போது மகளின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உறுதுணையாக அமைகிறார்.மேலும்,

-தந்தையின் அன்பும் ஆதரவும் அணைவணைப்பும் ஒரு மகளின் மனநிலையை, சுயதிறனியல்களை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகிறது.
- தந்தையின் அன்பை பெறும் மகள் வெகு சீக்கிரம் இன்னொரு ஆணின் அன்பை எதிர்பாக்க ஆரம்பிக்கும் வேகம் குறைகிறது.
- இந்த மாதிரியான மகள்கள் பதின்மவயது கர்ப்பங்கள், செக்சுவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக குறைவாகவே காணப்படுகிறது.
- இன்னொரு உறவுக்குள்(அது சாதாரண/செக்சுவல்) நுழைவதை தீர்மானிப்பதில் தந்தை/தந்தையுடன் தொடர்புடைய விடயங்கள் ரொம்பவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று 76 வீதமான பெண்கள் கூறுகிறனர்.



தனது மகளுக்கான எல்லைகள் வரைமுறைகளை வைத்து தந்தை வளர்ப்பதன் மூலம், தனது காதலுக்காக, காதலனை சந்திப்பதற்காக என்று எதிர்கால வாழ்க்கை தொடர்பான தீர்மானங்களை மிகவும் சிந்தித்து கவனமாக, மிகவும் பெறுமதியுள்ளதாக மகள்கள் எடுத்துக்கொள்கிறனர் என்று கூறப்படுகிறது. தன் மீதான நம்பிக்கை பெறுமதிகள் இதன் மூலம் குறித்த மகளுக்கு அதிகரிக்கிறது. இதனால் தன் மீது அதீத கவனமும் பெறுமதியும் எடுத்துக்கொள்ளும் எந்த மகளும் ஆபத்துக்குரிய செக்சுவல் நடவடிக்கைகளிலோ.,போதைவஸ்துக்கள், மதுபான பாவனைகளிலோ ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து கொள்கிறது. தனக்கு தானே ஒரு எல்லைகளை வகுத்து செயல்ப்பட இந்த தந்தையின் மகள் மீதான செல்வாக்கு அவசியமாகிறது.

3 . தந்தையின் ஈடுபாடு அவசியம்


தந்தை வெறுமனே அன்பு செலுத்துகிறேன் என்று கூறுவதோடு மட்டுமல்லாது ஈடுபாட்டுடன் கூடிய ஒரு அரவணைப்பையே ஒரு மகள் தந்தையிடம் இருந்து எதிர்பார்க்கிறாள். குறிப்பிட்ட சில நேரம் தந்தை தன்னோடு இருப்பது அவசியமென ஒரு மகள் சிந்திக்கிறாள். மகளின் திறமைகளை பற்றி பேசுவதும், மகிழ்ச்சியான தருணங்களில் அதை பகிருவதும் சோகமான சந்தர்ப்பங்களில் பங்கெடுப்பதும் தந்தையின் கடமையாகிறது. மகள் "விரும்பும்" நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்துதல் வேண்டும். மகளுடன் செலவழிக்கும் ஒவ்வொரு கணப்பொழுதும் அவளின் எதிர்காலத்தை திறம்பட தீர்மானிக்கும் நிமிடங்களாகின்றன. இப்போது முதலிடும் ஒவ்வொரு நிமிடங்களும் பிற்காலத்தில் நிச்சயம் ஒரு நன்மையை குறிப்பிட்ட தந்தைக்கு கிடைக்க செய்யும் என்பது நிதர்சனம்.
----------

சரி என்ன தான்செய்தாலும் தந்தை சம்மதிக்கமாட்டார் என்றால் அடுத்த கட்டத்தை சிந்திக்க வேண்டும்.இல்லை எனக்கு அப்பா தான் முக்கியம் சம்மதிக்காவிடில் பரவாயில்லை கடைசி வரைக்கும் அவரோடு இருந்து விடுகிறேன் அல்லது அவர் காட்டும் மாப்பிள்ளையையே கட்டிக்கிறேன் என்று காதலித்த பின்னர் முடிவெடுக்கும் பெண்கள் தயவு செய்து என் முன்னால் வாருங்கள்.ஜெயில் சென்றாலும் பரவாயில்லை என்று சுட்டுத்தள்ளிவிடுகிறேன்.




உன்னையே நம்பி ஒருத்தன் இருக்கிறான் என்று சிந்திக்காமல் எப்போதும் தனது நலனையே சிந்திக்கும் சுயநலவாதிகளுக்கு காதல் என்கின்ற பந்தம் தேவையற்றது.அனைத்து பெண்களும் இவ்வாறு தான் என்று கூறவில்லை.ஆனால் இத்தகைய மடத்தனமான பெண்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது நிச்சயமான உண்மை.

காதலில் ஏமாற்றுபவர்கள் பெண்கள் தான் என்று ஆண்கள் அதிகளவு கோஷம் இடுவதற்கு இப்படியான பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.உங்களால் காதலுக்கோ, காதலிப்பவனுக்கோ அவமானம் இல்லை.முதலில் உங்களை மாதிரி பெண்கள் இருப்பது பெண்கள் சமுகத்துக்கு தான் அவமானம்.திருந்துங்கள் பெண்களே.

நீங்கள் மேஜர் என்று குறிப்பிட்டு பதினெட்டு வயதை ஓட்டு போடும் வயதாக நிர்ணயித்தமைக்கு காரணம்,அந்த வயதுக்கு பின்னர் ஒரு பெண்ணோ ஆணோ சுயமான முடிவுகளை எடுக்க மனம் பக்குவமடைந்து விடும் என்பதனாலேயே.அரசாங்கத்துக்கே தெரிகின்ற விடயம் உங்களுக்கு தெரியாமல் போகுமா?தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சில முக்கிய முடிவுகளை எடுத்து தான் ஆகவேண்டும்.அல்லது எந்தவித "வாழ்க்கை சிக்கல்களுக்குள்"ள்ளும் சிக்கிவிடாத மாதிரி உங்கள் வாழ்க்கையை பார்த்துக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

காதல் என்னும் சொல் காதலிப்பவர்களாலேயே வர்ணம் பூசி அழகாக்கப்படுகிறது;அவர்களாலேயே கறுப்பு சாயம் பூசி சாகடிக்க்கவும்படுகிறது!!



Post Comment

Monday, July 18, 2011

காணாமல் போன ஓட்டவடையுடன் ஒரு கலக்கல் பேட்டி!!!

குசும்பு:இது மொக்கை பதிவல்ல!படு சீரியஸ்!!

கடந்த மூணு கிழமையா காணாம போய் இருக்கார் நம்ம மொக்கை சிங்கம்ஓட்டவடை!!எங்க போனார் எதுக்கு போனார்னு அவரின் மிக நெருங்கிய நண்பர்களை தவிர மத்தவங்களுக்கு தெரியாம இருந்திச்சு..இப்போ எல்லா உண்மையும் வெளில வரப்போகுது..ஒரே ஒரு போன் கால் தான்!!ஓட்டவடை உடனே ரிசீவ் பண்ணினாரு...(ஹிஹி அப்பிடி சொன்னா தானே நமக்கு மரியாத!)

ஓட்ட வட நாராயணன்

மைந்தன்:ஹாய் ஓட்டவடை..?
ஓட்டவடை:------------------------
மைந்தன்:ஹாய் ஓட்டவடை..???
ஓட்டவடை:----------------------------------
மைந்தன்:ஹாய் ஓட்டவடை..?????????
ஓட்டவடை:-----------------------------------------------------
மைந்தன்:யோவ் ஓட்டவடை உம்மளை தான்யா !!
ஓட்டவடை:---------------
மைந்தன்:"லோலிட்டா ஓ லோலிட்டா...உன் தூரம் கூட...
ஓட்டவடை:ஹலோ யாரு யாரு
மைந்தன்:(பாவி பயபுள்ள நான் மாடு மாதிரி ஒரு போமாலிட்டிக்கு ஹாய் சொன்னா கண்டுக்காத பயபுள்ள ஹன்சிகா பாட்டு ரிங் டோன்'ஆ போட்டு வைச்சிருக்கு போல.)அது நான் தான் மைந்தன்.!
ஓட்டவடை:யாரு மைந்தனா??யாரவரு ஹவாய் தீவில "பாப் கார்ன்" விக்கிரவரா?
மைந்தன்:யோவ் நான் தான் ப்ளோக்கர் மைந்தன்யா !
ஓட்டவடை:அட அட இப்ப தான் ஞாபகம் வருது நம்மளோட ஹன்சிகா புள்ளைக்கு அடிபட்ட பயபுள்ள தானேடா??
மைந்தன்:(பாவம் பயன்னு பன்னிக்குட்டி ரெக்கமன் பண்ணினதால விட்டுக்குடுத்தன்,இப்ப எனக்கே பூ வைக்கிறானே)
ஆமா பாஸ் ஆமா அவனே தான்....எங்க பாஸ் கொஞ்ச நாளா(ஹிஹி கிழமையா)ஆளையே காணேல பதிவுலக பக்கம்?
நீங்க இல்லாம எல்லாரும் காயிராங்களாம்!
ஓட்டவடை:ஏன் காயிராங்க?ஒரு ஒதுக்கு புறமா பாத்து ஒதுங்க வேண்டியது தானே..
மைந்தன்:அதெல்லாம் தண்ணி ஊத்தி காஞ்சவங்கள எழுப்பியாச்சு..நீங்க எங்க போயிருந்தீங்க??

ஓட்டவடை:அது நீ ஹன்சிகாவ எனக்கு செட் பண்ணி தந்திட்டியா...எனக்கு தலை கால் புரியல...அப்புறம் சிபி அண்ணனுக்கு போன் போட்டு தான் கன்பேர்ம் பண்ணினேன் மேல இருக்கிறது கை,கீழ இருக்கிறது கால் அப்பிடீன்னு...அவரு குடுத்த ஒரு கில்மா ஐடியா தான் பாருங்க நான் இப்ப ஹன்சிகாவோட ஹவாய்தீவுகள்'ல ஹாயா இருக்கேன்...
மைந்தன்:யோவ் ஹன்சிகாவ ஆல்ரெடி நான்.......
ஓட்டவடை:பரவாலைய்யா...நீ தானே மைந்தா...நாமெல்லாம் சத்தியராஜ் பரம்பரைடா!
மைந்தன்:ஐயோ பாஸ் நான் சொல்ல வந்தது ஹன்சிகாவ நான் ஆல்ரெடி "கழட்டி" விட்டிட்டேன்னு தான்!!ஒருத்தன் "கழட்டி விட்ட" பிகரோட ஜாலியா இருக்கீங்களே உங்கள என்னென்கிறது??



ஓட்டவடை:விட்ரா விட்ரா பூசணிக்காய்'னா உருண்டையா இருக்கிறதும் புடலங்காய் நீளமா இருக்கியர்த்தும் சகஜம் தானேயா!!
மைந்தன்:யோவ் இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம பூசணிக்கா புடலங்காய இழுக்கிறே?இதில ஏதும் உள்குத்து இருக்கா??
ஓட்டவடை:நீ எல்லாம் மீசை முளைக்காத பயல் சொன்னா புரியாதுடா விட்ரா விட்ரா..
மைந்தன்:யோவ் எனக்கா மீசை முளைக்கல??மீசை மட்டுமில்ல.....வீட்டில வைச்ச ரோசா செடி கூட முளைச்சு பூத்திருக்குது தெரியும்லே!!
அத விடுங்க பாஸ் எப்ப மறுபடி பதிவு போட போறீங்க?
ஓட்டவடை:ஆக்சுவலி ஐ ஆம் ப்ரோம் அப்ரிக்கா....ச்சீ அந்தாட்டிக்கா...அடிச்சீ அமெரிக்கா...நெக்ஸ்ட்டு வீக்கு நானு மீட்டு!!
மைந்தன்:ஆமா இது எந்த நாட்டு இங்கிலீசு தம்பி?சும்மா பிச்சிக்குது??
ஓட்டவடை:ஹிஹி அதுவா...
மைந்தன்:ஆமா பாஸ் அதுதான்..

ஓட்டவடை:அதுவா...ஹிஹி அதுவா??
மைந்தன்:அட ஆமா பாஸ் அது தான்..எப்பிடி எப்பிடி?
ஓட்டவடை:சும்மா போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது...
மைந்தன்:என்னது ஓட்டவடைக்கு வெக்கமா??அட சும்மா சொல்லுங்க பாஸ்?
ஓட்டவடை:அது ஹன்சிகா அந்த மாதிரி நேரத்தில...விட்டு விட்டு முனகுமா...அப்போ கத்துக்கிட்டது சார்..
மைந்தன்:என்னாது எந்த மாதிரி நேரத்தில??
ஓட்டவடை:அது தான் அவங்களோட படுத்திருக்கேக..
மைந்தன்:படுத்திருக்கேக்க??
ஓட்டவடை:அட ஆமாயா படுத்திருக்கேக்க அந்த குண்டு பூசணிக்காய் ஓசில திண்டு திண்டு இரவு தூங்கும் போது கனவில முனகும் பாரு,அப்போ பொறுக்கினதுடா..
மைந்தன்:அப்பாடா நானும் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன் சார்!
ஓட்டவடை:ஹிஹி நானும் என்னமோ ஏதோன்னு தாண்டா போனேன் கூட்டிக்கிட்டு...
மைந்தன்:நீங்க சொல்றத பாத்தா ஒண்ணுமே நடக்காத மாதிரியெல்லோ கிடக்குது??
ஓட்டவடை:மவனே கடுப்ப கெலப்பாத..நானே அந்த கடுப்பில தான் ஊருக்கு வந்து குப்பற படுத்திருக்கேன்....
மைந்தன்:ஏன் பாஸ் நிமிந்து மல்லாக்கா படுத்தா தூக்கம் வராதா?
ஓட்டவடை:ஹிஹி வரும்...ஆனா வராது...எப்பிடி படுத்தாலும் கெட்ட கனவாயே வருதுடா..


மைந்தன்:நடக்க கூடாதது நடந்த்திரிச்சோ??
ஓட்டவடை:நடக்க கூடாதது கூட நடக்கலையேன்னு தான்யா நான் கவலையில இருக்கேன்..
மைந்தன்:அப்போ ப்ளாக்...??
ஓட்டவடை:இந்த பீலிங்'ல எனக்கு மொக்கை வருமா?இல்ல மரண மொக்கை தான் வருமாடா?நீயே சொல்லு?நீ சொல்லேன்?அட நீ சொல்லேன்??

மைந்தன்:ஆமா ஆமா கூல் கூல்...உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது மச்சி...(ஹிஹி இதெல்லாம் முதலே அனுபவிச்சு தானே கழட்டி விட்டேன் ஹிஹி)
ஓட்டவடை:புரியுதா??வாடா வாடா நண்பேண்டா!!
மைந்தன்:அப்போ உங்கள எப்ப வருவீங்க எப்போ வருவீங்கன்னு காத்துக்கிட்டிருக்கிற ரசிகங்களுக்கு என்ன சொல்ல பாஸ் ?
ஓட்டவடை:ஓட்டவடைய காக்கா கொத்திட்டு போயிரிச்சு...காக்காவ பாட்டி பிடிச்சு புரியாணி போட்டிட்டான்னு சொல்லுடா...
மைந்தன்:அந்த புரியாணிய யார் சாப்பிட்டதுன்னு கேட்டாங்கன்னா??
ஓட்டவடை:நம்ம லாப்டாப் மனோவ மாட்டிவிட்டிடு!!!
மைந்தன்:???????????

டிஸ்கி 1 -படங்கள் அனைத்தும் காப்பி ரயிட்ஸ் ஓட்டவடைக்கே..(ஹிஹி நான் இன்னும் ராயல்டி பே பண்ணல)
டிஸ்கி 2 -ஓட்டவடையை வாடா போடா என்று விளித்ததற்கு மன்னிச்சு அண்ணே!!
டிஸ்கி 3 -ஓட்டவடை எங்கிருந்தாலும் உடன் வரவும்...போர் அடிக்குது...
டிஸ்கி 4 -ப்ளாக் பக்கம் வராமல் பஸ்,டுவிட்டர் பக்கம் அராஜகம் நடத்தினது கண்டுபிடிக்கப்பட்டால்.....

Post Comment

Saturday, July 16, 2011

சயிட் அடிக்கலாம் வாங்க:மனதை திற காதல் வரட்டும்-பாகம் 2

குறிப்பு:இது காதல் சம்பந்தமான எனது பார்வை மட்டுமே.சரியாகவும் இருக்கலாம்.ஏன் பிழையாகவும் கூட!!பிழைகளை சுட்டி காட்டுங்கள்.இது ஒரு தொடர் பதிவு.அதன் இரண்டாம் பாகம் இன்று.இதன் முதல் பாகமான "மனதை திற காதல் வரட்டும்-பாகம் 1 " இல் காதலின் ஆரம்பம் பெரும்பாலும் சயிட் அடிப்பதனாலே என்று கூறி இருந்தேன்.
அதனை படிக்காதவர்கள் இதை கிளிக்குங்கள்.


"The best and most beautiful things in the world cannot be seen or even touched- they must be felt with the heart." - Helen Keller

"Love isn't finding a perfect person. It's seeing an imperfect person perfectly." - Sam Keen

இன்றைய பதிவிலும் சயிட் அடித்தலை பற்றி சற்று விரிவாக ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
இந்த விடயத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தினால் அதை வைத்தே ஒரு புத்தகம் எழுதிவிடலாம் காரணம்,நாம் அனைவருமே ஒவ்வொரு நுட்பங்களை தெரிந்து வைத்திருப்போம் சயிட் அடிப்பதற்கு.ஐயோ எனக்கு ஒரு முறைகளும் தெரியாதே என்று முழிப்பவர்கள் நீங்கள் என்றால்,உங்களுக்கு கொஞ்சம் வழிமுறைகளை என்னால் தர முடியும் என நினைக்கிறேன்.

Romantic Couple Online Dating

ரோட்டில் நின்று காய்வதை மேலோட்டமாக அனைத்து பெண்களுமே கேவலமாய் தான் பேசுவார்கள்.உங்கள் நண்பிகள் உங்களை வீதியில் நின்று வெட்டி அரட்டை அடிப்பதை கண்டால் நக்கலாக ஏதும் கமென்ட் அடிப்பார்களே?அதை தான் கூறுகிறேன்.ஆனால் நீங்கள் வீதிகளில் நின்று செய்யும் காரியத்தை (அதுதாங்க சயிட் அடித்தல்)என்ன தான் நக்கல் அடித்தாலும்,பொண்ணுங்க அதனை தான் விரும்புகிறார்கள் உள்ளே மனதிலே!

தன்னை ஒரு ஆண் பார்க்கிறான் என்றால் தான் பெண்களுக்கே தங்களை பிடித்து போகிறது.அடடா ஒருத்தன் பார்க்கும் அளவுக்காவது தாங்கள் அழகா இருக்கமே என்று நினைக்க தோன்றுகிறது.திரைப்படங்களில் நக்கலடிப்பது போல,அவர்கள் ஆடை அலங்கரித்து வீட்டால் வெளிக்கிட்டு திரும்பி வீடு சேரும்போது ஆகக் குறைந்தது ஒரு கமென்ட் ஆவது கிடைத்திருந்தால் தான் அவர்கள் மனசு குளிர்கிறது.நாங்க அப்பிடி இல்லை என்று கூறும் பெண்கள் மன்னிச்சு..நான் பொதுவாக கூறுகிறேன்.

ஆகவே,வெளிப்படையாக திட்டினாலும் நீங்கள் சயிட் அடிப்பதை விரும்பாத பொண்ணுங்க யாருமே இருக்கமுடியாது என்பது எனது கணிப்பு.நீங்கள் சயிட் அடிப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டால்!!நீங்கள் அதை தாண்டி வேறு ஏதும் தகாத நடத்தையில் இறங்கினால் அதனை எந்தப் பொண்ணுமே ரசிக்க மாட்டாள் என்பது நிதர்சனம்!ஆகவே நீங்கள் உங்களையும் நல்லவனாக காட்டிக்கொள்ளுதல் இந்த இடத்தில் அவசியமாகிறது!


முதல் சயிட்டிங்கிலேயே முட்டாளாகி விட்டால் அப்புறம் குறிப்பிட்ட பொண்ணிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்குவது குதிரைக்கொம்பு தான் நண்பர்களே!நீங்கள் திறமையான ஒரு ஆணாக(அது தாங்க சகலகலா வல்லவன்)ஒரு சில சயிட்டிங்கிலேயே நீங்கள் விரும்பும் பெண்ணை உங்கள் பக்கம் காதலிக்க வைக்க முடியும்.அனைவராலும் இது சாத்தியமானதன்று.அனால் முயற்சி செய்து பாருங்கள்.முடியாதது எதுவுமல்ல நண்பர்களே!அப்படியும் முடியாவிட்டால் என்ன அவசரம் ஒரு கிழமையில் லவ் பண்ணி அடுத்த கிழமை கல்யாணம் கட்டும் அவசரமா??மெல்ல நிதானித்து உங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் திட்டமிடுங்கள்!எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் என்று வரும் வடிவேல் காமெடி..அது காமெடி மட்டுமல்ல உண்மையும் கூட..காதலிலும் இந்த "பிளானிங்"என்பது மிக மிக முக்கியமானது நண்பர்களே.இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்!

சரி ஆண்கள் பக்கம் மட்டும் எழுதினால் பெண்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?(ஹிஹி எதோ பெண் ரசிகைகள் கோடிப்பேர் இருக்கிற மாதிரி!).பெண்களும் ஆண்களை விட சயிட் அடித்தலில் சளைத்தவர்கள் இல்லை என்று முன்னைய பதிவில் கூறி இருந்தேன்.ஆனால் அவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள்.தாங்கள் சயிட் அடிக்கிறோம் என்பதை வெளியில் காட்டிக்க மாட்டார்கள்...குறிப்பாக ஆண்களுக்கு. பெரும்பாலான ஆண்கள் தங்களை யாரும் பெண்கள் சயிட் அடித்தால் அவர்கள் பின்னாலேயே போவார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர் பெண்கள்.அதனாலேயோ என்னமோ பெண்கள் தாங்கள் சயிட் அடிப்பதை மறைக்கின்றனர்.

பலரும் கூறுவதை போல,காதலில் ஆண்கள் முதலில் தேடிப்போவதே நல்லது.பெண்கள் எதாவது சாதகமான சைகைகளை ஆணை விட முதலில் காட்டுவாளேயானால்,அந்த பெண்ணை குறிப்பிட்ட ஆண் சற்று இளக்காரமாக பார்க்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது,(மறுபடியும் "பெரும்பாலான சந்தர்ப்பங்களில்")அல்லது ஆண் தனது குறுகிய கால தேவைக்காக பயன்படுத்த கூட முனையக்கூடும்.ஆகவே எதுவாக இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஆறுதலாக நிதானித்து இரண்டாவது நகர்வாக தங்கள் நகர்வை மேற்கொள்வது சிறந்தது என்பது கண்கூடு!


பெண்கள் போகிறபோக்கில் சயிட் அடித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.ஆண்களை போல "ஆவென்று காஞ்ச மாடு கம்பில........."மாதிரி சயிட் அடித்து நாங்களும் சயிட் அடிக்கிறோம் என்று வெளிப்படையாக வெளிப்படுத்தமாட்டார்கள்.ஆனால் அவர்களும் சயிட் அடிப்பார்கள்..நீங்கள் திறமையானவராக இருந்தால் அதனையும் இலகுவில் கண்டு பிடிக்கலாம்!

பெரும்பாலும் சயிட் அடிக்கும் நுட்பங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்..எனக்கு தெரிந்த ஒரு சில நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்(ஹிஹி இதெல்லாம் நீ ட்ரை பண்ணினதான்னு கேக்கப்பிடாது கேட்ட கோபம் வரும் ஆமா!)

பெரும்பாலும் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு போற அம்மாக்கள்,வீதியில் பொடிப்பசங்க நின்றால் அவங்களையே பாத்திட்டு வருவாங்க எங்க நம்மட மகளை சயிட் அடிக்க போறாங்களோன்னு(அப்பிடி என்ன பயமோ!).அப்பிடி அம்மாக்கள் பார்க்கும் போதே மகளை நீங்க சயிட் அடிச்சா அவங்கட மனசு எவ்வளவு வருத்தப்படும்.ஆகவே முதலில நீங்க செய்யவேண்டியது,அம்மாக்களின் கவனத்தை திருப்பணும்..எப்படி??அம்மாக்கள் உங்களை பார்க்கும் போது நீங்க மகளை பார்க்காமல் அம்மாக்களை பாருங்கள்..அவர்கள் வெட்கத்தில் வேறு பக்கம் பார்ப்பார்கள் உடனே!அப்புறம் என்ன நீங்க மகளை சயிட் அடிக்கலாம் ஒரு பிரச்சனையும் இல்லை!!


எப்பவுமே நண்பர்கள் தானே ஊறுகாய் நமக்கு...(நண்பேண்டா!)பொண்ணு ஒரு பக்கம் வாராங்க என்றால்,நீங்க அவங்களை பார்க்கும் வகையில் நின்றுகொண்டு நண்பரை பொண்ணு வரும் பக்கம் முதுகை காட்டியவாறு நிக்க வைத்து கதையுங்கள்(பாவ்லா தான்)..அப்போது பொண்ணு ஜோசிக்கும்,அட அவன் வேலையாதான் நிக்கிறான்..நான் வரேக்க சயிட் அடிக்கிறான் எண்டு..அத விட்டிட்டு,நீங்களும் நண்பர்களும் சேர்ந்து சயிட் அடித்தால்,அப்புறம் பிடிச்சு பாருங்கோவன் அந்த பொண்ணை!இவன் நான் வர்றத பாத்திட்டு தான் இப்பிடி பாவ்லா பண்றான் எண்டு கண்டுபிடிச்சிடுவாங்க சில ப்ரில்லியன்ட் பொண்ணுங்க..அப்புறம் உங்க பாடு சிரிப்பு தான் ஹிஹி !!

cute love pictures with quotes. cute love pics and quotes

இன்னொரு வகை இருக்கு,பொண்ணுங்களை சயிட் அடிக்கிறமென்று காட்டிக்காமலே சயிட் அடித்தல்..அதுக்கு பொண்ணுங்களோட அதீத நம்பிக்கையை பெற்றிருத்தல் அவசியம் நீங்க.பல பொண்ணுங்களை நெருங்கி பழகிக்கொண்டே சயிட் அடிக்கலாம்.சில வேளை அவர்களும் உங்களை உங்களுக்கு தெரியாமலே சயிட் அடிக்கக்கூடும்!!!பொண்ணுங்களை சாதாரணமாக எடை போடாதீங்க நண்பர்களே!!

"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!

ஹிஹி என்ன சொல்றீங்க??பாகம் இரண்டு பிடித்திருக்கிறதா??
தொடரும்.........
இதெல்லாம் நமக்கு ஒரு மேட்டர்னு சொல்றான் என்று நினைத்தால்,உங்கள் கமென்ட் இந்த பதிவுக்கு தேவையற்றது நண்பர்களே!

Post Comment

Monday, July 11, 2011

மனதை திற காதல் வரட்டும்-பாகம் 1!!!

குறிப்பு:இது காதல் சம்பந்தமான எனது பார்வை மட்டுமே.சரியாகவும் இருக்கலாம்.ஏன் பிழையாகவும் கூட!!பிழைகளை சுட்டி காட்டுங்கள்.இது ஒரு தொடர் பதிவு.அதன் முதல் பாகம் இன்று.

"If you're gonna tell someone you love them, make sure you're not telling a lie"

வணக்கம் நண்பர்களே..
காதல் என்பது என்ன தான் கேட்டு கேட்டு சலித்த விடயமாக இருக்கட்டும்,திரைப்படங்களில் அரைத்த விடயமாக இருக்கட்டும்,ஒவ்வொருத்தர் மனதிலும் அது வந்துவிட்டால் அது முதன்மையானது,புதியது,தெய்வீகமானது!!ஒவ்வொருத்தருக்கும் அவரவர் காதல் தான் மற்றையவர்களது காதலை விட முதன்மையாக தெரியும்..யாருடைய காதல் பெரியது என்று போட்டி வைத்து முடிவு பண்ண கூடிய விடயம் அல்ல இந்த காதல்!


எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலேயோ காதலில் விழுகிறான்.நீ காதலித்திருக்கின்றாயா அல்லது காதல் வந்திருக்கிறதா என்று நீங்கள் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்து கேட்கும் பொது பதில் இல்லைஎன்று வருகிறதாயின் குறிப்பிட்ட நபர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்.
அனைத்துக்கும் முதல் படி இந்த சயிட் அடித்தல்..!!
இதற்க்கு நூலுவிடுதல்,ரூட்டு போடுதல்,கண்ணடித்தல்,கவர் பண்ணுதல் என்று பல பல சொல்ப்பிரயோகங்கள் பல்வேறு இடங்களில் வழக்கிலிருந்தாலும்,மேட்டர் ஒன்றே!!காலம் காலமாக மாறாது தொடரும் மனித நடத்தைகளில் இதுவும் ஒன்று என பெருமையாக கூறிக்கொள்ளலாம்!
உங்க தாத்தா சயிட் அடித்திருப்பார்.உங்க அப்பா சயிட் அடித்திருப்பார்..இப்போது நீங்கள்..நாளை உங்கள் பிள்ளைகளும் இதனை செய்வார்கள்.

சைட் அடித்தல் என்று வரும்போது,பெரும்பாலான ஆண்கள் அதனை தங்களது நாளாந்த கடமையாக செய்துவருகின்றனர்..அனைத்து ஆண்களும் அதை செய்வனே செய்கின்றனர்.நீ சயிட் அடிக்கிறாயா என்றால் ஆம் என்று ஒத்துக்கொள்வார்கள்.(சிலர் மனைவிமார்களுக்கு பயந்து இல்லை என்று கூறுபவர்களும் உண்டு).பெரும்பாலான மனைவிகளுக்கு கணவன் இன்னொரு பெண்ணை சயிட் அடிப்பது அறவே பிடிக்காமல் இருக்கலாம்.இதை பற்றி "நீயா நானா" கோபிநாத் ஒரு நிகழ்ச்சியை நடத்திருந்தார்.அதில் பெண்கள் கேட்ட கேள்வி,இதே மாதிரி நாங்கள் மற்றைய ஆண்களை சயிட் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சும்மா இருப்பீர்களா என்பதே!இது நிற்க,

இதே கேள்வியை பெண்களிடம் கேட்டு பாருங்கள் நீங்கள் சயிட் அடித்திருக்கிறீர்களா என்று?உங்களுக்கு கிடைக்கும் பதில் பெரும்பாலும் இல்லை என்பதே!காரணம்,ஒன்று வெட்கம்,மற்றையது இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!சிலருக்கு சில ஆண்களை பார்த்தால் ஸ்மார்ட்'டாக தோன்றும்..ரசிப்பார்கள்..ஆனால் சயிட் அடித்தாயா என்றால் இல்லை என்பார்கள்..
ஆகவே ஆண்களோ,பெண்களோ மொத்தத்தில் சயிட் அடிக்காதவர்கள் மிக மிக குறைவே..அவ்வாறு யாரும் இருந்தால்,அவர்களுக்கு வேறு ஏதும் வருத்தங்கள் இருக்ககூடும்!!
கூர்ந்து கவனித்தீர்களேயானால்,காதலுக்கு முதல் படியே இந்த சயிட் அடித்தல் தான்!
ஒரு பெண் அழகாய் இருந்தாளாயின் அவளை பார்க்க தூண்டும் எந்தவொரு ஆணுக்கும்.அது இயற்க்கை.அதே போல தான் பெண்களுக்கும்!
அதை முழுவதுமாய் தப்பென்று கூறமுடியாது.நான் சயிட் அடிக்கமாட்டேன் எந்தவொரு பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டேன் என்று எந்த ஒரு ஆம்பிளையாவது கூறுவானா?அவ்வாறு கூறினால் அவன் அடுத்த "நித்தியானந்தாவாக" முயற்ச்சிக்கிறான் என்று தெளிவாக கூறலாம்.
சில விடயங்களை பொத்தி பொத்தி வைக்கும் போது தான் அதன் வீரியம் கூடுகிறது.அந்தந்த நேரங்களில் அவற்றை அவ்வாறே விட்டு விடுவீர்களேயானால் விளைவுகள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்!

கல்யாணம் கட்டும் வரையில் தாராளமாக சயிட் அடியுங்கள்.உங்களை யாராலையும் தடுக்க முடியாது நிறுத்த முடியாது.உங்களுக்கென்று ஒருத்தி/ஒருவன் வந்துவிட்டால் வாழ்க்கையில்,அப்புறம் நீங்களாக தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும் இவற்றை நிறுத்துவோமா,குறைப்போமா,அல்லது தொடர்வோமா என்று.அது நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவில் தங்கியுள்ளது.அதை விடுத்து நான் நல்ல பையன் சயிட் அடிக்க மாட்டேன் என்று கூறி உங்களை மட்டுமல்லாது,உங்கள் துணையையும் வீணே ஏமாத்தாதீர்கள்.
சில விடயங்கள் நீங்கள் மனது வைத்தால் தவிர்க்க முடியும்..
Affectueux Couples Photo

படங்களில் காட்டுவதை போல ஒரு செக்கன்ட் பார்த்தவுடன் பத்திக்கொள்வதல்ல காதல்!கதைகளுக்கு சரிப்பட்டு வருமே ஒழிய நிஜத்தில் அல்ல!ஆனால் ஒரு செக்கன்ட் பார்த்தவுடன் பத்துவது வேண்டுமானால் காமத்துக்கு சரியாக இருக்கலாம்.ஒரு செக்கன்ட் பார்த்தவுடன்,வேறு ஒருவிடயங்களையுமே அலசாது காதலில் விழுந்து அவளை வாழ்க்கைத்துணையாக்கியோர் எத்தனை பேர் கூறுங்கள் பார்க்கலாம்??


சின்னப்பயல்..இவனுக்கென்ன தெரியும்..வெறுமனே பூச்சாண்டி காட்டுகிறான் என்று நினைப்பவர்கள் "எஸ்" ஆகிடுங்க.நாம எல்லாம் சாஜகானுக்கே அட்வைசு கொடுத்தவங்க !!

Post Comment

Sunday, June 26, 2011

ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல் முடிவு!!




படம்:ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்
குரல்:மைந்தன் சிவா
இசை:டி ஆர் ராஜேந்தர்
பாடல்:மைந்தன் சிவா

கண்ணே ஹன்சிகாவே
கன்னி மயிலென
கண்டேன் உன்னை நானே...
கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன்...
ஓட்டவடை உன்னை நான் கேக்கிறேன்..
என்னவள் தானே...ஹன்சி
என்னவள் தானே....

தப்சி என்றால் ஒரு வகை கப்சி...
பெப்சி என்றால் அதிலொரு டேஸ்டி..
நீயொரு பிகர் தானே..
உடல் நடுங்கும் மார்கழி குளிர் தானே...
ஏனோ ஓட்டை விதி செய்தது..
நீயோ என்னை கைப்பிடித்தது...
ஆரிராரோ..ஒஹ் ஆரிராரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்..
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...
உன்னோடு ஒன்றானேன்..
எந்நாளும் இதை நீ மறவாதே...
நீயில்லாமல் எது நின்மதி..
நீ தானே என்றும் என் சந்நிதி...
ஆரிராரோ..

ஹிஹி என்ன ஜோசிக்கிறீங்க...சோக பாட்டு வருதுன்னா??
ஒண்ணுமில்ல ஹன்சிகா என்ன விட்டு போயிட்டா...
அப்பிடின்னு சொன்னா அது எனக்கு தான் மரியாதை குறைவு..
ஹன்சிகா எனக்கு வேணாம்னு நான் தான் ஒதுங்கிட்டேன்..

எவ்வளவோ கஷ்டப்படுறாரு ஓட்டவடை ஹன்சிகாவ அடையுறதுக்கு.
எனக்கு தனி மெயில் அனுப்பி கெஞ்சுறாரு..(ஆதாரம் கேட்டால் சைபர் க்ரைமுக்கு அனுப்பி வைக்கப்படும்).
பல பதிவு பகல் இரவுன்னு கண் முழிச்சு கட்டிங் எடிட்டிங் வேலை செய்து போடுறார்...
அவர்ட கன்னா பின்னா காதலை பாத்து நான் மனமிரங்கிட்டேன்..

பாவம் என்ன தான் இருந்தாலும் நம்மட பயல்...தெரிஞ்ச பயல்..
கொண்டு போகட்டுமே...
கவனமா வைச்சு காப்பாத்துப்பா...ஹன்சிகா ஒரு தீனி பண்டாரம்...
எப்ப பாரு சாப்பாடு குடுத்துகிட்டே இருக்கணும்..
நாலு நாள் வைச்சு சாப்பாடு போட்டே நான் நடுத்தெருவுக்கு வந்திட்டேன்..
நீங்களும் பிரான்ஸ் தெருவுக்கு வந்திடாதையப்பா..

ஹிஹி என்னடா இப்பிடி அடிபட்டவன் சிம்பிளா விட்டுக்குடுக்கிறானே எண்டு பாக்கிறீங்களா??ஹிஹி அதுக்கான காரணமே வேற...
சொல்லட்டா???

நேத்து தான் கோ படம் பாத்தேன்..அதில வந்த ராதா பெத்த மவ கார்த்திகாவோட என்னவோ எதோ...ஆகிபோச்சு எனக்கு..
அப்போ தான் ஹன்சிகாவ ஒப்பிட்டு பாத்தேன்...
உவாக்...ஓடிப்போ ஓட்டவடையிட்ட எண்டு கலைச்சுவிட்டேன்..
பாவம் அழுதுகொண்டு போச்சு கால் டாக்சி பிடிச்சி பிரான்சுக்கு..

என்ன நடந்திச்சோ தெரியல...

சரி ஹன்சிகா முடிஞ்சு இனி கார்த்திகா புராணமான்னு சலிச்சிக்கபிடாது நீங்க ஹிஹி

Post Comment

Saturday, June 18, 2011

வன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்!!!

பேஸ்புக்,டுவிட்டார்,ப்ளாக் என்று பல ஐட்டங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது பிரசித்தம் பெறுவதற்கு ஒரு சில மணி நேரமே போதுமானது!!!வீதியில் கட்டிப்புரண்டு முத்தத்தில் திளைத்த காதலர்களுக்கும் இதே கதி நடந்திருக்கிறது வன்கூவரில்!!

அவுச்திரேலியனான ஸ்காட் ஜான்ஸ் மற்றும் கனேடிய கல்லூரி மாணவி அலெக்ஸ் தாமஸ் ஆகியோரே இந்த முத்த சண்டையில் ஈடுபட்டு தற்பொழுது
உலகப்பிரசித்தி பெற்றிருக்கின்றனர்.அந்த கீழே காட்டப்பட்டுள்ள படம் எடுத்து முடியும் தறுவாயில் மாணவி அலெக்ஸ் தாமஸ் காயப்பட்டிருக்கிறார் முத்தத்தின் கோரத்தால் என்றால் பாருங்கள்!!
இன்று இவர்கள் டிவி,பத்திரிகைகள்,பேஸ்புக்,டுவிட்டர்,ப்ளாக் என்று பேமஸ் ஆகி இருக்கின்றனர்!!


The identity of Vancouver’s famous kissing couple is revealed


வன்கூவர்'இல் நடைபெற்ற ஸ்டான்லி கப் இறுதிப் போட்டியை பார்க்கவந்திருந்தனர் இவர்கள் இருவரும் தனித்தனியாக..
அந்த போட்டி முடிந்தவுடன் வீதியில் சந்தித்துக்கொண்ட இருவரும் இந்த முத்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்!!

இவர்கள் யார் என முதலில் அடையாளம் கண்டது ச்கொட்டின் சகோதரி தான்..அப்புறம் ச்கொட்டின் தந்தையார் தனது பேஸ்புக்கில் இந்த போட்டோவை இணைத்து ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் "காதல் செய்யுங்கள் ,யுத்தம் செய்யாதீர்கள் என்று!!!


This is my Son hows that for making love not war!
  • 10 people like this.
    • Nash d'Peng Yu To all Leaders all around the world please take note that LOVE is very important than WAR...
      about an hour ago
    • Nelly Berger Yes make love, not war haha
      24 minutes ago


"But despite some of our initial assumptions, the kiss seen 'round the world wasn't the product of a riot-fueled, uncontrollable passion. Brett Jones instead notes that Thomas was injured and his son was coming to her aid"

அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்..


For those asking if I am proud of Scott absolutely that he can bring love to a situation like that and help turn a negative news story to a very positive one. Maybe we need the media to always look for the positive as it shows that good news does sell.
about an hour ago
  • 14 people like this.
    • Brian Goodwin ur familly has such a wonderful positive outlook
      about an hour ago
    • Janette Nicholson i just saw it...brought a tear to my eye, such a neat pic too!! :)
      about an hour ago
    • Troy Namath The photo is absolutely brilliant.
      54 minutes ago
    • Daniel Imer Its a great picture.
      54 minutes ago
    • Ana Del Pozo Cusic that's right! turning a negative news story to a very positive one, is the way it is going... so thanks to your son to start this
      47 minutes ago
    • Andrew Bliss Cain This is what we need in the World today,positive people doing positive things.The most intriguing thing is that it was spontaneous,not planned,way to go.Good story!!!
      37 minutes ago


இது தாங்க இறுதி பஞ்ச்!!!
Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. "Love amoungst the Chaos". Its so true that Love can shine anywhere. Check out the page "Lets make a Difference" as well and "like" it.

இவர்கள் தான் அந்த இருவரும்!!!!
Scott Jones and Alexandra Thomas share a laugh in Vancouver on Friday.

ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!

“Relationships do buckle under that pressure unless you have the ability to be very centred. Even if it wasn’t Scott, the guy who took the picture captured a moment in time that is iconic.”

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...