Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Friday, February 25, 2011

நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!


"The Economist" சஞ்சிகைஉலகின் பொருளாதார மற்றும் சமூக விடயங்களை அடிக்கடி புட்டு புட்டு வைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றி வரும் ஒரு சஞ்சிகை.
லண்டனை தலைமையகமாக கொண்டு வெளிவரும் சஞ்சிகை இது.
இந்த சஞ்சிகை தான் உலகின் மிக மோசமான பத்து தலைநகரங்களில் ஒன்றாக கொழும்பு இருக்கின்றது என செய்தி வெளியிட்டிருக்கிறது.

வெறுமனே அல்லாமல் முப்பதுய் அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை வெளியுயட்டிருக்கிறது தி எகோநோமிஸ்ட்.கல்வி,சுகாதாரம்,தனி நபர் பாதுகாப்பு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
மோசமான தலைநகர் பட்டியலில் பத்தாவது இடத்தில் இலங்கை தலைநகர் அமைந்திருப்பதானது இலங்கையின் உண்மை நிலையினை பட்டியலிட்டு காட்டியிருக்கிறது என்று கூறலாம்.


அத்துடன் சார்க் நாடுகளில் மூன்று நாடுகள் இந்த டாப் டென் பட்டியலில் உள்ளடங்கி இருப்பது தான் இன்னமும் கவலைக்குரியது.பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சி,மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா ஆகியனவே மற்றைய இரண்டு நாடுகளுமாகும்.

சார்க் நாடுகள் பொருளாதார சமூக கலாச்சார ரீதியின் இன்னமும் பின்தங்கியே காணப்படுகிறது என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் தேவைப்படாது.ஆச்சரியம் இந்தியா டாப் டென்'க்குள் இல்லை.(சிரியுங்க இந்திய நண்பர்களே,சந்தோசப்படுங்க!)
கொழும்பை பொறுத்தவரையில் தட்டு வீடுகள்(பிளட்ஸ்) இருக்குமளவுக்கு குப்பங்களும்,ரயில் ஓர வீடுகளும்,பாதையோர குடில்களும் அங்காங்கே காணப்படுகின்றமை இலங்கை தலை நகரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்குமென நினைக்கிறேன்..
அரசாங்கம் எங்கு இதனைப்பற்றி கவலை கொள்ளப்போகிறது?
அண்மையில் தான் அழகான கோல் பேஸ்(galle face )கடல்கரையில் அரசுக்கு சொந்தமான காணி பல மில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கைமாறி இருக்கிறது.
அதனை வைத்தாவது மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றலாம்..இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அரசியல்வாதிகள் என்ன பண்ணுகிறார்கள் என்று நான் பட்டியலிட்டு காட்டியா உங்களுக்கு தெரிய வேண்டும்?

பட்டியலின் முதல் இடத்தில் பணவீக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஜிம்பாபே தலைநகர் ஹராரே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது!


நைஜீரியா-லாகோஸ்,அல்ஜீரியா-அல்ஜியேர்ஸ்,ஈரான்-தெகிரான்,செனகல்-டாகர்,கமரூன்-தவுலா,பப்புவா நியூகினி-போர்ட் மோர்செபி ஆகியன ஏனைய நாடுகளாகும்.


சரி மேட்டர்'க்கு வருவம் பாஸ்,

நூறாவது பதிவு...
எல்லாரும் எழும்பி நின்னு கை தட்டுங்க பார்க்கலாம்?
அந்த மரியாதை இருக்கணும்..என்ன சொன்னாலும் பண்றாங்களே ரொம்ப பாசக்கார பயபுள்ளைங்க!

ஆரம்பத்தில் "கவியுலகம்" என்ற பெயரில் கவிதைகளையும்,பின்னர்
"மைந்தனின் மனதில்"என்ற பெயரில் வேறுபட்ட ஆக்கங்களையும்(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)
பதிவுலகில் பகிர்ந்து வந்துள்ளேன்.

இத்தனை காலமும் முயன்று முயன்று இப்ப கொஞ்ச நாட்களாகத் தான் இன்ட்லி,தமிழ்மணத்தில
எனது பதிவுகளுக்கு ஓட்டுகள் பதிவுகளை பிரபலமாக்குமளவுக்கு கிடைக்கின்றன.
பின்னூட்டங்களும் பல பக்கத்திலிருந்து வருகின்றன.சந்தோசம்..ஒரு பதிவருக்கு(?)வேறென்ன வேண்டும்?
அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்..
உங்கள் அனைவருடனுமான நல்லுறவு தொடர்ந்து பேணப்படும்.

பதிவு பயனுள்ளதோ,வெறும் மொக்கையோ அத்தனையையும் கண் கலங்காமல் கோபப்படாமல்
படித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்..


நன்றி மறப்பது நன்றன்று..
அது மாதிரியே வரும் காலங்களில் எனக்கு ஆதரவளிக்க உங்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்!


Post Comment

Thursday, September 30, 2010

இது பதிவர் ஏரியா!!


திக்கு திசை தெரியாம ஓடிட்டிருந்த நம்ம பதிவர்களுக்கு இப்பிடி இவங்க ஓடுவாங்க எண்டு தெரிஞ்சே 3000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பத்து குறளை வழங்கி விட்டு போய் இருக்கிறார்..அவற்றை அத்தனை பதிவரும் பின்பற்றினால் பல ஆயிரம் ஹிட்ஸ்'சுகள் பெற்று பல்லாண்டு காலம் வாழலாமாம்!!
அப்பிடி என்ன தான் சொல்லி இருக்கார் எண்டு பாப்பமே!

1)எந்திரன் தலைப்பில் பதிவொன்று போட்டால்
ஹிட்ஸ்'கள் வழங்கும் வாரி!!

2)பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மற்றோர்
ஈகலைப்பார் ப்ளாக்'இல் இருந்து!

3)கவிதைகள் போடாத பதிவர்கள் யாரும்
பிரபல பதிவராக "தடா"!

4)ஹிட்ஸ் கொடுப்பதெப்படீன்னு பதிவொன்று இட்டாலே
தானாக கிடைக்கும் ஹிட்ஸ்'சு !

5)கிளுகிளு படங்கள் விமர்சனம் பார்க்க
ஜாக்கிஅண்ணன் ப்ளாக்'கே சிறப்பு!

6)பதிவராயின் பயனென் சொல் நானறிவேன்
வெட்டிப்பயல்க்கு இருக்கா நேரம்!

7)இன்ட்லி தமிழ்மணம் இல்லாது போனால்
சிரித்திருப்போம் தனிரூம் போட்டு!!

8)சப்புன்னு தலைப்பு ஒத்தேல வைச்சா
ஒருநாய் எட்டிப் பார்க்கா!!

9)உறைக்க உறைக்க பதிவொன்று போட்டா
பின்னூட்டம் வேலி பிச்சிக்கும்!!

10)அடிக்கடி பதிவுகள் போடாதோர் ப்ளாக்'இற்கு
பின்னூட்டம் கம்பிநீட்டக் கடவு!!

நல்லாத்தான் சொல்லி இருக்கார் என வள்ளுவர்!!ஹிஹி ஓகே ஓகே ஏதுவ இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும் !!
ஓட்ட போட்டிட்டு next 'டு டே மீட் பண்ணுவம்!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...