Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Friday, October 28, 2011

விஜய் ஏன் இப்படி?விஜய்க்கு வில்லத்தனம் எதற்கு!!


காட்சி ஒன்று:
முன்னொரு காலம்...இற்றைக்கு இருபது முப்பது வருடத்துக்கு முன்னர்,எம் ஜி ஆர் என்கிற மாபெரும் சக்தி தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.அதே காலத்தில் தான் சிவாஜி எனும் நடிப்பு திலகம் மறுபக்கம் ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கிக்கொண்டிருந்தது.ரசிகர்கள் ,தமிழர்கள் சிவாஜியின் நடிப்பை போற்றினார்கள்.புகழ்ந்தனர்.ஆனால் எம் ஜி ஆரை தூக்கி வைத்து கொண்டாடினர்.காரணம் என்ன?சிவாஜி சீரியசான,காத்திரமிக்க கதைகளில் நடித்துக்கொண்டிருந்தார்.எம் ஜி ஆர் தியேட்டர் செல்லும் மக்களை குஷிப்படுத்தும் வகையிலான படங்களில் நடித்தார்.மக்கள் நடிப்பை(சிவாஜியை) பார்த்தனர்.எம் ஜி ஆரை கொண்டாடினர்.முதல்வராக்கினார்.

காட்சி ரெண்டு:
அதற்க்கு பிந்திய காலம்...ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னர் தொடங்கி இன்று மட்டும்,ரஜனி என்ற மந்திரம் தமிழர்களையும் தமிழ்சினிமாவையையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.இதே காலகட்டத்தில் பெருத்த ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கி உலகநாயகன் என்ற அந்தஸ்தோடு அங்கீகரிக்கப்பட்டவர் தான் கமல் ஹாசன்.கமலின் நடிப்பை புகழ்ந்தனர்.அடுத்த சிவாஜி என்றனர்.ஒஸ்கார் நாயகன் என்றனர்.ஒஸ்காரை தாண்டிய நடிப்பு என்றனர்.ஆனால் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை வழங்கவில்லை அவர் படங்கள்.நடிப்புக்காக போற்றப்பட்டது.ஆனால் ரஜனியோ,மசாலா படங்கள்,ஹீரோயிச படங்கள் போன்றவற்றில் நடித்தார்.சூப்பர் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார்.வசூல் நாயகன் ஆனார்.அனைத்து தலைமுறை மக்களுக்கும் சிறுவர் முதல் பெரியோர் வரை பிடித்த நாயகன் ஆனார்.

முதல் காட்சிக்கும் இரண்டாம் காட்சிக்கும் ஒற்றுமைகள் பல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்!நடிப்பு,வித்தியாசமான நடிப்பு என்று இருந்த நடிகர்களின் நடிப்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டது,போற்றப்பட்டது.இவர்கள் ரசிகர்கள் பெருமளவான ஆர்ப்பாட்டாமில்லாத,சத்தம் இல்லாத வகையில் படங்களை ரசித்தனர்.மசாலா கதைகள் ,மாஸ் ஹீரோ திரைப்படங்கள் நடித்தவர்கள் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகள் படைத்தன.மக்கள் மனதில் கொள்ளை இடம் பிடித்தவர்களும் இவர்கள் தான்.இவர்கள் ரசிகர்கள் என்றாலே ஆர்ப்பாட்டம் சரவெடி தான்!

இதை கூற காரணம்:இளைய தளபதி விஜய் எப்பவுமே மசாலா திரைப்படங்களில் தான் நடிக்கிறார்.இதை விட வேறுபட்ட கதைகளை எதிர்பார்த்தோம் என்று படம் பார்த்துவிட்டு கருத்து கூறுபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.விஜய்க்கு என்று ஒரு "way " இருக்கிறது.அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.அது தான் மசாலா திரைப்படங்கள்.மசாலா திரைப்படம் என்றால் சின்ன குழந்தையும் சொல்லும் அது விஜய் படம் தான் என்று.மசாலா திரைப்படங்கள் தோற்றிருக்கலாம்.காரணம் இருக்கிறது.


மசாலா திரைப்படம் என்பது இயக்குவது மிக கடினம்.மிகுந்த அவதானம் தேவை.ரசிகர்கள் ஆட்டம்,பாடல்,சண்டை,காமெடி,செண்டிமெண்ட் என்று அத்தனையையும் எதிர்பார்ப்பார்கள்.ஒன்று குறைந்தால் கூட படத்தை குப்பையில் போட்டுவிடுவார்கள்.சாதாரண ஒரு கதை கொண்ட உதாரணத்துக்கு:நாணயம்,மங்காத்தா போன்ற படங்களில் அடி நாதம் ஒன்றாக இருக்கும்.அதாவது அந்த மிஷன்'ஐ முடிப்பது.அதனால் அந்த மாதிரியான கதைகளில் அதிகம் பரந்து பட்டு ஜோசிக்க வேண்டிய தேவையும் இருக்காது.ரசிகர்களும் பரந்துபட்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.விஜய் அடுத்து கவ்தம் மேனனோடு நடிக்கும் "யோகன்" படமும் இதே வகையறாவுக்குள் தான் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசாலா நாயகர்களின் படங்களில் போய் லாஜிக் பார்ப்பவர்களை என்ன சொல்வது?அன்றிலிருந்து இன்று வரை மசாலா படங்களில் லாஜிக் இருக்கவே இருக்காது.எம் ஜி ஆர் படங்களோ அல்லது ரஜனி படங்களோ லாஜிக் மீறல்கள் இருக்கும்,ஆனால் அவை கண்டும் கண்டுக்காமல் விடப்பட்டது காரணம் அவர்கள் மசாலா நாயகர்கள்..மாஸ் ஹீரோக்கள்.அதே மசாலா நாயகன்,மாஸ் ஹீரோ விஜய் படத்தில் சிறிதாக ஒரு லாஜிக் மீறல் வந்தாலே ஊத்தி பெருப்பித்துவிடுவார்கள்.உதாரணமாக ரஜனியின் என்திரனில்,ஒரு ரயில் சண்டை வரும்.சிட்டி ரோபோ தான் அடிபடும்.ரோபோ இரும்பில் செய்யப்பட்டது.ஒவ்வொரு அடியும் இடியென இறங்கியும் கூட அடிவாங்கி விழுந்த வில்லன்கள் அடுத்த கணம் எழும்பி மீண்டும் சண்டை பிடிப்பார்கள்.எந்தவகையில் லாஜிக் இது?அது அப்படித்தான்.!!மசாலா படங்களில்,மாஸ் ஹீரோ கரெக்டர் படங்களில் லாஜிக் மீறல்களை பெருதுபடுத்தி கதைப்பது உங்களின் இயலாமை அல்லது வில்லத்தனம்.

விஜய் என்றால் அவர் என்ன என்ன விடயங்களை முன்னிலைப்படுத்துவார் அவரின் படங்களில் என்று அனைவருக்குமே தெரியும்.அந்தந்த விடயங்கள் பிடிக்காதவர்கள் எதற்கு விஜய் படம் பார்க்க போகிறீர்கள்?அதுவும் அடித்துபிடித்து முதல் நாள்,இரண்டாம் நாள் ஷோ?உங்களுக்குள்ளும் ஒரு விஜய் ரசிகன் இருக்கான் அல்லது படத்தை பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை ஊதிப்பெருதாக்கி விமர்சனம் செய்து ஆதாயம் தேடத்தானே?இந்த புளைப்புக்கு போயி உங்கட சொந்த பிழைப்பை பார்க்கலாமே!

விஜய் என்றால் இளக்காரம்.அவரின் ரசிகர்கள் என்றால் இளக்காரம்.எந்த ஒரு நடிகருக்கும் இத்தனை பரந்துபட்ட எதிர்பார்ப்பு இல்லையென்றே தோணுகிறது.காரணம் விட்டில் பூச்சிகளை போல விஜய் படம் வெளிவரும் போது தான் சிலர் கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழும்புகிறார்கள் போலும்!அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரே தமிழ்சினிமா நாயகன் விஜய் தான்.காரணம்?பொறாமை?என்ன இழவோ,பலருக்கு விஜய் தூக்கத்தை கெடுக்கிறார் என்பது உண்மை தான்.அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.:


இத்தனை நாட்களாக விஜய் படங்கள் பார்த்திருப்பீர்கள்.பிடிக்கவில்லையா?பார்க்காதீர்கள்.மசாலா நாயகன் என்று தெரியும் தானே.ஏன் அதற்க்கு அப்பால் எதிர்பார்க்கிறீர்கள்?நீங்கள் விமர்சிப்பதற்கு பிழை செய்தவர் விஜய் அல்ல.நீங்கள் தான்!!!

எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும் ஒரு காலத்தில்.விஜய்யின் அந்த காலம் சுறா திரைப்படத்துடன் முடிந்துவிட்டது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.

பிடித்தால் விஜய் படம் பாருங்கள்.இல்லை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வேலையை பாருங்கள்..ரத்தத்தின் ரத்தங்களே எங்கள் உடன் பிறப்புகளே!!!

Post Comment

Sunday, June 5, 2011

பதினாறு வயதினிலே=கமல்-ஸ்ரீதேவி

டிஸ்கி:பழைய நல்ல படங்களின் விமர்சனங்கள் வ்வாசிப்பது மனதுக்கு இனிமையான விஷயம் பாருங்கோ...நேற்று விஜயகாந்த்தின் அரசாங்கம் விமர்சனம் போட்டேன்..அது கொஞ்சம் கடுப்பை கிளறி இருந்தது பலருக்கு..
ஆகவே இன்று பதினாறு வயதினிலே என்ற அருமையான பட விமர்சனம்..படம் வெளிவந்த காலத்தில் நான் முற்பிறப்பில் இருந்தமையால்,இந்த விமர்சனம் எனது சொந்த விமர்சனம் இல்லை...



கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கைவிளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.

ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.


கிராமத்துக் கதைகள் எத்தனையோ முன்னர் இந்திய, குறிப்பாக தமிழ்த் திரையில், வந்திருப்பினும், முதன் முதலாக கிராமத்திற்கே சென்று படம் பிடிக்கப்பட்டது "பதினாறு வயதினிலே". படப்பிடிப்பு அரங்குகளில், கிராமத்துச் சூழலை அமைத்துப் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதன் முறையாக, இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே அநேகமாக முழுப்படமும் எடுக்கப்பட்டது அக்கால கட்டத்தில் புதுமையான ஒன்றாகவும், ஒரு புத்துணர்வு சூழலை உருவாக்குவதாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தை ஒட்டி, கிராமத்துக் கதைகள் வெளிப்புறப்படப்படப்பிடிப்பில் எடுக்கப்படுவதான ஒரு சகாப்தமே உருவாகி விட்டது எனலாம்.


படத்தின் நடிகர்கள் முன்பே பெயர் பெற்றிருப்பினும் அவர்களை இப்படம் பெரும் புகழுக்கு உரித்தவர்களாக்கியது. வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விசுவரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது. இதில் அவர் ஏற்ற பாத்திரம் வெளிபார்வைக்கு பாகப்பிரிவினை என்னும் திரைப்படத்தில் சிவாஜி கணேஷன் ஏற்று நடித்த பாத்திரத்தை ஒத்திருப்பினும், அதன் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது.


புகழ் பெற்ற செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல்

இதைப் போலவே, கதாநாயகியாக முன்னரே மூன்று முடிச்சு போன்றவற்றில் அறிமுகமாகி விட்டாலும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ற நடிப்பாற்றலை வழங்குவதில் தனக்குள்ள ஆற்றலை நிரூபிக்க ஸ்ரீதேவிக்கு இது மிக அருமையான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. வில்லன் நடிப்பில் ரஜினிகாந்திற்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது இப்படமேயாகும். இதில் அவர் பேசும் ஒரு வசனமாகிய "இது எப்பிடி இருக்கு?" என்பது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிப் பலராலும் பேசப்பட்டது. பின்னர், இப்பெயரில் ஒரு திரைப்படமே வெளிவந்தது.

கிராமியக் கதை கொண்ட படங்களில் தன் ஆளுமையை இளையராஜா வெளிக்கொணர்ந்த முதன்மையான படங்களில் இதுவும் ஒன்று. அன்னக்கிளி படத்திற்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு", "மஞ்சக்குளிச்சு" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாயின.

பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ் ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.

மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.


ரஜனியின் "இது எப்பிடி இருக்கு" காமெடி

என்ன சொல்லுது??பழைய ஞாபகங்கள் தாலாட்டுகின்றனவா??

Post Comment

Thursday, December 9, 2010

கமலைப் பாராட்டிய கவிப்பேரரசு..!!


கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் அண்மையில் கமல் திரிஷா மாதவன் சங்கீதா நடித்து வெளியாக உள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தில் கவிஞர் என பெயரிடப்படாத கவிஞர் நடிகர் கமல் பாடல்களை எழுதியுள்ளார்.
அந்த கவிதைகளை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து கமலின் கவிதைகளுக்கு விசிறியாகிவிட்டராம்!!

இலக்கியச் செறிவோடும் கவிதை நயத்தோடும் எழுதப்பட்ட கவிதைகளை பார்த்து படக்குழுவினர் மட்டுமன்றி கவிப்பேரரசுவும் அடிமையாகிவிட்டார்!தமிழ் திரையுலகில் கமல் ஒரு இரகசியக் கவிஞர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் வைரமுத்து.!
அதுமட்டுமல்லாது மேலும் பல கவிதைகளை கமல் எழுத வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொண்டுள்ளார் வைரமுத்து.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்த மன்மதன் அம்பு'க்கு அமெரிக்க மற்றும் கனடாவில் திரைப்பட உரிமை மூன்று கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் தசாவதாரத்துக்கு 1 .5 கோடி மட்டுமே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கமலின் அந்தக் கவிதை இவ்வாறு செல்கிறது பாருங்கள்.கமல் மற்றும் திரிஷா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்...

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கை கோர்த்தாளா??
ஒழுக்கம் கேட்டவள் எச்சரிக்கை!

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவமுள்ளவள் எச்சரிக்கை

கலவி முடிந்த பின் கிடந்தது பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை..

கவிதை இலக்கியம் பேசினாளாயின்
காசை மதியாதாள் எச்சரிக்கை...

உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா ..
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை..

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கேள்

கூட்டல் ஒன்றே குறியொன்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
ஜோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேஎனக்கொள்

காமம் எனப்படும் பண்டைய செயலில்
காதல் கலவாது பார்த்துக்கொள்!!!

கமலின் இந்தக் கவிதை திரிஷா மற்றும் கமல் குரலில் அந்தப் பாடல் இதோ கேளுங்கள்...
உரையாடல்கள் பல சேர்ந்து அமைந்த பாடல்..கேட்டுப் பாருங்கள் புரியும்!!
திரிஷா:நீங்க பக்திமானா??
கமல்:நான் புத்திமானா என்பதே கேள்விக்குறியாக உள்ளது...


இவ்வாறு தொடர்ந்து செல்கிறது அந்தக் கவிதை..அனைத்தும் அப்பட்டமெனினும் அத்தனையும் உண்மையே..
காமம் எனப்படும் பண்டைய செயலில் காதல் கலவாது பார்த்துக்கொள்!!ஆஹா என்ன ஒரு கவிதை..
அனுபவக் கவிதையோ கமலுக்கு..??

"கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்..
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறைகள் கூடிடக்கண்டேன்"

நிச்சயம் வாழ்க்கையில் ஒரு அனுபவக் கவிதை தான் இது..சமூகத்தில் நடைபெறும் கூத்துகளின் உண்மையான வெளிப்பாடு இந்தக் கவிதை..
தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு தற்பொழுது பெரும்பாலும் "பாடல்கள்'ளே எழுதப்படுகிறன.
கவிதைகள் மிகக் குறைவு,தரமான கவிதைகள் சொற்பமே!!
இசையமைப்பாளரால் வழங்கப்படும் இசைக்கு வார்த்தைகளை நிரப்பும் வேலையே நடைபெறுகிறது..
அல்லாவிடில் பேரரசு தான் தன் படங்களில் "கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்" போன்றனவற்றை தொடர்ந்து "பாடல்கள்" என்ற டைட்டில்'ம் சேர முடியுமா?டி ராஜேந்தர் தான் பேரரசுக்கு குரு எனலாம்.அன்றைய காலங்களில் இவற்றைப் பண்ணினாலும் அவரின் பாடல்கள் ஓரளவுக்கு ஆதல் அர்த்தங்களை புகட்டின.
இவ்வாறான சூழ்நிலையில் கமலின் இந்தக் கவிதை பாடலானது வரவேற்கத் தக்க முயற்சியே.வைரமுத்து பாராட்டியது போல இனி வரும் காலங்களிலும் நாம் கமலின் கவிதைகளை ரசிக்க முடிந்தால் அது தமிழ் திரையுலகிற்கு கமலின் நடிப்பைத் தாண்டிய இன்னொரு சிறந்த பங்களிப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கவிதை முழுவதும் ஆபாச வார்த்தைகள் தானெனினும் வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்கு இவ்வாறான சமூக விழிப்புணர்ச்சி கவிதைகள் கட்டாயம் தேவை..

Post Comment

Saturday, November 27, 2010

காதலி காதலி காதலில் தவிக்...கிறே....ன்...!!


1996 இல் மிகச்சிறந்த நகைச்சுவை படம் தமிழில் எதுவென்று கேட்டால் மறுக்காமல் வரும் ஒரே
பதில் அவ்வை ஷண்முகி தான்!
கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான இயக்கத்தில்,கமல்,மீனா,நாகேஷ்,ஜெமினி கணேஷன்,ஹீரா,மணிவண்ணன்,நாசர் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளத்துடன்,கிரேசி மோகனின் எழுத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது!
இன்று கூட நம் அனைவர் மனதிலும் உள்ள திரைப்படமென்றால் அது உண்மை!!

ஹரிஹரன் மற்றும் சுஜாத்தாவின் இனிமையான குரல்...
ரஹ்மானின் இசையில் சுஜாதா ஒரு சில பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலம் அது,
அத்தனையும் முத்துக்கள்..இன்றைய காலங்களில் அவரின் குரலை கேட்க முடியாதது வருத்தமே...
குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் போலும்!!

காதலா காதலா காதலில் தவிக்கிறேன் என்ற பாடல் தான்
படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
காதலி காதலி என்று ஹரிஹரன் மட்டும் பாடிய பாடல்
அல்பத்தில் மட்டுமே காண முடியும்.


அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு பாடல்...தேனிசைத்தென்றல் தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல் தான் "காதலா காதலா காதலில் தவிக்கிறேன்"என்ற பாடலாகும்.
மெல்லிசையில் தவழும் இந்தப் பாடல் 1996 இல் அனைவரையும் கட்டிப் போட்ட பாடலாகும்.
இன்று கேட்டாலும் மென்மையான சுகம்...

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் வீசும்
பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்....
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும் ..
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...

(காதலி...)

ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்...
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...