Saturday, September 29, 2012

"பர்பி"(Barfi!)'யும் ஆஸ்கார் 2013 'ம்...!


"பர்பி"(Barfi !) கடந்த பதின்னான்காம் தேதி வெளியாகி ஆஸ்கார் வரைக்கும் பேசப்படுகின்ற ஒரு ரொமாண்டிக்,காமெடியான இந்தி சினிமா.பெண்களின் மனம் கவர் நாயகன் ரன்பீர் கபூர்,ஆண்களின் ஆசை நாயகிகள் பிரியங்கா சோப்ரா மற்றும் இலியானாவின் நடிப்பில் "Gangster (2006)",Kites (2010) போன்ற படங்களை இயக்கிய அனுராக் பாசு'வின் எழுத்து,இயக்கத்தில் வெளியாகி இருக்கின்ற இந்த பர்பி தான் "சிறந்த பிறமொழி படத்துக்கான ஆஸ்கார்"பரிந்துரையாக 85ஆவது ஒஸ்கார் விருதுகளுக்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டிருக்கிறது.

படத்தின் கதை என்றால்,ரன்பீர் கபூர்(பர்பி) ஒரு காது கேட்காத வாய் பேசாத ஆனால் ஒரு ஜாலியான கேரக்டர்.தன் கிராமத்துக்கு வரும் இலியானா(ஸ்ருதி)மீது காதல் கொள்கிறார் இந்த பர்பி.ஆனால் ஏலவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இலியானா கூட பர்பியின் அழகான மனதை கவரும் நடவடிக்கைகளால் பர்பி மீது காதல் கொள்கிறார்.தனியே முத்தமிடவும் செய்கின்றனர்.ஆனால் ஸ்ருதியின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் தனக்கு நிச்சயிக்கப்பட்டவனையே திருமணம் செய்துகொள்கிறார் ஸ்ருதி.மறுபக்கம் பர்பியின் அப்பா ஒரு கார் டிரைவராக பிரியங்கா சோப்ராவின்(ஜில்மில் சட்டர்ஜி) தகப்பனிடம் வேலை செய்கிறார்.பிரியங்கா "ஆட்டிசம்" எனும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்.இவரும் பார்பியும் சிறுவயது நண்பர்கள்.ஒரு கட்டத்தில் பர்பியின் தந்தையின் ஆப்பிரேசனுக்கு பணம் தேவைப்பட,வேறு வழி இல்லாத பர்பி தன் பால்ய சினேகிதி ஜில்மில்'ஐ கடத்தி,அவளின் பணக்கார தந்தையிடம் பணம் பறிக்க நினைக்கையில் தான் ஏற்கனவே ஜில்மில் கடத்தப்படுகிறாள் என்பது தெரியவருகிறது..அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் பாருங்கள்.


படத்தில் பெரிதாக பத்து பதினைந்து கேரக்டர்கள் கிடையாது. ரன்பீர், இலியானா,பிரியங்கா,இலியானாவின் அம்மா,நண்பி,பிரியங்காவினதும்  ரன்பிரினதும் தகப்பனார்கள்,ஒரு போலீஸ்காரர் தான் தான் படம் முழுவதும்.

பர்பி(ரன்பீர் கபூர்)
Rockstar 'இல் ஆண்டின் தொடக்கத்தில் மனதை கொள்ளைகொண்ட ரன்பீர் கபூர்,இந்த படத்தில் முழுமையாக தனது நடிப்பாலும் அழகாலும் தன்வசப்படுத்தி விடுகிறார்.இந்த பர்பி பாத்திரத்துக்கு மிக பொருத்தமான தெரிவு.அமீர்கானால் கூட இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.முகபாவனைகள் அபாரம்.படத்தின் அரைப்பகுதி ரன்பிரின் முக உணர்ச்சிகளால் தான் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.அத்தனை நகைச்சுவை காட்சிகளிலும் தூள் பண்ணுகிறார்.தன்னை முத்தமிட்டுவிட்டு இன்னொருவனை கல்யாணம் செய்துகொள்ளும் இலியானாவை சந்தித்து பேசுகையில்...இல்லை இல்லை சந்தித்து தன் உணர்ச்சிகளை கொட்டுகையில் ஒரு கணம் மனம் கரைந்துவிடுகிறது.

வீட்டில் ரன்பிரின் தகப்பனார் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுகையில் ரன்பீர் அது நடப்பது தெரியாமலே காதல் தோல்வியடைந்த இரவு தண்ணியடித்து மயக்கத்தில் கிடப்பது உச்சக்கட்ட உணர்ச்சிகளின் தூண்டல்..!

                          

இலியானா(ஸ்ருதி)
"நண்பன்" படத்தில் நடிப்பு என்றால் என்ன என்று கேட்டு இடுப்பை மட்டும் ஆட்டிவிட்டு சென்ற இலியானாவா இது என்று கேட்க வைக்கிறார்.தன்னால் முடிந்த உச்சபட்ச நடிப்பை இயக்குனருக்கு கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.ஒரு கையாலாகாத பாத்திரம்.ஒரு பக்கம் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை மறுபக்கம் பர்பி என்று தடுமாறும் வாழ்க்கை.இலியானாவின் பாய்ன்ட் ஒப் வியூல தான் படம் செல்கிறது போல காட்டப்பட்டிருக்கிறது.

பிரியங்கா சோப்ரா (ஜில்மில் சட்டர்ஜி)
பிரியங்காவின் உதடுகளை பார்க்கவோ,கண்களை பார்க்கவோ,கவர்ச்சியை பார்க்கவோ இதுவரை படம் பார்க்க சென்றிருந்தால் இம்முறை பிரியங்காவின் நடிப்பை பார்க்க செல்லலாம்.படத்தில் பர்பி பர்பி என்கின்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவுமே வாயிலிருந்து வெளிவரவில்ல,சிந்தும் உணவுகளும் குடிக்கும் பாலையும் தவிர.ஆட்டிசம் என்கிறன மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட கோளாறால் பாதிக்கப்பட்ட கேரக்டர்(development disability).மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாவோ அல்லது வேறு வகையிலோ தன்னை சுற்றிய உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத குறைபாடு.எவ்வித உடல்ரீதியான குறைபாடுகளும் இல்லாமல் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதனில் அமிழ்ந்து கிடக்கும் வாழ்க்கை கொண்டவர்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஒரு கட்டத்தில் இலியானா ரன்பிருடன் சேர்ந்து ஊர் சுற்றுகையில் சாதாரணமாக ஒரு பெண்ணிடம் ஏற்படும் பொறாமை,அல்லது என்னவென்று சொல்வது,"அவர் எனக்குத்தான்" என்கின்ற உணர்வை தன் நடிப்பின் அட்டகாசமாய் செய்து காட்டியிருப்பார் பிரியங்கா.ரன்பிருக்கும் பிரியங்காவுக்கும் இம்முறை எத்தனை அவார்டுகள் கிடைக்கப்போகின்றனவோ தெரியவில்லை.
-----

படம் முழுவதும் நகைச்சுவைக்கு குறைவே கிடையாது.அதுவும் போலீஸ் ஆபிசருக்கும் ரன்பிருக்கும் இடையிலான "டொம் அண்ட் ஜெர்ரி" பாத்திரப்படைப்பு நிச்சயம் சிரித்தே வயிறு நோக வைக்கவல்லது.படம் எழுபதுகளின் நடப்பதை போன்று காட்டி இருக்கிறார்கள்.அதற்கேற்ற ஒளிப்பதிவு,இடத்தேர்வுகள் அபாரம்.நாங்களும் எழுபதுகளுக்கே சென்றுவிடுகிறோம்.

படத்தின் இன்னொரு பலம் படத்தின் இசை,பின்னணி இசை.Bodygurad ,Rush ,Race3 ,Dhoom3 போன்ற அதிரடி படங்களின் இசையமைப்பாளர் ப்ரிதம் சக்ரபோர்த்தி தான் இப்படத்துக்கும் இசை.பாடல்கள் எல்லாம் மெல்லிசையில் மனதை வருடுகிறது என்றால் படத்தின் பின்னணி இசை அபாரம்.அனைத்து சீனிலும் ஒரு வயலின் இசை அல்லது பல வயலீன்கள் ஒன்றிணைந்து தரும் இசைவெள்ளத்தில் படத்துடன் ஒன்றித்து போய்விடுகிறோம்.ஜாலியான காட்சிகளில் வேகமாகவும்,சோகமான இடங்களில் மெல்லிதாகாவும் சார்லி சாப்ளின் படங்களில் வரும் பின்னணி இசையினை போன்றது பர்பியி'லும் இசை.

ரபீர்,இலியானா,பிரியங்கா என்கின்ற இம்மூவரும் எனக்கு கிடைத்திருந்தால் ஒரு அற்புதமான காதல் படம் ஒன்றை எடுத்திருக்க முடியும் நான் ஒரு இயக்குனராய் இருந்திருந்தால்.ஆனால் மூவரையும் வேறு திசைக்கு மாற்றி ஒரு வேறுபட்ட ரசனைக்குரிய படமாய் தந்த "பெருமை" கான்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் அனுராக் பாசுவுக்கே சாரும்.
-----------------------------------------------------------------------------------------------
                     

ஒரு நண்பி தான் படத்தை பார் நல்லா இருக்கு என்று கடந்த திங்கள் கூறி இருந்தாலும் நேரம் கிடைக்காததால் நேற்று தான் பார்க்க முடிந்தது.படம் பார்க்க தொடங்கும் முன்னரேயே படம் ஆஸ்கார் என்று செய்தி கேள்விப்பட்டிருந்ததால் தான் என்னமோ,படத்தில் பல காட்சிகளை மனது ரஹ்மானின் ஆஸ்கார் படமான ஒத்து நோக்கியது..அதிலும் இந்தியாவின் பல கேவலங்கள் வெளி உலகுக்கு சொல்லப்பட்டிருந்தன.அது போல இதனிலும் சில.முக்கியமாக இந்திய போலீஸ் என்றாலே இப்படி கோமாளிகள் தான் என்கின்ற மனபிரம்மை வெளிநாட்டவர்களுக்கு இந்த "ஒஸ்கார்" மூலம் தெளிவாக காட்டப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க "பர்பி" பல வெளிநாட்டு படங்களை சுட்டு ஒன்றாக்கிய கலவை என்று கோஷமிட தொடங்கியிருக்கின்றனர்.படம் பார்த்தவர்களுக்கு படத்தில் வந்த சில காட்சிகளாவது வேறு சில ஹாலிவூட் படங்களை ஞாபகப்படுத்திவிட்டிருக்கும்.ஆனால் ஒன்று இரண்டல்ல படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே அவ்வாறு சுடப்பட்டு தான் வெளிவந்திருக்கிறது என்பதை கீழ்வரும் காணொளியை பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.





இது மட்டுமல்லாது இதனை போல பல காணொளிகள் யூடியூபில் வெளிவந்தவள்ளமுள்ளன.மேலே காணொளியை பார்த்திருந்தால் அவை பின்வரும் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கும்.


Singin' in the Rain (1952)

Jackie Chan's Project A (1983)
Buster Keaton's Cops (1922)
The Notebook (2004) 
Mr Nobody (2009)
Black Cat, White Cat (1988)
The Goonies (1985)
Fried Green Tomatoes (1991)
Kikujiro, Benny & Joon (1993)
Korean film Oasis (2002)
Chaplin's City Lights (1931)


படத்தில் பர்பி போலீஸ்காரருடன் ஒரு கதவின் பின்னால் ஒளிந்து ஒளிந்து செய்யும் லூட்டிகள் அனைத்தும் The Adventurer (1917என்கின்ற சார்லி சாப்ளினின் படத்தில் உருவியது.அத்துடன் படத்தின் பின்னணி இசை கூட Amelie (2001) என்கின்ற படத்திலிருக்கின்ற மாதிரியே இருக்கிறது என்று கூறப்படுகிறது.

பாங்கில் கொள்ளையிட பிடிக்க வரும் போலீஸ்காரரிடம் தப்பிக்க "ஸ்லைடிங்" கதவு வரும் ஸீன் சார்லி சாப்ளினின் "The Adventurer "(1917)படத்தில் சுடப்பட்டது. 


கதவில் அடிபட்டு மூக்கு வளைந்தது போல பிரியங்காவை குஷிப்படுத்த ரன்பீர் காட்டும் ஸீன்,மற்றும் சோபா ஒன்றில் டம்மி உருவம் ஒன்றுடன் விளையாடுவது ஆகிய இரண்டும் Singin’ In The Rain (1952) படத்தில் உருவப்பட்டது.

ரன்பிருடனான காதலை நிறுத்த தனது பழைய பாய் ப்ரெண்டை இலியானாவின் தாயார் இலியானாவுக்கு காரில் சென்று காட்டுவது மற்றும் க்ளைமாக்சில் பிரியங்கா மற்றும் ரன்பிரின் ஹாஸ்பிட்டல் ஸீன் இரண்டும் "The Notebook (2004)" படத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ரன்பீர் ஒரு சிலையின் மீது படுத்திருந்து விழித்தெழுவது போன்ற காட்சி சார்லி சாப்ளினின்  City Lights (1931) படத்தின் அப்பட்டமான காப்பி.

கல்கத்தாவில் போஸ்டர் ஓட்டும் போது பசை பூசிய காகிதத்தில் ரன்பிரின் கை,கால்கள் ஒட்டுவது போன்ற காட்சி "Mr Bean episode titled Back To School "இல் எடுக்கப்பட்டது.

ரன்பிரும் பிரியங்காவும் வீதியில் ஆணி வைத்து வரும் காரை பஞ்சராக்கும் காட்சி "Kikujiro "(1999) படத்தில் எடுக்கப்பட்டது.மேலதிகமாக இந்த படம் தான் மிஸ்கினால் "நந்தலாலா"(2010) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது அனுமதியில்லாமல்.

ஆரம்ப காட்சியில் சுவர் மீது ஏணி வைத்து ரன்பீர் மாறி மாறி சரியும் காட்சி "Keaton short Cops " (1922) படத்தில் எடுக்கப்பட்டது.இதே படத்திலிருந்து தான் ரன்பீர் பஸ்இல் தொங்கி போகும் காட்சி கூட சுடப்பட்டதாம்.

போலீஸ் கலைக்கும் போது சைக்கிளில் ஒடுங்கிய ஒழுங்கை ஒன்றில் ரன்பீர் ஓடும் காட்சி ஜாக்கிசானின் "Project A " (1983) படத்தில் ஆட்டையப்போட்டது.அதில் கதவை தட்ட கதவு திறக்கப்பட அதில் போலீஸ் அடிபட்டு விழுவதும் அப்பட்டமான காப்பி.

ஆற்றங்கரையில் சாமியார் மடியை உற்றுநோக்கி அதிலிருக்கும் பேப்பரை பார்ப்பது போன்ற காட்சி பல விளம்பரங்களில் வந்திருந்தாலும் அது  ஒரு ஸ்வீடிஷ் செய்தித்தாள் ஒன்றின் விளம்பரம் என்று கூறப்படுகிறது.
பிரியங்காவை குஷிப்படுத்த ரன்பீர் தனது கண்களில் பேப்பரை ஒட்டி விளையாட்டு காட்டுவது "Mr Bean’s Holiday (2007)" படத்தில் வந்ததாகும்.
இப்படி பல உதாரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த விமர்சனத்துக்கெல்லாம் படத்தின் இயக்குனர் தான் செய்தது தவறு இல்லை என்கின்ற மாதிரி தான் பதிலளித்திருக்கிறார்.இப்படத்தை ஹாலிவூட் படத்தின் நகல் என்று கூறுவதை விட ஹாலிவூட் படங்களால் இன்ஸ்பையர் ஆகி ஹாலிவூட்டுக்கு வழங்கப்படுகிற ஒரு மரியாதையாகவே கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு சாரார் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.


படத்தை ஒஸ்காருக்கு "சிறந்த வெளிநாட்டு பிறமொழி படத்துக்கு" பரிந்துரை செய்த கமிட்டியின் தலைவரான மஞ்சு பூரா(Manju Borah) தாங்கள் இப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்புவதற்கு எந்தவித கையூட்டையும் பெறவில்லை.படத்தின் "treatment and freshness" காரணமாக தான் பர்பியை தெரிவு செய்தோம்.எந்த ஒரு இயக்குனருக்கும் வேறு ஒரு இயக்குனர் அல்லது சினிமாவின் பாதிப்பு கட்டாயம் இருக்கத்தான் செய்யும்.மிகவும் கிரியேட்டிவான இயக்குனர் தான் அனுராக் பாசு.பதினோரு பேரை கொண்ட கமிட்டி ஒட்டுமொத்தமாக இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் தான் இப்படம் தெரிவுசெய்யப்பட்டது என்கிறார் மஞ்சு.  

எது எப்படியோ,ஒரு ஜாக்கி சான் படம்,அல்லது சார்லி சாப்ளினின் படம் பார்க்காத சினிமா துறை சார்ந்தவர் யார் தான் இருக்கமுடியும்.அப்படங்களின் காட்சிகளை கொண்ட இப்படத்தை ஒஸ்காருக்கு அனுப்ப தெரிவு செய்த செலேக்சன் கமிட்டியில் இருப்பவர்கள் சினிமா படங்களே பார்க்காதவர்களா?இத்தனைக்கும் கமிட்டி தலைவர் மஞ்சு பூரா ஒரு தேசிய விருது பெற்ற பிலிம் மேக்கர். இப்படியான படங்களை அனுப்பி இருக்கின்ற இந்தியன் சினிமா இமேஜை கெடுத்துக்கிறதை விட பர்பியை அனுப்பாமல் விடுவதே மேல்.இத்தனை பெரிய நாடு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தான் சாதிக்க தெரியவில்லை என்று பார்த்தால் சினிமாவில் கூட சொந்த கதை வைத்து படம் எடுத்து ஆஸ்காருக்கு அனுப்ப தெரியவில்லை.


ஏற்கனவே தமிழில் "ஐ ஆம் சாம்"ஐ இயக்குனர் விஜய் காப்பியடித்த பிரச்சனை காரணமாக தெய்வத்திருமகள் நான் கடைசிவரையில் பார்க்கவே இல்லை.பதிலாக ஐ ஆம் சாம் பார்த்தேன்.இப்போ இந்த பிரச்சனை.நடிகர்களுக்கு பஞ்சம் இல்லை.விக்ரம்,ரன்பீர் போன்றவர்களின் நடிப்பு திறமைகள் இருக்கும் போது நல்ல கதைகளுடன் கூடிய இயக்குனர்கள் தான் பிரச்சனை போலும்.இதுவரை ஆஸ்காருக்கு இந்தியாவின் மூன்று படங்களே "ஷோர்ட் லிஸ்டட்" ஆகி இருக்கின்றன."Mother India "(1958),"Salaam Bombay "(1989) இறுதியாக லகான் 2002 'இல் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை எல்லாம் தவிர்த்து படம் வெளியாகி பத்து நாட்களில் உள்நாட்டு,வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து நூறு கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது பர்பி.ஒஸ்காருக்கு அனுப்பிய பிரச்சனை ஒரு பக்கம் கிடக்கட்டும்.அனைவரும் கட்டாயம் ஒருதடவையாவது பர்பி பாருங்கள்.படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை உலகை மறந்து படத்துடன் ஒன்றித்து லயித்து போவது நிச்சயம்.

Post Comment

Saturday, September 15, 2012

பவர் ஸ்டார் கைது - வெளிவரும் பல உண்மைகள்!





பவர் ஸ்டார் ஸ்ரீனிவான் தமிழக போலீசால் கைது என்று நேற்றுக்காலை அலுவலகத்தில் இருந்த சமயத்தில் தான் அந்த செய்தி இடியென வந்து இறங்கியது!உடனே என் மனதில் தோன்றியது என்னமோ இன்று சமூகவலைத்தளங்களில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்பதே!அந்தளவு சுவாரசியத்துக்கு பெயர் போனவர் நம்ம பவர் ஸ்டார்.அவரின் கைது பற்றி வந்த செய்தி இது தான்:
"அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.இதையடுத்து சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்."

போலீஸ்  இவ்வாறு கூறியிருந்தாலும் ரசிகர்கள் இந்த கைதின் பின்னணியில் மூன்று முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள்.அது மட்டுமல்லாமல் பவருக்கு ஆதரவாக பல குரல்கள் பேஸ்புக் ட்விட்டர் என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டன.ரசிகர்கள் கூறிய முக்கிய மூன்று காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

                     

1 .சூப்பர் ஸ்டார் ரஜனி+கமல்
தானாக படம் தயாரித்து நடித்து வந்த பவர் ஸ்டார்க்கு இப்போ வேறு இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் குவிந்தவண்ணமுள்ளன.சந்தானத்தின் தயாரிப்பில் "கண்ணா லட்டு திங்க ஆசையா" எனும் படத்தில் சந்தானத்துடன் நடிக்கும் பவர்,ஷங்கரின் அடுத்த படமான "ஐ" படத்திலும் ஒரு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.ஏலவே கமல் மற்றும் ரஜனி தான் ஷங்கர் படங்களில் நடித்திருக்கின்றனர்.ஷங்கரின் கதைகள் பெரும்பாலும் இவர்களை வைத்தே உருவாக்கப்படும்.

இவர்கள் நடிக்க மறுப்பின் வேறு நடிகர்களை நோக்கி செல்வார் ஷங்கர்.அதே ஷங்கர் படத்தில் பவர் ஸ்டாரின் முகம் வரப்போகின்றதை  அறிந்த தினத்திலிருந்து ரஜனிக்கும் கமலுக்கும் நித்திரை இல்லையாம்.காரணம் அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள்.பவர் ஸ்டார் கூட அம்பது வயது தான்.தங்களது வயதில் இண்டஸ்ட்ரியில் இருப்போரை தங்களுக்கு போட்டியாக கருதுபவது நடிகர்களின் வழமை.அந்த வகையில் பவர் ஸ்டாரின் வளர்ச்சியை பிடிக்காமல் கமல் ரஜனி இணைந்து இந்த காரியத்தை செய்திருக்கலாமோ என்று ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.
2.ஜெயலலிதா-கருணாநிதி கூட்டு சதி
சினிமா துறையில் இருப்பவர்கள் தமிழக அரசியலிலும் செல்வாக்கு செலுத்துவது காலம் காலமாக நடந்துவரும் விடயம்.எம் ஜி ஆர்,ஜெயலலிதா,கருணாநிதி கூட சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.இதை விட கார்த்திக்,சரத்குமார் என்று சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்றவர்கள் பட்டியல் ரொம்ப பெரியது.அத்துடன் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இப்போ அண்மைக்காலமாக குடைச்சல் கொடுக்கும் விஜயகாந்த் கூட சினிமாவில் இருந்து அரசியல் சென்றவர் தான்.அவர் நடித்த நரசிம்மா,வல்லரசு,கஜேந்திரா,விருத்தகிரி என்று அவர் நடித்த ஆக்சன் படங்களை வைத்து விஜயகாந்தை நக்கலடித்த சமூகம் தான் அரசியல் என்றவுடன் அவரை ஆதரித்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் பவர் ஸ்டார் ரூபத்திலும் வரலாம் என்று ஜெயாவும் கருணாநிதியும் அஞ்சியிருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவித்திருந்தன.அரசியல்வாதிகள் தங்கள் எதிர் கட்சிகளை எவ்வளவு காலை வாரி விட்டு வசை பாடினாலும்,புதிதாக ஒருவன் அரசியலுக்கு வருவதை எப்போதுமே விரும்பியதில்லை.அந்தவகையில் கருணாநிதி தான் ஜெயாவுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்கலாம் என்று கூட சந்தேகிக்கப்படுகின்றது.காரணம் ஜெயாவுக்கு ஏற்கனவே கருணாநிதியை தர தரவென கைது செய்த முன் அனுபவம் இருப்பதால் ஜெயாவே இதற்க்கு ரொம்ப பொருத்தமானவர் என்று கருணாநிதி தரப்பிலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாமாம்!

3 .டீசல் விலையேற்றம்  
இலங்கையில் இந்த விளையாட்டுக்கள் ரொம்பவே பிரசித்தம்!ஏதும் ஒரு கொண்டாட்டம் நடந்தால் அந்த சம்பவத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை இரவோடு இரவாக அதிகரித்துவிடுவார்கள்.இந்த ராஜதந்திரத்தை இப்போ இந்திய அரசும் பயன்படுத்த தொடங்கிவிட்டதாக தான் தெரிகிறது.டீசல் விலையை ஐந்து ரூபாயால் அதிகரித்ததுடன் மட்டுமல்லாது சமையல் எரிவாயுவின் விலையையும் அதிகரித்து அனைத்து வீடுகளிலும் குழப்பத்தை உண்டுபண்ணிய இந்திய மத்திய அரசு ஏதும் களோபரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கையில் மக்களது கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்ப உலகப்புகழ் பெற்ற பவர் ஸ்டாரை காஸ் விலையேற்றத்துக்கு பதிலாக பொய் கேசில் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றும் கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன. 

              

இதை விட சாம் அண்டர்சன் கூட இந்த கைதின் பின்னணியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.ஆனால் எதனையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் உறுதியாக கூறமுடியாது.

கொஞ்சம் சீரியாசா பார்ப்போம் :

சினிமா துறைக்குள் காலடி வைத்தவர்கள் அனைவருமே எதோ ஒரு வகையில் புகழ்,பணம் என்பவற்றுக்காய் ஆசைப்பட்டு வந்தவர்கள் தான்.நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இயக்குனர் ஆக கூடிய திறமை நிறையவே இருக்கு என்றோ அல்லது வேறு சினிமா சம்பந்தப்பட்ட திறமைகள் இருக்கு என்று திரையுலகுக்கு வந்த எவராயினும் "புகழ்" என்கின்ற மாயைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொள்கின்றமை காலம் காலமாய் நடந்து வருகின்ற விடயம் தான்.இந்த புகழ்,புகழ்ச்சி பிடிக்காதவர்கள் என யார் இருந்துவிட போகின்றார்கள்?இதற்காக அரசியல்வாதிகள் தொடக்கம் பிரபலங்கள் பெரும்பாலானோரும் பின் கதவு வழியாகவும்,புகழுக்காக செய்யப்படுவதில்ல என்கின்ற போர்வையிலுமாய் திறம்பட தங்கள் புகழ் பரப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                   

இந்த வகையில் புகழுக்கு ஆசைப்பட்டு சினிமாத்துறைக்குள் காலடி வைத்தவர் தான் டாக்டர் ஸ்ரீனிவாசன்.புகழுக்காக தான் நான் சினிமாவுக்கு வந்தேன்.டாக்டர் துறையில் அவ்வளவு புகழ் பிரபல்யம் கிடைக்காது.ஏன் வேறு எந்த துறையிலும் சினிமாவில் கிடைக்கும் புகழ்,பிரபல்யம் பத்து வீதத்துக்கேனும் கிடைக்காது என்று அவராகவே எத்தனையோ பேட்டிகளில் கூறி இருக்கின்றார்.தான் மீடியாக்கள் மூலம் பிரபலமாக தொடங்கியதிலிருந்து எதையுமே அவர் மறைத்ததில்லை.வெளிப்படையாகவே அத்தனை "புகழ் பரப்பு" வேலைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.இதனை வேறுவிதமாக வெள்ளாந்தி-வெளிப்படையாக நடந்துகொள்ளுதல் என்று கூட குறிப்பிடலாம்.காரணம் அவர் செய்யும் அத்தனை காரியமும் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.தானே செலவழித்து படம் எடுக்கின்றார்,தானே தியேட்டருக்கு காசு கொடுத்து படத்தை ஓட்டுவிக்கின்றார் என்பதெல்லாம் அவரின் அந்த வெளிப்படையான நடவடிக்கையால் தான் வெளியே தெரியவந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

இத்தனை பணவசதி படைத்தவன் மற்றையவர்களை போல ரகசியமாக தனது புகழ் பரப்பு வேலைகளை செய்திருக்கலாம்.ஒரு தியேட்டரை சொந்தமாக வாங்கி தனது படத்தை ஓட்டுவித்திருக்கலாம்.எதற்கு இன்னொருவனுக்கு பணம் கொடுத்து,அதுவும் அனைவருக்கும் தெரிய இப்படி ஒரு படத்தை ஓட்டவேண்டும்?இவன் ஒரு பைத்தியக்காரன் என்று வெளிப்படையாக பார்ப்போர் இலகுவாக கூறிவிடுவார்கள்.ஆனால் இவ்வளவு பணம் இருந்தும் சில விடயங்களை எப்படி நாசூக்காக செய்வது என்கின்ற ராஜதந்திர விடயங்களிலான அனுபவமீன்மை,அல்லது அப்படிப்பட்ட நபர்கள் அவரை சூழ இல்லாமை போன்ற விடயங்கள் கூட இவர் மீது இப்படி அவதூறு பரவுவதற்கு காரணமாய் இருக்கலாம்.அல்லது வெளிப்படையாகவே இதனை செய்கின்றேன் என்று திறந்த உள்ளத்தோடு இவற்றை செய்கின்றாரா...ஒன்றுமே புரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் தான் "நீயா நானா" நிகழ்ச்சியில் கோபிநாத்தால் அவமானப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் பலர் கோபிநாத் மீது வசைபாடியது நினைவிருக்கலாம்.என்னமோ எனக்கு அந்த நிகழ்ச்சியில் கூட கோபிநாத் ஒரு மனிதரை விருந்தினராக அழைத்துவிட்டு எப்படி கேள்விகள் கேட்கவேண்டும் என்று தெரியாமல் கேட்டிருந்தாலும் கூட எச்சந்தர்ப்பத்திலும் தன்னோட நிதானத்தை தவறவிடாது சிரித்த முகத்துடனேயே அத்தனை நொள்ளை கேள்விகளுக்கும் பதில் கூறியதை பார்த்த எனக்கு பவர் ஸ்டார் மீது பரிதாபம் தான் ஏற்பட்டது.இவ்வளவு வெள்ளாந்தியாக இருக்கிறாரே என்று தான் தோன்றியதை தவிர புகழுக்காக அலைகிறான் என்று அச்சந்தர்ப்பத்தில் ஏனோ தோன்றவில்லை.ஆரம்பத்தில் நாங்க கூட,ஏன் இப்போது கூட எங்களது சமூகவலைத்தள கிளுகிளுப்புக்காகவே பவர் ஸ்டாரை பயன்படுத்தி வருகின்றோம் என்பதை நான் கூறித்தான் தெரியவேண்டிய அவசியம் கிடையாது.


இவரைப்பற்றிய செய்திகளால் நகைச்சுவைகளால் எத்தனை பேர் இதுவரையில் வாய் விட்டு சிரித்திருப்பீர்கள்?அல்லது இதை வாசிக்கும் நீங்கள் ஒருதடவையேனும் பவர் ஸ்டாரை வைத்து ஓட்டி இருக்கமாட்டீர்கள்?ஒருத்தனை சிரிக்க வைப்பவன் சிலபேரின் பார்வையில் கோமாளியாக தெரியலாம்.ஆனால் என்னை பொருத்தவரைக்கும் நகைச்சுவை என்பது அனைவருக்கும் அமைந்ததல்ல.சில பேருக்கு மட்டுமே அந்த கொடை வாய்த்திருக்கிறது.மற்றவனை சிரிக்கவைப்பவன் உண்மையில் தெய்வமே!சம்பந்தமே இல்லாமல் உங்களை வருத்த,தொல்லைகள் தர உங்களை சுற்றி ஆயிரம் பேர் இருக்கலாம்.ஆனால் உங்களை சிரிக்க வைப்பதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று எண்ணி பாருங்கள்.சிலருக்கு எண்ணுவதற்கு கூட யாரும் இருக்கமாட்டார்கள்.அதனால் தான் சிரிக்க வைப்பவன் தெய்வம் என்றேன்!ஏதும் தப்பு இருக்கின்றதா?




Post Comment

Friday, September 7, 2012

தோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா?

                    

ரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்.

சைட் என்றால் என்ன?வீதியிலோ ஆபீசிலோ நீங்கள் செல்லும்,இருக்கும் எந்தவொரு இடத்திலும்,எதிரில் உங்களை கவரக்கூடிய வகையில்  எதிர்பாலினர் யாராவது செல்லும்போது அவர்களை நோக்கி உங்கள் பார்வை செல்லுமாயின் அதனை சைட் எனலாம்.ஆண்கள் சைட் அடிப்பார்கள்,பெண்கள் அப்படி இல்லை என்று இன்னமும் ஆதிகால மனநிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.சைட் அடிப்பது என்பது முன்னைய காலங்களில் ஒரு கெட்ட வார்த்தையாக(!!) கருதப்பட்டு இன்று ஒரு ஸ்டைலிஷான வார்த்தையாகி போய்விட்டது.ஆனால் சங்க காலத்திலிருந்து இது நடந்து வருகிறது என்பது பலருக்கு  தெரிந்த விடயம்.

கிளி என்று சொன்னால்;
பறவையை குறிக்கலாம்
பச்சையை குறிக்கலாம்
மூக்கை குறிக்கலாம்
பெண்ணை குறிக்கலாம்
சமயத்தில் அது 
கிளியையும் குறிக்கலாம்..!(யாரோ)
இதனை போல தான் சைட்டும்.ஒவ்வொருவரை பொறுத்து விளக்கம் மாறுபடலாம்.

ஒரு ஆணுக்கு பெண்கள் மீதும் பெண்ணுக்கு ஆண்கள் மீதும் ஒருவகையான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி.இல்லை இது இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கூற முடியாது.அந்த இயற்கையின் நியதியை நாமாக உருவாக்கி கொண்ட "நட்பு" என்கின்ற உறவால் கட்டுப்படுத்த முடியுமா?ஏலவே காதலின்னு வந்திட்டா நண்பர்களை கழற்றி விட்டுவிடுவார்கள் என்று ஒரு "கெட்ட(?!)" பெயர் காதலிப்பவர்கள் மீது காலம் காலமாய் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.இதற்குள் இது வேறையான்னு பலர் ஜோசிக்கலாம்.

அந்த பிரச்னையை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு இந்த நட்பு வட்டத்துக்குள் வருவோம்.ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனதில் நட்பு நட்பு & நட்பு மட்டும் தானா இருக்கும்,அல்லது ஒருவர் மீது மற்றையவருக்கு ஒரு வித "கிரஷ் (Crush)"ம்  அந்த நட்புடன் சேர்ந்திருக்குமா?குறிப்பாக நான் கூற வருவது காதல் அல்ல,ஒரு வகையான ஈர்ப்பு மட்டுமே.வடிவாய் இருக்கிறான் இருக்கிறாள் என்று ரசிப்பது/சைட் அடிப்பது பற்றி மட்டும் தான் நான் கூறுகிறேன்.அவ்வாறு நண்பனை/நண்பியை சைட் அடிப்பது தப்பா?

நட்புக்குள் காதல் வரக்கூடாது என்று நட்பின் வைராக்கியத்தை கடைப்பிடித்து நட்புக்கு இலக்கணமாய்(?!) இருக்கும் நட்பு "நட்சத்திரங்கள்" கட்டாயம் இதற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டு வரத்தான் போகிறார்கள்.ஆண்களின் குணம் யார் அழகாய் இருந்தாலும் ரசிப்பது தான்."அழகை ரசிப்பது தப்பு கிடையாது" என்று தங்களுக்கே கூறிக்கொண்டு அதனை பெண்கள் மனதில் பதிப்பதிலும் ஆண்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்.அதனால் தான் அவர்களால் பிஞ்சு முதல் கொண்டு பாட்டி வரைக்கும் பயமில்லாமல் ரசிக்க முடிகிறது.அதனை அனுமதிக்கவும்,அனுபவிக்கவும் பெண்கள் கூட பழகிவிட்டனர் இன்றைய காலங்களில்.


தன்னை ஒரு பெண் ரசிக்கிறாள்,சைட் அடிக்கிறாள் என்று பெருமை கொள்ளும் சந்தோசமடையும் ஆணைப்போலவே பெண்களும் தங்களை யாரும் ஆண்கள் சைட் அடிக்கிறார்கள் என்று சந்தோசப்படுகிறாள்,பெருமையடைகிறாள் தன் அழகை நினைத்து.இதை விட இன்னமும் "பெர்போமான்ஸ்" வெளிப்படுத்த வேண்டும் என்று இருபாலாரும் முனைவது இயல்பு.காதலனோ,நண்பனோ,வீதியால் செல்பவனோ,அலுவலகத்தில் வேலை செய்பவனோ,பக்கத்தி வீட்டு லொள்ளு மனிதர்களோ அனைவருமே பெண்களுக்கு "ஆண்கள்" என்கின்ற ஒரு  பெரிய வகுப்புக்குள்ளே அடங்கி விடுகின்றனர்.அதே போலத்தான் பெண்களும்.ஆத்துக்காரியில் இருந்து அடுத்த வீட்டு மாமி வரைக்கும் அனைவரும் ஆண்களை பொறுத்தவரை"பெண்கள்" தான்.

இவ்வுலகை படைத்தது கடவுள் என நம்புவோர்களுக்கு இந்த கண்களையும் அந்த கடவுள் தான் படைத்தான் என்பது சொல்லி தெரியதேவை இல்லை.அவ்வாறு கண்களை படைத்த கடவுள் ஒருவன் யார் யாருடன் நட்பாக இருக்க போகிறான்/போகிறாள் என்பதை முதலே அறிந்து அவர்கள் மீது அந்த "ஈர்ப்பு"/சைட் வராமல் முன்னமேயே அவர்களது மூளையில் பிளானிங் செய்துவிட்டிருப்பாரா என்ன?அல்லது அந்த நட்பு முறிவடைந்த பின்னர் குறித்த முன்னாள் நண்பர்கள்/நண்பிகளை சைட் அடிக்க கூடிய வகையில் ப்ரோக்ராமிங் செய்து விட்டிருப்பாரா?


கடவுளை விடுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு அத்தகைய எண்ணம் மனதில் தோன்றியது?அல்லது ஏலவே திறம்பட சைட் அடித்துக்கொண்டு அதனை வெளியில் மறைத்துக்கொண்டு தான் இங்கு பெரும்பாலான/அனைத்து நண்பர்களும் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.நீங்கள் அவ்வாறு இல்லையானால் கீழே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.உங்கள் உணர்ச்சி நரம்புகளை நிறுத்திவைத்துவிட்டா நண்பர்களுடன் பழகுவீர்கள் என்று அவர்களிடம் கேட்பதாக உசிதம்.

நண்பனோ/நண்பியோ வடிவாய் இருக்கிறான்/ள் என்று பார்க்கையில் தோன்றுவது கூட ஒருவகையான சைட் தான்.இல்லை அதுவல்ல,வெறும் பார்வையோடு இன்னமும் சில மசாலாக்கள் தூவப்பட்டு வெளிப்படுவது சிலரது சைட் என்றும் கூறலாம்.சில பெண்கள் நாங்கள் செய்வது சைட் அடிப்பது தான் என்று தெரியாமலேயே நாங்கள் நண்பர்களை  சைட் அடிப்பதில்லை என்று கூறிக்கொண்டு அந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

நான் உங்களை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு சைட் அடித்து நட்புக்குள் குழப்பங்களை உண்டுபண்ண நான் விரும்பவில்லை.சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம்.இது காதலை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்று பெண்கள் பயப்பிடக்கூடும்.ஆனால் நட்புக்குள் "சைட்டிங்" ரகசியமாய் இருப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் உணர்ச்சிகள் என்பவை பெரும்பாலும் நம் மனதுடன் மூளையுடன் சம்பந்தப்பட்டு வேலை செய்கின்றன.சில உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் ஆனால் முற்றாக இல்லாது ஒழிக்கமுடியாது.அந்த வகையான ஒன்று தான் இந்த நட்புக்குள் "சைட்டிங்".

                                                                    

நான் உன்னை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டே நல்ல நண்பர்களாக இருக்கமுடிகிறது பலரால்.அது ஒவ்வொரு நண்பர்களுக்கும் இடையில் இருக்கும் அந்த நட்பின் வலிமையை பொறுத்து இது அமைகிறது.இல்லை நாங்கள் நண்பர்கள்.இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று ஆகமத்தில் கூறி இருக்கிறார்கள்,ஆச்சியம்மா கூறி இருக்கிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இதனை புரியவைக்க முடியாது.

இன்னமும் சில நண்பிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது,"நட்புக்குள் அப்பிடி தோன்றாது,தோன்றினாலும் நண்பன் என்ற எண்ணம் அதனை தடுத்துவிடும்" என்றார்கள்.சைட்டிங் என்பது ஒரு கண நேர ஒர்மோன் விளையாட்டு.அந்த உணர்வு தோன்றிய பின்னர் தான் அந்த நண்பன்/நண்பி என்கின்ற எண்ணம் வந்து அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போவதை தடுக்கிறது.சைட்டிங் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது.ஆனால் நட்பு என்கின்ற உணர்வால் அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போகாமல் தடுக்கமுடியும். 

இந்த நட்புக்குள் சைட்டிங் தப்பில்லை,தவிர்க்கமுடியாதது  என்று நான் கூறுகிறேன்,தப்பு என்று யாராவது கூற இருப்பின் தெளிவான விளக்கங்களுடன் கூறுங்கள்."ஆஹா இவன் இப்பிடியானவனா,இவன் கூடவா நட்புடன் இருந்தோம்"னு நினைக்கின்ற நண்பிகள் தங்களது நட்பு ஒப்பந்தத்தை இத்துடனே கிழித்து எறிந்துவிடலாம்.உங்களுக்கு பூரண அனுமதி உண்டு.ஆனால் நானும் ஒரு ஆண்,எதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்க போகும் நண்பனும் ஒரு ஆண் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஒன்றை மட்டும் அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்;
 "அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!!

என்றும் இயல்பான நட்புடன், 


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...