Showing posts with label போகுதே. Show all posts
Showing posts with label போகுதே. Show all posts

Monday, May 30, 2011

மாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா??

பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!!

ஆணுரிமை!!
பெண்ணுரிமை பற்றிப்
பேசிப் பேசியே
ஆணுரிமையை தொலைத்துவிட்டு..
தொலைத்துக்கொண்டு இருக்கும்
ஆண்களின்
எதிர்காலத்துக்கு
ஒரு அலாரம்!!
உரிமைக்காக ஏங்கியவர்களிடம்
தம்முரிமைக்காக
கையேந்த வேண்டிய கையாலாகாத்தனம்..
முதலாளிகள் முதலாளித்துவத்தை
இழந்து போகும் தருணம்..
எந்த சம்பாத்தியத்தை காட்டி
கட்டி ஆண்டானோ
அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!
அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!
ஆண் மகனே..
உனக்கு
அணி சேர்த்த அத்தனையும்
இன்று அவள் கையில்!
உன்னிடம் எதிர்பார்த்த
பெண்ணிடம்
இனி நீ எதிர்பார்ப்பாய்..
அன்பை
ஆதரவை
பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!
நடப்பு தெரியாமல்
நடமாடும்
ஆண் வர்க்கமே
விழித்தெழு!!
ஆணுரிமைக்கு
குரல்கொடு!!
ஆரம்பத்திலே அறிந்து கொள்
அல்லாவிடில்
அடுத்த நூற்றாண்டு
பெண்நூற்றாண்டாக
மாறும்
நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது மனிதா!!
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!

டிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!
இருபது ஒட்டு கிடைச்சாலும் இன்ட்லில பிரபலமாக்குறான்கள் இல்லையப்பா..ஆக்சுவலி இது ஒரு மீள் பதிவாக்கும்!

Post Comment

Sunday, August 8, 2010

என் சந்தேகத்த தீர்த்து வைச்சு ஓட்டு போடுடி..


நேற்று எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு குறுஞ்செய்தி.அண்மையில் வெளிவந்த ராவணன் படத்தின் புகழ் பெற்ற பாடலான உசிரே போகுதே உசிரே போகுதே பாடலின் முன் நான்கு வரிகளை மட்டும் மாற்றி அனுப்பி இருந்தனர்.முழுமையாக முடித்தால் இன்னும் நன்றாக இருக்குமென நினைத்து மாற்றிப்பார்த்தேன்..ம்ம்ம் பரவாயில்லை போல் தான் தெரிகிறது...கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உசிரே போகுதே சந்தத்துடன் படித்து பாருங்கள்..எக்ஸாம் எக்ஸாம் என்று தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்!!

exam பேப்பர் பெருசுதான்
ஒரு பேனா உசரம் சிறுசுதான்..
இங்கே பேனா மைய சிந்துதடி
எக்ஸாம் பேப்பர் நனையுதடி...
உசிரே போகுதே உசிரே போகுதே
எக்ஸாம் பேப்பர நினைக்கையிலே
மாமன் தவிக்குரன் பிட் பேப்பர் கேக்குறான்
விடைய காட்டடி மணிக்குயிலே
பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி
ஒண்ணுமே தெரியான்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி பேனா கிறுக்குதடி...

question 'னும் answer 'உம் தூரம் தூரம்
நினைக்க நினைக்க ஆகல
படிக்க சொன்ன அம்மா சொல்ல
கிறுக்கு பய நான் கேக்கல
தவியா தவிச்சு இங்க
வேர்த்து தான் கொட்டுதடி
எக்ஸாம் பேப்பர் என்ன
நக்கலா சிரிக்குதடி..

இந்த எக்ஸாமு தொல்ல தீருமா
படிக்க சொல்லி போட்ட சத்தம் மாறுமா
என் சந்தேகத்த தீர்த்து வைச்சு
ஓட்டு போடுடி..
அட எக்ஸாமும் கிரிக்கெட்டும்
ஒரே நாளில் வருகுதே
டிவி'யா கொப்பியா
இப்ப தல சுத்தி கிடக்குதே.....(உசிரே போகுதே)



இப்படி தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா??அப்ப மறக்காம ஓட்டு போடுங்கப்பா!!எக்ஸாம்ல answer மறக்கலாம் ஆனா ஓட்டு போடா மறக்காதீங்கப்பா!அப்ப தான் உங்கள மாறி பலருக்கும் இப்பதிவு சென்றடையும்!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...