Tuesday, May 31, 2011

நாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்டுருவேன்!!

டிஸ்கி:தலைப்பு ஆபாச தலைப்பு இல்லை...வெறும் மொக்கை தலைப்பு..ஆமா..


படத்த பாருங்க...அடுத்த வியஜகாந்த் இவர்தான்னு பேசிக்கிறாங்க..


பதிவர் நாஞ்சில் மனோக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்பிடி பண்ணி இருப்பார் ??
பதிவருக்கு பதிவர் மரியாதை குடுக்கணும்..

அப்புடி நான் என்ன கேட்டிட்டேன்??இப்பிடி கோபப்பட்டிட்டார்
அவரு?

மனுசங்கள்னா மனுசன்கள் தான்..
பறவைகள்னா பறவைகள் தான்...
பதிவர்கள்ன்னா பதிவர்கள் தான்....

அப்பிடி என்ன தான் நடந்திச்சு??வாங்க பார்க்கலாம்,

May 22
9:16pm
யோவ் இங்க என்ன கில்மா படமா போட்டு காட்டுறாங்க??
போயி ஏதாச்சும் பிரியோசனமாய் வேலை இருந்தால் பாருமையா!!ஹிஹி


May 24
யோவ் தக்காளி கடைப்பக்கம் போகிலியா?

May 26
இன்னுமா பதிவர் சந்திப்புக்கு கேளம்பெல??
Today

ஏன் மக்கா என்னாச்சு?


மாத்தியோசி ப்ளாக் என்னாச்சு??பதிவு போக முடியல பாஸ்
அப்புறம்,சி பி ப்ளோக்ல கும்மி முடிஞ்சுதா??ஹிஹி என்ன மாட்டு காட்டு கத்தல் கத்தியும் மனுசர் வரவே இல்லையே ஹிஹி


ஆமாம் நானும்தான் டிரை பண்ணினேன் ஒப்பன் ஆகலை?


mmm

same problem

நான் அவருக்கு தெரிய படுத்தி இருக்கேன்


ok
நன்றி நன்றி பாஸ்


விடும்ய்யா நன்றியெல்லாம் எதுக்கு டாலர் ஏதாவது அனுப்புங்க நன்றிக்கு பதிலா ஹி ஹி


பிக்காலி பயபுள்ள..
டாலர் பவுண்ட்ஸ் திர்காம்'லையே குறியா இருக்காப்லே!!


ஹி ஹி ஹி ஹி


மவனே,எங்கயோ போயி குட்டி குட்டி ஜோக்'கா கண்டு பிடிச்சு பேஸ்புக்கில ஸ்டேடஸ் போட்டு மத்தவங்கள கொல்லுறது


இல்லை மக்கா எல்லாம் சொந்த சரக்கு...


செல்லாது செல்லாது

நாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்டுருவேன்


அதிலையே 'குறியா" நில்லுப்பா ...
மவனே இத வைச்சே ஒரு பதிவு போட்டிரமாட்டேன் நாளைக்கு??


போடுங்க ராசா போடுங்க ஹி ஹி ஹி
எது மைனர் குஞ்சு பற்றிதானே?

ஆமா ஆமா
இதில கதைச்சதையும் போட்டிடமாட்டேன்??

9:15pm
ஆமமாமா ரிலீஸ் பண்ணுங்க பண்ணுங்க ஹி ஹி ஹி ஹி..
யோவ் சிரிச்சா நோய் பறந்துரும்ய்யா
அண்ணே உங்களுக்கு எந்த ஊருன்னே

ஹிஹிஹீஹெஹெஹெஹெஹெஹ்ஹெஹிஹி


ஹி ஹி நல்லது...


நான் மாத்திஜோசி,நிரூபன் எல்லாம் ஒரே ஊர் அண்ணே!!ஹிஹி யாழ்ப்பாணம்,இலங்கை


ஓஹோ அப்பிடியா..? நான் நீங்க மெட்ராஸ்'ன்னு நினச்சிட்டு இருக்கேன் ஓகே ஓகே...


ஹிஹி ஏன் ஐயா??
அப்புடியா நெனைச்சீங்க??நெல்லை போங்க..புல்லை பிடுங்கிடுவாங்க


ஃபுல் எனக்கு ரொம்ப பிடிக்குமே கி கி கி கி


புல்லு ஏன் பச்சை நிறம்??
கொய்யாலே இப்பிடி எனும் மேல் ஸ்டேடஸ் ஏதும் வரட்டும்.........


ஹி ஹி ஹி
விடுய்யா விடுய்யா...


ஹிஹி நாளை என் பதிவில் ஊறுகாய்-பிரபல பதிவர் நாஞ்சில் மனோ
!!!ஹிஹி


நாசமா போச்சி போ...


hehehheheeeeeeeeeeeeeeeeeeeee


அவ்வ்வ்வ்
எலேய் எடக்கு மடக்கா போட்டுறாதேய்யா...


பதிவர் நாஞ்சில் மனோக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்பிடி பண்ணி இருப்பார் ??
பதிவருக்கு பதிவர் மரியாதை குடுக்கணும்..
/////இப்பிடி போகுது ஹிஹி

ஹா ஹா ஹா எஸ் எஸ் மக்கா எஸ்ஸு...


hehehe


ஹே ஹே ஹே ஹே ஹே...
அடி பின்னுங்க...


ஆ தாங்க்சு


ஹை மறுபடியும் டாலர்!!!


நான் அக்கறையா மாத்தி யோசிக்கு என்னாச்சுன்னு தானே கேட்டேன்,அதுக்கு ஏன் இப்பிடி பேசிட்டார்?
எனக்கு ரொம்பவே மனசு நொந்திருச்சு...
நாஞ்சில் மனோ அவர்கள் அனைத்துலக பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரையில் நான்
ஒரு சொட்டு தண்ணி அடிக்கமாட்டேன்
(ச்சா,குடிக்கமாட்டேன்)என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன்!!!
பயபுள்ள காசுக்கு நாயா அலையுறாரு..
பேஸ்புக்கில ஒரு கமெண்ட்டு போட்டிட்டு டாலர் கேக்கிரார்னா பாத்துக்குங்க..
கொலை வெறிப் பதிவர்னு சொல்லுறது இவங்கள தானோ???

அதில வேற அடிக்கடி பேரப்பிள்ளையள் வரைஞ்ச படங்களை அப்லோட் பண்ணி நானும் ஓவியர் நானும் ஓவியர்னு
சகட்டு மேனிக்கு பீதிய கேளப்புராறு..ஓவரா போய்க்கிட்டிருக்கிற மனோவ தட்டிக்கேட்க யாருமே இல்லியா??

Post Comment

Monday, May 30, 2011

மாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா??

பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!!

ஆணுரிமை!!
பெண்ணுரிமை பற்றிப்
பேசிப் பேசியே
ஆணுரிமையை தொலைத்துவிட்டு..
தொலைத்துக்கொண்டு இருக்கும்
ஆண்களின்
எதிர்காலத்துக்கு
ஒரு அலாரம்!!
உரிமைக்காக ஏங்கியவர்களிடம்
தம்முரிமைக்காக
கையேந்த வேண்டிய கையாலாகாத்தனம்..
முதலாளிகள் முதலாளித்துவத்தை
இழந்து போகும் தருணம்..
எந்த சம்பாத்தியத்தை காட்டி
கட்டி ஆண்டானோ
அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!
அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!
ஆண் மகனே..
உனக்கு
அணி சேர்த்த அத்தனையும்
இன்று அவள் கையில்!
உன்னிடம் எதிர்பார்த்த
பெண்ணிடம்
இனி நீ எதிர்பார்ப்பாய்..
அன்பை
ஆதரவை
பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!
நடப்பு தெரியாமல்
நடமாடும்
ஆண் வர்க்கமே
விழித்தெழு!!
ஆணுரிமைக்கு
குரல்கொடு!!
ஆரம்பத்திலே அறிந்து கொள்
அல்லாவிடில்
அடுத்த நூற்றாண்டு
பெண்நூற்றாண்டாக
மாறும்
நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது மனிதா!!
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!

டிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!
இருபது ஒட்டு கிடைச்சாலும் இன்ட்லில பிரபலமாக்குறான்கள் இல்லையப்பா..ஆக்சுவலி இது ஒரு மீள் பதிவாக்கும்!

Post Comment

Sunday, May 29, 2011

எலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே!!


ஐ பி எல் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையும் சுவீகரித்த சென்னை சுப்பர் கிங்க்ஸ்'இற்கு வாழ்த்துக்கள்..
முரளி விஜய்யின் அதிரடியும் ஹசியின் துணையும்,அஷ்வினின் ஆரம்ப விக்கட்டும் வெற்றிக்கு வழிசமைத்தது எனலாம்..
என்ன மாயமோ மந்திரமோ தெரியல டோனியின் தலைமயில் விளையாடும் அணிகள் இறுதிப் போட்டியின் போது எழுச்சி கொண்டு விளையாடுகிறன..ஹிஹி
முரளி விஜய் இதே தன்னம்பிக்கையுடன் சர்வதேச போட்டிகளில் ஆடி இருந்தால் இப்போது எங்கயோ இருந்திருப்பார்..
சர்வதேச வாய்ப்புகள் வரும்போது சொதப்பி விடுகிறார்..ஆனால் ரெய்னா கொஹ்லி சிறப்பாக அதனை பயன்படுத்துகிறனர்.
பிராவோ ஒரு பிடியை பிடிக்க பாய்ந்த காட்சி தான் இது..
இதை தான் உசிரை கொடுத்து விளையாடுறது என்பதோ??ஹிஹி
பணம் இருந்தால்...உயிர் என்ன உயிர்...ம...ம....மனசையும் கொடுப்பார்கள் என்றேன்!!

தொடர் நாயகனாக கிரிஸ் கேயிலும்,போட்டியின் நாயகனாக முரளி விஜய்யும் தெரிவுசெய்யப்பட்டனர்.
சிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி



ஐரோப்பிய விமான தயாரிப்பு கம்பனி ஒன்று மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹெலிகொப்டர் ஒன்றை உருவாக்கவுள்ளன..
இரு இன்ஜின்களை கொண்டதாக அமையவுள்ள இந்த கெலிக்கொப்டர் வியாபார தேவைகளுக்காக பயன்படவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது..
சாதாரண இந்தமாதிரியான கெலிக்கொப்டர்கள் ( 5 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,பென்ஸ் இயந்திரம் பொருத்தியது 8 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் விற்கப்படவுள்ளது..பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க..ஹிஹி

இதில் எட்டுப்பேர்கள் அதிகமாக பயணம் செய்யலாமாம்.
உள்ளே வசதிகளை பாருங்கள்..



அடுத்தது ஒரு குறும்படம் பற்றிய செய்தி,யாழ்ப்பாணத்தில் எடுக்கப்படும் இந்த குறும்படத்தின் பெயர் "இப்படியுமா'என்பதாகும்..
எனது பாடசாலை நண்பன்,ஹரிகரன் இயக்குகிறார்..வெகுசீக்கிரம் வெளிவர இருக்கிறதாக கதைக்கும்போது கூறி இருந்தார்.
என்ன கதை பாஸ்'னு கொஞ்சம் கதைய கேட்பமென்றால்,படம் வந்து முழுக்கதை சொல்லும் என்று ஆப் பண்ணிவிட்டார்.
ப்ளாக்'ல போடமுடியுமான்னு கேட்டான்.இது கூட செய்யக்கூடாதா..
புதிய முயற்ச்சிகளை ஊக்குவிப்போம்,நாங்களும் முயற்ச்சிப்போம் உருப்படியா ஏதாவது பண்ணுவதற்கு.
முற்றுமுழுதாக மாணவர்களால் தயாரிக்கப்படும் குறும்படம்..அதற்காக நீயும் மாணவனான்னு கேக்கப்பிடாது..
நாம எல்லாம்...வேணாம்..


நான்கு வருட அடைப்புக்கு பின்னர்,காசா எல்லையை எகிப்த்து திறந்துவிட்டது நேற்று.
இந்த நடவடிக்கை,பாலஸ்தீனிய மக்களை சுதந்திரமாக(கொஞ்சமாவது)நடமாட வழிசமைத்திருக்கிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்டோர்..
இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு இது உதவலாம்.
முதல் பஸ்'இல் பயணிக்க நூற்றுக்கணக்கானோர் அடிபட்டு திரண்டிருந்ததை காணமுடிந்தது.
கடந்த 2007 'இல் இந்த பாதை மூடப்பட்டது அனைவருக்கும் தெரியும் தானே?எனினும் இப்பகுதியூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கையில் தமது படையினர் ஈடுபடுவார்களேன்று எகிப்து கூறியுள்ளது.

Palestinian Yasser Srsaui, right, embraces a family member before...

அமெரிக்கன் மிச்சூரி மாநிலத்தை கடுமையாக தாக்கிய சூறாவளியின்
கோரமுகங்கள் தான் இவை..கிட்டத்தட்ட நூற்றி அம்பது பேர் உயிர் இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
ஒரு வைத்தியசாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது..
வாகனங்கள் வீடுகள் என அனைத்தும் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன..

Death toll from Joplin tornado rises to 139
கார் எப்படி கிடக்கின்றது என்று பாருங்கள்..
A van is seen in front of a destroyed home in ...

வெம்ப்ளி ஸ்டேடியத்தில் உலகின் மிக முக்கியமான இரண்டு கால்ப்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நடைபெற்றது நேற்று இரவு..மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையில்..
எனது பிடித்தமான அணி மான்செஸ்டர் யுனைட்டட் தான்..ஆனால் லயனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடியதால்,
எந்த அணி வெற்றி பெற்றாலும் சந்தோசம் என்றிருந்தேன்..பார்சிலோனா தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த விளையாட்டு அணியாக ஆல்ரெடி தெரிவு செய்யப்பட்டு இருந்தது..
எனிலும்,மான்செஸ்டர் சவால் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இறுதியில் பார்சிலோனா 3 -1 என்ற அடிப்படையில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது..
வில்லா,மெஸ்ஸி என பலமான பார்சிலோனா அணி தான் இவ்வருடத்தின் உலகின் தலைசிறந்த கால்ப்பந்தாட்ட கழக அணி என்பதில் சந்தேகம் இல்லை..
Barca's Lionel Messi (left) and United's Wayne Rooney


அப்புறம் மக்களே??இன்னிக்கு சண்டே..லைப்ப என்ஜாய் பண்ணுங்க..மூஞ்சியல உம்முன்னு வைச்சிக்காம..

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...