Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Tuesday, July 12, 2011

நான் "மலரோடு' தனியாக என்ன செய்தேன்???

பழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க..
நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரும் பாடல்கள்,குறிப்பிட்ட பாடல் வெளிவந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் இப்போது அதனை கேட்டால் எத்தனை சுகம்!அத்தனை ஞாபகங்களும் மீட்டப்படுமல்லவா?அந்த வகையில் நான் பகிரப்போகின்ற பாடல் கூட அத்தனை இனிமையானது!

பாடல்:நான் மலரோடு தனியாக
படம்:இரு வல்லவர்கள்
பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா
வரிகள்-கண்ணதாசன்
இசை-வேதா
வெளிவந்த ஆண்டு-1966
தயாரிப்பு-ராமசுந்தரம்
இயக்கம்-கே வி ஸ்ரீனிவாஸ்
வசனம்-கே தேவராஜன்
நடித்தவர்-ஜெய்சங்கர்,விஜயலக்ஸ்மி


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்


பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலை ஆதாரமாக கொண்டு கண்ணதாசன் இந்த பாடலை படைத்ததாக அவரே கூறி இருக்கிறார்..

அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம். பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால் மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது; அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல் இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?
பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில் ஆழ்ந்து விட்டாளாம்!


பத்தொன்பதாவது பாடல் இவ்வாறு வருகிறது,

"தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்புவின் கனி என்று

தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்

வானுறு மதியம் வந்ததென்று எண்ணி

மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்

போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?

புதுமையோ இது?எனப் புகன்றாள்."


இதை தான் கவிஞர் கண்ணதாசன்,

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"


என்று வடித்திருப்பார்...!

சிறுவயதில் எனது தந்தையார் இந்த பாடலை அடிக்கடி முணு முணுத்து பாடுவார்.அதனை கேட்டு கேட்டு எனக்கு இந்தப் பாடல் ஆறு எழு வயதிலேயே பிடித்துவிட்டது..பின்னர் அதன் ஞாபகம் மறந்து,பாடல் இசை மட்டும் முணுமுணுப்பேன்.பாடலை எனது பதினெட்டு வயதில் தான் ஒரு வழியாக தேடிபிடித்தேன்.

கேட்க கேட்க சலிக்காத பாடல்...கண்ணதாசனின் கவித்துவமான வரிகளுக்காகவும்,வேதாவின் இசைக்காகவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!!

நீங்களும் திரும்ப கேளுங்க...உங்களை எங்கேயோ கூட்டிச்செல்லும்!!!

Post Comment

Tuesday, July 5, 2011

கார்த்திகாவுக்காய் ஒரு பாடல்!!

"கோ' படத்தை அனைவருக்கும் பிடித்திருந்தாலும்,படம் வெளிவர முதலே வெளிவந்த கோ பட பாடல்களில் ம்முதலில் மனதை கவர்ந்த பாடல் 'என்னமோ எதோ"பாடலாகும்..இப்போ கூட பலரின் தொலைபேசிகளின் ரிங் டோன்'னாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப்பாடல்,கேட்கும் பொது மனதுக்கு இதமான ஒரு சுகமான இசையாகும்...ஹரிஸ் ஜெயராஜின் கைவண்ணத்தில் "கோ"படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட,இந்தப் பாடல் ஒன்றே போதும் அந்தக் கதையை முழுங்க!!


ஆலாப் ராஜு,எம்சீஜெஸ்,பிரஷாந்தினி மற்றும் ஸ்ரீச்சரனின் குரலில் மின்னி மறையுது மனதில் இந்த பாடல்!!ஜீவாவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும்,பியாவின் குசும்புகளும்,கார்த்திகாவின் அழுத்தமான பார்வையுமாக பாடல் அப்படியே கவர்ந்துவிட்டது என்னை!!


என்னமோ ஏதோ … எண்ணம் திரளுது கனவில் . .
வண்ணம் திரளுது நினைவில் . .கண்கள் இருளுது நனவில் .
என்னமோ ஏதோ … முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை ..
ஒ ஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை ,
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ அரைமனதை விடியிது என் காலை .
என்னமோ ஏதோ .. மின்னி மறையுது விழியில் ..
அந்தி அகலுது வழியில் .. சிந்தி சிதறுது விழியில் ..
என்னமோ ஏதோ ..சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில் ..விட்டு பறக்குது தொலைவில் ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை ,எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ அரை மனதை விடியிது நாளை ..
நீயும் நானும் எந்திரமா , யாரோ செய்யும் மந்திரமா , பூவே ..

(humming)

முத்தமிட்ட மூச்சு காற்றில் , பட்டு பட்டு கெட்டு போனேன் , பக்கம் வந்து
நிற்கும் பொது , திட்டமிட்டு எட்டி போனேன் ..
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் ,
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும்
சிரிப்பால் என்னை நீ சிதைத்தாய் போதும் …

ஏதோ … எண்ணம் திரளுது கனவில் ..
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் .
என்னமோ ஏதோ … முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் ..

நீயும் நானும் எந்திரமா , யாரோ செய்யும் மந்திரமா , பூவே
Let’s go.. wow.. wow..உங்களின் தமிழச்சி ..
என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம் அன்று ..
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று .
lady looking like a cindrella cindrella, naughty look-u விட தென்றல் -ஆ ..
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..
lady looking like a cindrella cindrella, naughty look-u vita தென்றல் -ஆ ..
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ ..
கணக்கான தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ …
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ ..
நிழலை திருடும் மழலை நானோ ...எதோ
எண்ணம் திரளுது கனவில் .. வண்ணம்
திரளுது நினைவில் ..கண்கள் இருளுது நனவில் .
ஒ ஒ எதோ முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் .

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ .உருவமில்லா உருவமில்லா நாளை ,எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ அரைமனதை விடியிது என் காலை .எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை , எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ அரை மனதாய் விடியிது என் காலை .எதோ

(humming) ...எதோ


என்ன தான் இருந்தாலும் பேட்டின்னு வந்திட்டா இங்கிலீசில மட்டும் கதைக்கிறது...பேசிக்கலி ஐ டோன்ட் லைக்..அப்புறம்,சில இடங்களில் வயது முதிர்ந்த பெண் போல தெரிகிறார் அன்டி மாதிரி..அப்புறம் மேக் அப் இவருக்கு எட்டாப்பொருத்தம்!!மேக் அப் போட்டால் அப்பிடியே தெரிகிறது மேக் அப் தனியாக!!!
எம்புட்டு காலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்ட போகிறார் எண்டு பார்ப்போம்..
அவங்க லோகல் டாக்சி பேட்டியை பாருங்க!



Post Comment

Friday, June 17, 2011

மைக்கேல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல்!!!

கிக்கோ கிக்கு இந்தப் பாட்டு...ஜெயம் ரவியை,வெள்ளைக்கார நீக்ரோ ஆட்டக்காரர்களை விட மைக்கல் ஜாக்சன் என்னமா கிறங்கடிக்கிறார்..
கை கால்களை இழுத்து வைச்சுக்கொண்டு
"உன்னால நான் இப்போ ஜோன் ஹாரி..."
அப்பிடீன்னு பாடேக்க...பின்னுறார் போங்க..
பாடலுக்கு காணொளி அப்படியே பொருந்துகிறது..

அதில் வரும் பெண் தான் கொஞ்சம் சப்பை ரேஞ்'சுக்கு இருக்கு..
நம்ம குளு குளு குண்டுப் பெண் ஹன்சிகாவை அதில் நடிக்க வைத்து
மைக்கல் ஜாக்சனை கெஞ்ச வைத்திருக்க வேண்டும்....
அதனை கண்டுக்காமல்,ஹன்சிகா மைந்தனே கதி எண்டு
என்னை தேடி ஓடி வர வேண்டும்...
அதைப் பார்த்து ஓட்டவடை பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...
ஹிஹிஹி என்ன சொல்றீங்க நண்பர்களே...

ஒரிஜினல் நங்கை பாடலை தூக்கி சாப்பிடுமளவுக்கு பிரம்மாதமாய் இருக்கிறது எடிட்டிங்!!
ஆல்ரெடி நங்கை பாடலுக்கு பல பேர் அடிமையாகி கிடக்குறாங்க..
இப்போ இதையும் பார்த்துவிட்டு என்னாகுறான்களோ...
பாடலின் இரண்டாவது பாதியில் என்னாமா பீட்(Beat) சூடேத்துது...அவ்வ்

டிஸ்கு:நேற்று ஹன்சிகா எனக்குத்தான் அப்பிடீன்னு ஓட்டவடை பிரச்சாரம் பண்ணி இருக்காரு..
கூட்டத்தில இருந்த எவனோ கல்லெடுத்து எறிஞ்சிருக்கிறான்...இதனால பயன்திட்டாராம் பயபுள்ள~~!!
பயந்து ஒளிந்திருக்கும் ஓட்டவடைக்கு இந்த பாடல் சமர்ப்பணம்!!!

Post Comment

Wednesday, June 8, 2011

ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் போடுவது எப்படி??

இந்தக்கண்ணும் அந்த உதட்டு சிரிப்பும் தானடி ஓட்டவடை தொடக்கம் எல்லாரையும் உன்னைய நெனைச்சு இரவில...கனவு காண வைக்குது...!!

ஹரிஸ் ஜெயராஜ் வழங்கிய பல பாடல்களில் அங்கும் இங்குமாய் சுட்டும்,தனது பழைய பாடல்களை கலந்தும் தான் வெளியிட்டு வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்...இதை பற்றி நண்பர் கார்த்தியும் ஒரு பதிவை போட்டிருந்தவர்...

இது எங்கேயும் காதல் பாடலை ஹரிஸ் ஆட்டையை போட்ட பாடல்..இந்தப் படத்திலேயே பல பாடல்கள் ஆட்டையை போட்டவை தான் என்பது தெரியாததா உங்களுக்கு!

படம்: எங்கேயும் காதல்

பாடல்: எங்கேயும் காதல் .. விழிகளில்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..

விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்

அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..

விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்

யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..

விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

இது எங்கேயும் காதல் பாடலுக்கு ஹரிஸ் ஜெயராஜ் சுட்ட மியூசிக்...முழுக்க கேட்டு பாருங்க புரியும்...
அப்புறம் இது ஹரிஸ் ஜெயராஜ் எப்பிடி பாடல்களை உருவாக்கிறார் என்ற செய்முறை விளக்கம்..
இதை படித்தால் நீங்களும் சிறந்த இசை அமைப்பாளர் ஆகலாம்!!!
இதை ஹாரிஸ் பாத்திருந்தால் இண்டஸ்ரியை விட்டே ஓடி இருப்பார்'னு எதிர்பார்க்காதீங்க...அவரு ஆல்ரெடி எல்லாம் தெரிஞ்சு தான் இருப்பார் ஹிஹி

பதிவு குட்டியா இருந்தாலும் வீடியோ பாருங்க நச்சென்று இருக்கும்!!

Post Comment

Tuesday, May 10, 2011

'எங்கேயும் காதல்"வீடியோ பாடல்கள்(HQ)முதல்முறையாக !!


கவனிக்க:எனது ப்ளாக்'இல் ரேடியோ ஆல் டைம் பாடிக்கிட்டே இருப்பதால்,அதனை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்கவும்!!
ரேடியோ விட்ஜெட் "பாட்டு கேக்கலாம் வாங்க"எனும் தலைப்பின் கீழ் உள்ளது.

நங்கை...நிலாவின் தங்கை..
மங்கை..நீ தானே சிங்கை..
பாவை ...என் தோழி ஆவாய்..
பூவை..நிக்காதே தீ வை..


அற்புதமான பாடல் எங்கேயும் காதல் படத்திலேயே கலர்புல்லான கலங்கடிக்கிற ஆட்டங்களுடன் கூடிய வெள்ளைக்கார பாடல்!!ஹிஹி
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது!!அதில் வரும் அந்த அழகான கறுப்பு நடனக்காரர் தான் என்னை மிகக் கவர்ந்தவர்!!
சில இடங்களில் ஹன்சிகா முகப் பாவனையால் கிறங்கடிக்கிறார்!!!


இடையில் இவ்வாறு சில வரிகள் வருகிறன..கேட்க நன்றாக இருக்கிறது..ஆனால் என்ன அர்த்தம்??
எனக்கு தெரிந்த எழுபத்தாறு மொழிகளிலும் தேடித் பார்த்துவிட்டேன்,..கண்டு பிடிக்கமுடியவில்லை!!
O Mama Mama..Vippaamalaama
O Mama Mama..Vippaak-shaamalaama
O Mama Mama..Vippaamalaama
O Mama Mama..Vippaak-shaamalaama

அடுத்த பாடல்....

"ஓ அன்பே...நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும்..
என் அன்பே...என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும்..
என் உள்ளே....தன்னாலே காதல் ரணம் கொண்டேன் கொண்டேன்..."
என்று செல்லும்

அருமையான இனிமையான சோகமான பாடல்...




லோலிட்டா...ஓ லோலிட்டா...
உன் தூரம் கூட பக்கமாய்
மாறுதே...

பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்...
விண்ணஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்..
நீ வேகம் காட்டிப் போகும் போது நோகுதே...
உன் தூரம் கூட பக்கம் ஆக மாறுதே..
லோலிட்டா...........

கார்த்திக்கின் குரலில் ஜொலிக்கிறது லோலிட்டா பாடல்...!!



"தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..
பூ இல்லை மடல் இல்லை..
புது தேனை பெய்கிறாய் மனதிலே...

என்னை உன்னிடம் இழக்கிறேன்..
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்...

பாடலில் ஹன்சிகாவின் உடம்பு அப்படியே தெரிகிறமையால்,
ஹச்நிகா ரசிகர்கள் கடுப்பாக கூடும் ஹன்சிகா குண்டு பப்பாளி
என்று உணர்ந்தமையால்!!!ஹிஹி



பிரபுதேவா தோன்றும் இந்த எங்கேயும் காதல் பாடல் காட்சியில் முத்தங்கள்
மற்றும் பல கிளுகிளுப்புகள்...என்றாலும் ரசிக்க வைக்கின்றது..
பாடலை பார்த்தால் அத்துடன் ஒன்றிப் போவீர்கள்...
இந்தப் பாடல் மட்டுமல்ல அனைத்துமே அவ்வாறுதான்!!

"எங்கேயும் காதல்...
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
விண்காலை சாரல்...
முகத்தினில் வந்து சட்டென்று மோத...
கொல்லாத பாடல்...
பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல்..
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்!!"





மொத்தத்தில் ஹரிஷ்'சுக்கு ஒரு பாராட்டு!!!அது காப்பி பேஸ்ட் இசையோ என்னமோ..
அப்புறம் பிரபுதேவாக்கு ஒரு சின்ன பாராட்டு...!!!
ஹன்சிகா மொத்வானிக்கு ஒரு அட்வைசு:பாடியை மெயின்டெயின் பண்ணவும்..
அப்புறம் என்ன??ஓட்டை போட்டிட்டு,மொக்கையை,விமர்சனங்களை எழுதிவிட்டு போங்களேன்!!

Post Comment

Friday, March 11, 2011

இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!


இலியானா ஸ்பெசல் மொக்ஸை பார்க்க வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களே வணக்கம்...
வாங்க போகலாம்...

ஆக்சுவலி சினிமா பாடல்களுக்கான மொக்ஸ் தான் போல,..எனக்கே தெரியல பாத்திட்டு நீங்களே சொல்லுங்க பாஸ்..

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட்...
கண்ணை கசக்குறது சூரியன் இல்லடா உண்ட கை தாண்டா கசுமாலம்..

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
ஏன் டா எரும மாடா பயர் சர்வீஸ் பக்கத்தி வீடா??

கோடான கோடி நாம் குளிப்போம் விளையாடி...
அவனவன் குடிக்கவே தண்ணி இல்லாம கெடக்குறான்...உங்களுக்கு தண்ணிக்க விளையாட்டு கேக்குதோ??

மனைவி:பாலும் பலமும் கைகளில் ஏந்தி ...
கணவன்:ஏன்டி நாம என்ன அபிசேகம் பண்ண கோயிலுக்கா போறம்??மொத ராத்திரில கடுப்ப கெளப்பிக்கிட்டு...அடச்சீ கம்னு கெட..

காதலன்:கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை..
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை...
காதலி :அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??

காதலன்:மலரே...மௌனமா...
காதலி:எங்க என்னை கதைக்க விடுறாய்??நான் ஸ்டாப்'பா நீ தானே கதைச்சிட்டிருக்காய்..!!

மனைவி:இன்று முதல் இரவு...இன்று முதல் இரவு....
கணவன்:உன்ன கட்டீட்டன்லே..இன்னைக்கு தொடக்கம் எண்ட வாழ்க்கை இரவு தானடி!!

அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி??
அதுக்கு ஏன்டா மாமியார பஞ்சாயத்துக்கு இழுக்கிறாய்??

ஒத்தக்கண்ணால உன்னை பார்த்தேனடி....
ஏன் மத்தக் எங்க கண் மங்காத்தா பாக்க போச்சுதா??

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு...
எதுவா இருந்தாலும் மெதுவா பேசுடா தூக்கி உள்ள போட்டிடபோறாங்க!!

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை..
அது தான் அஞ்சாம் ஆண்டிலேயே தெரிஞ்ச விசயமேடா...இப்ப என்னை புதுசா??


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ....
அரை கிலோ வெங்காயம் வாங்கி இருப்பானோ சொந்தக் காசில..!!

தீ இல்லை..திரி இல்லை...ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
அவ்வளவு கஞ்சப் பயலாடா நீயி??

என் இதையம் உடைத்தாய் நொருங்கவே....
ஏன் டா அந்த கருமத்த கொண்டு போய் CD'ல காப்பி பண்ணி வைச்சிருந்தியா??

விழி மூடி ஜோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே ...
அவளால அவ்வளவு தொல்லையாடா??

இன்னிக்கு இலியானா மொக்ஸ் எப்பிடி இருந்திச்சு??நாளைக்கு இன்னொரு நடிகை ஸ்பெசல் மொக்ஸ் பார்க்கலாம் வாங்க....

Post Comment

Monday, November 29, 2010

என்திரனில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சா...!!



எந்திரன் படத்தில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சிருந்தா என்னாகி இருக்கும்??
அவர் தானே பாடல்,மியூசிக் எல்லாமே...
தனக்கு பாடல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு சிறிய கற்பனை..
பாடிப்பாருங்கள் எந்திரன் பாடலோடு ஒப்பிட்டு!!



இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் காறித் துப்பும்
இவன் சிறுவன் தாண்டிய உயரம் கொண்டவன்
ஆடு ஆடு தாடி நக்கும்
நீ அழகே TR அழகே
TR என்பவன் எதற்கும் அஞ்சான்!!

அறிவேன் அறிவேன் நானே 1000 அறிவேன்
உன் போல் ரசிகன் கிடைத்தால் சும்மா விடுமா!
திரைக்கதை...என்னோடு
டைரக்சன் ....என்னோடு
நான் பாட்டுக்கும் மியூசிக் போட்டேன் ஹிட்டு ஆகலையே...
***********************************************************************************

டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா
இரும்பிலே முளைக்கும் இருதயம்
மேற்கிலே முதல் சூரிய உதயம்!!
T R "உ உன்னோடு
ஐசு நீ என்னோடு
தாடி தான் என்னோடு
ப்ளேடு உன் கண்ணோடு
சினிமாவே காணாக் காதல்
மச்சினி உன்னோடு...!!
டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா



**********************************************************


MLA சீட்'டுகள் தமிழ் நாட்டில் எத்தனை..
திமுக அதிமுக கட்சிகள் தான் மொத்தம் எத்தனை..
அம்மாவை பிரிந்தால்..
யாவோடு சேரும் சிந்தனை...ஐயோ...
TR TR ஒரே ஹீரோ
அழகின் மொத்தம் நானா....??
நான் வளர்ந்தும் வளராத பையனா..
இல்லை மூளை வளர்ச்சியில் பையனா
இல்லை எதுகை மோனைக்கு பிறந்த பயபுள்ளயா..
அழகின் மொத்தம் நானா...
**************************************************************

பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
தாமில் சினிமாவின் விடியலோ TR
பே-ர-ர-சுவின் தந்தையோ TR
எந்தன் லீலையின் பிள்ளையோ சிம்பு
சிம்பு வம்பு சிம்பு வம்பு வம்பு சிம்பு!!



கொஞ்சம் அனுபவிச்சிருந்தா உங்க கருத்துகள்,ஓட்டுகளை விட்டுச்செல்லுங்கள்!!

Post Comment

Saturday, November 27, 2010

காதலி காதலி காதலில் தவிக்...கிறே....ன்...!!


1996 இல் மிகச்சிறந்த நகைச்சுவை படம் தமிழில் எதுவென்று கேட்டால் மறுக்காமல் வரும் ஒரே
பதில் அவ்வை ஷண்முகி தான்!
கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான இயக்கத்தில்,கமல்,மீனா,நாகேஷ்,ஜெமினி கணேஷன்,ஹீரா,மணிவண்ணன்,நாசர் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளத்துடன்,கிரேசி மோகனின் எழுத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது!
இன்று கூட நம் அனைவர் மனதிலும் உள்ள திரைப்படமென்றால் அது உண்மை!!

ஹரிஹரன் மற்றும் சுஜாத்தாவின் இனிமையான குரல்...
ரஹ்மானின் இசையில் சுஜாதா ஒரு சில பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலம் அது,
அத்தனையும் முத்துக்கள்..இன்றைய காலங்களில் அவரின் குரலை கேட்க முடியாதது வருத்தமே...
குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் போலும்!!

காதலா காதலா காதலில் தவிக்கிறேன் என்ற பாடல் தான்
படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
காதலி காதலி என்று ஹரிஹரன் மட்டும் பாடிய பாடல்
அல்பத்தில் மட்டுமே காண முடியும்.


அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு பாடல்...தேனிசைத்தென்றல் தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல் தான் "காதலா காதலா காதலில் தவிக்கிறேன்"என்ற பாடலாகும்.
மெல்லிசையில் தவழும் இந்தப் பாடல் 1996 இல் அனைவரையும் கட்டிப் போட்ட பாடலாகும்.
இன்று கேட்டாலும் மென்மையான சுகம்...

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் வீசும்
பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்....
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும் ..
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...

(காதலி...)

ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்...
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...


Post Comment

Friday, October 15, 2010

நயன்"னை வைச்சிருக்கேன்-பிரபுதேவா!!(மொக்கை)

சத்தியமா இது பிளாஷ் நியூஸ் இல்லேங்க..என்ன பண்ற சூடா தலைப்பு வைச்சா தானே விழுந்தடிச்சு வாராங்க நம்மள்ட மாதிரி மொக்கை ப்ளாக்'குக்கு எல்லாம்!!மன்னிச்சூ.....
இப்ப சூடா போய்கிட்டிருக்கிற மேட்டர்'எ சும்மா மொக்கையா கலாய்ச்சு பாப்பமே எண்டு ஒரு சின்ன முயற்சி தாங்க..
காதலன் படத்தில பிரபுதேவாட பாடலையே உல்ட்டா பண்ண போறமாக்கும்..
ஊர்வசி ஊர்வசி பாடலை அப்பிடியே மாத்தி இப்ப பிரபுதேவா பாடினா எப்பிடி இருக்கும்??
இப்பிடித்தான் பாருங்க...
பாட்டு தெரியாதவங்க முதல்லில இத பாருங்க..தமிழ் ல இந்த பாட்டு தெரியாதவங்களே இருக்க முடியாது..அதால....இது தெலுங்கு ஊர்வசி...


நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா..
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..
வாழ்க்கையை வாழவே
keep'பு தாண்டா ஓர் வழி
வாலிப வாழ்க்கையில்
நயனு தாண்ட என் வழி..!
நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..

சொல்லடி ரம்லத் ரம்லத்
உன்கிட்ட என்ன இருக்குதெண்டு..
நீயடி ரம்லத் ரம்லத்
குறைய சொல்லடி நயனுக்கிட்ட

முதலு மனுசி முரண்டு பிடிச்சா
take it easy பாலிசி..
ஒழுங்கா இருந்து கெட்டுப் போனா
take it easy பாலிசி..
கள்ள ஜோடின்னு மீடியா சொன்னா
take it easy பாலிசி..
சிம்புகிட்ட லிப்கிஸ் குடுத்தா..
take it easy பாலிசி..
கேளடி ரம்லத் ரம்லத்
தாடி தானே என்னுகிட்ட
நீயடி ரம்லத் ரம்லத்
பாடி தானே உன்னுகிட்ட...!!

பெஸ்ட்டு ஜோடி அவார்டு குடுத்தா
take it easy பாலிசி..
சிம்பு first 'டு நானு செகண்டு..
take it easy பாலிசி..
கண்ட இடத்தில் அடிப்பேன்னு சொன்னா
take it easy பாலிசி..
களவா ஹோட்டல் ரூமுக்கு போனா
take it easy பாலிசி...

நயன்தாரா:
கண்டதும் காதல் வடியாது
நயன்தாரா போல வடிவேது
பூமியில் காதல் கிடையாது
வப்பாட்டி நானே பல பேர்க்கு
ரம்லத்:
போராட்டம் ஏதும் செய்யாமல்
தாராவை விரட்ட முடியாது
கண்ணகி சிலை தான் இங்குண்டு
ரம்லத்தின் சிலையொன்று இங்கேது !!

மொக்க பதிவுன்னு வேற போட்டிட்டன்...ஒட்டு போடாம போகலாமாங்க??

Post Comment

Wednesday, September 15, 2010

விளையாட ஜோடி தேவை !!

1997 ஆம் ஆண்டு வெளி வந்த மின்சாரகனவு திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் ரஹ்மான் இன்னொரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.அத்துடன் flimfare விருதும்,தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தன.அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரஹ்மானின் இசையிலும்,ஹரிஹரனின் இனிமையான குரலிலும்,வைரமுத்துவின் வரிகளாலும் அனைவர் மனதையும் கொள்ளையடித்தது..இன்று கூட பலரின் நெஞ்சங்களின் ரிங் டோன் ஆக வெண்ணிலவே இருக்கிறது என்றால் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த பாடலுக்கு நடனமாடிய படத்தின் நாயகன் பிரபுதேவாக்கு டன அமைப்புக்கு தேசிய விருது கிடைத்தது ஞாபகமிருக்கலாம்!!
பெரும்பாலானவர்களுக்கு முழுப்பாடல் வரிகளுமே மனப்பாடமாக இருக்கும் என்பது திண்ணம்!!
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதன் வரிகள் இதோ..

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பல தேசிய விருதுகளுக்கு சொந்தமாகிய அந்தப்பாடலை நீங்களும் இன்னொரு முறை பார்த்து ரசியுங்களேன்!!சரி சரி மெய்மறந்து இருந்தது போக ஒரு ஒட்டு போட்டு போங்கப்பா!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...