Wednesday, July 31, 2013
'தல'அஜித் சென்றுகொண்டிருக்கும் பாதை சரி தானா?
Post Comment
Thursday, July 4, 2013
"சிங்கம் 2"-விமர்சனம்!உண்மையிலேயே செம வேட்டை..!!
என்சிசி ஆபீசர் வேலையை களைந்துவிட்டு பொலீஸ் டியூட்டிக்கு பொலீஸ் ட்ரெஸ்'சை மறுபடி மாட்டிக்கொண்டு சிங்கம் வேட்டைக்கு கிளம்புகையில் நம்மை அறியாமலேயே க்ளாப்ஸ் வாங்கிவிடுகிறார் சிங்கம்!ஹாரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை கூட்டம்னு இருந்தாலும்,படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய வைக்காத கதையின் வேகம்,ட்விஸ்ட்டுகள்,சீட் நுனிக்கே இழுத்துவரும் விறுவிறுப்பு... அது தான் சிங்கம் 2....!
படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.தமிழனுக்கு கெடுதல் விளைவித்த சிங்களவனை அழைத்து அடித்து கொன்று பழிதீர்த்திருக்கிறார்கள் என்றார் பக்கதிலிருந்த ஒருவர். கூடவே 'இந்து சமுத்திரத்த ஆளுவது இந்தியா' தாண்டா அப்பிடின்னு ஒரு பஞ்ச் வரும் படத்தில்.அது கூட இப்போதிருக்கும் சீனா-இந்தியாவின் இந்து சமுத்திர போட்டியில் இந்தியா தான் 'தலை'அப்பிடின்னு சீன அரசுடன் நல்லுறவாடும் இலங்கைக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என்றும் அதே நண்பர் கமெண்ட் அடித்தார்.சிரித்து மகிழ்ந்தேன்.
(Brit tamil இணையத்துக்காக எழுதியது)
--------------------------------------------
"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!
Post Comment
Thursday, June 27, 2013
"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!
Post Comment
Sunday, July 24, 2011
மாற்றான் சூர்யா-மாறுபட்ட பார்வை!

நன்றி -சினி விகடன்
Post Comment
Saturday, July 2, 2011
மாற்றான்+மங்காத்தா+வேலாயுதம்+ஹன்சிகா முத்தம்!!!
கே.வி.ஆனந்த இயக்கவுள்ள் 'மாற்றான்' படத்தில் ஐந்து வேடங்களில் நடிக்கிறார் சூர்யா.
கே.வி.ஆனந்த் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் "கோ". இதில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல் மற்றும் பியா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருக்கிறார்.
இப்படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் 'மாற்றான்' என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.
அயன் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இதனை மறுத்துள்ள கே.வி.ஆனந்த, "இன்னும் 'மாற்றான்' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. அதற்குள் எப்படி இது மாதிரி செய்திகள் வெளிவருகின்றன என தெரியவில்லை. இப்போதைக்கு சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். ஐந்து வேடங்களும் வித்தியாசமாக இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம்," என்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
| அஜீத்தின் மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் திகதி நடக்கிறது. |
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மங்காத்தா அஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, லட்சுமிராய் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அஜீத் நடிப்பில் தயாராக இருக்கும் படம் 'பில்லா-2'. இப்படத்தை 'உன்னைப்போல் ஒருவன்' இயக்குனர் சக்ரி இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறது. |
சின்ன குஷ்புபோல் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் குஷ்பு.
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் ஜெயம் ரவியையே மறைக்கிற அளவுக்கு இருந்தீங்க. இப்போ மெலிஞ்ச மாதிரி தெரியுதே?''
''யெஸ் பாஸ்... 8 கிலோ குறைஞ்சிட்டேன். போன வருஷம் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாம கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதான் குண்டாகிட்டேன். இந்த ஒரு வருஷமா டெய்லி ஜிம் போய், டயட்ல இருந்து வெயிட் டைக் குறைச்சிட்டேன். இப்போ ஜிம் போகா மத் தூங்குறதே இல்லை!''
'' 'வேலாயுதம்’ எப்படிப் போய்ட்டு இருக்கு?''
'' 'வேலாயுதம்’ படத்தில் கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். பாவாடை - தாவணிதான். இது எனக்கு ரொம்பவும் பிடிச்ச காஸ்ட்யூம். நான் நடிச்சதுலயே வேலாயுதம்தான் பிரமாண்டமான படம்!''
''விஜய் என்ன சொல்றார்?''
''படத்தில் ஒரு பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அந்தப் பாட்டு ஷூட் முடிஞ்ச உடனே விஜய் சார் சொன்ன கமென்ட்டை மறக்கவே முடியாது. 'பாட்டு முழுக்க நான் என்னைக் கவனிக்கவே இல்லை. உங்களைத்தான் பார்த்துட்டே இருந்தேன். அந்த அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க. இந்தப் பாட்டில் ஆடியன்ஸ் எல்லாரும் உங்களைத்தான் பார்ப்பாங்க’னு சொன்னார். அவர் வாயால் பாராட்டு வாங்கினது பெரிய விஷயம்!''
''நீங்களும் விஜய்யும் லிப் டு லிப் கிஸ் அடிக்கிற மாதிரி ஸ்டில்ஸ் வர ஆரம்பிச்சிருக்கே?''
''சத்தியமாக படத்தில் லிப் கிஸ் ஸீனே இல்லை. நான் விஜய்க்கு முத்தம் கொடுக்கவும் இல்லை. அது ஒரு கேமரா ஜிமிக். பாடல் காட்சியில் அவர் முகத்துக்குப் பக்கத்தில் என் முகத்தைக் கொண்டுபோனேன். அப்போ எடுத்த போட்டோ அது. பார்க்கிறதுக்கு முத்தம் கொடுத்த மாதிரி தெரியுதா?''
'' 'ஒரு கல்... ஒரு கண்ணாடி’ காமெடிப் படமாச்சே... அதில் உங்க ரோல் எப்படி இருக்கும்?''
''ராஜேஷ் டைரக்ட் பண்ணின ரெண்டு படங்களையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன். எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே இதுவும் செம ஜாலியான படம். உதயநிதி, சந்தானம், நான்... எங்க மூணு பேரைச் சுத்தி நடக்கும் படம். படத்தில் என்னை அவர் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணுவார். ஆனா, நான் கண்டுக் கவே மாட்டேன். படம் பாருங்க... செம ஜாலியா இருக்கும்!''
''உதயநிதி எப்படி நடிக்கிறார்?''
''உதயநிதியை அறிமுக நடிகர்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு நாளும் பக்காவா ரிகர்சல் பண்ணிட்டு வர்றார். முதல்முறையா கேமரா முன்னாடி நிற்கும் கூச்சமே அவருக்கு இல்லை. செம புரொஃபஷனலா இருக்கார்!''
''மும்பை பொண்ணுங்க ரிலாக்ஸ் பண்ண பார்ட்டிக்குப் போவாங்க... நீங்க எப்படி?''
''ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி மசாஜ் பார்லருக்குப் போவேன். அவ்வளவுதான்!''
''வரவர கிளாமர் தூக்கலா இருக்கே?''
''நடிப்பு மாதிரியே கிளாமரும் ஹீரோயின் களுக்கு முக்கியமானது. கிளாமரான ரோல் என்றால் இழுத்துப் போர்த்திட்டா நடிக்க முடியும்?''
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் நீங்கள் சரியா நடிக்கலைனு பேசினாங்களே?''
''என்னை யாரும் கட்டாயப்படுத்தி சினிமாவுக்குக் கூட்டிட்டு வரலை. நான் விருப்பத்தோட நடிக்க வந்தேன். 19 வயசுக்குள் 15 படங்களில் நடிச்சு இருக்கேன். நடிக்கிறதுக்காக நான் சிரமப்படணும்னு அவசியமே இல்லை. இந்தியில் நான் நடித்த சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கி இருக்கேன். தெலுங்கில் நான் நடிச்ச 'தேச முத்ரா’வுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினேன். நடிக்காம எப்படி வாங்க முடியும்?''
நன்றி-சினிமா விகடன்
