'அண்ணே,உவனுகள் படம் எடுக்க முன்னமே 'அவார்ட் வின்னிங்'ன்னு டைட்டில் போட்டிட்டு தான் தொடங்குவாங்க போல என?'ஏராளமானோர் இப்படி கிளம்பியிருப்பதால்,இவன் யாரைச் சொல்கிறான் என்று தெரியாமல் குழப்பத்துடனேயே, 'ஏண்டா தம்பி அப்பிடி சொல்றாய்?'என்று கேட்டேன்.
'இல்லையண்ணே,இவனுக குடுக்கிற பில்ட் அப்புகளுக்கும் அலப்பரையளுக்கும் எடுக்கிற குறும்படத்துக்கும் சம்பந்தமே இல்லாமத்தானே கிடக்குது?பெரிய படத்தில ஒரு சீன் எடுக்கிறது போல குறும்படத்த எடுக்கிறானுகள். குறும்படத்தோட பேஸிக் கொன்செப்ட்டே இன்னும் இவனுகளுக்கு விளங்கல'என்றான்.
நான் பார்த்த பெரும்பாலான குறும்படங்கள் அப்படித்தான் இருந்தபடியால்,எனக்கும் அவன் சொல்வது சரியென்றே பட்டது.'எப்பிடின்னாலும் இது தொடக்கம் தானேடா..போகப் போக சரியாயிடும்.இப்ப எடுக்கிறதுகள் எல்லாமே முயற்சிகள் தானேடா'என்றேன்.
'அப்பிடி எண்டா ஒண்டு ரெண்டு திறமையான படைப்புகள் குடுக்கிற வரைக்கும் அமைதியா இருந்து,சாதிச்சிட்டு,அதுக்கு பிறகு ஒலகப் பட இயக்குனர்,ஆஸ்கார் வின்னிங்க் ஆக்டர் அளவுக்கு பில்ட் அப் குடுக்கலாம் தானே அண்ணே?'கேட்டான்.
'இவ்வளவு கதைக்கிறே,நீயே ஒரு குறும்படம் எடுக்க வேண்டியது தானே?கதைக்கிறது ஈஸி தம்பி..ஒரு படத்த எடுத்துப் பாரு அப்போ புரியும்'என்றேன்.
'இந்த பதில தாண்ணே அவனுகளும் சொல்லுறானுகள். இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியது தான். குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டின கதை தான் அண்ணே கடைசில..!அப்புறமண்ணே,மறந்தும் இத பேஸ்புக்கில போட்டிடாத.மத்தவங்க இருக்கிறது மாதிரியே பம்மிகிட்டு இரு.இல்லைன்னா அப்புறம் உன்னிய ஒதுக்கி வைச்சிடுவாங்க' என்று சலித்துக்கொண்டான்.
ஆடு தலையை ஆட்டிக்கொண்டது..!
0 comments:
Post a Comment