ராஜா ராணி பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வந்தவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி,'என்ன இழவுக்கு பெரும்பாலானோருக்கு 'மௌனராகம்' ஞாபகம் வந்தது?என்ன இழவுக்கு அதனுடன் இதனை ஒப்பிட்டார்கள்? என்பதே! எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கு மௌனராக நினைப்பே வரவில்லை.அப்படி பார்த்தால்,எனிமேல் எந்த படமுமே எடுக்கமுடியாது.மேக்சிமம் பொசிபிளான கதைகள் எல்லாமே ஆல்ரெடி எடுக்கப்பட்டுவிட்டன.ஏதேனும் ஒன்றின் சாயல் சிறிதளவு இருக்கலாம்.அதற்காக பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தை கண்டமேனிக்கு விமர்சிப்பது எந்தவகையில் அவசியம் என்று புரியவில்லை.
'விண்ணைத்தாண்டி வருவாயா'க்கு பின்னர்,தியேட்டரில் பெரும்பாலானோர் கண்கள் கலங்கியிருக்க கண்டது,இந்த படத்தின் போது தான்.சிலர் அழுதுவிட்டிருந்தனர்.இந்திக்காரனுக்கு தமிழ் படமோ,தெலுங்கருக்கு ஈரானிய படமோ தமிழனுக்கு சிங்கள படமோ பிடித்துவிடாது.அந்தந்த சமூகத்துக்கு எந்தெந்த படங்கள் 'சூட்'ஆகுதோ,அந்தந்த படங்களை தான் எடுக்கமுடியும். அதை தான் மக்கள் ரசிப்பார்கள்.மாறாக தமிழ் நாட்டில் ஈரானிய கொரிய படங்களை எடுத்துவிட்டு தியேட்டருக்கு ஒருவரும் வருகிறார்களில்லை என்று மீடியாவை கூட்டி ஒப்பாரி வைப்பதில் எந்த பயனும் கிடையாது.
எவ்வித காழ்ப்புணர்வுகள்,கட்டாயம் கலாய்த்தே ஆகவேண்டும்,அல்லது 'காமென் மேன்'கள் அதிகம் விரும்பும் படங்களை நாறடித்து தங்களுக்கு உயர் ரசனை என காட்டிக்க வேண்டும் என்கின்ற எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் ராஜா ராணியை பார்க்க செல்பவர்கள்,கட்டாயம் படத்தை ரசித்திருப்பார்கள் எனலாம்.ஆர்யாவுக்காக சென்ற பெண்களுக்கும்,நயன்+நஸ்ரியாவுக்காக சென்ற ஆண்கள் கூட்டத்துக்கும் ஹீரோ-ஹீரோயினை தாண்டி படம் கவர்ந்திருக்கிறது.இயக்குனர் அட்லி நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக மிளிர்வார்.ஒரு சில காட்சிகள் தவிர,பெரும்பாலான காட்சிகளில் தனித்துவம் காட்டுகிறார்.பாடல் காட்சிகள் அழகு.ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸும் காரணமாக இருக்கலாம்.
ஆர்யா,நயன்தாரா,ஜெய்,நஸ்ரியா என்று அனைவருக்கும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கிற பாத்திரங்கள்.ஆனால் ஆர்யாவுக்கு நடிப்பு சுத்தம்!ஜெய்,நயன்தாரா இருவரையும் குறிப்பிட்டு சொல்லலாம்.அதிலும் நயன்தாரா சொல்லவே வேண்டாம்..!உண்மையிலுமே வியக்கவேண்டிய பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறார் நயன்..!இத்தனை பிரச்சனைகளுக்கு பின்னரும் இத்தனை அழகாக,கட்டுக்கோப்பாக மெய்ண்டெய்ன் செய்வதோடு மட்டுமல்லாது நடிப்பிலும் மெருகேறி இருக்கிறார்..!நயனின் இடத்தை நஸ்ரியாவால் பிடிக்கமுடியாது.ஒரு பதுமையாக பார்த்தால் நஸ்ரியா அழகாக இருக்கலாம்,குறும்புகளினால் சிலிர்க்க வைக்கலாம்.ஆனால் நடிப்பென்று வருகையில் நயனின் இடத்தை அடிச்சிக்க முடியாது நஸ்ரியா!சில இடங்களில் பாத்திரங்களை அழவைத்து பார்வையாளர்களை அழ வைக்க முயற்சித்திருக்கும் அட்லி,வேறு சில இடங்களில் நிஜமாகவே கண் கலங்க வைத்துவிடுகிறார்.
சத்தியராஜ் இது எத்தனையாவது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் இடையிடையே சில படங்களில்,முக்கிய பாத்திரங்களில் வந்துசெல்கிறார்.படத்தில் சந்தானம் இருக்கிறார்.ஆனால் கிச்சு கிச்சு பெரிதாக கிடைக்கவில்லை.படத்தை இன்னமும் கொஞ்சம் மினக்கெட்டு ட்ரிம் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால் இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் குப்பைகளின் மத்தியில் இது கொஞ்சமேனும் ரசிக்கத்தக்க படைப்பு!பலருக்கு பிடித்திருக்கிறது..படம்வந்து ஒரு கிழமை தாண்டிவிட்ட பின்னரும் கூட தியேட்டருக்கு வரும் கூட்டம் அதற்கு சான்று.கட்டாயம் ஒரு தடவை பார்க்கலாம்.70/100..!
இன்றைய தமிழ் சினிமாவில்,மகேந்திரன்களும் மணிரத்தினங்களும் இல்லாத இடத்தை ஓரளவுக்கேனும் நிரப்ப அட்லி போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இல்லை,அவர்களும் வேண்டாமெனில்,'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களை வரிசையில் வரவேற்றுத்தொலையுங்கள்.