எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எது எப்படி இருந்தாலும்,ஆட்சிமாற்றமொன்றை உண்மையாகவே எதிர்பார்த்தால் பொதுவேட்பாளரை வெகு சீக்கிரம் முடிவு செய்துவிட்டு,வெற்றிக்காக ஒன்றுபட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக உழைக்கவேண்டும்.
அல்லது இறுதிவரை பொறுத்திருந்து,பொதுவேட்பாளரை அறிவித்து,அதன்பின்பும் குத்துவெட்டுகளை தொடரச்செய்து, பொதுவேட்பாளர் மீதான நம்பிக்கையை சிதைத்து,ஆதரவாக ஓட்டுப்போட இருந்த வாக்காளர்களையும் தேர்தல் தினத்தன்று வீட்டிலிருக்க வைப்பதன்மூலம் மேன்மைமிகு சனாதிபதி அவர்களையே மீண்டும் சனாதிபதி ஆக்கிவிடலாம்.
சரி யார் பொதுவேட்பாளர்?சந்திரிக்காவா ஷிராணியா ரணிலா சஜித்தா இல்லை வேறுயாருமா?பொதுவேட்பாளருக்கு எந்தெந்த கட்சிகள் ஆதரவு கொடுக்கும்?ஐ.தே.க,த.தே.கூ ஓகே, ஜே.வி.பி?சரத் பொன்சேகா தரப்பு?முக்கியமாக முஸ்லிம் காங்கிரஸ்?அப்போது அளுத்கம சம்பவங்கள் அவர்களுக்கு ஞாபகமிருக்குமா?
சந்திரிக்கா மீண்டும் சனாதிபதி வேட்பாளாரென்றால்,அவர் முதன் முதலில் சனாதிபதி தேர்தலில் நிற்கும்போது கொடுத்த வாக்குறுதிகளும்,வெற்றிக்குப்பின் கொடுத்த அடிகளும் சென்றதடவை சரத் பொன்சேகா போட்டியிட்டபோது வந்த குற்ற உணர்ச்சிபோன்று ஞாபகம் வந்து தொலைக்கும்.
அப்படிப்பார்த்தால் நான் தான் களமிறங்க வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினர் சனாதிபதி ஆகமுடியாது என்கின்றார்கள். சென்ற தடவை சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்த 9662 ஓட்டுக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறது..!!