Step up சீரிஸின் ஐந்தாவது பாகமாய் Step Up All In கடந்த 8ஆம் தேதி ரிலீஸாகி இருந்தாலும்,பிந்தித்தான் பார்க்கக் கிடைத்தது.
(சவோய்-3D).சாதா தமிழ் தியேட்டர்களில் வரிசையில் நிற்கச்சொன்னால் முட்டி மோதி அடுத்தவன் தலை மேல் ஏறி டிக்கட் வாங்கி பார்ப்பது ஒரு சுகமென்றால்,ஆங்கிலப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் இடிபடாமல் வரிசை ஒழுங்கில் நின்றுகொண்டு ஒரு ஜாண் ட்ரவுசரும் லோ-கட் டீஷர்ட் போட்டு தங்களை எக்ஸ்போஸ் செய்யும் அழகிகளை ஜொள்ளிக் கொண்டே படம் பார்ப்பது இன்னொரு சுகம்..!படம் நன்றாக இல்லாவிட்டாலும் வெளியே வரும்போது மனசு நிறைந்திருக்கும்..!
Ryan Guzman Briana Evigan Misha Gabriel Adam G. Sevani என்று அதே பழைய க்ரூவுடன் களமிறங்கியிருக்கின்றார்கள்.இம்முறையும் கதை வழமையானது தான்,வறுமை-இலட்சியம்-டான்ஸ்-போட்டி.. கூடவே கொஞ்சம் லவ்.இதுதான் நடக்குமென்று முழுதாக முன்னமே கணித்துவிடலாம்,என்றாலும் அந்த டான்ஸ்..க்ரேஸ்.. பாஷன்..அதுதான் பலமே..!
லாஸ் வெகாஸில் நடைபெறும் Vortex என்கின்ற Dancing Competition'ஐ மையப்படுத்தி இம்முறை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.பழைய The MOB (step up) டீமிலிருந்து Sean பிரிவதாக காட்டி,இன்னொரு டீமை உருவாக்கி இரண்டையும் எதிரெதிரே போட்டியிட வைத்திருக்கிறார்கள்.பெரிதாக இன்டரஸ்டிங்க் ட்விஸ்ட்ஸ் கிடையாது.டான்ஸிலும் பெரிய புதுமைகளோ வித்தியாசங்களோ இல்லை.அடுத்த தடவை புதிய க்ரூவுடன் களமிறங்குவது உத்தமம்.
இதைவிட இதன் முதல் வெளியீடான Step Up 4: Revolutionஎன்னை அதிகம் கவர்ந்திருந்தது.மியாமி கடற்கரை வீதியில் நடக்கும் ஆரம்ப ஆட்டமே களைகட்டும்.க்ளைமேக்ஸ் டான்ஸ் கூட பட்டையை கிளப்பியிருக்கும்.சீரிஸிலேயே அது தான் பெஸ்ட் என்பேன்.எனிவே,ஸ்டெப் அப் சீரிஸ் லவ்வேர்ஸ் ஒருதடவை பார்த்துவிடலாம்..!
0 comments:
Post a Comment