"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!
இன்று உனக்கு புரியவில்லை
புன்னகைக்கின்றாய்..
புரிகின்ற பருவத்தில்
உன் புன்னகைக்கு
புரிதல் இல்லாமல்
புதையப்போகிறேனோ தெரியவில்லை!!
உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்!
மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டுப் பேசாதவறுகள்!!
நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!
என்னை தனது வலைப்பூவில் அறிமுகம் செய்த "காத்திரப் பதிவர்"ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்! |