கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.
பலருக்கு சந்திப்பில வெட்டுக்குத்து,கொலை எல்லாம் நடக்காததில கவலைன்னு அவங்க பதிவுகள வாசிக்கும் போதே தெரிஞ்சது..

அதனால பதிவுகளின் தரம் அது கேள்விக்குறியாக இருந்தது(ஆமா வழமையா எதோ தரமாய் தானே எழுதி கிழிச்சவன்).
நண்பர்களின் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை..
இடைக்கிடையில் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலானோர் "தொடரும்"
பதிவுகளை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
ஆனால் முடிந்தளவுக்கு அனைவர் தளங்களுக்கும் சென்று கமெண்டிட்டு வாக்கிட்டு வந்திருந்தேன்..ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி
இந்தியாவில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளும்,அதன் போட்டோக்களும்
இடைக்கிடையே எனக்கு சிரிப்பை வாரி வழங்கி இருந்தன...
அந்த வகையில்,சிபி,மனோ,மணிவண்ணன்,சங்கரலிங்கம் சார்,சீனா ஐயா,ஷர்புதீன் போன்றோருக்கு நன்றிகள்..
கோமாளி செல்வா,மற்றும் சிபி அண்ணே
போட்டோக்களை பார்த்தவுடன் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா??
ஹிஹி சொல்லமாட்டேனே...
வம்பை விலைக்கு வாங்குபவரை இப்போ கூலிங் க்ளாஸ்'னு தான்அழைக்கிறார்களாம்..இனிமேல் பதிவுலகில் பெயர்கள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ?
தக்காளி...
வெங்காயம்..
லாப்டாப்...
கூலிங் க்ளாஸ்..
கில்மா...
அருவா..
வடை...
கோமாளி...
சிரிப்பு போலீஸ்
பன்னிகுட்டி
ஆட்டுக்குட்டி
முக்கியமா பிளையிட் பிடிச்சு போன மனோ அட்லீஸ்ட் ஒரு கொலையாச்சும் பண்ணுவார்னு எல்லாரும் பரவலா
நேரடி ஒளிபரப்பை பார்க்க ஆவலா இருந்திருக்காங்க...ஆனா நேரடி ஒலிபரப்பு சில பல காரணங்களால் தடைப்பட
அவங்க குழு குளுகுளுப்பு இல்லாம போச்சு..அவ்வ்வ்வ்
ம்ம்ம் அது இருக்கட்டும்...
அப்புறம் சூடாக அலசப்படும் விஷயம் "சாரு"பற்றியது..
இதை பற்றி எத்தனையோ ஆக்கங்கள் அலசல்களை வாசித்தும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதவனாய்
இருக்கிறேன்..அவ்வாறு நடந்திருக்கலாமோ இல்லை திட்டமிடப்பட்ட வேலையோ என்று தெரியவில்லை..
தமிழச்சி தனது தளத்தில் கிழித்திருக்கிறார் சாரு பற்றி..
சாரு நிவேதிதா வாசகர் வட்டம்னு ஒரு வட்டம் இருக்கு பேஸ்புக்கில..அதில இணைந்து இருக்கிறேன் நான்
கடந்த சில மாதங்களாக..இன்று அதனை பார்க்கும் போது ஆக்ரோஷமும் எதிர்ப்புகளும் மாறி மாறி விழுவதை
காண முடிந்தது...இணையத்தள வாசிகளும் தங்கள் ஊகங்களை மாறி மாறி வெளியிடுகிறனர்.
ஆனால் எனக்கென்னமோ அந்த பெண்ணின் உரையாடல் போலியானதோன்னு தான் தோணுது..
அப்புறம் விஜய்..

சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..
பெரும்பாலும் திரைவிமர்சனங்களை பாருங்கள்..படம் வந்த உடனே இருவர் படம் சொதப்பல் என்று
விமர்சனம் இட்டால்,அடுத்து விமர்சனம் போடுபவர்கள் பெரும்பாலும் அதே கருத்திலேயே விமர்சனம்
செய்துவிடுவார்கள்..இது வழமையாக இங்கு நாம் காணும் காட்சிகள்..
அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது.
இப்போ கலைஞர் ஆட்சியை விட்டு இறங்கியவுடன் சும்மா இருந்தவர்களும் எழும்பி நின்னு கலைஞரை
அடிக்கவில்லையா...இவர்கள் அடுத்த முறை அம்மா தோற்றால் கூட இதே மாதிரி அம்மாக்கு எதிராக எழுதி
பட்டியலிடுவார்கள்..
இதை தான் காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளல் என்பதா??அல்லது எரிகிற வீட்டில் என்னவோ பிடுங்கிறது
என்பார்களே...அந்த மாதிரியா??
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கிறார்கள்..ஆனால் விஜய் மற்றும் அவரது ரசிகர்களே
பெரும்பாலும் தாக்கப்படும் ரசிகர்களாகி இருக்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு விஜய்'யை அல்லது அவர்களை சார்ந்தோரை
தாக்கி பேசுவதன் மூலம் தாங்கள் பிரபல்யம் பெறலாம் என்ற நினைப்புத்தான் வேறொன்றும் இல்லை..
இதே கோஷங்கள்,அஜித்,கமல்,ரஜனி,தனுஷ்,சிம்பு போன்றோரின் பிறந்த தினங்கள் வரும்போதோ அல்லது சாதாரணமாகவோ
எழுப்பபடுவதில்லை...
அப்புறம் ஏன்??நாங்க உங்களுக்கு பைட்ஸ்'ஸா??ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா??






