Thursday, September 30, 2010

இது பதிவர் ஏரியா!!


திக்கு திசை தெரியாம ஓடிட்டிருந்த நம்ம பதிவர்களுக்கு இப்பிடி இவங்க ஓடுவாங்க எண்டு தெரிஞ்சே 3000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பத்து குறளை வழங்கி விட்டு போய் இருக்கிறார்..அவற்றை அத்தனை பதிவரும் பின்பற்றினால் பல ஆயிரம் ஹிட்ஸ்'சுகள் பெற்று பல்லாண்டு காலம் வாழலாமாம்!!
அப்பிடி என்ன தான் சொல்லி இருக்கார் எண்டு பாப்பமே!

1)எந்திரன் தலைப்பில் பதிவொன்று போட்டால்
ஹிட்ஸ்'கள் வழங்கும் வாரி!!

2)பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மற்றோர்
ஈகலைப்பார் ப்ளாக்'இல் இருந்து!

3)கவிதைகள் போடாத பதிவர்கள் யாரும்
பிரபல பதிவராக "தடா"!

4)ஹிட்ஸ் கொடுப்பதெப்படீன்னு பதிவொன்று இட்டாலே
தானாக கிடைக்கும் ஹிட்ஸ்'சு !

5)கிளுகிளு படங்கள் விமர்சனம் பார்க்க
ஜாக்கிஅண்ணன் ப்ளாக்'கே சிறப்பு!

6)பதிவராயின் பயனென் சொல் நானறிவேன்
வெட்டிப்பயல்க்கு இருக்கா நேரம்!

7)இன்ட்லி தமிழ்மணம் இல்லாது போனால்
சிரித்திருப்போம் தனிரூம் போட்டு!!

8)சப்புன்னு தலைப்பு ஒத்தேல வைச்சா
ஒருநாய் எட்டிப் பார்க்கா!!

9)உறைக்க உறைக்க பதிவொன்று போட்டா
பின்னூட்டம் வேலி பிச்சிக்கும்!!

10)அடிக்கடி பதிவுகள் போடாதோர் ப்ளாக்'இற்கு
பின்னூட்டம் கம்பிநீட்டக் கடவு!!

நல்லாத்தான் சொல்லி இருக்கார் என வள்ளுவர்!!ஹிஹி ஓகே ஓகே ஏதுவ இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும் !!
ஓட்ட போட்டிட்டு next 'டு டே மீட் பண்ணுவம்!

Post Comment

Monday, September 27, 2010

எனது ஐம்பதாவது பதிவு!!


தட்டுத் தடுமாறி,சில அவமானங்கள் மற்றும் பல ஆசீர்வாதங்களுடன் ஐம்பதாவது பதிவில் நான்...

ஆனி மாதம் பதினாறாம் தேதி ப்ளாக் ஒண்டு தொடங்கலாமே எண்ட ஆசைல விளையாட்டுத்தனமா ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கவியுலகம் என்ற எனது வலையுலகம்..

அதை தான் என் அறிமுகத்தில்(profile இல்)கூட கூறி இருக்கிறேன்.இப்படி ப்ளாக் ஒன்று ஆரம்பித்து எனக்கு நானே பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,தேவை எனக்கு இருந்திருக்கவில்லை.

நான் முக்கியமாக ப்ளாக் தொடங்க நினைத்ததன் உண்மையான நோக்கங்கள் பல..
1 .அங்காங்கே பாடசாலை காலத்திலிருந்து என்னால் கிறுக்கப்பட்ட பல கவிதைகளை சேமித்து வைக்காமல் போனதால் ஒண்டுமே கையில் மிஞ்சவில்லை..அதை எங்கயாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆசை!!

2 .எனது வெட்டித்தனமான நேரத்தை எப்படி போக்காட்டலாம் என்று சிந்தித்து இருந்த போது ப்ளாக் தான் கண்ணுக்கு பட்டது..!!

3 .பிரபல பதிவர்கள் பலரின் ப்ளாக்'களை வாசித்து பார்த்து எனக்கும் ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்ற ஆவல்..

போன்றன தான் முக்கியமான காரணங்கள்.

ப்ளாக் தொடங்குவதற்கு முதல் facebook 'இல் ஒரு குழு(group )ஒன்றை கவிதைகளுக்காக நடத்தி வந்தேன்..
அது 1000 fans 'ஐ தாண்டியதுடன் அதற்கு மேலே ஒரு இலக்கும் இல்லாமல் போனது..ஆதலால் ப்ளாக் ஆரம்பித்த அன்றே அந்த க்ரூப்பில் இருந்து ஒரு சில கவிதைகளை கொண்டு வந்து என் ப்ளாக்'இல் போட்டேன்..

ஆரம்பத்தில் எனக்கு ப்ளாக் பெரிதாக பழக்கமில்லாத காரணத்தால் நான் பார்த்து ரசித்த விடையங்களை அப்பிடியே பிரதி பண்ணி பதிவிட்டேன்..அப்போது அவ்வாறு பண்ணக்கூடாது என்பது தெரிந்திருக்கவில்லை.
அப்போது பனித்துளி ஷங்கர் அண்ணன் தான் அப்படி இடக்கூடாது என்று எடுத்துரைத்தார்.

அதன் பின்பு எனது சொந்த ஆக்கங்களியே பதிவாக இட்டு வந்து கொண்டிருக்கிறேன்.

சிறிது சிறிதாக பார்ப்பவர்கள் எண்ணிக்கை கூடியது.தமிழ்மணம்,இன்ட்லியில் பதிவுகளை இணைத்ததால் என் ப்ளாக்'இற்கு வருபவர்கள் எண்ணிக்கை வளர்ந்தது...பின்னூட்டங்கள் இட்டார்கள் எனக்கு உந்துதலாக இருந்தது.
விளையாட்டாக ஆரம்பித்தது பின்னர் எனக்கு போக்கு காட்ட ஆரம்பித்தது..
அடிக்கடி பதிவிடத்தூண்டியது.அதன் விளைவாக ஐம்பது பதிவுகள் ஆகிவிட்டன நாலுக்கு குறைவான மாதங்களில்!

தினசரி பல தடவைகள் எனது ப்ளாக்'ஐ பார்க்கத்தலைப்படுகிறேன்.பார்க்காமல் விட்டால் இருப்புக்கொள்ளுதில்லை.
நல்ல பல நண்பர்களை பதிவுலகம் சம்பாதித்து தந்திருக்கிறது..இன்னும் தரும் என்ற நம்பிக்கை தான் உந்துதல்.

பல்வேறு பல்சுவை அம்சங்களை அடக்கிய ப்ளாக்'இற்கு பலர் சென்றாலும் கவிதைக்கு மட்டுமென தொடங்கிய என் ப்ளாக்'இற்கும் சிலர் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி..

தொடர்ச்சியாக உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் தான் என் போன்ற பதிவர்களும் வாழ முடியும்.
முடிந்தவரை நல்ல ஆக்கங்களை தர முயற்ச்சிக்கிறேன்..
என்றும் அன்புடன்
மைந்தன் சிவா

Post Comment

Friday, September 24, 2010

"ஒபாமா"வின் கள்ளக் கவிதை சிக்கியது!!




ஒரு நாள்..

பாருங்களேன் ப்ரெண்டு எனக்கு கூட சொல்லாம பாஸ் படம் பாத்திருக்கான் கருவாப்பயல்..இருக்கட்டும் அவன வைச்சிக்கிரன்..!!
எம்புட்டு பேமஸ் அவர்..அவர்ட கவிதைக்கு ஒட்டு போடாம போறியளே இது ஞாயமா?அடுக்குமா??

Post Comment

Wednesday, September 22, 2010

விடியல் இன்னும் விடியவில்லை!!



தொலைந்து போன
பசுமைகள்..நினைவில்
இல்லை
கனவுகள் கூட


அன்பே..
அருகில் தள்ளிப்பார்..
சம்பவத்தின் போது
நம் பிள்ளை
அங்கு தான்
நின்றுகொண்டிருந்தது..!!



வாழ்வில் ஒரே
இலட்சியம்..
கல்வி சினிமா கிரிக்கெட்'டா..??
அமைதியான வாழ்வில்
அத்தியாவசிய
உணவு
உடை
உறையுள்!!


உங்ககிட்ட என்ன
உலகத்திட்டயே
புலம்பி ஒண்ணுமாகல..
காயப்பட்ட மனச
புகை போட்டாச்சும்
தேத்துவம்..

இதையெல்லாம் கவிதைஎண்டு நம்பி பாக்க வந்தீங்க பாருங்க..
உங்களையெல்லாம் பாக்க பாவமா இருக்கு...!!
இவற்றைப்பற்றி ஒரு தனிப் பதிவு போடலாம் என்டிருக்கன்..பாப்பம்..என்னுடைய அம்பதாவது பதிவில சொல்லுறேனுங்கோ !

Post Comment

Monday, September 20, 2010

லண்டன் மாப்பிள்ளை-ஐயையோ வெட்கக்கேடு!!!!


"சின்ன மாமியே
உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ
படிக்க சென்றாளோ..."
இந்த தமிழ் பொப்பிசை பாடலை யாரும் மறக்கமாட்டார்கள்.
அதனை உருவாக்கியவர் இலங்கையின் மூத்த கலைஞரான நித்தி கனகரத்தினம்!!
அவரின் உருவாக்கலில் அமைந்த இன்னொரு பாடலை அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் பார்க்ககூடியதாக இருந்தது அவரின் சொந்த குரலிலேயே..
இப்பாடல் 1960 'களில் எழுதப்பட்டது..தமிழ் பொப் என்று இலங்கைக்கு அறிமுகம் செய்தவர் திரு நித்தி அவர்களே..
லண்டன் மாப்பிள்ளை பற்றி அந்த பாடலில் நகைச்சுவையாக கூறப்பட்டிருந்தது..முதல் முறையாக அந்த பாடலை கேட்டேன்.கேட்கும் போதே சிரிப்பு தாங்க முடியவில்லை.
.அப்போதே உள்ளூர் மணமகன்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க போல..அதே நிலைமை இப்பவும் தொடரத்தானே செய்கிறது..என்ன சீதனம் அப்போது ஆயிரங்களில்..இப்போ லட்சங்கள் கோடிகளில்..அந்த பாடல் உங்களுக்காக...

ண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!

அன்றொரு நாள் நடந்தது
அவசரக்கலியாணம்
பிளேன் இலே தான் பறந்து வந்தார்
மாப்பிள்ளை சிவஞானம்
மாப்பிளையும் பெண்ணுமாக
வெளியூர் பிரயாணம்
போன பிளேன் இல் திரும்பி வந்தாள்
போச்சுது அவள் மானம்..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்..!!

என்ஜினீயர் எண்டு சொல்லி
புளுகித் தள்ளினாராம்
லண்டன் இல் ஓர் ஹோட்டலில்
வெயிட்டர் வேலை தானாம்!
கொண்டு போன காசிலே தான்
காரும் வாங்கினாராம்
என்று அந்த பெண்ணும் வந்து
சொல்லி அழுதாராம்!
லண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!

இப்பவும் உள்ளூர் அழகிகளை வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு வழி(வலி) அனுப்பி வைக்கும் உள்ளூர் மாப்பிளைகளுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
இத பாக்குற லண்டன் மாப்பிளைகள் தயவு செய்து அடுத்த பிளேன் பிடிச்சு வந்திடாதீங்க எனக்கு "ஆபீஸ் ரூம்"போட..
காரணம் என்னுடைய நண்பர்கள் பலரும் லண்டன் மாப்பிளைகளே!!
பாத்து துள்ளல் போட்டது போக உங்கள் பின்னூட்டல்களையும் வோட்டினையும் விட்டு செல்லுங்கள்.

Post Comment

Friday, September 17, 2010

அரைச்ச மாவ அரைப்போமே...!!


(ரஜனி மனசுக்குள்ளே)
வயசானாலும் உன்
அழகும் சிரிப்பும்
உன்ன விட்டு போகலையே
ஐசு...!!

(ஐஸ் மனசில்)
அறுபதிலேயும் உங்களுக்கு
ஆசை போகலையே
பாஸ்'சு..!!

(பார்த்தீபன்)
கருங்கல்லுக்கு
ஒளியேற்றிய
சூப்பர் பிகர்
நீ...எனக்கு
முன்னொரு காலம்!

(சீதா)
நிறம் கூட
மேட்ச் ஆகல நமக்கு..
சதீஷ்'இன் பிகர்
நான்
இப்போ நீ அமுக்கு!

(சிம்பு)
எப்பிடி எல்லாம்
கடிச்சேன்டி...
இப்பிடி
கழட்டி விட்டிட்டியேடி..
அம்மாடி ஆத்தாடி..!

(நயன்)
நீ தானே கேட்டவன்
தாடி மாமா வல்லவன்
நான் பாதி தடி(தாடி)பாதி
சேர்ந்து இருந்தா
ஜாலி தாண்டா
அதே...
அரைச்ச மாவ
அரைப்போமே..
தொவைச்ச துணிய
தொவைப்போமே!!

Post Comment

Wednesday, September 15, 2010

விளையாட ஜோடி தேவை !!

1997 ஆம் ஆண்டு வெளி வந்த மின்சாரகனவு திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் ரஹ்மான் இன்னொரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.அத்துடன் flimfare விருதும்,தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தன.அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரஹ்மானின் இசையிலும்,ஹரிஹரனின் இனிமையான குரலிலும்,வைரமுத்துவின் வரிகளாலும் அனைவர் மனதையும் கொள்ளையடித்தது..இன்று கூட பலரின் நெஞ்சங்களின் ரிங் டோன் ஆக வெண்ணிலவே இருக்கிறது என்றால் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த பாடலுக்கு நடனமாடிய படத்தின் நாயகன் பிரபுதேவாக்கு டன அமைப்புக்கு தேசிய விருது கிடைத்தது ஞாபகமிருக்கலாம்!!
பெரும்பாலானவர்களுக்கு முழுப்பாடல் வரிகளுமே மனப்பாடமாக இருக்கும் என்பது திண்ணம்!!
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதன் வரிகள் இதோ..

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பல தேசிய விருதுகளுக்கு சொந்தமாகிய அந்தப்பாடலை நீங்களும் இன்னொரு முறை பார்த்து ரசியுங்களேன்!!சரி சரி மெய்மறந்து இருந்தது போக ஒரு ஒட்டு போட்டு போங்கப்பா!!

Post Comment

Saturday, September 11, 2010

யாழ் நோக்கிய மறுபக்கம்!

சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்றேன் பேரூந்தில்.
செல்லும் வழியில் தான் எத்தனை மாற்றங்கள் என் கண் முன்னே!!
மனதை ஈரமாக்கிய சம்பவங்களை உங்களுடன் பகிரலாமென்று..

ண்ணுக்கெட்டிய தூரம்
வரையில்
கால அரக்கனின்
நினைவுச் சின்னங்கள்..
துகிலுரியப்பட்ட
வீடுகள்
கட்டடங்கள் எச்சங்களாய்...!!
களி மண் சகதியால்
குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..!

சேவைக்கால மூப்பு காரணமாக
ஓய்வு வழங்கப்பட்ட
பெரிய நீர்த்தாங்கி
மல்லாக்காய் படுத்து
மீளாத்துயில் கொள்கிறது..!
எல்லையற்ற காணிகள்..
பிடிப்பற்ற வாழ்க்கை..
துளிகளாக சிலர் கண்களில்..!

தூக்கத்தை
கெடுப்பதற்கென்றே
உருவாக்கப்பட்டது போல்
யாழ்-கொழும்பு நெடுஞ்சாலை..
இனிய பாடல்கள் தாலாட்டிய போதும்
தூக்கம் கைக்கெட்டவில்லை..!!

ஒரு அரச மரம்
விட்டு வைக்காமல்
புத்தரின் அனுக்கிரகம்
அருகில்,
பாழடைந்த காளி கோவிலுக்கு
முத்தாய்ப்பாய் ஒரு
மின் வெளிச்சம் மட்டும்!

தனிமையில் வேதனை
அனுபவிக்கின்றன
மின்சார கம்பங்கள்
வீதி நெடுகிலும்..
அதனை எண்ணுவதில்
என் தனிமை
சலனப்பட்டது!

வா வா என
வரவழைத்த பனைகள் எங்கே?
தென்றல் வீசிய
தென்னந்தோப்புகள்எங்கே?
"நெல்லாடிய நிலமெங்கே"
பாடல் மனதை வருடியது..!!

வேதனைகளும் ரணங்களும்
மனதில்..
இயற்கை ரசிகனுக்கு
ஏமாற்றமே மிச்சம்!
நானொன்றும் செயற்கை அழிவுகளின்
ரசிகன் இல்லையே!

பக்தி பரசவத்தில்
பயணத்தை 30 நிமிடம்
தாமதிக்க வைத்த கனவான்களும்
மாற்றான் இடத்தினுள்
தங்கள் தலையை புகுத்தி
படுத்த நண்பர்களுமாய்
பயணம்!!

எண்ணக்கிடக்கைகள்
ஏராளம்..
முடிந்தால் வந்து
என் மனதை படியுங்கள்
அரவமற்ற இராப்பொழுதில்!!

பதிவு மற்றவர்களையும் சென்றடைய இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் உங்கள் வாக்குகளை அளித்துச்செல்லுங்கள்..ஏதும் சொல்ல விரும்பின் பின்னூட்டங்களாய்..!

Post Comment

Thursday, September 9, 2010

பெண்ணுரிமையும் தொலைந்து போகும் ஆணுரிமையும்!!

பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும்.
எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!!



ஆணுரிமை!!
பெண்ணுரிமை பற்றிப்
பேசிப் பேசியே
ஆணுரிமையை தொலைத்துவிட்டு..
தொலைத்துக்கொண்டு இருக்கும்
ஆண்களின்
எதிர்காலத்துக்கு
ஒரு அலாரம்!!
உரிமைக்காக ஏங்கியவர்களிடம்
தம்முரிமைக்காக
கையேந்த வேண்டிய கையாலாகாத்தனம்..
முதலாளிகள் முதலாளித்துவத்தை
இழந்து போகும் தருணம்..
எந்த சம்பாத்தியத்தை காட்டி
கட்டி ஆண்டானோ
அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!
அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!
ஆண் மகனே..
உனக்கு
அணி சேர்த்த அத்தனையும்
இன்று அவள் கையில்!
உன்னிடம் எதிர்பார்த்த
பெண்ணிடம்
இனி நீ எதிர்பார்ப்பாய்..
அன்பை
ஆதரவை
பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!

நடப்பு தெரியாமல்
நடமாடும்
ஆண் வர்க்கமே
விழித்தெழு!!
ஆணுரிமைக்கு
குரல்கொடு!!
ஆரம்பத்திலே அறிந்து கொள்
அல்லாவிடில்
அடுத்த நூற்றாண்டு
பெண்நூற்றாண்டாக
மாறும்
நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது மனிதா!!

யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!


டிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!

பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்கள் மற்றும் வாக்குகளை விட்டுச்செல்லுங்கள் மற்றவர்கள் தொடர்வதற்காக!

Post Comment

Tuesday, September 7, 2010

ஆதலினால் காதல் செய்வீர்!!



ல்தோன்றி மண் தோன்றா
காலத்தில்
முன் தோன்றிய
முதலுணர்வு
காதலென்பேன்!

காலத்தால் மூத்து
ஆதாம் ஏவாள்
மனங்களில் பூத்து
பிரபஞ்ச இயக்கத்தின்
மூத்த சக்தி
காதலென்பேன்!

ழு கடல் போதாதென்று
கண்ணீர் கடல்
தோற்றுவித்த
இயற்கையில் நுழைந்த
செயற்கை
காதல் என்பேன்!

ழுதாத விரல்களையும்
இறைவன் தலைஎழுத்தை
மீறி
எழுதவைக்கும் கவி
அது காதலென்பேன்!!
தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!

நினைவு பளிங்கு கல்லை
காதல் சின்னமாக்கி
சாஜகான் பேர் பெற்றதும்
சிறை வாழ்க்கை
அடையப்பெற்றதும் காரணம்
காதலென்பேன்

டவுள் படைத்தது
இருவராயினும்
இன்றுவரை உலக சனத்தொகை
காமம் முதல்கொண்டு
சாதல் கொலை வரை
தீர்மானிக்கும் கடவுள்
காதலென்பேன்!!
காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...வாழ்க்கை...வாழ்வோம்
காதலுடன்!!

டிஸ்கி:இதனால் சகலருக்கும் அறியத்தருவது என்னவெனில் பாலகுமாரனின் தலைப்பு போல் "ஆதலினால் காதல் செய்வீர்"!!
நாம சொல்லித்தான் நீங்க எல்லாம் பண்ணுவீங்க எண்டு தெரியும்...ஆல்ரெடி எத்தினைக்கு ஆட்டைய போட்டீங்களோ!!கடவுளே காப்பாத்து!!

காதலிக்கும் காதலிக்க போகும் காதல் பிடிக்காமலிருக்கும் யாராயினும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை ஓட்டாக பின்னூட்டமாக விட்டுச்செல்லுங்கள்!

Post Comment

Sunday, September 5, 2010

என்ன இது ஒரு நாள் தானா?



ஆசிரியர் தினம் அக்டோபர் 5 கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும்.இன்னும் ஒரு மாதம் இருக்கிறது சரியாக!..ஆண்டில் ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களை வாழ்த்தாமல் காலம் முழுவதும் நாம் அனைவரும் கற்பித்த ஆசான்களை மறக்காமல் இதயத்தில் ஆலயம் கட்டி வழிபட வேண்டும்..அதுவே ஆசான்களுக்கு நாம் வழங்கும் மரியாதை மதிப்பு எல்லாமே..

நான் யாழ்ப்பாணம்(இலங்கை)சென் ஜோன்ஸ் கல்லூரியில் படித்து வெளியேறியவன்.அவர்கள் ஞாபகார்த்தமாக,என் நண்பர் ஒருவரின்(அடிக்கடி பின்னூட்டமிடும் வள்ளல் "அனுஷாங்" தான்)வேண்டுகோளுக்கமையவும் எழுத்தப்பட்ட கவிதையை எனது பதிவுலகில் பதிவோம் அதற்கு இன்று தான் நல்ல சூழ்நிலை என்பதால் பதிவிடுகிறேன்..



பார் போற்றும்
பரியோவானில்
நாம் போற்றும்
கனவான்களே..
ஆசிரியர்களே!
பரியோவான் ஆலயத்தில்
எம்மை ஆட்கொண்ட
பெருந்தகைகளே!

கல்விச் சூரியன்களே
உங்கள் கதிர் பட்டு
உயிர்ப்புற்ற தாவரங்கள் நாம்!

சொல்லுக்கு அரிச்சந்திரன்
வரலாற்றிலே!
வில்லுக்கு அர்ச்சுனன்
பாரதத்திலே!
அன்புக்கு அன்னை எமக்கு
ஆரம்பத்திலே
பண்புக்கு பரியோவான்
பார்புலத்திலே!!

பற்றுத்தான் நம்
பரியோவான் மேல்
அன்பு எங்கள்
ஆசிரியர் மேல்!!

கற்று நாம்
ஆளாக
தானாக நாம்
பாராள

ஏதாக எமக்கமைந்த
படிக்கற்கள் நீங்கள்!

எமக்கு அறிவு புகட்டிய
அறிவாலயத்தின் முத்துக்களே!
விதையாய் வீழ்ந்தோம்
முதலாம் ஆண்டில்.
விருட்சமாய் மாற்றினீர்கள் எம்மை
பதின்மூன்று ஆண்டுகளில்!

பள்ளி சேரும் முன்னே
இருவர் தானே உலகம்
பள்ளி சேர்ந்த பின்னே
நீங்கள் தான் எங்கள் உலகம்!

கண் மூடிப் போற்றுகின்றோம்
இக்கணம்
கண் எதிரே நீங்கள்!
மனம் திறந்து வாழ்த்துகிறோம்
திறந்த பொஸ்தகம் நீங்கள்!

நும் செயலால்
அறிவால்
நடத்தையால்
நாகரீகத்தால்
முன் மாதிரியாய்
திகழ்ந்தீர்..
எம்மை செதுக்கினீர்!

துவண்டு போன போது
தட்டிக் கொடுத்தீர்
தோல்விகள் சூழ்ந்த போது
தட்டிக் கொடுத்தீர்
தோளோடு தோள் நின்ற
தோழனானீர்!

கற்பித்த காலங்களில்
கல்வியா கற்பித்தீர்?
அனைவரும் கூடி இருப்பதால்
வெளிப்படட்டும் உங்கள் ரகசியம்!
கல்வியோ கலைகளோ
பண்போ பணிவோ
பழக்கவழக்கமோ
எது விட்டீர்??
நேரம் தவறாமை
நன் நெறி பிறழாமை
தீயோர் சொல் கேளாமை
அப்பப்பா எதனை நான் அடுக்க!!

நீங்கள் சிற்பிகள்!
எங்களை செதுக்கினீர்கள் !
நீங்கள் தலைவர்கள்!
எங்களை வழி நடத்தினீர்கள்!
நீங்கள் "குரு"க்கள்!
எமக்கு ஞானம் தந்தீர்!
நீவிர் ஒவ்வொருவரும் அகராதிகள்!
விளக்கங்கள் தந்தீர்!




வாழ்த்துக்கள் கூற
நான் பெரும் கவிஞனுமல்ல!
வாழ்க்கையில் மைல்கற்கள்
தொட்டவனுமல்ல!
உங்களின் மாணவன்
சீடர்களில் ஒருவன்
நன்றிகள் சொல்ல நினைக்கும்
அந்த
ஆயிரம் உள்ளங்களில் ஒருவன்
இத்தனை தகுதிகள் போதும்
என் ஆசானை வாழ்த்துரைக்க
வாழ்க என மனமுவக்க
நெஞ்சங்கள் கூடி
உங்கள்
பெருமைகளை எடுத்துரைக்க!

நும் புகழ் தான் பேச
என்ன இது
ஒரு நாள் தானா?
அத்தனை தானா
பந்தம்?
வாழ்க்கையோடு இணைந்த
சொந்தம் ஆசான்கள்
!




டிஸ்கி:இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது ஆசிரியர் தினம் ....!அத காலை செய்திகளில் பார்த்து இலங்கையிலும் இன்றைக்கும் என்று எண்ணி பதிவிடப்போய் இத்தோடு 3 வாட்டி எடிட் பண்ணிட்டன் பதிவை!மன்னித்தருளுக!!

Post Comment

Friday, September 3, 2010

பதினெட்டு வயதில்!!





இதுவும் ஒரு புதிய முயற்சி தான்..எப்போதும் தனியே கவிதைகளை மட்டும் பதிவிடுவதன் மூலம் உங்கள் கடுப்பை கிளறிவிடுவதை தவிர்ப்பதற்காக இன்று வித்தியாசமாக ஏதும் பண்ணலாமே என்று எண்ணிக்கொண்டு கழிவறையில் உட்கார்ந்து சிந்த்தித்துக்கொண்டிருந்த போது என் பொறியில் (அதாங்க மூளையில்)தட்டியது இந்த எண்ணம்!

இது வரை வந்த தமிழ் திரை இசை பாடல்களின் முதல் வரியை மட்டும் வைத்து கோர்வை ஆக்குவதன் மூலம் ஒரு "கவிதை"?? என்ற வடிவில் பதிவிடலாமே என்று முயற்ச்சித்தேன்..அதன் வெளிப்பாடு தாங்க இது!
"தமிழ்ப்படம"என்று அவங்க உல்டா பண்ணி பண்ணும் போது..நாம பதிவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன!!
அது சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தமெண்டு தானே கேக்குறீங்க..என்ன பண்ணுறது இப்பிடி கிளுகிளுப்பா தலைப்பு வைச்சா தான் நம்ம இளைய சமுதாயத்துக்குபிடிக்குது!!
சரி இப்ப பாருங்க..பாத்திட்டு இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு பார்த்த மாதிரி இருக்கு எண்டு பின்னூட்டமிட்டீன்களோ...விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லைங்கோ!!

ரு மாலை இளவெயில் நேரம்..
வராக நதிக்கரையோரம்..
கருகரு விழிகளால்
கண்கள் இரண்டால்
சுட்டும் விழி சுடரே
உயிரே உயிரே
அஞ்சலி அஞ்சலி
என் காதலே!
மார்கழிப்பூவே
மலரே மௌனமா?

ரு பொய்யாவது சொல் கண்ணே
சொல்லாயோ சோலைக்கிளி?
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
மனசுக்குள்ளே காதல் வந்திச்சா?
முதல் முதலாய்?
லேசா லேசா?
மனப்பெண்ணே!
நேற்று இல்லாத மாற்றம் என்னது?
ரகசிய கனவுகள்..
சின்ன சின்ன ஆசை
இருபது கோடி நிலவுகள் கூடி
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
இரவா பகலா
முன் பனியா..
அது ஒரு காலம் அழகிய காலம் !!

வேறென்ன வேறென்ன வேண்டும்
புது வெள்ளை மழை
மின்னலே நீ வந்ததேனடி?
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ!
அழகிய லைலா!
என்னை கொஞ்சம் மாற்றி..

தினெட்டு வயதில்
அலைபாயுதே!
பால் போல பதினாறில்
அழகான புள்ளி மானே
ஈரமான ரோஜாவே
கண்ணே கலைமானே
கேளடி கண்மணி
உசிரே போகுதே உசிரே போகுதே
டெலிபோன் மணி போல்!
சௌக்கியமா கண்ணே?
அந்தி மழை பொழிகிறது!
சொட்ட சொட்ட நனையுது
என்ன இது என்ன இது..!!

ன்ன விலை அழகே
எவனோ ஒருவன்
எங்கேயோ பார்த்த மயக்கம்
மனம் விரும்புதே உன்னை உன்னை!
நீ நடந்தால் நடை அழகு!
சிறு பார்வையாலே கொன்றாய் என்னை
இரு விழி உனது!
தாலியே தேவையில்லை நீ தான் என் பொண்டாட்டி!

சரி என்ன தான் கோபதாபங்கள் இருந்தாலும் சொல்லிட்டு போங்கோ..பிடிச்சிருந்தா ஓட்ட போட்டு போங்கோ!



Post Comment

Wednesday, September 1, 2010

சின்ன ராசாவே உல்ட்டா மொக்கை!!

எல்லாத்துக்கும் முதல்ல இந்த சின்ன ராசாவே பாடலை பாருங்கள்.(பாடல் தெரியாதவர்கள் மட்டும்)

பிரபல்யமான அந்த பாடலை தற்பொழுது ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர்(டெஸ்ட் அணியின் என்று குறிப்பிட வேண்டும் அல்லாவிடில் "கன்கொன்" கண்டு பிடித்து விடுவார்!)சல்மான் பட் மற்றும் ஒரு நாள் அணித்தலைவர் அப்ரிடி ஆகியோருக்கு இடையில் நடைபெறும் உரையாடல் போல அந்த பாடலை உல்டா பண்ணி எதோ ட்ரை பண்ணி இருக்கேன்..சும்மா நீங்களும் தான் பாடிப்பாருங்களேன்!!

Salman butt:சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வாங்குற சம்பளம் பத்தாது-அதால
அடிக்கிற ரன்ஸ்'உம் நிக்காது
அட பிடிச்சிட்டான் பிடிச்சிட்டான்
கையோட பிடிச்சிட்டான் ஆசிப்பே!
ஆமீரே!
சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்

Afridi:குள்ளப்பய கதைய கேட்டு
வெள்ளை பய சொல்ல கேட்டு
ரூம்'அ பூட்டி நைஸ்'ஆ தானே
வாங்காதே நீ கையில் துட்டு!

Butt:கொஞ்சம் பொறு அப்-ரி-டி
சிக்கிட்டேன் நான் கீரிப்பிடி
ஆசிப்,ஆமிர்,பட்'டும் தானே
பேப்பர்'இல வந்தோம் தானே!
Afridi:அட பட்'டுப்பய..... தூண்டில் அவன் போட
ஆசையிலே.. மாட்டி நீ தானே...............
அட சிக்கிட்டாய் மாட்டிட்டாய்
சீரழிஞ்சு போப்போறாய் ....நீ தானே
காசு கைய கடிக்குதா!!
லஞ்சம் வாங்காம
அடிக்கடி ராத்திரி விடியுதா!

Asif,Aamir:சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு

Butt:லண்டன் பக்கம் போகும் நாம
காசு பணம் கொஞ்சம் பாத்து
உக்காந்து தான் சுளையா பாக்க
சூதாட்டம் தான் சிம்பிள் வொர்க்'கு!

Afridi:ஒன் டே போட்டி நேரம்...
டுவென்டி டுவென்டி நேரம்..
உன்ட கதை முடிஞ்சு
வாழ்க்கையையே அழிஞ்சு!

Butt:சிறு சம்பளம்... வாங்கும் அப்-பரி-டி
இது லம்ப்பாக.... வரும் சொர்க்கம் தான்...
அட சிக்கிட்டேன் மாட்டிட்டேன்
சீரழிஞ்சு போயிட்டேன் ....நான் தானே
காசு கைய கடிச்சதே!
லஞ்சம் வாங்காம
அடிக்கடி ராத்திரி விடிஞ்சதே !
சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வாங்குற சம்பளம் பத்தாது-அதால
அடிக்கிற ரன்ஸ்'உம் நிக்காது
அட பிடிச்சிட்டான் பிடிச்சிட்டான்
கையோட பிடிச்சிட்டான் ஆசிப்பே!
ஆமீரே!
கடைசில நெசமாவே சித்தெறும்பு இல்ல பெரிய கட்டெறும்பே கடிக்குதுங்க..யாராச்சும் ஏதாச்சும் பூச்சி மருந்து வாங்கி அனுப்புங்கப்பா!

பாத்தா மட்டும் பத்தாதுங்க ..உங்க ஓட்ட போட்டு பின்னூட்டமிட்டு போங்க..இல்லாட்டி உங்களையும் ச்கோட்லன்யார்ட் போலீஸ்'கிட்ட மாட்டி விட்டிடுவன்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...