Wednesday, December 28, 2011
வடகொரிய தலைவர் இறுதி ஊர்வலம்-சொல்வது என்ன?
Post Comment
Friday, December 23, 2011
நண்பன் "அஸ்க் லஸ்க்கா" பாடல் வரிகள் கார்க்கியிடமிருந்து!
Post Comment
Wednesday, December 21, 2011
பெருசுக ஆடும் ஆட்டம்!!வைக்கிறேன் பாரு வேட்டு !!
குறிப்பு:இந்த பதிவில் பெரியவர்களை இந்த வலைப்பதிவின் ஓனர் கேவலமாக திட்டி இருப்பதால் அதை பொறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டோர் மட்டும் மேலே வாசிக்கவும்.
"*********** மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இந்து உயர்குலம்,அரச சேவையில் ஓய்வு பெற்ற மணமகளுக்கு நல்ல துணியை(சாரி துணையை) தேடுகின்றனர்.மணமகன் 55 க்கும் 60 க்கும் இடைப்பட்டவர் ,ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது."
கடந்த ஞாயிற்று கிழமை இலங்கையின் நாளிதழ் வீரகேசரியில் பிரசுரமாகி இருந்த விளம்பரம் தான் இது.நாட்டில மழை பெய்யாம போறது சுனாமி அடிக்கிறதுக்கெல்லாம் இது தான் காரணமாக்கும்.அம்பத்தஞ்சு அறுபது வயசில என்ன கலியாணம் வேண்டி கிடக்குது?பிற்க்காலத்தில,வயசு போன காலத்தில பாத்துக்க ஒரு துணை வேணும்னு இந்த "மண ஆச்சிக்கு" முன்னமே தெரியாதாமா?
அறுபது எழுபது வயசில கல்யாணத்த கட்டி நம்ம உசிர வாங்கிறது.இத பாத்திட்டு ஊர்ல சும்மா சாக கிடக்கிற கிழடுகளும் விளம்பரம் போட்டாலும் போடுங்கள்.அப்புறம் நம்மள மாதிரி யூத்'துக நிலைமை என்னாகிறது?
******** மாவட்டத்தை சார்ந்த இந்து உயர் குளம்,அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மணமகனுக்கு(?) அழகான,சிவந்த,மெல்லிய,படித்த,நல்ல பழக்கவழக்கம் கொண்ட,முக்கியமா முதியோரை கனம் பண்ணும் மணமகளை எதிர்பார்க்கின்றனர்.சீதனம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதையும் பாத்திட்டு சில வீணா போன பெருசுக தங்க பெண்பிள்ளைகளை கட்டி வைக்குங்கள்.மாப்பிளை ஊர் சுத்தமாட்டார்.கண்ட கிண்ட சகவாசம் இருக்காது.காவாலி பசங்க ப்ரெண்ட்ஸ்'சா இருக்கமாட்டாங்கன்னு.கொய்யாலே.
இதை எல்லாம் பாத்துகிட்டு என்ன பண்ணுவீங்க இளைஞர்களே?பொங்கி எழவேண்டாம்?இல்ல சும்மா தான் கேக்கிறன் இவளுகளுக்கெல்லாம் வெக்கமே கிடையாதா?அறுபது வயசில கலியாணம் கட்டிவினம்,மாப்பிள தோழன் தன்னுடைய பேரப்பிள்ளை சகிதமா மணமேடைக்கு வந்திருப்பார் .பொம்பிள்ளை தோழி ஆஸ்பத்திரியில இருந்து படுக்கையோட தூக்கி வந்திருப்பாங்க...இந்த கேடுகெட்ட பிழைப்பு தேவை தானா?
கொஞ்சம் இளமை தூக்கலா இருக்கட்டுமேன்னு தாலி கட்டி முடிஞ்சாப்புறம் "வை திஸ் கொலைவெறி டி" பாட்டு போட்டு ஒரு குத்தாட்டமும் ஆடினீங்கன்னு வையுங்க அங்கிள்ஸ் அண்ட் ஆண்டீஸ்,முதல் கொலை பண்றது நானா தான் இருக்கும் ஆமா!
முளைச்சு மூணு இல்லை விடலை உனக்கெல்லாம் காதல் கல்யாணம் கத்தரிக்காய் கேக்குதான்னு இனி எவனாச்சும் கேட்டு பாருங்க...மவனே..முளைச்சு முப்பத்தாறு கழுதை வயசான இந்த கிழடுகளே இந்த ஆட்டம் போடும்போது,நம்ம வயசில நாம சரியான வேலை தான் பண்றம்னு சட்டை காலர தூக்கிவிடுங்க மச்சான்ஸ்!!
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா நீங்க போயி அம்மா அம்மா எனக்கு கல்யாணம் செய்ஞ்சு வையம்மான்னு கேட்டா அம்மா சொல்லுவா இப்ப தான் அந்த தாத்தாவுக்கே ஆகி இருக்கு..உனக்கு இன்னும் நாற்பது வருஷம் இருக்கு கம்னு கிட என்பா...தேவையா?இல்ல தேவையாங்கிறேன்?
எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அம்பத்தஞ்சு வயசில கல்யாணம் கேக்குதாம்...
கலிகாலம் கலிகாலம்னு அடிக்கடி புலம்பிற பெருசுகளே,ப்ளான் பண்ணி நம்மள புலம்ப வைச்சிட்டீங்கள்'ளே!விடமாட்டான் இந்த இளைஞர்களின் காவலன்,இளைஞர்களின் ஆழ்வார்,இளைஞர்களின் மாப்பிள்ளை மைந்தன் சிவா!!(அப்பாடி எல்லாத்தரப்பையும் திருப்திப்படுத்தியாச்சு!!)
இனி எந்த பெருசாச்சும் உங்களை கேவலப்படுத்தினா என் ப்ளாக்'ஐ காட்டி நச்சுன்னு அவங்க வாயை மூட வையுங்க மக்களே!(அவங்களாச்சும் நம்மள வாசிக்கட்டும்).
இப்படி ஏதாச்சும் 'காலாவதியான கல்யாணம்' நடப்பதாய் கேள்விப்பட்டால் உடனே நம்ம சங்கத்துடன் தொடர்புகொள்ளுங்க.மிச்சத்தை நாங்க பாத்துக்கிறம்!!
சங்கத்து முகவரி:
'இளைஞர்கள் தன்மான படையணி"
தலைமையகம்:நம்பர்......
என்ன எங்கடா நம்பர காணோமேன்னு தலைய பிச்சிக்கிறாங்க பாருங்க பெருசுக.ஏன் வீடு தேடிவந்து போட்டுத்தள்ளவா?
சிக்கமாட்டான் இந்த மைந்தன் சிவா!!
"சில்வண்டு சிக்கும்...சிறுத்தை சிக்காதிலே!!!
Post Comment
Friday, December 16, 2011
மயக்கம் என்ன+போராளி =யதார்த்தம்
தமிழ்ப்படங்கள் பார்பதற்கும்,பதிவுகள் போஸ்ட் பண்ணுவதற்கும் என்னமோ இப்போது பெரிய ஆர்வம் இருப்பதில்லை.இரண்டுக்குமே குறைந்தது மூணு மணிநேரம் ஒதுக்கிவிட வேண்டும்.அடிக்கடி பதிவுலக நண்பர்கள் முணுமுணுப்பது போல,இப்போதெல்லாம் பதிவுகளை வாசிப்பவர்களை விட எழுதுபவர்களே அதிகமாய் இருக்கிறார்கள்..எனக்கும் அதில் கொஞ்சம் உடன்பாடு தான் ஆனால் இன்ட்லி தனது சேவையில் ஏற்படுத்திய மாற்றம் தான் பெரிய தாக்கத்தை ப்ளாக் பார்ப்போரின் எண்ணிக்கையில் ஏற்படுத்தி இருந்தது என்பது நான் கண்ட உண்மை.
யதார்த்த சினிமா வகையறாவுக்குள் இந்த மயக்கம் என்ன மற்றும் போராளி படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.சசிக்குமார்,சமுத்திரக்கனியின் வழமையான போர்முலாவில் வெளிவந்திருந்தாலும் கூட "போராளி" சமூகத்துக்கு ஒரு நச் மெசேஜ் ஒன்றை வழங்கியிருக்கிறது.சமூகத்தாலேயே பல மனநலம்குன்றியவர்கள் உருவாகிறார்கள்,உருவாக்குபவர்கள் உருவாக்கிவிட்டு கைவிட்டு சென்றுவிடுகிறார்கள்.மனநலம் குன்றியோரில் பெரும்பாலானோரை உருவாக்கிய பெருமை இந்த சமூகத்துக்கே உடையது என்று சசிக்குமார் படத்தில் தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.முக்கியமாக உறவினர்கள்.சொந்த உறவை விட நட்பே பெரியது என்று நாடோடிகளில் தொடர்ந்ததை போராளியிலும் தொடர்ந்திருக்கிறார்.சசிக்குமாரின் வாயிலிருந்து வெளிவரும் வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஷார்ப்!!சமுத்திரக்கனியின் எழுத்து பிரகாசிக்கிறது.
"சொந்தமெல்லாம் சும்மா...அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் பாத்துக்கணும்"
"எப்பவோ கிடைக்கிற பால்கோவாவை விட இப்ப கிடைக்கிற பப்பரமிட்டாய் தான் முக்கியம்"
இப்படி படம் முழுவதும் பல பன்ச் வசனங்கள் கொட்டிக்கிடக்கிறது!இந்த இரண்டு வசனங்களும் படம் பார்த்த எபெக்ட்டில் பேஸ்புக்கில் பகிர்ந்துகிட்டது.
நாடோடி படத்தில் காட்டு காட்டிய 'சம்போ சிவசம்போ"போல போராளியிலும் ஒரு சேசிங் சாங்,அத்துடன் முதல் பாடலான "வெடி போட்டு பாடடா" பாடலும்,அது காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் கட்டாயம் நாடோடிகளை ஞாபகப்படுத்தும்!அதை தவிர பாடல்களுக்கு படத்தில் பெரிதான முக்கியத்துவம் இல்லாததாலோ என்னமோ பெரிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளவில்லை.
நுனி நாக்கு இங்கிலீஸ் பேசும் கூட்டம் ஒரு பிரச்சனைன்னு வந்திட்டா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்வார்கள் என்று வரும் காட்சி உண்மைகளை தொட்டு செல்கிறது.சாதாரணமாக வீதியிலோ வேறு எங்கிலுமோ ஏதும் பிரச்சனைன்னு வந்திட்டா களத்தில் இறங்கி வேலை செய்பவர்களில் இந்த நுனி நாக்கு இங்கிலீஸ் கூட்டமோ,"ப்ரோபெஸ்சனல்ஸ்" என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கூட்டமோ இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்,ஏன் நாங்களும் அந்த கூட்டத்துள் ஒருவராய் இருக்கவும் கூடும்!
மனிதனின் மிருககுணம் வெளிப்படுவதும் வெளிப்படாமல் இருப்பதும் அவனை சுற்றி இருப்போர் கைகளிலேயே இருக்கிறது.தங்கள் சுயநலனுக்காய் மற்றவனை பைத்தியக்காரன் ஆக்கவும் இந்த சமூகம் பின்னிற்காது,மன நலம்குன்றியோர் மீது அதிக கரிசனை தேவை என்று பல நல்ல செய்திகளை சொல்லி முற்றுகிறது போராளி திரைப்படம்.இரண்டாம் பாதி சற்று அதிகமான வன்முறைக்காட்சிகள் காட்டப்பட்டிருந்தாலும் கூட,படத்தின் கருவுக்கு அது தேவைப்படுகிறது.சசிக்குமார்க்கு இன்னொரு வெற்றிப்படமாய் போராளி அமையும்!!
அடுத்த படைப்பில் இந்த நாடோடிகள்,போராளி படங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வித்தியாசமான படைப்பொன்றையே சசிக்குமாரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.அடுத்தபடத்தில் மறுபடியும் சுவாதியா??(சசிக்குமார்+சுவாதி எப்போ கல்யாணம்?அழகான ஜோடி!)
-------------------------------------------------------------------------------------
"மயக்கம் என்ன" செல்வராகவனின் அடுத்த வித்தியாசமான படைப்புன்னு சொல்லலாம்.தம்பி தனுஷை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில்,"கால- களத்தில்" பெரிய நட்சத்திர பட்டாளம் இன்றி ஆர்ப்பாட்டமின்றி வழங்கி இருக்கும் அடுத்த யதார்த்தமான படைப்பு.படம் வந்த சில நாட்கள் இணையப்பக்கம் தலைவைத்துப்பார்க்க முடியவில்லை.காச்சு மூச்சென்று படத்தை பற்றி ஏகப்பட்ட எதிர்மறையான,காரசாரமான விவாதங்கள்.அந்தளவுக்கு என்ன தான் இருக்கிறது படத்தில் என்று பார்க்கும் ஆவலும்,கடந்த வாரத்தில் கிடைத்த எதிர்பாராத ஓய்வான மணித்தியாலங்களும் "மயக்கம் என்ன" படத்தை பார்க்க வைத்துவிட்டன.
எனக்கென்னமோ செல்வராகவனின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால்,அவரின் அடுத்த படங்களின் கதைகளை கூட கண்டறியலாம் என்று தோன்றுகிறது.அவரின் படக்கதைகள் சொந்த வாழ்க்கையில் நடந்த கதை போலத்தான் தெரிகிறது.
ஒரு சராசரி இளைஞன் தன் வாழ்க்கையில் வெற்றி பெற,தனது இலட்சியத்தை அடைய போராடும் போது ஏற்படக்கூடிய தடங்கல்களும்,எதிர்பாராத திருப்பங்களும் ஒன்று சேர,எப்போது,எப்படி தன் இலச்சியத்தை அடைகிறான் அதற்காக எவற்றை எல்லாம் தாங்கிறான் என்பதை புகைப்பட கலைஞனாக ஆசைப்படும் தனுஷின் "ஜீனியஸ்"கரெக்டரின் மூலம் செல்வராகவன் எவ்வித குழப்பங்களுமின்றி காட்டி இருக்கிறார்.
பாத்திரத்துக்கு சரியான கதாநாயகன்.எத்தகைய நடிப்பையும் இலகுவில் வெளிப்படுத்திவிட்டு செல்கிறார் தனுஷ்..படத்தின் மையக்கருவை தவிர்த்து,படத்தில் இடம்பெறும் ஆண்-பெண் காட்சிப்படுத்தல்கள் தான் பலரின் கவனத்தை திசை திருப்பி எதிர்மறை விமர்சனங்கள் வெளிப்படுத்த தூண்டி இருக்கிறது.இவர்கள் எல்லாம் எந்தக்காலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.நாட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அறிவாவது இவர்களிடம் இருக்கிறதா?எங்கள் சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஆண் பெண்,டேட்டிங் கலாச்சாரம் இல்லை என்று முற்றாக மறுத்துவிட முடியுமா இவர்களால்?இன்னமும் ஒரு ஐந்து பத்து வருடங்களில்,சமூக வலைத்தளங்களின் அபரிதமான வளர்ச்சியாலும்,கலாச்சார முன்னேற்றம்,மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்கள் என்பவற்றால்,படத்தில் காட்டப்பட்டிருக்கும் விடயங்கள் சர்வசாதாரணமாய் நடந்தேறிக்க்கொண்டிருக்கப்போகிறது.
இயக்குனர் செல்வராகவன்,கதாநாயகன் தனுஷ்,நாயகி ரிச்சா,ஒளிப்பதிவாளர் ராம்ஜி,மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் ஆகிய ஐவருமே படத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.யாமினி மாதிரியான கேரக்க்டர்கள் நிஜ வாழ்வில் பையன்களுக்கு ஆபத்து தான்.அவதானம் அவசியம்!அதே சமயம் தனுஷின் நண்பர் போல எவனும் தான் செட் பண்ணும் பொண்ணை குளிக்கும்போது கூட அவளுக்கு பல்லி என்றால் பயம்,பார்த்துக்கொண்டிரு நான் அவசரமாய் ஆயி போயிட்டு வாறன் என்று விட்டுவிட்டு போகமாட்டான்.நண்பர் சுந்தர் அனைத்து காட்ச்சிகளிலுமே அப்பாவியாய் ரிச்சாவை தனுஷுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது போல காட்டி இருக்கிறார்கள்.சில சினிமாத்தனங்கள் இருந்தாலும் கூட,செல்வராகவன் தனது பாணியை இந்தப்படத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.
அடுத்த தலைமுறைக்கான படம் என்று செல்வா முன்னமே கூறி இருந்தார்.உண்மையில் அடுத்த தலைமுறைக்கும்,இன்றைய இளைஞர் தலைமுறைக்குமான படம் தான் மயக்கம் என்ன!
அடுத்ததாய் தனுஷை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தால் செல்வராகவன்,ப்ளீஸ் அதிலும் தனுஷை ஒரு பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு காட்டிவிடாதீர்கள்.
அதென்னமோ தெரியவில்லை அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடும் படங்கள் தனுஷுக்கு மட்டுமே வைத்துவிடுகிறது.முன்னர் "யாரடி நீ மோகினி".இப்போது "மயக்கம் என்ன":P
இலச்சியத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக...
Post Comment
Tuesday, November 22, 2011
மாமல்லன்(ன்னன்)தைமூர்-மன்னர்க்கெல்லாம் மன்னன்!
தைமூர் (6 ஏப்ரல் 1336-19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய-மங்கோலியரான பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இப்பேரரசு, இந்தியாவில் முகலாயப் பேரரசாக 1857 ஆம் ஆண்டுவரை நீடித்தது.
மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.
தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்கவிளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.
வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.
முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா டில்லியை ஆண்டுகொண்டிருந்த போது தனது படைகளுடன் வந்த தைமூர் கோட்டை வாயிலில் முகம்ம்மது துக்ளக்கின் படையை தோற்கடித்து அரண்மனையினுள் புகுந்து சூறையாடி டெல்லி வீதிகளில் இரத்தம் ஓட செய்தது இரண்டு வாரங்களில் திரும்பி சென்றதாக வரலாறுகள் கூறுகிறன!
குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின்சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ளசமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள்உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது
இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும்,பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சுஎன்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.
உலகம் முழுவதையும் வென்று, தம் அதிகாரத்தின் கீழ்கொண்டு வரவேண்டும் என்று, வெறிபிடித்து அலைந்த மாவீரர்களுள் தைமூரும் ஒருவர். அவருக்கு ஒரே கால்தான் உண்டு. போரின்போது மற்றொரு காலை இழந்துவிட்டார்.
உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.
இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.
அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??
அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.
14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!
தைமூர் | |
தைமூரியப் பேரரசின் எமிர் | |
---|---|
உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசாப்ஸ் என்னும் இடத்தில் உள்ள தைமூரின் சிலை | |
ஆட்சிக்காலம் | 1370-1405 |
முடிசூட்டு விழா | 1370, பால்க் |
முழுப்பெயர் | தாமெட் சிங்கிசிட் கான் |
பிறப்பு | ஏப்ரல் 6, 1336 |
பிறப்பிடம் | ஷாஹ்ரிசாப்ஸ்,திரான்சாக்சியானா |
இறப்பு | பெப்ரவரி 19, 1405 (வயது 69) |
இறந்த இடம் | ஒட்ரார், சிர் தார்யா |
புதைக்கப்பட்டது | குர்-எ அமிர்,சமர்க்கண்ட் |
முன்னிருந்தவர் | அமிர் ஹுசைன் |
பின்வந்தவர் | காலில் சுல்தான் |
அரச குடும்பம் | தைமூரியர் |
தந்தை | முக்ஹம்மத் தரகாய் |
தாய் | தெக்கீனா மொஹ்பேகிம் |
THE TEXT FOR THE PARAGRAPH GOES HERE |