Monday, November 29, 2010

என்திரனில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சா...!!



எந்திரன் படத்தில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சிருந்தா என்னாகி இருக்கும்??
அவர் தானே பாடல்,மியூசிக் எல்லாமே...
தனக்கு பாடல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு சிறிய கற்பனை..
பாடிப்பாருங்கள் எந்திரன் பாடலோடு ஒப்பிட்டு!!



இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் காறித் துப்பும்
இவன் சிறுவன் தாண்டிய உயரம் கொண்டவன்
ஆடு ஆடு தாடி நக்கும்
நீ அழகே TR அழகே
TR என்பவன் எதற்கும் அஞ்சான்!!

அறிவேன் அறிவேன் நானே 1000 அறிவேன்
உன் போல் ரசிகன் கிடைத்தால் சும்மா விடுமா!
திரைக்கதை...என்னோடு
டைரக்சன் ....என்னோடு
நான் பாட்டுக்கும் மியூசிக் போட்டேன் ஹிட்டு ஆகலையே...
***********************************************************************************

டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா
இரும்பிலே முளைக்கும் இருதயம்
மேற்கிலே முதல் சூரிய உதயம்!!
T R "உ உன்னோடு
ஐசு நீ என்னோடு
தாடி தான் என்னோடு
ப்ளேடு உன் கண்ணோடு
சினிமாவே காணாக் காதல்
மச்சினி உன்னோடு...!!
டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா



**********************************************************


MLA சீட்'டுகள் தமிழ் நாட்டில் எத்தனை..
திமுக அதிமுக கட்சிகள் தான் மொத்தம் எத்தனை..
அம்மாவை பிரிந்தால்..
யாவோடு சேரும் சிந்தனை...ஐயோ...
TR TR ஒரே ஹீரோ
அழகின் மொத்தம் நானா....??
நான் வளர்ந்தும் வளராத பையனா..
இல்லை மூளை வளர்ச்சியில் பையனா
இல்லை எதுகை மோனைக்கு பிறந்த பயபுள்ளயா..
அழகின் மொத்தம் நானா...
**************************************************************

பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
தாமில் சினிமாவின் விடியலோ TR
பே-ர-ர-சுவின் தந்தையோ TR
எந்தன் லீலையின் பிள்ளையோ சிம்பு
சிம்பு வம்பு சிம்பு வம்பு வம்பு சிம்பு!!



கொஞ்சம் அனுபவிச்சிருந்தா உங்க கருத்துகள்,ஓட்டுகளை விட்டுச்செல்லுங்கள்!!

Post Comment

Saturday, November 27, 2010

காதலி காதலி காதலில் தவிக்...கிறே....ன்...!!


1996 இல் மிகச்சிறந்த நகைச்சுவை படம் தமிழில் எதுவென்று கேட்டால் மறுக்காமல் வரும் ஒரே
பதில் அவ்வை ஷண்முகி தான்!
கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான இயக்கத்தில்,கமல்,மீனா,நாகேஷ்,ஜெமினி கணேஷன்,ஹீரா,மணிவண்ணன்,நாசர் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளத்துடன்,கிரேசி மோகனின் எழுத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது!
இன்று கூட நம் அனைவர் மனதிலும் உள்ள திரைப்படமென்றால் அது உண்மை!!

ஹரிஹரன் மற்றும் சுஜாத்தாவின் இனிமையான குரல்...
ரஹ்மானின் இசையில் சுஜாதா ஒரு சில பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலம் அது,
அத்தனையும் முத்துக்கள்..இன்றைய காலங்களில் அவரின் குரலை கேட்க முடியாதது வருத்தமே...
குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் போலும்!!

காதலா காதலா காதலில் தவிக்கிறேன் என்ற பாடல் தான்
படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
காதலி காதலி என்று ஹரிஹரன் மட்டும் பாடிய பாடல்
அல்பத்தில் மட்டுமே காண முடியும்.


அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு பாடல்...தேனிசைத்தென்றல் தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல் தான் "காதலா காதலா காதலில் தவிக்கிறேன்"என்ற பாடலாகும்.
மெல்லிசையில் தவழும் இந்தப் பாடல் 1996 இல் அனைவரையும் கட்டிப் போட்ட பாடலாகும்.
இன்று கேட்டாலும் மென்மையான சுகம்...

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் வீசும்
பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்....
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும் ..
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...

(காதலி...)

ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்...
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...


Post Comment

Tuesday, November 16, 2010

என் காதலை பிடித்தால் என்னையும் பிடிக்கும்..!!


நினைவுகள் உன்னை
காதலிக்கின்றன..
உணர்வுகள் ஒன்றித்து
உறவாடுகின்றன..
மனம் மட்டும் மறுக்கிறதே
நான் உன்னை காதலிப்பதை!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!



விடிவெள்ளி உன்
கண்ணில்
உறங்குவதாலோ கண்ணே..
நாள் முழுதும் உன் முன்னே
விழித்திருக்கிறேன்..!!


காதல் பிடித்த
எனக்கு
உன்னையும் பிடித்தது...
உனக்கு-என்
காதலை பிடித்தால்
என்னையும் பிடிக்கும்..!!

உங்கள் விருப்பங்கள் ஓட்டுகளாக..
விமர்சனங்கள் பின்னூட்டல்கலாக..!!

Post Comment

Wednesday, November 10, 2010

"இத கொஞ்சம் தச்சுக் கொடப்பா"


பஸ் ஸ்டாண்டு..
ஒதுக்குப்புர
ஓரத்தில்
சாக்கு விரித்தமர்ந்து
பாலிஷ் டப்பா
ஊசி நூல் பிரஷ்ஷுமாய்
கையில்...

புல் டைம் பார்ட் டைம்
இரண்டுக்குமாய்
ஒரே தொழில்..
8 -5 உழைப்போருக்கு
முன் தொடங்கி
பின் முடிப்பவன்...
பரட்டைத்தலை காயாதிருக்க
கிழியுண்ட பெரிய குடை!!

ஒரு சில பாலிஷ்ஷோடு
நேற்றைய மீதி
தையல் போட்டு
பத்துமணி வெயில்
காலைச் சுட
தீய்ந்த பாண்
துண்டை உண்ண
ஓரமாய் ஒதுங்கும் போது..
"இத கொஞ்சம் தச்சுக்
கொடப்பா"
குரல் கேட்கப்
பசியும் போயிற்று...!!


கருத்துக்கள் பின்நூட்டல்களாய்...
விருப்புகள் ஒட்டுகளாய்...!!

Post Comment

Monday, November 8, 2010

அனுதாபங்கள்...



பதிவு போட கொஞ்ச நாள் gap 'பு விழுந்து போச்சு..
மனத்தாங்கல்கள் மனவருத்தங்கள் என்று இன்று மட்டும்..

எனது பல்கலைக்கழக இரண்டு மாணவர்கள்
அருளீஸ்வரன் நர்சுதன்(3 ஆம் வருடம்)
ரவிதாசன் அன்புதாசன் (இரண்டாம் வருடம்)
colombo வெள்ளவத்தை கடலுடன் சங்கமமாகி உயிர் நீத்து விட்டார்கள்..

ஒன்றாக படித்த பழகிய நண்பர்கள்..
பிரிவு தாங்கவில்லை..

பெற்றோர்கள் எவளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து இருப்பார்கள்..
அதை நாமும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

மது அருந்துவதை எதிர்க்கவில்லை நான்
ஆனால் வீட்டிலோ அல்லது மதுச்சாலைகளிலோ அருந்துங்கள்..
அதை விட்டு கடற்கரையில் தேவை தானா?
எத்தனை பேரை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்கள்...
இறந்தவர்கள் மீதான வெறுப்பில் கூறவில்லை
இனி இருப்பவர்களாவது திருந்தட்டுமே என்று தான்...

அவர்களது ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

அதை விட இலங்கை ஊடகங்கள் நிலைமையோ கவலைக்கிடம்..
உண்மையான செய்தியோடு தங்களது பிட்டு'களையும் சேர்த்து செய்தியை வெளியிட்டது தான்..போன ஆறு மாணவர்களும் குளிக்க சென்றதாகவும் அதில் நான்கு பேரை
கடற்படை காப்பாற்றியது என்றும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன..
ஆனால் உண்மை யாதெனில் ஒரு மாணவர் கடலில் இறங்கியபோது கடல் இழுத்துச்செல்ல மற்றையவர் காப்பாற்ற சென்று இறுதியில் இருவருமே மரணமடைந்தனர் என்பது தான் உண்மை.

காப்பாற்ற கூவியழைத்தும் யாரும் உதவவில்லை என்பது தான் நிஜம்.

என்னது எதுவோ,கவலையடையக்கூடிய சம்பவமாய் அமைந்துவிட்டது.
அன்னாரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..





Post Comment

Tuesday, November 2, 2010

ஒபாமாவின் சிக்கிய கவிதை-2


ஒபாமாட முதல் கவிதையை படிக்க இங்கே கிளிக்கவும்..
(அந்தக் கவிதையையும் எனக்கும் ஒபாமாவுக்கும் இடையிலான relationship ' பல பேர் நம்பேல..
அதால ஒபாமா அந்தக் காலத்தில சிகரட் அடிக்கேக்க நான் எடுத்த படங்கள் பதிவின் முடிவில தாரன்..அப்பவாச்சும் நம்புங்கப்பா!!)

அப்ப சிக்கின கவிதைகளுக்க இது ரெண்டாவதுங்கோ..பாருங்க..
வெளில தான் பெரிய மனுசர்..உள்ள...

ஏய் கிளிண்டன்'..!!
கிழிந்த அண்டெனா நீ!!
நீ கிழித்த
பில்லுகள் தாம் எத்தனை?
பில்லுகள் மட்டுமா
கிழித்தாய் நீ??
ஊருக்கே தெரியுமே
நீ "கிழித்தவைகள்" பற்றி!!

"வைட் ஹவுஸ் இல்
ஒரு figure' விட்டுவைத்தியா?
அதே சூப்பர் பிகர்ன்னா...
உடனே
ஆஸ்த்தான நாயகியா??
என்ன பாவம் செய்தாள்
மோனிக்கா?
பஞ்சு கலரு..
பசுமையான பிகரு..
நன்னாரிப்பயலே..!!
அதான்
ஊட்டில ஹிலாரி
கும்மெண்டு இருந்தாள் தானே?
ஆத்தில ஒண்டு
ஆசைக்கு ஒண்ணா?
அடச்ச் சீ
அடிச்சேன்னா ஆயிப்போயடுவ!!

இப்பெல்லாம் உன்னவிட
என்னோட தான் எந் நேரமும்
ஹிலாரி..தெரியும்லே!
என்ன
நம்ம கலருக்குத் தான்
எவளுமே சிக்குராளுகள்
இல்ல!
மவனே சிக்கிச்சு
சின்னாபின்னம்மாயிடும்...!!
உன்ட மானத்த சொன்னேன்
மானத்த!!

இந்தாங்க நான் எடுத்த ஒபாமா'ட தம்'மடி படங்கள்...!இப்ப நம்புறீங்களா??ம்ம் அது!






என்ன ஒரு கொல வெறி நம்ம ஒபாமா பிரெண்டுக்கு...
மிச்சேல்' சொல்லத்தான் வேணும்..பாப்பம்.
ஓட்ட போட்டிட்டு போங்கப்பா!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...