இது நான் படித்து ரசித்த ஜோக் ஒன்னு...ஆளுக்காள் ஒவ்வொரு எஸ் எம் எஸ்'சை வைத்து பதிவு போடேக்குள்ள நான் இதை பண்ண கூடாதா.
என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
ஜோக்கை வாசியுங்க..செம காமெடி தான்!!
“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
“நம்ம வீட்லதாங்க”
“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப்
போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
“நம்ம மாடா?”
“ஆமாங்க”
“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
“ஐயய்யோ… எப்பிடிடா?”
“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
“யார்ரா செத்தது?”
“உங்க அம்மா”
“எப்படி செத்தாங்க”
“தூக்கு போட்டுக்கிட்டு”
“ஏன்?”
“அவமானத்திலதான்”
“என்னடா அவமானம்?”
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”
ஹிஹி என்ன சொல்லுது பாஸ்?? |