இன்றைய பதிவு கூட எங்கள் இளமையுடன் சம்பந்தப்பட்ட பதிவு தான்.சற்றே நீளமான பதிவு,ஆனால் ரொம்பவே பயனுள்ளது(தேவைப்படுவோருக்கு)!!
பையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம்.அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று "ஸ்வீட்டான பையன்"(Good/Sweet boy) மற்றையது "கெட்ட பையன்"(Bad boy). பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ/கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம்.அது ஒவ்வொரு பொண்ணுக்கும் வேறுபடும்.
ஸ்வீட்டான பையன்
அமைதியான,தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டுநடத்துகின்ற ,திறந்த மனதுடைய,வெளியில் கூட்டி செய்கின்ற,செலவுக்கு பணம் தருகின்ற,பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற,பொதுவில் அன்பானவனாக காட்டிக்கின்ற,ஒவ்வொரு சண்டையிலும் பெண்ணை வெல்ல அனுமதிக்கின்ற,அவள் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கின்ற,உறவுக்கு பாதகமான நபர்களுடன் தொடர்புகளை துண்டிக்க சொல்லும் போது அதனை செய்வனே செய்கின்ற,நண்பர்களுடன் அதிகநேரம் செலவு செய்யாமல் அவளுடனேயே இருக்கின்ற,அவளின் நண்பிகள் "இவன் தான் உனக்கு பொருத்தமானவன்" என்று கூறும்படி நடக்கின்ற பையனை தான் "ஸ்வீட்டான பையன்" என்கிறார்கள் பெண்கள்.
இதனுள் இன்னமும் பல உதாரணங்களை சேர்த்துக்க முடியும்.
கெட்ட பையன்
மிக கடுமையான நடத்தையை கொண்ட,கொடூரமான சிந்தனை கொண்ட,கோபக்கார,பெண்ணை வெளியில் எங்கும் கூட்டி செல்லாத,தானாக மெசேஜ்/கோல் செய்து பேசாத.பொதுவில் ஒன்று சேர நடக்காத,கை கோர்க்காத,அவன் செலவுக்கெல்லாம் தான் பணம் செலவு செய்யணும் என்கின்ற,துணையின் பிறந்த நாளைக்கூட ஞாபகம் வைத்திருக்காத,நண்பர்களுடன் கூத்தாடுகின்ற,அவளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று நினைக்கின்ற,புகை,குடி, என்று ஆர்ப்பரிக்கின்ற,அவளின் நண்பிகளின் மனதை வெல்லாத,எந்தக்கருத்துக்கும் எதிராக கதைக்கின்ற,தானே தனியே தீர்மானம் எடுக்கின்ற எந்த ஒரு ஆணும் பெண் பார்வையில் கெட்ட பையன் தான்.இதை விட நீங்கள் நினைப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த "கெட்ட பையன்" என்பதன் "பார்வை" ஆளுக்காள் வேறுபடும்.ஒரு பெண் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடனும்,புரிந்துணர்வுடனும் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறாள் என்பதிலேயே நல்ல பையன்,கெட்ட பையன் தொடர்பிலான அவளது பார்வை வேறுபடுகிறது.ஒருவளுக்கு கெட்ட பையனாக இருக்கும் ஒருவன் அவள் அவனிடம் வெறுக்கும் விடயங்களை அனுசரித்து போகும் ஒரு பெண்ணிடம் நல்ல பையனாகிறான்.
இணையத்தில் சுட்ட சில சம்பவங்கள்:
Girlfriend: I miss you, can I meet you tonight?
Good Boy: Why don’t you tell me earlier? My mum wants me to stay for family reunion dinner tonight.
Bad Boy: I was just about to ask you the same babe (I have to think on a way to escape the dinner tonight.)
Girlfriend: Can I have a real kiss for my birthday?
Good Boy : Err..
Bad Boy: Just a kiss?
Girlfriend: I feel like hittin' a bar tonight. It's Wednesday's Ladies' Night. What d'ya say?
Good Boy: It's so sad you love the bar more than your church.
Bad Boys: As you wish babe. 9 sharp?
Girlfriend: My boss shouted at me today for breaking her favourite vase.I'm so stress right now :'(
Good Boy:Why you always careless?You should be more careful next time if you don't want to lose your job.
Bad Boy: Here..let me hug you. Don't cry babe. (after a while)... What's her car flat number?
Girlfriend: Wow..these grapes look scrumptious. Do you think the farm manager will sue me if I caught picking a two or three of em now?
Good Boy: Don't do that. I'm not responsible if we get into trouble ok.
Bad Boy: Pick six. half-half.
பெண்கள் என்ன செய்கின்றனர்?
பெரும்பாலான பெண்கள் தாங்களே தங்களுக்கு பொருத்தமான பையனை "பல தெரிவுகளில்" இருந்து தெரிவு செய்கின்றனர்.தங்களைஆண்கள் "துரத்துவதை" பெண்கள் விரும்புகின்றனர்.எந்தப்பெண்ணுமே அதை விரும்புகிறாள்."கெட்ட பையன்" என கூறப்படும் பையன்களின் "துரத்தல்கள்"ளினால் கவரப்பட்டு ஏமாற்றப்பட்டு,அந்த காயத்தை வைத்துக்கொண்டு மிகுதி அனைத்து ஆண்களுக்கும் அதே வர்ணத்தை பூசிவிடுகிறார்கள்.உண்மையிலே "கெட்ட பையன்"எப்பவுமே கெட்ட பையன் தான்.அவர்களுக்கு பெண்கள் மீதான எண்ணம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்துவிடப்போகிறது.பெண்கள் ஆண்களை வெறுக்க முக்கியகாரணமாக அவர்களே இருந்தும்விடுகிறனர்.அதனால் தான் சில பெண்கள்“I Hate Boys” என்கின்ற விளிம்பு நிலைக்கு சென்றுவிடுகிறனர்.
மறுபக்கத்தில்,"ஸ்வீட்டான பையன்"களை அடையும் பெண்கள் நேர் எதிராக நடந்துவிடுகிறனர்.அந்த பையன் ஸ்வீட்'டாக இருப்பதன் அனுகூலங்களை தங்கள்வசப்படுத்தி "advantage " எடுக்க நினைக்கும் பெண்கள் இறுதியில் "கெட்ட பெண்'ணாகவே மாறிவிடுகிறனர்.இதனால் அந்த பையனின் ஸ்வீட்டான தன்மையை மாறவைக்கின்றனர்.அவனை தன் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறனர்.(தங்களை கடுமையானவர்களாக,கோபக்காரர்களாக காட்டுதல்,ஏமாற்றுதல்,கதைப்பதற்கு மெசேஜ்,கோல்(Call) செய்யாமல் விடுதல்).
யார் மனிதன்?
யார் மனிதன்?
ஒரு முழுமையான மனிதன் எனப்படுபவன் நல்லது,கெட்டது இரண்டும் கலந்தவன்.மனிதன் என நான் குறிப்பட்டதன் காரணம் எவன் ஒரு பெண்ணை முழுமையாக பாவிக்க தெரிந்தவன்,அவளை சரியாக நடத்த தெரிந்தவனோ அவனே மனிதன்.அவன் அன்பான,பண்பானவனாய் இருப்பான்.பெண்ணுடன் முரன்படுவான்.மறுத்துரைப்பான்.ஆனால் பின்னர் அவளுடன் சமாதானமாவான்.வெளியில் கூட்டி செல்வான்.பிடித்ததை வாங்கி தருவான்.எவனுமே தினசரி தன்னை வடிவாக கவனிக்கவேண்டும்,வெளியில் கூட்டி செல்லவேண்டும் என்று அடம்பிடிக்கும் பெண்களை விரும்பமாட்டான்.
தினசரி நீ வாங்க நினைப்பவற்றுக்கு பில் கட்டமாட்டான்.உன்னை வெளியில் கூட்டி செல்வான்,உன் கரம்பிடிப்பான்..ஆனால் பொதுவில் உன்னை அறைந்துவிடமாட்டான்.உன்னைப்பற்றி மற்றையோருக்கு பெருமையாய் சொல்வான்..ஆனால் உனக்கும் தனக்கும் இடையிலான தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தமாட்டான்.உனது பிறந்ததினம்,முக்கிய நாட்களை ஞாபகம் வைத்திருப்பான்.அத்தருணம் உன்னுடன் நேரத்தை கழிப்பதில் உவகை கொள்ளுவான்.ஆனால் அதேசமயம் தனக்கான நேரத்தை ஒதுக்கியும் கொள்வான்.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளுதல் அவசியம்.திருமணமானால் ஒரே ஒரு வாழ்க்கை என்பதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்.ஆனால் தங்களுக்கான பாதையை தீர்மானித்துக்கொள்பவர்களே இறுதி வரை நிலைக்கிறார்கள்.
பையன்கள் எப்போதும் ஸ்வீட் பையனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பெண்களுக்கு முதுகெலும்பு இருக்கின்ற ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்.இன்னொரு பெண்ணை பற்றி பேசி துணைவியாரை கடுப்பாக்க நினைக்காதீர்கள்.உண்மையான மனிதன் தன்னைச்சார்ந்த விடயங்களை எவ்வாறு கையாளலாம் என்று தெரிந்திருப்பான்.தனக்கு தானே சேற்றை எடுத்து பூசிக்கொள்ள விரும்பமாட்டான்.
ஒரு "கெட்ட" பையனின் நடத்தையை அனைத்து ஆண்கள் மீதும் திணிக்கப்பாக்காதீர்கள் பெண்களே.அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.பையன் கெட்டவனாயின்,அது அவன் தவறல்ல.முதலிலேயே அதனை கண்டுபிடிக்க தெரிந்திருக்காத நீங்கள் தான் கெட்ட பெண் ஆகிறீர்கள்.அதே சமயம் பையன் அளவுக்கு அதிகமான ஸ்வீட் ஆயின் அதனை கொஞ்சம் குறைக்க சொல்லுங்கள்.அதிகப்படியான ஸ்வீட் உங்கள் பற்களை சேதம் செய்துவிடும்.அவன் மனதை தாக்கலாம் உங்களால் முடியும் என்று முயர்ச்சிக்காதீர்கள்.அது அப்படியான பையன் உங்களுக்கு கிடைத்தமையை நிராகரிக்கும் காரணமாகிவிடலாம்!
சில பல பெண்களுக்கு ஸ்வீட் பையன்களை பிடிக்கும்...சிலருக்கு கெட்ட பையன்களை பிடிக்கும்.அது ஒரு வகையான கவர்ச்சி.ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அந்த கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால்,ஸ்வீட் என்ன கெட்ட பையன் என்ன அதெல்லாம் கண்ணுக்கு தெரியப்போவதில்லை. கெட்ட பையன்களை பெண்களுக்கு பிடிப்பதற்குபல காரணங்கள் இருக்கலாம்.அவற்றுள் சில:
*இலகுவாக தம்வசப்படுத்திவிடக்கூடிய,பணியவைத்துவிடக்கூடிய ஆண்களை விட எதிர்த்து நிக்கின்ற,பணியவைக்க கடினமான ஆண்களை அவர்கள் விரும்புகிறார்கள்.தினசரி அவனால் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க எதிர்பார்க்கிறார்கள்.
*சில பெண்கள் நீண்ட கால உறவுகளை தவிர்த்து குறுங்கால வாழ்க்கை வாழப்பிடித்தவர்கள் கெட்ட பையன்களை தெரிவுசெய்கிறார்கள்.
**பெண்கள் ஒரு ஆண் முன்னின்று தன்னை வழிநடத்துவதை விரும்புகிறாள்(அதிகமானோர்).
***தானே முடிவெடுக்க கூடிய,ஆண்மையான தோற்றம் கொண்ட,பிரச்சனை ஒன்று வந்தால் எதிர்த்து நின்று எதிர்கொள்கின்ற பையன் கெட்டவனாக இருந்தாலும்,அவனே தன்னை பாதுகாப்பான் என்கின்ற நம்பிக்கை கொண்ட பெண்கள் இருக்கிறார்கள்.
****கெட்ட பையனாக இருப்பவன் "உறவுகளில்" கூட கடினமானவனாய் இருப்பான் என்று விரும்புவர்களும் உண்டு.
உண்மையில் "ஸ்வீட் பையன்" என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பையன் "கெட்ட பையனாக" இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.அல்லது வேறு சில பிரச்சனைகள் அவனை சூழ இருக்கவும் கூடும்.நல்ல பையனாக இருந்து பலரால் ஏமாற்றப்பட்டு கெட்ட பையனாக மாறி இருப்பவர்களும் எம் சமுதாயத்தில் ஏராளம்.ஆனால் ஒரு அமைதியான நீண்ட கால உறவை எதிர்பார்க்கும் எந்தப்பொண்ணும் ஸ்வீட்டான பையனை தான் கெட்ட பையனை விட அதிகமாக முன்னுரிமை கொடுத்து தெரிவுசெய்கின்றனர்.
உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!
உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!
எந்த ஸ்வீட் பையனாவது தான் ஸ்வீட்டாக இருந்த ஒரே காரணத்தால் தனது உறவு பாதிக்கப்பட்டு முறிவடைந்தது என்று கூறுவானாயின்,அவன் ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான தகுதியை,உறுதியை கொண்டிருக்கவில்லை என்று தான் கூறமுடியும்.ஸ்வீட்டாக இருப்பது பெண்களுக்கு பிடிக்கும்.ஆனால் அதிகப்படியான ஸ்வீட் பையன்கள் தங்கள் துணையின் வாழ்க்கையை சுவாரசியமற்றதாக்கி விடுகின்றனர்.அதே நேரத்தில்,என்ன தான் ஸ்வீட்டாக இருந்தாலும்,சில பையன்களின் தனிப்பட்ட சில குணாதிசயங்கள் வாழ்க்கையை பாழாக்கிவிடுகின்றன.இதை விட கெட்ட பையனே மேல் என்று பெண்களை எண்ண வைத்துவிடுகின்றனர்.
பெண்களை கவர்வதற்கு நல்ல பையனாகவோ/கெட்ட பையனாகவோ தங்களை பாவித்துக்கொள்பவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்.தன்னுடைய உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு பொருத்தமான துணையை பெற்றுக்கொள்வான் என்பதில் சந்தேகமில்லை.திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் கூட அவன் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.
உறவொன்றை ஆரம்பிக்கும்போது ஓகே,இவனை/இவளை திருத்த முடியும்/மாற்ற முடியும் என்ற நினைப்பில் பையனோ பெண்ணோ தயவு செய்து வாழ்க்கை எனும் உறவில் குதித்துவிடாதீர்கள்.அவ்வாறு ஒரு உறவுக்குள் இணைவதால் ஏற்படும் பிணக்குகள் பிரச்சனைகள் ஏராளம்.சிறுவயது முதல்கொண்டு உங்கள் சில உங்களாலே சகிக்கமுடியாத குணங்களை மாற்றிய முயர்ச்சித்திருப்பீர்கள்.என்ன நடந்தது?உங்களால் முடிந்ததா?அவ்வாறு குறைக்க முடிந்திருந்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த குணம் வெளிப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல தான் உங்கள் வருங்கால துணை கூட!உங்களை உங்களால் மாற்ற முடியாத போது எவ்வாறு இன்னொருவரை உங்களால் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்?அதனால் ஏமாந்தும் போகிறீர்கள்?
யார் உங்கள் தெரிவு?
ஸ்வீட் பையனை தெரிவு செய்யும் போதோ,கெட்ட பையனை தெரிவு செய்யும் போதோ, பெண்கள் தங்களது பழக்கவழக்கம்,நடத்தை,குணா நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அவசியமாகின்றது.ரொம்பவே அடக்கமான அமைதியான,பயந்த,நாட்டு நடப்புகள்,வெளியுலகம் தெரியாத பெண்கள் ஸ்வீட்டான பையன்களை தெரிவு செய்தால் அவர்களது வாழ்க்கை பெருமளவு பிரச்சனைகள் இல்லாமல் சீராக செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்..மென்மையான சுபாவம் கொண்ட பெண்கள் கெட்ட பையன்களை தெரிவு செய்தலோ,மென்மையான ஸ்வீட் பையன்கள் ஆர்ப்பாட்டமான,கொஞ்சம் கடினமான கையாள்கை தேவைப்படும் பெண்களை தெரிவு செய்தலோ அவ்வளவு நல்லதன்று.
உங்களுக்கு வரப்போகும் துணை(ஆணோ/பெண்ணோ) எந்த குணதிசயங்களை,பழக்கவழக்கங்களை,வாழ்க்கை முறைமைகளை கொண்டிருக்க வேண்டும்என்று எப்போது எதிர்பார்க்க தொடங்குகிறீர்களோ,அதற்க்கு முன்னதாகவே உங்களை ஒன்றுக்கு இரு தடவை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.உங்கள் குண நலன்கள்,பழக்கவழக்கங்கள்,நடத்தைகளை அறிந்து கொள்ளுங்கள்.ஒரே குணாதிசயங்களி கொண்ட இருவர் திருமண பந்தத்தில் இணைவது சுவாரசியமற்றது என்று பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்..உண்மையாகவும் இருக்கலாம் ஒரு அளவுக்கு.ஆனால் வெவ்வேறு ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயங்களை கொண்டவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து படும் அல்லல்பாடுகள் வேதனைகளை பார்க்கையில் ஒரே குணாதிசயங்களை கொண்டவர்கள் சேர்வதில் எந்த தப்பும் கிடையாது!
நீண்ட கால பந்தத்துக்கு ஸ்வீட் பாய்ஸ் தான் ஒத்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்து வேறுபடும்.முடிவு உங்களுடையது.காரண காரியங்களை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம்.
----------------------------------------
----------------------------------------
இவ்வளவு நேரம் நான் பேசியதை பற்றிய ஒரு அருமையான காணொளி ஒன்று இன்று கிடைக்கப்பெற்றது.ஆதியிலிருந்து இன்று வரையான பெண்களின் பார்வை ஸ்வீட்டான பையன்களை நோக்கியா அல்லது கெட்ட பையன்களை நோக்கியா என்றும்,இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்றும் தெளிவான காரணங்கள் மற்றும் வாதங்களுடன் சொல்கிறது.இதை கட்டாயம் பாருங்கள் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.பயனுள்ளது.
விகடனில் என்னைப்பற்றி:
இவ்வார "விகடன்"வரவேற்பரையில் எனது வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.தமிழின் முன்னணி இதழில் என்னைப்பற்றி அறிமுகம் தந்த விகடனுக்கு நன்றிகள்..எனது வலைப்பூ பார்வையாளர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்..நன்றிகள் தோழர்களே!!