Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Tuesday, July 9, 2013

தனுஷின் "அம்பிகாபதி"-விமர்சனம் மட்டுமல்ல..!


'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சல்மான்கான்,ஹிர்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே நம்பி கால்வைத்திருக்கிறார் தனுஷ்.ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகரை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதற்க்கு பாக்ஸ்ஆபீஸ் நிலவரமே சான்று பகர்கிறது. சூர்யா,விக்ரம்,மாதவன் போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்று-அவரின் நடிப்பு..!

'பம்பாய்' போன்று எங்கே இன்னுமொரு இந்து-முஸ்லீம் கதையா என்று யோசித்திருந்த போதும், கதை ஒரு மாதிரியாக திசை மாறி வேறு இடம் நோக்கி செல்கிறது.புரோகிதர் மகன் தனுஷ்க்கும் முஸ்லிம் குடும்பத்து பெண் சோனம் கபூருக்கும் சிறுவயதிலேயே பிடித்துவிடுகிறது.ஆறு வயசா இருக்கும்போது முதன் முதலில் சோனம் கபூரை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனது பதினஞ்சு வயசில லவ்வ சொல்கிறார்.தனுஷ்க்கு ஏராளமான அடிகள் கொடுத்தபின் பின்னாடி சோனம் கபூருக்கு பிடித்துவிடுகிறது.ஆனால் அவன் இந்து என்று தெரிந்ததும் அதனை மறுக்கிறார் சோனம் கபூர்.பிரச்சனை பெரிதாக,சோனம்கபூரை வேறொரு ஊருக்கு படிக்க அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். இங்கு தனுஷ் இவள் நினைப்பில் வாட,அங்கு சென்ற சோனம் கபூர் காலேஜ் சேர்மென் மீது காதல் கொள்கிறார்.அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காணுங்கள்.

முதல் பாதி முழுவதும் காதல்&இசைன்னு கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி சீரியசாக மாறுகிறது.தனுஷ் தனக்கு தேசியவிருது கிடைத்தது சரி தான் என்கின்ற வகையில் நடிப்பை காட்டியிருக்கிறார்.தனுஷின் நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.தமிழில் அதனை தன்னுடைய நடிப்பில் கொண்டுவராத தனுஷ் இந்தியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சோனம் கபூர் கலங்கடிக்கிறார்.இங்கிருந்து தனுஷ் எல்லாம் இந்திக்கு செல்கையில்,அங்கிருந்து சோனம் கபூர் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது.தாடி மழித்த தனுஷ் மற்றும் சோனம்கபூர் இருவரினதும் பாடசாலை கால காட்சிகளை பார்க்கையில் தனுஷ் நடித்த '3'படத்தில் தனுஷ்-ஸ்ருதியை நினைவூட்டி செல்கின்றனர்.அழகான முதல் பாதி காதல் கதையையே படம் முழுவதுமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து (லாஜிக் கேள்விகளுக்கு இடம்கொடுத்து) முதல் பாதியின் அட்டகாசமான கொண்டாட்டத்தை இரண்டாம் பாதியில் சொதப்பிவிட்டது போன்று தான் தெரிந்தது.தனுஷ்-சோனம் கபூர் காதல் காட்சிகள் அருமை.! 

படம் வெளிவரமுன்னமே இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான்.பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்!வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்!பெரிதாக ஆஹா ஓஹோ படமும் இல்லை, மட்டமான படமும் இல்லை.நிச்சயம் பார்க்கக்கூடிய படம் தான் அம்பிகாபதி.முஸ்லிம் பெண் இந்து பையன் மீது காதல் கொள்வதாக படத்தில் காட்டியிருப்பதால் பாகிஸ்தானில் படம் தடை செய்யப்பட்டது மேலதிக கிக்கு.

சோனம் கபூர் நல்லவளா இல்லை கெட்டவளா சுயநலவாதியா என்று பல குழப்பங்கள். பெரும்பாலான கதாநாயகிகள் இலகுவில் ஏற்கத்தயங்கும் நெகட்டிவ் ரோல் போன்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பதாக.படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட,தனுஷ்க்கு இந்தியில் முதல்படத்துக்கு இது போன்ற  வெற்றியே பெரிய விஷயம் தான் என்று பாராட்டத்தோன்றுகிறது!இந்த வருடத்தில் படம்வெளி வந்து இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் 'ராஞ்சனா' நான்காம் இடத்திலிருக்கிறது.

1. Yeh jawaani hai Deewani - 44,87,00,000
2. Race 2 - 20,02,00,000
3. Special 26 - 17,99,00,000
4. Raanjhanaa - 17,75,00,000 approx
5. Aashiqui 2 - 17,35,00,000
6. Kai Po Che - 11,82,00,000
7. Fukrey - 10,51,00,000
8. ABCD - Any Body Can Dance - 10,17,00,000

மார்க் 62/100
--------------------------------------------------------------------------------------------

'தமிழருவி 2013'


பல்கலைக்கழகங்களின் ஏதாவது விழாக்கள் என்றால் சற்றே அலேர்ஜி எனக்கு.காரணம் நான் சென்ற பல்கலைக்கழகம் நடாத்திய எந்த விழாக்களும் அடிபிடி சண்டை,கட்சி மோதல்,பழிவாங்கும் நிகழ்வுகளாகவே முடிந்திருந்த ன.அது சமயம் சார்ந்த விழாவானாலும் சரி கலை இலக்கிய விழாக்களானாலும் சரி முடிவு ஒன்றாகத்தான் இருந்தது.கொழும்பிலே சிறப்பாக தமிழ் விழாக்களை நடாத்தும் பல்கலைக்கழகமாக நான் கணித்தது கொழும்பு பல்கலைக்கழகம் தான்.மொரட்டுவ,பேராதனிய பல்கலை கழகங்களும் பெரிய குறையில்லாமல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொரட்டுவ பல்கலைக் கழகம் நடாத்திய 'தமிழருவி 2013'என்கின்ற கலை இலக்கிய விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.


மூன்று மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும்,மங்கல விளக்கேறி,தமிழ் வாழ்த்து,வரவேற்புரைகள் முடிய ஒரு நான்கு மணி போல சென்றால் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.நிறைந்த கூட்டம் ராமகிருஷ்ண மண்டபத்தில்.பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள்.பின்வரிசைகளில் தான் இடம் கிடைத்து செட்டில் ஆனேன்.சரியான ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று ஒரு இழவும் புரிந்திருக்கவில்லை.காட்சிகளை தான் பார்க்க முடிந்தது.நடன நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன.நாட்டிய நாடகமும்,வரலாற்று நாடகமும் நன்றாக இருந்ததாக முன்வரிசையில் இருந்தவர்கள் கூறக்கேட்டேன்.ஹாரியின் திரைகக்தை வேகத்தை பார்த்தும்,அதன் சப்தத்தை காது கிழிய கேட்ட இந்த தலைமுறைக்கு ஒழுங்கான ஒலி,ஒளியமைப்பில்லாத,மேடையமைப்பு நெறியாள்கை இல்லாத,இதிகாச வரலாற்று விடயங்களை எடுத்துரைக்கும்,மெதுவாக நகரும் காட்சிகளை கொண்ட நாடகங்கள் மீதான மோகம்,விருப்பு முற்றாக இல்லாது போய்க்கொண்டிருப்பதை காணமுடிந்தது.

'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன/தோல்வியடைந்திருக்கின்றன' என்கின்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை பார்ப்பது தான் நிகழ்ச்சிக்கு சென்றதன் நோக்கமாக இருந்தாலும்,மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு ஏழு மணி தாண்டியும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் அறிகுறி தென்படாததால்,வீடு திரும்பிவிட்டேன்.இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துதல் பெரிய வரவேற்கத்தக்க விடயம்.அதையே அதிகபட்சமாக ஒரு நான்கு மணி நேரத்தில் நடாத்தி முடிப்பது இன்னமும் வரவேற்கத்தக்க விடயம்.நிகழ்வில் முகம் தெரியாமல் பழகிய ஏராளமான நண்பர்களை சந்திக்க முடிந்தது.இனிய ஞாயிறு!எப்படியும் பட்டிமன்றத்தின் முடிவு 'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று தான் அமைந்திருக்க வேண்டும். காரணம் கண் முன் தகுந்த தலைமைகள் எவருமே தெரிகிறார்களில்லை!
---------------------------------------------------------------------------------------

"விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி"




எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இருக்கும் பேஸ்புக் வாசகர்வட்டம் எந்தளவுக்கு பிரபலமோ,அதற்கு இணையாக பிரபலமாகியிருப்பது அவரின் விமர்சகர் வட்டம்.சகலவிதமான விடயங்களும் கிழித்து தொங்கப்போடும் சம்பவங்களும் அங்கு நடைபெறும்.இவ்வட்டத்தின் உருவாக்கத்துக்கு பின்னதாக சாருவின் எழுத்து,நடத்தையில் மட்டுமன்றி,வாசகர் வட்ட செயல்பாடுகள் அராஜகங்களில் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டதை இருசம்பவங்களையும் கூர்ந்து அவ்தானித்து வருபவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வாசகர் வட்ட அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல்,பயனுள்ள வேலைகளையும் செய்யலாமே என்கின்ற அடிப்படையில்,சிறுகதை போட்டியொன்றை நடாத்துகின்றனர் அவர்கள்.விருப்பமானோர் பங்குபற்றலாம். பரிசுகள் உண்டு.போட்டி சம்பந்தமான தகவல்கள் இவை:

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

நண்பர்களே,நமது வட்டம் சார்பாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

-----------------------------------------------------------------------------------------
ட்விட்டரில் நான்..!

ட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால்  பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா.."ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடா?ஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா?"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு  நல்லதுன்னா எதுவுமே......?!
என்னுடைய ட்விட்டர் ஐடி : "மைந்தன் சிவா"

இந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..!கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:

-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும்.! ஒன்னத்தையும் காணோம்!! வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்!#சிங்கம்2

-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோ!But'பாத்து சேத்து சீவிட போறீங்க"&"கப்பல் தரை தட்டுது" செம!#சிங்கம்2

-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..!#சிங்கம்2

-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க?#சிங்கம்2

-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்!இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல!#சிங்கம்2

-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம்! பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா?#சிங்கம்2

-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..!#சிங்கம்2

-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன்! செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3

-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க!#சிங்கம்2

-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!#சிங்கம்2

-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுக!சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்!#சிங்கம்2

-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா?#சிங்கம்2

-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது! #சிங்கம்2

-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்!#சிங்கம்2

-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது..! ஐ ஜஸ்ட் லவ் இட்!#சிங்கம்2

-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்!#சிங்கம்2

-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போல!சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்!#சிங்கம்2
-----------------------------------------------------------------------------------------

டிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,

Post Comment

Monday, June 3, 2013

'சித்தார்த்- சமந்தா'காதலும் நம்மவர்களின் சோகமும்..!





பசங்களுக்கு சமந்தா மீதும்,பொண்ணுகளுக்கு சித்தார்த் மீதும் அளவு கடந்த ஒருதலைக்காதல் இருந்துவந்தது.அதானால் தான் இந்த சித்தார்த்-சமந்தா சேர்க்கை ஊரில் அத்தனை இளசுகள் மனசை உலுக்கியிருந்தது.சமந்தா ஒரு படி மேலே போய்,கல்யாணம் கட்டிய கனவான்களையே பேஸ்புக்கில் புலம்ப விட்டு வீட்டுக்காரம்மா கையால் உதை வாங்கி கொடுத்தார்.(இப்போதெல்லாம் வீட்டுக்காரம்மாக்கள் கையால் அடிப்பதே காலால் உதைப்பது போல் இருப்பதாக 'கட்டிளம்'கணவர்மார்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்..!)அந்தளவுக்கு சமந்தா மீது உசிராக இருந்தனர் அனைவரும்.அதைவிட முக்கிய காரணம்,சமந்தா குதிரை மீது ஏறிக்கொண்டால்,சில வருடங்கள் பிரச்சனையில்லாமல் சவாரி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தமை தான்.எப்படியும் திரிஷா,ஜோதிகா விட்டுச்சென்ற இடத்தை குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்காவது சமந்தா நிலைத்து நின்று ஜொள்ளுவதற்கு துணைபுரிவார் என்கின்ற நம்பிக்கை.

எப்போது சித்தார்த் கூட சமந்தா காதல் என்று செய்தி வந்ததோ,அன்று புகையத்தொடங்கிய பலரின் வயிறு,முடிந்த விஜய் அவார்ட்ஸில் பொங்கி புஸ்வாணமாகி போய்விட்டது.சித்தார்த் ஏற்கனவே திருமணம் முடித்தவன்-விவாகரத்தானவன் என்று முடிந்தவரை காதலை பிரிக்க ஆளுக்காள் முயன்றும் அது சரிவராமல் போகவே சமந்தா ரசிகர் மன்றம் மெது மெதுவாக குலைய தொடங்கியது!எப்படி சூர்யா-ஜோதிகா ஜோடி அச்சமயம் சூட்டை கிளப்பியதோ,அதனைவிட மேலாக இந்த ஜோடி பரபரப்பை கிளறியிருக்கிறது.அண்மையில் சித்தார்த்-சமந்தா ஜோடியாய் நடித்த 'ஜபர்தஸ்த்' திரைப்படம் பெரு வெற்றி பெற,அந்த ரொமான்ஸை நிஜத்திலும் தொடர்வதற்காக தங்கள் காதல் செய்தியை பப்ளிக்கில் வெளியிட்டிருக்கின்றனர்.


விஜய் அவார்ட்ஸ் ஒளிபரப்பும் போது,சித்தார்த்-சமந்தா வரும் சமயம் நான் டிவி பார்க்காமல்  இருந்துவிட்டேன்.காரணம் நானும் ஒரு சமந்தாவின் தீவிர வெறியன்.கிளம்பிவந்து பேஸ்புக்கில் கடுப்பை கொட்டியிருந்தேன்: 

'பசங்களோட கனவுக்கன்னி சமந்தா போயிரிச்சு ஐ ஜாலி'ன்னு பொண்ணுக இப்போ செம ஹாப்பியா இருப்பாங்க.ஆனால் பசங்க சித்தார்த் மேட்டர் ஓவர்னு சாந்தமா இருக்காங்களா பாருங்க?இவளுக தான் ரெண்டாவது மூணாவதாவும் போக தயாரா இருக்காளுகளே!சமந்தா மாதிரி ஒரு பொண்ணும்,இதே மாதிரி ஒரு மேடையும்,சித்தார்த் மாதிரி பர்சனாலிட்டியும் ஒருதடவை தந்து பாருங்கள்..அப்போ தெரியும் நம்ம திறமை!வெறித்தனமா பண்ணுவம்லே வெறித்தனமா..!ஆல்ரெடி பிரிப்பேர் பண்ணி வைச்சிருக்கம்..நாமளும் சொல்லுவம்லே!

'என்கிட்ட எதும்மா உன்னய ஹெவியா லைக் பண்ண வைச்சது?முத்துப்போன்ற எனது சிரிப்பா?அல்லது முரட்டு தோள் உடம்பா?இல்ல நாட்டியமாடும் என்னோட நடையா..இல்லை நவரசத்தை காட்டும் என்னோட முகமா...பாக்கட்ல இருக்கிற என்னோட பணமா....?சொல்லும்மா சொல்லு! கடத்திட்டு வந்து மேடையில வைச்சு இப்பிடியெல்லாம் லவ் டார்ச்சர் கொடுக்கக்கூடாது..!நீ இப்பிடி வெறித்தனமா என்ன லவ் பண்ணும்போது உன்ன விட்டு எங்கம்மா போகப்போறன் என் செல்லமே...!!எங்க மாமா மேல ஒருதடவ உப்புமூட்டை ஏறு?'சியேர்ஸ் கைஸ்...சமந்தா இல்லைனா சமத்தா இன்னொன்னு வரும்லே!

சரி அதிருக்கட்டும்.நேற்று தான் அந்த காணொளி பார்க்க கிடைத்தது யூடியூப்பில். நிஜமாவே சொக்கிவிட்டேன்.ஆம்,சித்தார்த்தின் பர்போமன்ஸ் கலக்கல்! தான் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என்று நிரூபித்துவிட்டார் சித்தார்த்.ப்ரியா ஆனந்த்,ஸ்ருதி என்ன,எந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய 'ஸ்வீட் பாய்'யை பிடிக்காது! என்னம்மா பாடினான்யா!'பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்...காணாத கண்களை கண்களை காண வந்தாள்...என்று ஆரம்பித்து ஏராளமான காதல் பாடல்களை கலந்துகட்டி நிஜமாகவே ஒரு பாடகர் பாடுவது போல அவ்வளவு அழகாக,சமந்தா மேல் இருந்த 'பீல்'லை கொட்டி உணர்ச்சி பொங்க பாடுவதை பார்த்துக்கொண்டிருந்த அந்த் சந்தர்ப்பத்திலேயே என்னை சமந்தாவுக்கான 'காம்பெட்டிஸன்'னிலிருந்து ஓரம் கட்டியிருந்தார்..இல்லை இல்லை நானாக ஒதுங்கிக்கொண்டேன்!திரையில் ஒரு பாதியில் சித்தார்த் பாடுவதையும்,மறு பாதியில் சமந்தா வெட்கப்படுவதையும் காட்டுகையில் ஏற்பட்ட உணர்ச்சிகளை விபரிக்க முடியாது..! அது கோபமா..இல்லை சந்தோஷமா..இல்லை கடுப்பா..இல்லை உற்சாகமா..இல்லை கவலையா..அழுகையா... இவை அனைத்தையும் கலந்தடித்த பீலிங் அது!

ஏன் இத்தனை பெண்கள் சித்தார்த் பின்னால் இருக்கிறார்கள் என்பதையும்,ஏன் சமந்தா இத்தனை இளசுகள் மனதில் குடியிருக்கிரார் என்பதையும் அந்த ஒரு பத்து நிமிட காணொளி தெளிவாக விளக்கிவிடும்!தனுஷ்,த்ரிஷா என்று வந்திருந்த அனைவரும் உருகிக்கொண்டிருந்தனர்..கமலோ,அடடா இவன் என்னைவிட காதல் மன்னனாக இருப்பானோ என்று மனதுக்குள் நினைத்திருப்பார்.இல்லை ஒரு படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்து ஒரு முத்தம் கொடுப்பதை இழந்துவிட்டேனே என்று கவலையில் வாடியிருப்பார்!

இறுதியில் ஒரு சிறிய இடைவெளி விட்டுவிட்டு,கும்கி பட பாடல் 'ஐயையயோ....ஆனந்தமே....' என்று உச்ச ஸ்தாயியில் ஆரம்பிக்கும் போது நானே உருகிவிடுகிறேன்..பாவம் இந்த பெண்கள் எம்மாத்திரம்!உங்களுடன் போட்டியிட முடியாது சித்தார்த்..நீங்கள் நிஜமாலுமே ஹீரோ தான்.சமந்தா எனும் அழகு தேவதையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்..இந்த திருமண வாழ்க்கையையாவது அழகாக கொண்டு நடாத்துங்கள்..சமந்தாவுக்கு எத்தனை உள்ளங்களில் எத்தனை விதங்களில் கனவு கோட்டைகளை,கனவு வாழ்க்கையை உருவாக்கி பாத்திருக்கிறோம்..அதைனை விட சிறப்பான ஒன்றை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..!



இரு விழி உனது..இமைகளும் உனது...
கனவுகள் மட்டும்...எனதே எனது....!!

உனது அழகிய வதனமும்,உன் கண்களில் காட்டும் அத்தனை அசைவுகளுக்கும்,உதட்டில் நீ சுழிக்கும் அத்தனை சுழிப்புகளுக்கும்,உன் முகத்தில் அந்த வெட்கமே வந்து வெட்கப்படுமே..அந்த வெட்கங்களுக்கும்...சேலையில் நீ வருகையில் அடித்தள்ளும் அந்த  அழக்குக்கும் நான் அடிமை..!உன்னை கொண்டாடிய பெருமை போதும் எனக்கு..!நீ சமத்தா இருக்கணும் சமந்து குட்டி... 

நெஞ்சை பூபோல் கொய்தவளே.... 
என்னை ஏதோ செய்தவளே...!
உன்னை உருகி உருகி காதலித்த அத்தனை உள்ளங்கள் சார்பில்,

Post Comment

Friday, December 16, 2011

மயக்கம் என்ன+போராளி =யதார்த்தம்


கடந்த ஒரு வாரத்தினுள் வெற்றிகரமாக இரண்டு படங்களை பார்த்து முடித்துவிட்டேன்,சசிக்குமாரின் "போராளி" மற்றும் தனுஷின் "மயக்கம் என்ன".
தமிழ்ப்படங்கள் பார்பதற்கும்,பதிவுகள் போஸ்ட் பண்ணுவதற்கும் என்னமோ இப்போது பெரிய ஆர்வம் இருப்பதில்லை.இரண்டுக்குமே குறைந்தது மூணு மணிநேரம் ஒதுக்கிவிட வேண்டும்.அடிக்கடி பதிவுலக நண்பர்கள் முணுமுணுப்பது போல,இப்போதெல்லாம் பதிவுகளை வாசிப்பவர்களை விட எழுதுபவர்களே அதிகமாய் இருக்கிறார்கள்..எனக்கும் அதில் கொஞ்சம் உடன்பாடு தான் ஆனால் இன்ட்லி தனது சேவையில் ஏற்படுத்திய மாற்றம் தான் பெரிய தாக்கத்தை ப்ளாக் பார்ப்போரின் எண்ணிக்கையில் ஏற்படுத்தி இருந்தது என்பது நான் கண்ட உண்மை.

யதார்த்த சினிமா வகையறாவுக்குள் இந்த மயக்கம் என்ன மற்றும் போராளி படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.சசிக்குமார்,சமுத்திரக்கனியின் வழமையான போர்முலாவில் வெளிவந்திருந்தாலும் கூட "போராளி" சமூகத்துக்கு ஒரு நச் மெசேஜ் ஒன்றை வழங்கியிருக்கிறது.சமூகத்தாலேயே பல மனநலம்குன்றியவர்கள் உருவாகிறார்கள்,உருவாக்குபவர்கள் உருவாக்கிவிட்டு கைவிட்டு சென்றுவிடுகிறார்கள்.மனநலம் குன்றியோரில் பெரும்பாலானோரை உருவாக்கிய பெருமை இந்த சமூகத்துக்கே உடையது என்று சசிக்குமார் படத்தில் தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.முக்கியமாக உறவினர்கள்.சொந்த உறவை விட நட்பே பெரியது என்று நாடோடிகளில் தொடர்ந்ததை போராளியிலும் தொடர்ந்திருக்கிறார்.சசிக்குமாரின் வாயிலிருந்து வெளிவரும் வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஷார்ப்!!சமுத்திரக்கனியின் எழுத்து பிரகாசிக்கிறது.

"சொந்தமெல்லாம் சும்மா...அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் பாத்துக்கணும்"
"எப்பவோ கிடைக்கிற பால்கோவாவை விட இப்ப கிடைக்கிற பப்பரமிட்டாய் தான் முக்கியம்"
இப்படி படம் முழுவதும் பல பன்ச் வசனங்கள் கொட்டிக்கிடக்கிறது!இந்த இரண்டு வசனங்களும் படம் பார்த்த எபெக்ட்டில் பேஸ்புக்கில் பகிர்ந்துகிட்டது.





("சிலோன் பாராட்டா" ஸீன்)

நாடோடி படத்தில் காட்டு காட்டிய 'சம்போ சிவசம்போ"போல போராளியிலும் ஒரு சேசிங் சாங்,அத்துடன் முதல் பாடலான "வெடி போட்டு பாடடா" பாடலும்,அது காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் கட்டாயம் நாடோடிகளை ஞாபகப்படுத்தும்!அதை தவிர பாடல்களுக்கு படத்தில் பெரிதான முக்கியத்துவம் இல்லாததாலோ என்னமோ பெரிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளவில்லை.

நுனி நாக்கு இங்கிலீஸ் பேசும் கூட்டம் ஒரு பிரச்சனைன்னு வந்திட்டா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்வார்கள் என்று வரும் காட்சி உண்மைகளை தொட்டு செல்கிறது.சாதாரணமாக வீதியிலோ வேறு எங்கிலுமோ ஏதும் பிரச்சனைன்னு வந்திட்டா களத்தில் இறங்கி வேலை செய்பவர்களில் இந்த நுனி நாக்கு இங்கிலீஸ் கூட்டமோ,"ப்ரோபெஸ்சனல்ஸ்" என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கூட்டமோ இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்,ஏன் நாங்களும் அந்த கூட்டத்துள் ஒருவராய் இருக்கவும் கூடும்!

மனிதனின் மிருககுணம் வெளிப்படுவதும் வெளிப்படாமல் இருப்பதும் அவனை சுற்றி இருப்போர் கைகளிலேயே இருக்கிறது.தங்கள் சுயநலனுக்காய் மற்றவனை பைத்தியக்காரன் ஆக்கவும் இந்த சமூகம் பின்னிற்காது,மன நலம்குன்றியோர் மீது அதிக கரிசனை தேவை என்று பல நல்ல செய்திகளை சொல்லி முற்றுகிறது போராளி திரைப்படம்.இரண்டாம் பாதி சற்று அதிகமான வன்முறைக்காட்சிகள் காட்டப்பட்டிருந்தாலும் கூட,படத்தின் கருவுக்கு அது தேவைப்படுகிறது.சசிக்குமார்க்கு இன்னொரு வெற்றிப்படமாய் போராளி அமையும்!!




அடுத்த படைப்பில் இந்த நாடோடிகள்,போராளி படங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வித்தியாசமான படைப்பொன்றையே சசிக்குமாரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.அடுத்தபடத்தில் மறுபடியும் சுவாதியா??(சசிக்குமார்+சுவாதி எப்போ கல்யாணம்?அழகான ஜோடி!)

-------------------------------------------------------------------------------------

"மயக்கம் என்ன" செல்வராகவனின் அடுத்த வித்தியாசமான படைப்புன்னு சொல்லலாம்.தம்பி தனுஷை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில்,"கால- களத்தில்" பெரிய நட்சத்திர பட்டாளம் இன்றி ஆர்ப்பாட்டமின்றி வழங்கி இருக்கும் அடுத்த யதார்த்தமான படைப்பு.படம் வந்த சில நாட்கள் இணையப்பக்கம் தலைவைத்துப்பார்க்க முடியவில்லை.காச்சு மூச்சென்று படத்தை பற்றி ஏகப்பட்ட எதிர்மறையான,காரசாரமான விவாதங்கள்.அந்தளவுக்கு என்ன தான் இருக்கிறது படத்தில் என்று பார்க்கும் ஆவலும்,கடந்த வாரத்தில் கிடைத்த எதிர்பாராத ஓய்வான மணித்தியாலங்களும் "மயக்கம் என்ன" படத்தை பார்க்க வைத்துவிட்டன.




எனக்கென்னமோ செல்வராகவனின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால்,அவரின் அடுத்த படங்களின் கதைகளை கூட கண்டறியலாம் என்று தோன்றுகிறது.அவரின் படக்கதைகள் சொந்த வாழ்க்கையில் நடந்த கதை போலத்தான் தெரிகிறது.
ஒரு சராசரி இளைஞன் தன் வாழ்க்கையில் வெற்றி பெற,தனது இலட்சியத்தை அடைய போராடும் போது ஏற்படக்கூடிய தடங்கல்களும்,எதிர்பாராத திருப்பங்களும் ஒன்று சேர,எப்போது,எப்படி தன் இலச்சியத்தை அடைகிறான் அதற்காக எவற்றை எல்லாம் தாங்கிறான் என்பதை புகைப்பட கலைஞனாக ஆசைப்படும் தனுஷின் "ஜீனியஸ்"கரெக்டரின் மூலம் செல்வராகவன் எவ்வித குழப்பங்களுமின்றி காட்டி இருக்கிறார்.

பாத்திரத்துக்கு சரியான கதாநாயகன்.எத்தகைய நடிப்பையும் இலகுவில் வெளிப்படுத்திவிட்டு செல்கிறார் தனுஷ்..படத்தின் மையக்கருவை தவிர்த்து,படத்தில் இடம்பெறும் ஆண்-பெண் காட்சிப்படுத்தல்கள் தான் பலரின் கவனத்தை திசை திருப்பி எதிர்மறை விமர்சனங்கள் வெளிப்படுத்த தூண்டி இருக்கிறது.இவர்கள் எல்லாம் எந்தக்காலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.நாட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அறிவாவது இவர்களிடம் இருக்கிறதா?எங்கள் சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஆண் பெண்,டேட்டிங் கலாச்சாரம் இல்லை என்று முற்றாக மறுத்துவிட முடியுமா இவர்களால்?இன்னமும் ஒரு ஐந்து பத்து வருடங்களில்,சமூக வலைத்தளங்களின் அபரிதமான வளர்ச்சியாலும்,கலாச்சார முன்னேற்றம்,மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்கள் என்பவற்றால்,படத்தில் காட்டப்பட்டிருக்கும் விடயங்கள் சர்வசாதாரணமாய் நடந்தேறிக்க்கொண்டிருக்கப்போகிறது.

இயக்குனர் செல்வராகவன்,கதாநாயகன் தனுஷ்,நாயகி ரிச்சா,ஒளிப்பதிவாளர் ராம்ஜி,மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் ஆகிய ஐவருமே படத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.யாமினி மாதிரியான கேரக்க்டர்கள் நிஜ வாழ்வில் பையன்களுக்கு ஆபத்து தான்.அவதானம் அவசியம்!அதே சமயம் தனுஷின் நண்பர் போல எவனும் தான் செட் பண்ணும் பொண்ணை குளிக்கும்போது கூட அவளுக்கு பல்லி என்றால் பயம்,பார்த்துக்கொண்டிரு நான் அவசரமாய் ஆயி போயிட்டு வாறன் என்று விட்டுவிட்டு போகமாட்டான்.நண்பர் சுந்தர் அனைத்து காட்ச்சிகளிலுமே அப்பாவியாய் ரிச்சாவை தனுஷுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது போல காட்டி இருக்கிறார்கள்.சில சினிமாத்தனங்கள் இருந்தாலும் கூட,செல்வராகவன் தனது பாணியை இந்தப்படத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.





அடுத்த தலைமுறைக்கான படம் என்று செல்வா முன்னமே கூறி இருந்தார்.உண்மையில் அடுத்த தலைமுறைக்கும்,இன்றைய இளைஞர் தலைமுறைக்குமான படம் தான் மயக்கம் என்ன!
அடுத்ததாய் தனுஷை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தால் செல்வராகவன்,ப்ளீஸ் அதிலும் தனுஷை ஒரு பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு காட்டிவிடாதீர்கள்.
அதென்னமோ தெரியவில்லை அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடும் படங்கள் தனுஷுக்கு மட்டுமே வைத்துவிடுகிறது.முன்னர் "யாரடி நீ மோகினி".இப்போது "மயக்கம் என்ன":P

இலச்சியத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக...





Post Comment

Monday, May 23, 2011

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை??



நம்ம இளைய தளபதியின் காவலன் திரைப்படம் தனுஷின்
ஆடுகளம் படத்திற்கு போட்டியாகவே வெளியிடப்பட்டிருந்தது.
ஆனாலும் தனுஷின் ஆடுகளம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான
தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது.விஜய்க்கு கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் என்ன என்று பலர் மண்டையை பிச்சுக்கொண்டு
இருந்த போது சில நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு கேட்டாங்க
என்ன காரணம் அப்படீன்னு!!(ஏன்'னா நான் தானே தேசிய விருது தேர்வுக்குழு தலைவரா இருக்கிறன் பாருங்க!)

நான் சொன்ன ஒரே பதில்..
மச்சான் தனுஷ் எல்லாம் இப்ப பீல்ட்'டுக்கு வந்த பயல்...
அதனால வேணும்னா அவங்களுக்கு தேசிய விருது
பெரிதாகத் தெரியலாம்.ஆனா .,
நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..

அவன் கட் பண்ணினானோ,போன் தானா கட் ஆச்சோ தெரியல
லைன் கட் ஆகிருச்சு!!

இன்னொரு தகவலும் தெரிய வருது என்னண்டா,
தமிழக அரசியலில மும்மரமாய் வேலை பார்த்ததால
தேசிய விருதுக்கான போட்டியிலிருந்து வாலண்டியரா
விலகிட்டாராம் நம்ம தளபதி..

இல்லாவிடின் ஆடுகளத்துக்கு ஏன் அத்தனை விருதுகள்
போயிருக்க வேண்டுமென்று நேற்று ப்ரீத்தி சிந்தா கூட
ஆதங்கமா கதைச்சாங்க..
அவங்க ஐ பி எல்'லில ஆடிக்கிட்டு இருந்ததால
தனுஷ் ஆத்தே ஆத்தே பாடலுக்கு ஆடின ஆட்டத்தை
ரொம்பவே மிஸ் பண்ணிட்டாங்களாம்!!

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா..
இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா.."
என்ற பாடல் வந்து ஆக்சுவலி ப்ரீத்தியை பார்த்து தான்
தாகூர் எழுதினவராம்...
அத சுட்டு இவங்க காசு பார்த்திட்டதாவும் கடுப்பாய்
கதைச்சாங்க ப்ரீத்தி!!

அப்ப தான் தெரிஞ்சுது அவங்க தமிழ் படம் கூட
பார்ப்பாங்கன்னு!!இந்த விஷயம் முதலே தெரிஞ்சிருந்தா,
மணி ரத்னம்கிட்ட புது படம் நடிக்க வந்த சான்ஸ்'ச
விஜய்க்கு விட்டு குடுத்திருப்பேனா...
ஆத்தே ஆத்தே ஆட்டத்தை விட எத்தனை குத்து
ஆட்டங்கள் போட்டிருப்போம்...அப்பிடியே ஒரு நாலு
ஸ்டெப்பு போட்டிருந்தம்னா ஒரு பாட்டில,இப்ப ப்ரீத்தி
சிந்தா என் காலடில பாருங்க!!!அப்பிடியே அசந்திருக்க மாட்டாங்க!!!
அசர விடாம அடிக்கிறது தானே நம்ம பாலிசி!!

அப்பவும் சோதிடர் சொன்னார் உனக்கு ஏழரை நடக்குது
நடக்க கூடாதது எல்லாம் நடக்கும்னு...
இப்பிடி ஒரு சான்ஸ் மிஸ் ஆகும்னு அவர் கூட சொல்லேல
பயபுள்ள..ஒருவேளை,தெரிஞ்சுகிட்டும் பொறாமைல
சொல்லாம மறைச்சிருப்பாரோ??

Vijay completes Kavalkaran first schedule

எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...
அந்த விருது கிடைச்சா தனுஷுக்கு பெரிய சந்தோசமாய்
இருக்குமாம் ஆடுகளம் விருதை விட!!
காரணம் என்னென்னு சத்தியமா எனக்கு தெரியல பாஸ்..

ஆனா நிச்சயமா விஜய் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிலிம் பெயார்
அவார்டு குடுப்பாங்களாம் !!
விருது கிடைச்சா நம்மள மாதிரி அடி மட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தானே பாஸ்!!

ஆனா எனக்கென்ன ஒரு கவலைன்னா...
பழைய மாதிரி விஜயகாந்த் படங்களை பார்த்துவிட்டு
மொக்கையாய் விமர்சனம் போடா முடியாதுன்னு தான்..
உடன மைனஸ் ஒட்டு குத்திடுவான்களே!!

டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!

இப்போ ஒரு கிழமையா,கனிமொழியும் வடிவேலும் தான் சூப்பர் ஹிட்டு ..
பதிவுலகத்துக்கு கையில ஒரு மேட்டர் கிடைச்சிட கூடாது ..
அடுத்த தேர்தலில அம்மா தோத்தாங்கன்னா,
அவங்களையும் போட்டு உருட்டி எடுப்பாங்க நம்ம பசங்க...
அப்பிடி பாரபட்சம் பார்க்கமாட்டாங்க பாருங்க..
அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மேட்டரே!!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...