Thursday, December 9, 2010
கமலைப் பாராட்டிய கவிப்பேரரசு..!!
Post Comment
Wednesday, December 1, 2010
புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா??

இன்று டிசம்பர் முதலாம் தேதி, உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது..
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது எயிட்ஸ் முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில்1981 இல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் ஹெச்ஐவி எனக் கண்டறியப்பட்டது.
எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். 2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.எயிட்ஸின் உலகப்பரம்பல் கீழ்வரும் பட்டத்தின் மூலம் நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.

2007 இல் இந்தியாவில் அண்ணளவாக 2 .3 மில்லியன் எயிட்ஸ் தொற்றுநோயாளர்களும்,2010 இல் இலங்கையில் அண்ணளவாக 3000 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர்..
புள்ளிவிபரத்துக்குள் உள்ளடங்காமல் எத்தனை பேரோ!!
வெண்பாவின் கட்டுமானத்தை உயிர்கொல்லி எயிட்ஸின் எதிர் ஆயுதாமாக கொண்டு வைரமுத்து கவிப்பேரரசுவால் எழுதப்பட்ட கவிதையை விழிப்புணர்வுக்காக தருகிறேன்...உலக எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனங்கள்,மக்கள் இந்தக் கவிதையை எந்த வடிவத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது..
ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!
போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!
இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!
கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!
கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!
தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!
கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!
ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!
தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!
மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!
பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரிêட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!
துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!

Post Comment
Saturday, November 27, 2010
காதலி காதலி காதலில் தவிக்...கிறே....ன்...!!
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள் தோறும் வீசும்
நீங்காமல் எந்தன்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...
(காதலி...)
ஓயாத தாபம்
ஊர் தூங்கினாலும்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...
Post Comment
Wednesday, September 15, 2010
விளையாட ஜோடி தேவை !!
குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து
இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)
ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?
என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?
Post Comment
Wednesday, August 18, 2010
வைரமுத்து-தெரிந்தவை தெரியாதவை!

பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து
பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.
பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .
தகப்பனார்:ராமஸ்வாமி தேவர்.
தாயார்:திருமதி அங்கம்மாள்
மனைவி:பொன்மணி
மகன்:கார்க்கி ,கபிலன்
எழுத ஆரம்பித்தது:7'வது வயதில்
- 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
- 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
- பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
- உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
- பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
- உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
- திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
- முதல் வசனமெழுதிய படம்-நட்பு.

- தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
- தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
- M.G ராமச்சந்திரன் விருது-1989
- கலைமாமணி விருது-1990
- தேசிய விருது-1993 (ரோஜா)
- தேசிய விருது-1995 (கருத்தம்மா)
- தேசிய விருது-1995 (பவித்திரா)
- தேசிய விருது-2000 (சங்கமம்)
- தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
- பத்மஸ்ரீ விருது -2003.
- சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள் மற்றவர்களையும் பதிவு சென்றடைவதற்காக..
Post Comment
Tuesday, August 17, 2010
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ?

பாடல்களுக்காக நான் படம் பார்த்த காலமுண்டு..அதுவும் முக்கியமாக இசைப்புயலின் பாடல்களுக்காக..அந்த வரிசையில் எனக்கு பிடித்த ஒரு படம் தான் தாளம்.தமிழிலும்,ஹிந்தியிலும் வெளியான இத் இத்திரைப்படம் ரஹ்மானுக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது என்றால் மிகையாகாது.ரஹ்மானின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் தாளம் திரைப்பட பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதை அவதானித்திருக்கலாம்..தமிழில் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் கவித்துவ வரிகளாலும் ரஹ்மானின் மனம் வருடும் இசையாலும் என்னை மிகவும் கவர்ந்தன.உங்களையும் கவர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் ..
பாடலாசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம்,ஷோபா
இசை:இசைப்புயல் A .R .ரஹ்மான்
வெளியாகிய தேதி:30-Aug-1999
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா
[எங்கே என் புன்னகை ...]
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாயில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா
(எங்கே என் புன்னகை)
எங்கே என் புன்னகை பாடலுடன் உங்களை இணைத்து உங்கள் ஞாபகங்களை மீட்டுங்கள்!.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் பின்னூட்டல்களும் ஓட்டுகளும் விழட்டுமே!

