அமெரிக்க வல்லரசுக்கு எதிராக கடைசி வரை போராடிய வடகொரிய தலைவர் கிம் ஜாங்'இன் இறுதி ஊர்வலம் இன்று வடகொரிய தலைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.எந்த ஒரு உலக நாடுகளுக்கும்,தலைவர்களுக்கும்,மீடியாக்களுக்கும் அழைப்பு விடுக்காது மிகுந்த அவதானத்தோடு நடைபெற்றுக்கொண்டிருக்க்கும் இந்த இறுதி ஊர்வலமானது உலகுக்கு பலவிடயங்களை எடுத்து கூறிக்கொண்டிருக்கிறது என்பது அதனை பார்க்கும் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
ஒரு தலைவரின் இறுதி ஊர்வலம்...மக்கள் அபிமானம் பெற்ற மனிதரின் இறுதி ஊர்வலம் எந்த வகையில் நடத்தப்படவேண்டுமோ அதனை விட பலமடங்கு மேன்மையாக நடத்திக்காட்டிக்கொண்டிருக்கின்றனர் வடகொரியர்கள்.கிம் ஜாங் இன் மரண இறுதி ஊர்வலம் வடகொரிய தேசிய தொலைகாட்சியிலேயே காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதனை சி என் என் தொலைகாட்சி உலகமெங்கும் ஒளிபரப்புகிறது.
மிகவும் திறமையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இறுதி ஊர்வலம்.அதிகமாய் பொழியும் பனியின் நடுவே லட்சக்கணக்கான வடகொரிய படைவீரர்கள் ஒருபக்கம்,லட்சக்கணக்கான வடகொரிய மக்கள்,ஆதரவாளர்கள் மறுபக்கம் கண்ணீர்வடிக்க அழுகுரல் ஓங்கி ஒழிக்க மக்களின் அபிமானம் பெற்ற தலைவன் ஒருவனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
இன்னமும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர் இந்த இறுதி ஊர்வலம் இப்போது தான் நடைபெறுகிறதா அல்லது ஏலவே நடந்து முடிந்து அதன் காட்சிகள் மட்டும் இப்போது ஒளிபரப்பப்படுகிறதா என்று!எத்தனை தான் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டாலும்,உலகமே எதிர்த்து நின்றாலும் அந்த தலைவருக்காக,தலைவரின் மாட்சியை போற்றி இத்தனை லட்சக்கணக்கான மக்களின் ஒன்றுகூடல் வடகொரியாவின் வன்மையை வல்லரசுகளுக்கு காட்டி இருக்கும் மீண்டும் ஒரு தடவை!!
காலம்சென்ற கிம் ஜாங்,தனது தகப்பனார் 1994 இல் இறந்த போது அவரின் இறுதி ஊர்வலத்தில் கிம் ஜாங் கலந்து கொள்ளவில்லை.பாதுகாப்பு காரணங்களுக்காக என்று கூறப்பட்டது.ஆனால் இன்று கிம் ஜாங் இறப்பு ஊர்வலத்தில் அவரது மூன்றாவது மகனும் எதிர்கால வடகொரிய தலைவருமான கொம் ஜாங் உன் கலந்துகொண்டிருக்கிறார்.
நேரம் கிடைத்தால் பாருங்கள் அந்த வரலாற்று நிகழ்வை!!