பாக்கியம் ராமசாமிக்கு தெரியாம சீதா பாட்டியும் அப்புசாமியும் எந்திரன் படம் பார்க்க கள்ளமா கள்ளமா கெளம்பி போய் பாத்திட்டு வந்தாங்க...என்ன தான் நடந்திச்சு எண்டு நா உங்களுக்கு சொல்றேன் வாங்க..
ஆனா ஒரு கண்டிஷன்..
பாக்கியம் ராமசாமிக்கு யாராவது போட்டு குடுத்தீங்க...அப்புறம் உங்களுக்கு கரண்ட்'டு கட் தான்!!
கெலம்புடி சீதே!
டைம் ஆச்சு..கத்திக்கொண்டே
இந்த வயசிலையும்
சுட சுட
படம் பாக்கணும்..
இன்னும் கட்டிளம் காளை
போல வேல வாங்குறாள்...
மனசுக்குள்ள அப்புசாமி!!
reserved seat 'ல
அமர்ந்துகொண்டு..
எழுவது வருஷத்தில
இப்பிடி ஒரு
சயின்ஸ் பிக்சன்
இது தான் பெர்ஸ்ட் டயிம்மாம்
எனக்கு...
என்றால் சீதா பாட்டி..
நீவு ஒரு ஜீனியஸ்
சீதே..
ஜொள்ளு வழிய
அப்பு..!!
எல்லா ரோபோவும்
ஒரே மாதிரி இருக்கே..
எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறியோ சீதே..
குழப்பத்தில்,
"சீதேம்மா,நெசமாவே
நீவு ஒரு ஜீனியஸ் டி"
பிதற்றினார்!!
உனக்கு எல்லாமே புரியுறது..
சென்னை மூளை
சூப்பர்'ஆ வேல செய்யுது
உனக்கு...
கறுவியபடி அப்பு!
ஆட்டோ ஆட்டோக்காரா
ஆட்டோமேடிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் ஆடோக்ராப்புக்கு.."
சீத்தாப்பாட்டி படம் முடிந்து
கெளம்ப..
அடங்கமாட்டாள்
சீதா
நாளை தொட்டு
ஊட்டுக்கு பேப்பர் கட்..
உறுதியோடு அப்புசாமி...
இரும்பிலே ஓர் இருதயம்
என்றவாறே!!
வீட்டே போய் இரவு..
மனுஷன் படிச்சதிலேயே
உருப்படியான ரெண்டு விஷயம்
ஒன்று நீ சீதே..
மற்றது நான்...
பஞ்சு விட்டபடி
தூங்கியே விட்டார் "களைப்பில்"!!
பாத்து ரசிச்சா மட்டும் பத்தாது..உங்க விமர்சனம்,மற்றும் ஓட்டுகளை விட்டு செல்லுங்கள்!!

