Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Tuesday, August 2, 2011

நான் அடிச்சால் தாங்கமாட்டாய்!!

எனக்கு கோபமே வராதுன்னு நான் அடிக்கடி பொய் சொல்லி இருக்கேன் நெருங்கிய பலரிடம்..ஆனால் உண்மையில் சில பல விசயங்களுக்கு நான் கோபப்படுவேன்..அதில் முக்கியமானது நேரம்..ஆமாம் நேரம் சரியாக கடைப்பிடிக்காவிடில் நல்ல கோபம் வரும் எனக்கு..எனது பாடசாலை "Panctuality" அதுதாங்க நேரம் தவறாமையை சீராக கற்பித்ததாலோ என்னமோ ஒரு நேரத்தை கூறிவிட்டு நேரம் தாமதமாய் வருபவர்களை எனக்கு கண்ணில் காட்ட கூடாது..அவ்வளவு கோபம்வரும்.


இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயங்களில் கோபம் வருவது சகஜம்.எனக்கு கோபமே வராதுன்னு யாராச்சும் சொல்பவர்களாய் இருந்தால் அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்களாகவோ அல்லது பூமியின் அதிசய பிறவிகளாகவோ இருப்பார்!

அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.

கோபம் பசியை போன்றது..சாதி மத பேதமின்றி அனைவருக்கும் வரும்."என்னடா நீ அடிக்கடி எல்லாத்துக்கும் கோபப்படுறியாமே' அப்பிடி நீங்க கேட்டு பாருங்க கோபமே வராதவரிடம்..அன்று தெரியும் அவருக்கும் கோபம் வரும் என்று..ஹிஹி எல்லாம் ஒரு விஷப் பரீட்சை தான்!சிலருடைய கோபம் வரையறைக்குள் கட்டுக்குள் இருக்கும்.சிலரது கோபம் அணு ஆயுதம் போல பரவி வெடிக்கும் ஆற்றலை கொண்டது!
கோபம் இரு வகைப்படும் பெரும்பாலும்.ஒன்று உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம்..மற்றயது வெளிப்படையான கோபம்.வெளிப்படையான கோபம் பல ரச நாடகங்களை நடத்தும்.இதே உள்கோபம்,சில வேலை நம் உயர் அதிகாரிகளிடமோ அல்லது சீனியர்களிடமோ ஏற்படும்.அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளுக்கே புகைந்து கருகும்.

இந்த வீடியோவை பாருங்கள்..உங்களில் என்ன தவறு இருக்கிறதென்று புரியும்!

அமைதியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அமைதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபத்தால் எந்த ஒரு நன்மையும் விளைந்ததாக சரித்திரமில்லை. அன்பாய் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் சரித்திரமில்லை

மொத்தத்தில் கோபம் என்னும் கொலை வாள் வெட்டிச்சாய்த்த வாழ்க்கைகள் ஏராளம் ஏராளம்.எண்ணிலடங்காதவை.கோபமும் மன்னிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றன என்பர்.நான் சொல்வது மட்டுமே சரி,மற்றையவர்கள் சொல்வது தவறானவை என்பதே பெரும்பாலான கோபங்களின் அடிப்படையாக அமைகின்றன.சுய நலமே கோபத்தின் அடி நாதம்.அனைவரும் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொண்டால் கோபங்கள் துளிரிலேயே கருகிவிடும்.அதற்காக மற்றவர்கள் மன்னிக்க இருக்கிறார்கள் என்று வீணே கோபப்படாதீர்கள்..
அப்புறம் கந்தசாமி,அந்நியனிடம் புகார் அளித்துவிடுவேன் நானே!!

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!

படிச்சிட்டு ஓட்டு போடாம போனா நான் கோபமாயிடுவேன்..ஹிஹி கருத்து சொல்லாவிட்டால் கொலை தான்!!
ஜோக் இணையத்தில் சுட்டது.ஹிஹி

Post Comment

Saturday, June 25, 2011

ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படி??

ஹாய் நண்பர்களே,
நம்முள் பலபேர்,(ஹிஹி சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்..எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??

அதனால தான் புதிய பதிவர்கள்,மற்றும் பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு
நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்...புதுசா வந்த பதிவர்களுக்கு சில வேளை தெரியாமல் இருக்கலாம்
எப்படி ஆக்கபூர்வமாய் பதிவு போடுவதென்று..
நான் சொல்லப்போற விசயங்களை கப்பென்று கட்ச் பண்ணி,இந்த பதிவை
புக்மார்க் பண்ணி வைச்சிருந்தீங்கன்னா,வருங்காலத்தில் உங்களுக்கு
பெரிய உதவியா இருக்கும்..
ஓகே???சரி வாங்க ஆக்க பூர்வமாய் பதிவு போடும் நடைமுறைக்குள்ள போவம்.

முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..

அப்புறம் புத்தாடைகள் அணிந்து(கவனிக்க புத்தாடை நாட் பழைய ஆடை)உங்க
இஷ்டமான கோயிலுக்கு சென்று வடிவாக தொழ வேண்டும்,
"கடவுளே ஆக்கபூர்வமாய் பதிவு போடப்போறன் இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"
அப்பிடீன்னு நீங்க கடவுளை வேண்டுதல் வேண்டும்...இட் இஸ் வெரி இம்போர்ட்டன்ட்..

அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..

அங்க போனாக்கா நியூ போஸ்ட் அப்பிடின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..
அத கிளிக் பண்ணுங்க..

இப்போ நீங்க ஆக்கபூர்வமா பதிவு போட ரெடி...
இப்போ தலைப்பு வைக்கணும்..தலைப்பு தான் ஒரு பதிவுன் கண்கள்!!!
சோ,நீங்க கில்மா தலைப்பெல்லாம் வைக்ககூடா..அப்புறம் அது
ஆக்கபூர்வமற்ற பதிவு அப்பிடீன்னு போயிடும்..
ஆகவே நீங்க எப்பிடி தலைப்பு வைக்கிறீங்கன்னா,
"ஆக்கபூர்வமான பதிவு"
அப்பிடி வைக்கிறீங்க...பிகாஸ்,நீங்க போடப்போற பதிவு ஆக்கபூர்வமான பதிவு தானே பாஸ்!!!

சரி தலைப்பு வைச்சாச்சு பதிவு என்ன போடுறது???
அது உங்க இஷ்டம்...ஆக்கபூர்வமா என்ன உங்க மனசில உதிக்குதோ,அத அப்பிடியே
கொட்டிடுங்க வெளில சிந்தாம சிதறாம...
முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது...
நல்ல சீனரி படங்களை தேடி எடுத்து போடுங்க..அதுவும் இல்லாவிடில்,
சாமி படங்கள் போடுங்க..(அதுக்காக கந்தசாமி படம் இல்லை)..

இப்ப பாத்தீங்கன்னா,பதிவுலகுக்குள் வந்த சின்ன புள்ளைக்கு கூட
ஆக்கபூர்வமா பதிவு போடுறது எப்பிடின்னு தெரியவந்திருக்கும்..

சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி

பதிவுலகத்தை கெடுக்கிரான்னு இனி யாரும் என்ன பாத்து திட்டமுடியாது பாருங்க.

Post Comment

Thursday, June 23, 2011

பதிவர் சந்திப்பு+சாரு+விஜய்!!

கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.
அதனால பதிவுகளின் தரம் அது கேள்விக்குறியாக இருந்தது(ஆமா வழமையா எதோ தரமாய் தானே எழுதி கிழிச்சவன்).
நண்பர்களின் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை..
இடைக்கிடையில் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலானோர் "தொடரும்"
பதிவுகளை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
ஆனால் முடிந்தளவுக்கு அனைவர் தளங்களுக்கும் சென்று கமெண்டிட்டு வாக்கிட்டு வந்திருந்தேன்..
ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி
இந்தியாவில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளும்,அதன் போட்டோக்களும்
இடைக்கிடையே எனக்கு சிரிப்பை வாரி வழங்கி இருந்தன...
அந்த வகையில்,சிபி,மனோ,மணிவண்ணன்,சங்கரலிங்கம் சார்,சீனா ஐயா,ஷர்புதீன் போன்றோருக்கு நன்றிகள்..
கோமாளி செல்வா,மற்றும் சிபி அண்ணே
போட்டோக்களை பார்த்தவுடன் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா??
ஹிஹி சொல்லமாட்டேனே...
வம்பை விலைக்கு வாங்குபவரை இப்போ கூலிங் க்ளாஸ்'னு தான்அழைக்கிறார்களாம்..
இனிமேல் பதிவுலகில் பெயர்கள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ?
தக்காளி...
வெங்காயம்..
லாப்டாப்...
கூலிங் க்ளாஸ்..
கில்மா...
அருவா..
வடை...
கோமாளி...
சிரிப்பு போலீஸ்
பன்னிகுட்டி
ஆட்டுக்குட்டி

பலருக்கு சந்திப்பில வெட்டுக்குத்து,கொலை எல்லாம் நடக்காததில கவலைன்னு அவங்க பதிவுகள வாசிக்கும் போதே தெரிஞ்சது..
முக்கியமா பிளையிட் பிடிச்சு போன மனோ அட்லீஸ்ட் ஒரு கொலையாச்சும் பண்ணுவார்னு எல்லாரும் பரவலா
நேரடி ஒளிபரப்பை பார்க்க ஆவலா இருந்திருக்காங்க...ஆனா நேரடி ஒலிபரப்பு சில பல காரணங்களால் தடைப்பட
அவங்க குழு குளுகுளுப்பு இல்லாம போச்சு..அவ்வ்வ்வ்

ம்ம்ம் அது இருக்கட்டும்...
அப்புறம் சூடாக அலசப்படும் விஷயம் "சாரு"பற்றியது..


இதை பற்றி எத்தனையோ ஆக்கங்கள் அலசல்களை வாசித்தும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதவனாய்
இருக்கிறேன்..அவ்வாறு நடந்திருக்கலாமோ இல்லை திட்டமிடப்பட்ட வேலையோ என்று தெரியவில்லை..
தமிழச்சி தனது தளத்தில் கிழித்திருக்கிறார் சாரு பற்றி..

சாரு நிவேதிதா வாசகர் வட்டம்னு ஒரு வட்டம் இருக்கு பேஸ்புக்கில..அதில இணைந்து இருக்கிறேன் நான்
கடந்த சில மாதங்களாக..இன்று அதனை பார்க்கும் போது ஆக்ரோஷமும் எதிர்ப்புகளும் மாறி மாறி விழுவதை
காண முடிந்தது...இணையத்தள வாசிகளும் தங்கள் ஊகங்களை மாறி மாறி வெளியிடுகிறனர்.
ஆனால் எனக்கென்னமோ அந்த பெண்ணின் உரையாடல் போலியானதோன்னு தான் தோணுது..


அப்புறம் விஜய்..

சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..
பெரும்பாலும் திரைவிமர்சனங்களை பாருங்கள்..படம் வந்த உடனே இருவர் படம் சொதப்பல் என்று
விமர்சனம் இட்டால்,அடுத்து விமர்சனம் போடுபவர்கள் பெரும்பாலும் அதே கருத்திலேயே விமர்சனம்
செய்துவிடுவார்கள்..இது வழமையாக இங்கு நாம் காணும் காட்சிகள்..
அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது.
இப்போ கலைஞர் ஆட்சியை விட்டு இறங்கியவுடன் சும்மா இருந்தவர்களும் எழும்பி நின்னு கலைஞரை
அடிக்கவில்லையா...இவர்கள் அடுத்த முறை அம்மா தோற்றால் கூட இதே மாதிரி அம்மாக்கு எதிராக எழுதி
பட்டியலிடுவார்கள்..
இதை தான் காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளல் என்பதா??அல்லது எரிகிற வீட்டில் என்னவோ பிடுங்கிறது
என்பார்களே...அந்த மாதிரியா??
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கிறார்கள்..ஆனால் விஜய் மற்றும் அவரது ரசிகர்களே
பெரும்பாலும் தாக்கப்படும் ரசிகர்களாகி இருக்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு விஜய்'யை அல்லது அவர்களை சார்ந்தோரை
தாக்கி பேசுவதன் மூலம் தாங்கள் பிரபல்யம் பெறலாம் என்ற நினைப்புத்தான் வேறொன்றும் இல்லை..

இதே கோஷங்கள்,அஜித்,கமல்,ரஜனி,தனுஷ்,சிம்பு போன்றோரின் பிறந்த தினங்கள் வரும்போதோ அல்லது சாதாரணமாகவோ
எழுப்பபடுவதில்லை...
அப்புறம் ஏன்??நாங்க உங்களுக்கு பைட்ஸ்'ஸா??ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா??

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் வ்வ்வ்வவ்வ்வ்வவ் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

Post Comment

Thursday, June 16, 2011

பதிவுலகில் ஒரு வருடம்-மைந்தன் சிவா



Vijayfans-santhosh
arunvetrivel
Rupika
மங்குனி அமைச்சர்
naramkumar
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தமிழ்வாசி பிரகாஷ்
ஈரி
C. Sivan
jeevanbennie
MuthuSubramanian
தனி காட்டு ராஜா
Kavinthan
NKS.ஹாஜா மைதீன்
மதுரை
நர்மதன்
chella guru
mahan thamesh
இரா.எட்வின்
மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை
புரட்சிக்காரன்
shahul hameed
அரசன்
somasunderam

Dilukshan
Jawid Raiz (ஜாவிட் ரயிஸ்)
sempakam
Ashwin
sivalingamtamilsource
Prabu Kumar
Akny Puthran
A.R.ராஜகோபாலன்
kavithaiprem
KADAMBAVANAKUYIL
manchuthan
Seelan Sivaguru
Kamal Nadan
Gangatharan
முல்லை அமுதன்
Vimalkumar.R
கறுவல்
நெற்றிக்கண்

tharini nadesar
venkat kumar
வெறும் பய
!* வேடந்தாங்கல் - கருன் *
!



siva kumar
Jemini
ARAM NEWSPAPER
onehour2011
Mano
மதுரன்
ஆகாய மனிதன் !
பதிவுலகில் பாபு
பன்னிக்குட்டி ராம்சாமி
rajasekaran seetharaman
s aththi
N.Mani vannan
Prabha
Ravishanth Selvanayagam
Nirupan
வைகை
ஓட்ட வட நாராயணன்
கந்தசாமி
shanmugavel
jee
Mohamed Sharfudeen
கார்த்தி
Balasubramanian c
Rathnavel .Natarajan
மருதமூரான்.
Riyas
Dinesh
# கவிதை வீதி # சௌந்தர்
இரவு வானம்
Mohan
cps
venkat kumar
பிருந்தாவனம்
Rajkumar
Chitra Solomon
நிருஜன்
joel srk
a n a n d
tr manasey manasey
JANA
திருமணசேவை
waran
madhan raj
Jeya
Tharsan
பிரஷா
aysha
Selvarajah Jeyanth
Vathees
தர்ஷன்
Manivannan Raguparan
Thenusha Chandirakumar
Subankan
Mani
!* வேடந்தாங்கல் - கருன் *!
Akilan
ரஹீம் கஸாலி
ibsa
Sutharshan Sniper
Harini Nathan
Allnews Cinema
Kumarasamy
ஜனகன்
தேவன் மாயம்
sivatharisan paranirupasingam
Kiran Jai
chilawking (Dileep)
nis
அன்புடன் பிரசன்னா
கவியின் கவிகள்
DhuShi

Mithun Rathnasamy
கவி அழகன்
Arun prasath
Yuvan Raj
inaiya thamizhmandram
கலாநேசன்
jorge bede
Haja
Raja Mani
selvam sutha
வருணா
anton vernon vaz
சத்ரியன்
sridharshan
ம.தி.சுதா
sathiamoorthy shathieshan
கே.ஆர்.பி.செந்தில்
வெறும் பய
GAVAS
pavi
Mathi Sudi
-- உலவு.காம் (www.ulavu.com) --
http://gugi-frank.npage.de/index.html
Jörgi
FARHAN
Ravikanthan
Prem
Kurunchis
உன்னைப்போல் ஒருவன்


மைந்தன் சிவா


Aruna
sothilingam gunaharan
THANANCHEYAN UMAKANTHAN
ROMESHANANTHA SEBASTIAN THANGARAJAH
shiyam




ஹிஹி என்னங்க அப்பிடி பாக்கிறீங்க??இன்னிக்கு தான் நான் பதிவுலகினுள் காலடி வைத்து
ஒரு வருடம் ஆகிறது..
இது வரை
167 பதிவுகள்..
205 போலோவேர்ஸ்
(ப்ரோபைல் படம் உள்ளவங்கட மட்டும் மேலே காட்டி இருக்கேன்)
2800 +கமெண்ட்கள்
109 நாடுகள் இருந்தான பார்வையாளர்கள்..
இப்படி எத்தனையோ கணக்கு விபரம் சொல்லலாம்...

அவர் அவர் காட்டுகின்ற திறமைகள் பொறுத்து ஒவ்வொருவரின் வலைப்பதிவும்
பிரபல்யம் பெறும்..நேற்று தான் மதிசுதாவின் ஒரு வருட பூர்த்தி..
நண்பர் சி பி செந்திகுமார் இன்னமும் ஒருவருடம் பூர்த்தி செய்யவில்லை..
ஆனால் டாப்பில்!!
பதிவுலகம் எத்தனையோ நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது எனக்கு...அதுவே போதும்..
எனது பதிவுகளை வாசித்து தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இந்நாளில் எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்..

டிசம்பர் வரையில் கவிதைகளுக்கான ப்ளாக்'ஆக இருந்தது..
அதன் பின்னரே பத்தும் பலதும் எழுத வெளிக்கிட்டேன்..இந்நேரத்தில்
பதிவர் அஷ்வினுக்கு நன்றி கூற வேண்டும்...கவிதைகளிலிருந்து
கடிகளுக்கு மாற காரணம் அவர் தான்...(அட்ரெஸ் தாரன் போயி புளந்து கட்டுங்கோ)
அதை விடுங்க சகோதரங்களே...
பெருசா என்னத்தை சொல்லிவிட போகிறேன்..
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறேன்..
ஒவ்வொருத்தராக விளிக்க வெளிக்கிட்டு யாராச்சும் மிஸ் பண்ணினால்,
அதனால் தனித்தனியாக நன்றி கூறவில்லை...(அஷ்வின் தவிர)
ஏன் தேவை இல்லாத மனஸ்தாபங்கள்...
கஷ்ட காலங்களில் எனக்கு ஆதரவாய் இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்..


இன்னமும் போக வழி தூரம் இருக்கு..அதனை கடக்க உங்கள் ஆதரவு என்றைக்கும் எனக்கு தேவை...நன்றிகள்!!!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...