Friday, April 29, 2011

வானம் விமர்சனம்!!


வானம் விமர்சனம்!!!

இன்று இலங்கையில் வானம் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புலப்பட்டது.
சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால்
பலர் வானம் பார்க்க ஆசைப்பட்டனர்.
அவர்களுக்கு இன்று கப்பியோ கப்பி.

ஆனா விமர்சனம் பாக்க வந்தவங்களுக்கு தொப்பியோ தொப்பி...
வானம் ஒரே நீளம்..
வானம் ஒரே நீலம்!!!

ஆக்சுவலி இன்னும் நான் வானம் பாக்கேல..
கொஞ்சம் வெயிட்டு பண்றீங்களா
நான் போயி பாத்திட்டு வாறன்??

கடுப்ப கெளப்பிட்டனா??(என்னடா கேள்வி?)
அப்பிடி எல்லாம் கடுப்பாகப்பிடாது..
நான் போட்ட தலைப்பு வானம் விமர்சனம்!!
வானம் திரைப்பட விமர்சனம் அல்ல மக்கா!!

மைனஸ் ஒட்டு குத்த போறீங்களா??
அட இது மொக்க பதிவுங்க..
சத்தியமா!!

இந்தியாவில வானம் எப்பிடி எண்டு நம்ம இந்திய நண்பர்கள் சொல்லுங்க பின்னூட்டத்தில..
அப்பா தானே அங்கத்த நிலவரம் தெரிய வரும் பாஸ்!!

குறிப்பு:படங்கள் இன்று வெளியான வானம் திரைப்படத்தின் படங்கள்!!


சிரிப்பு போலீஸ் "கோ" பட விமர்சனம் போடேக்க நான் வானம் பட விமர்சனம் போடக்கூடாதா??

Post Comment

Thursday, April 28, 2011

இலங்கை ப்லோக்கேர்ஸ்'கு என்ன நடந்தது?



இலங்கை என்று ஒரு நாடு இருக்குதுன்னு உலகத்துக்கு தெரிய வர
காரணமே இந்த ப்லோக்கேர்ஸ் என்று மார்தட்டிக்கொள்ளும்(?)
வலைப்பதிவர்கள் தான் என்றால் மிகையாகாது தானே!

அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர்
நடந்த இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பில் கணிசமான
பதிவர்கள் வந்திருந்தனர்.(எண்ணிக்கை தெரியாது..ஆனால் சுமார் என்பது இருக்கும்)

சந்திப்பு நடைபெற போகுதுன்னு தெரிஞ்ச உடனேயே
பதிவு போடாமல் இருந்த பலரும்,தாங்கள் பதிவர்கள் தான்
என்று நிரூபிப்பதற்காக அடுத்தடுத்து சில பதிவுகளை இட்டனர்..

சந்திப்பு நடை பெற்றது...
விளையாடி,கதைத்து,கலந்துரையாடி,உண்டு முடித்தாகி விட்டது.

அதன் பின்னர் ஒரு கிழமைக்கு மாறி மாறி பதிவுகள் வந்தன...
ஒரே ஆர்ப்பாட்டமாய் இருந்திச்சு..

அப்புறம்?

ஆர்ப்பாட்டம் அடங்கிருச்சு..அது தான் உண்மை..
பெரும்பாலானோர் மாதத்துக்கு ஒரு பதிவு,இரு பதிவுகளை போடுகிறனர்.
சிலர் அது கூட இல்லாமல் இருக்கிறனர்.

அடிக்கடி பதிவுகள் போட்டு இலங்கை பதிவுலகை கலகலப்பாக
உயிர்ப்போடு வைத்திருப்பதென்றால் அது யாழ் நிரூபனும்,
மதி சுதாவும் தான்..
ஜனா(cheers வித் ஜனா) அடிக்கடி பதிவிட்டு வந்தார்..
இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது..வேலைப்பளுவாம்.

மற்றம்படி அனைவரும் அத்தி பூத்தால் போல பதிவிட்டு வருகிறனர்.
இது ஆரோக்கியமான நிலைமை அல்ல இலங்கை பதிவுலகிற்கு!!
பலர் சொல்லும் காரணம் வேலைப்பளு.
அது ஒரு காரணமே அல்ல..
ஒரு பதிவு போட எவ்வளவு நேரம் எடுக்கப் போகிறது??
கிழமையில் ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்காதா ஒரு பதிவு போட?
இவ்வாறு சென்றால் நிலைமை என்ன இலங்கை பதிவுலகிற்கு!!

இந்திய நண்பர்களை பாருங்கள்..எவ்வளவு சுறு சுறுப்பு,ஆர்வம் கொண்டு இயங்குகிறனர்.

இலங்கையில் அதிகம் போலோவேர்ஸ் கொண்ட பதிவர்
லோஷன் அண்ணா.அவர் இப்போது பதிவு போடுவது
மாதத்துக்கு ஒன்றோ இரண்டு.

இவ்வாறு சென்றால் இலங்கை பதிவுலகம் ஒரு முடிவை
நோக்கி செல்கிறதா??

வளர்ந்து வரும் புதிய பதிவர்களே,நீங்களாச்சும்
அடிக்கடி பதிவு போட்டு இலங்கை பதிவுலகை
உயிர்ப்புடன் வைத்திருங்கள்!!

ஆவலுடன்,
ஏக்கத்துடன்,வெறுப்பு மற்றும் கடுப்புடன்,


Post Comment

Wednesday, April 27, 2011

என் வழியில் மங்குனி அமைச்சர்!!




நேத்து தான் மங்குனி அமைச்சர்ட கடைசி பதிவ வாசிச்சேன்..

மங்குனி அமைச்சர் என்ன விட கொஞ்சம் குறைவா இறங்கி போய்ட்டார்னு நெனைக்கும் போது
தான் கவலையா இருக்கு பாஸ்...
கடந்த வாரம் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் ஒசாமா எனது போலோவரா என்று..
அதனை பார்க்க இதை கிளிக்குங்கள்..

இரு நாட்களுக்கு முன்பு மங்குனி அமைச்சர் ஒரு பதிவு போட்டிருந்தார்
கலைஞர் எனது ப்லோகோட ரசிகரா நம்பமுடியல அப்பிடீன்னு.
அதனை பார்க்க இங்கு கிளிக்குங்க..

கட்டாயம் ரெண்டையும் கிளிக்கி பாத்தவங்க இத வாசியுங்க..
*
*
*
*
*
*
ரெண்டையும் கிளிக்கி பார்க்க எங்களுக்கு ஒன்னு புரிஞ்சிருக்குமே?
கட்டாயம் புரிஞ்சிருக்கும் நான் என்ன சொல்ல வாறன் எண்டு!!
என்ன அது??
ஆமா மங்குனி அமைச்சர் என்ன விட தாழ்ந்து போயிட்டாரு!!

அவரு தமிழ்மண ராங்கு 4 ,
நான் நூத்தி ஒன்னு!!
அவருக்கு 419 போலோவர்ஸ்,
எனக்கு நூத்தி அம்பத்தி ஒன்னு...!!

அப்பிடி இருந்தும் ஏன் மங்குனி அமைச்சரே ஏன்??
எனக்கு உலக வல்லரசுக்கே சவால் விடும் ஒசாமா போலோவராயி இருக்கேக்க,
மன்குனிக்கு தடுமாறும் கலைஞரல்லவா ரசிகராகி இருக்கார்!!
ஹஹஅஹா புரிஞ்சுதா நம்ம லாஜிக்கு??

சத்தியமா இதில எந்த உள்குத்தும் இல்லைங்கோ அட இல்லைங்கோ...

Post Comment

Tuesday, April 26, 2011

யாழ்ப்பாணத்தில் தொடர் கொலைகள்!!-பின்னணியில் யார்??



அண்மைக் காலமாக யாழ் மண்ணில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகிறமை அனைவரும்
செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
ஆனால் அவை தற்கொலையா இல்லை கொலையா என்பது யாருக்குமே தெரியாதது.

கடந்த வாரம் கொழும்பு பல்கலை முகாமைத்துவபீட மாணவன் யாழ்ப்பாணத்தில் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று செய்தி..

அதே போல யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று இன்னொரு செய்தி..

நேற்று பார்த்தால் எனது பாடசாலையை சேர்ந்த(யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி)மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலையாம்!
வர்த்தகத்துறையில் கல்வி பயிலும் ரவிந்திரன் பபிசன் (18 வயது) என்ற மாணவனே இன்று காலை அவனது வீட்டில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
என்ன தான் நடக்கிறது அங்கே??

இந்த தற்(கொலைகளின்) பின்னணியில் "யாரோ" இருப்பதாக அனைவரும் சந்தேகப்படுகிறனர்.
ஆனால் என்ன பண்ண?நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவா இருக்கிறது??
அதுவும் யாழ்ப்பாணத்தில்??
குறித்த பெண் ஆசிரியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்று
வைத்தியசாலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்துக்கல்லூரி ஆசிரியையான இருபத்தேழு வயதுடைய செல்வராசா அனுஷா என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வீட்டில் தனியாக இருந்த வேளையிலேயே இந்த சமயத்திலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் ஆசிரியை

வீட்டுக்கு பக்கத்தில் இராணுவக் காவலரண் ஒன்று இருப்பதாகவும்,இராணுவத்தினரே இதை பண்ணி இருக்க கூடும் என்று
உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.யாழில் இராணுவத்தினரை மீறி ஈ காக்கா அசைய முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.
ஆனால் என்ன பயன்??

நேற்று தூக்கிட்டு இறந்த மாணவன் பபிசன்

படிக்கும் மாணவர்கள் தற்கொலைகளின் பின்னணி என்ன?
பெரும்பாலும் அவை கொலைகளாகவே இருக்கக்கூடும் என்று மக்கள் சந்தேகப்படுவது கண்கூடு!
எதை பற்றியும் வெளியே கதைக்க பயம்.அவ்வாறு இருக்கையில் எழுதுவது அதை விட பயம்.
சண்டை நடைபெற்ற காலங்களில் யாழில் இவ்வாறான தற்கொலைகள் நடைபெற்றதே இல்லை..
இப்போது சமாதானம் என்று பெரும் பேச்சு..சண்டை தான் இல்லை ஆனால் கொலைகள் தாராளம்!!

இதேவேளை,இது சம்பந்தமாக,யாழில் நடைபெறும் வன்செயல்களுக்கு யார் காரணம் என்று ஒரு செய்தியை "லங்கா கார்டியன்'இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் இவை யாவற்றுக்கும் பின்னணியில் இலங்கை இரா****'இன்புல******துறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
இது அவங்கட செய்தி மட்டுமே..எனது அல்ல!!உண்மை பொய் எனக்கு தெரியாது என்பதை பழனி முருகன் மேல சத்தியம் செய்து கூறிக்கொள்கிறேன்!!!

சில விடயங்கள் பற்றி எழுத கூடாது..ஆனால் எழுதாமல் இருக்க மனம் கேட்பதில்லை...
அடிக்க அடிக்க வாங்கிட்டு இருக்க நாம ஒண்ணும் வில்லன் பொன்னம்பலம் இல்லையே!!
கேட்பதற்கு ஆட்களில்லாவிட்டால் ஆடுபவர்களுக்கு வசதி தானே!!

Post Comment

Sunday, April 24, 2011

இவருக்கு அடையாளம் கொடுங்கள் பதிவுலக நண்பர்களே!!

வெறுமனே பதின் நான்கு போலோவேர்ஸ் ஆனால் பதிவுகள் இரண்டாயிரம் மேல்!!மூன்று வருடங்களாக எழுதுகிறார்..
நம்புவீர்களா??

'தமிழ் வணக்கம்"
யாராவது இந்த பெயரை கேள்விப்பட்டதுண்டா??
அதுவும் பதிவுலகில்?
பெரும்பாலானோரின் பதில் "இல்லை"என்பதாகவே இருக்கும்.

ஆமாம்,அடையாளத்துக்காய் எதிர்பார்த்திருக்கும்,
அடையாளம் இல்லாத ஒரு 'கவிதைக் கடல்"!!
ஆமாம் அது தான் மிகச் சரியான வார்த்தை!

தமிழ்நாடு,மதுரையை இருப்பிடமாக கொண்ட,"பத்திர எழுதுனர்"
வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதர்.
தனது புகைப்படத்தை கூட பிரசுரம் செய்யாமல் மிக அமைதியாக தனது
கவிதைகளை தனது வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கில் பிரசுரம் செய்துள்ளார்!!

தன்னை பற்றிய அறிமுகத்தில்
"நான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற
போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்"
செய் என்று தன்னடக்கமாக குறித்திருக்கும் 'தமிழ் பாலா'என்ற புனை பெயரைக் கொண்டவர் தான்
தமிழ் வணக்கம் வலைத்தளத்தின் ஆசிரியர்!

தமிழ் மேற்கொண்ட பற்றினால் தனது பெயரிலும்,வலைத்தளத்தின் பெயரிலும் தமிழ் என்ற வார்த்தையை சேர்த்து
தமிழை அனுபவிக்கும் ஒரு கவிஞர்!
அவரின் ஆர்வங்கள் (interests) என்னை கவர்ந்தவை.
-மக்களுக்கான இலக்கியம் படைத்தல்
-மக்கள் ஜன நாயக எழுச்சிக்காக போராடுதல்
எத்தனை பேருக்கு இவ்வாறான ஆர்வம் இருக்கும் சொல்லுங்கள்?

2008 இல் எழுதத் தொடங்கி இது வரையில் அண்ணளவாக 2000 கவிதைகளுக்கு மேல் எழுதிக் குவித்திருக்கிறார்,எந்த வித
வரவேற்போ,வாழ்த்துதல்களோ இல்லாமல்!!பாராட்டப்படவேண்டியது!!

காதல் கவிதைகள்,சமூக விழிப்புர்வு கவிதைகள் என அன்தைத்து இடங்களையும் தொட்டுச் செல்கிறார்!
காதல் கவிதைகள் ரசம் பொங்குகிறன..சமூதாய விழிப்புணர்வு கவிதைகளில்
கோபம்,எழுச்சி,உணர்ச்சி வெளிப்படுகிறது!!

உதாரணத்துக்கு ஒரு காதல் கவிதை :
மலரினும் மெல்லியது காதலடியோ!உன் மனதினில் என்னை நீயும்
மறுப்பதுதான் ஏனடியோ?-உன்
மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்
நினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே!
ஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே
ஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி!-காதல்
ஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்
உயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி!

ஒரு எழுச்சி கவிதை :


மக்கள் ஜன நாயகப் புரட்சி!
மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று
போராடி போராடி எழும் புரட்சி!
பாடு பாடு புதியபாடல் பாடு!
சேர்ந்து பாடு செஞ்சிந்து பாடு!
கரங்கள் உயர்த்திப் பாடு!-கூட்டி கூட்டி கோடிக் கரங்கள் உயர்த்திப் பாடு!
கரங்கள் தட்டிப் பாடு! ஒற்றுமை கூட்டிப் பாடு!
வாழ்க வாழ்க மக்கள்ஜன நாயக புரட்சி வாழ்கவே!-உலகமெங்கும்
பொதுவுடைமை பொன்னுலகம் மலர்கவே!
தனியுடைமை கயவர் அதிகார அமைப்பு அழிகவே!

அவரின் அனுமதி இன்றி வெளியிடப்படும் பதிவு.
தமிழ் பாலாவின் அனுமதியின்றி அவரின் இரு கவிதைகள் இங்கு வெளியிட்டுள்ளேன்..
அவரை தொடர்புகொள்ள முடியவில்லை,பல தடவை முயன்றேன்.அதனால் தான் அனுமதியின்றி..

இதை பாருங்கள்..
'வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி!
வெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி!
மானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா?
ஏண்டியாத்தா மாமியா இந்தாதானே எதிரில நிக்குறேன்!
சூட்சுமக்கார சுந்தரி நல்லகாயா பாத்து நீயும் வாங்குடி!
நான்மாட்டேன் அந்தரி அலைந்து திரிந்து நீயே வாங்குடி!
எந்த சண்டை என்றாலும் வீட்டுல கட்டி வையடி!
இந்த விலைவாசி ஏத்தத்தை எதித்துப் போராட ஒண்ணுசேரடி!-
அடி நாம சண்டையப் போட்டா போலி அரசியல் வாதிக்குக் கொண்டாட்டண்டி!
அதனால மாமியா மருமக சண்டைய கிடப்புள போட்டுடுவோம்!"

திரட்டிகளில் கூட அவர் பதிவுகளை இணைப்பதில்லை.அதனால் தான் பெரும்பாலானோருக்கு இன்னமும்
அவரை அடையாளம் தெரியவில்லை!!
வெறுமனே மொக்கை போடுவதோ,கண்மூடித்தனமாக கொமென்ட் பண்ணுவதோ
பதிவுலகத்தை மெருகேற்றாது.அவையும் அவசியம் தான்..
ஆனால் இத்தகைய ஒளிந்து மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து
அடையாளம் கொடுப்பதும் நம்மவரின் கடமையல்லவா நண்பர்களே??

அவரின் வலைப்பதிவுக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்..தமிழ்வணக்கம்

என்னடா மைந்தன் சிவா இப்பிடி ஆகிட்டாரே எண்டு பாக்கிறீங்களா??
எல்லாம் ஒரு சமூக சிந்தனை தான்!!
மீண்டும் மொக்கைகள் வழமை போல் தொடரும்!!

Post Comment

Friday, April 22, 2011

ரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்!!(வீடியோ)

சுப்பர் ஸ்டார்'ர வைச்சு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றாங்க நம்ம பசங்க!!
நான் ரசிச்ச அய்ட்டம் ஒன்னு தாறன் பாருங்க..
சிச்சுவேசன் இது தான்..

கடைசி பந்தில் நூத்தி எழுபத்தி நாலு ஓட்டங்கள் தேவை..
இப்போ களமிறங்குறார் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனி...
என்ன நடக்க போகுது??
நீங்களே பாருங்க!!
மலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...
தலைவர் தான் மாஸ்'சு!!


ஐயோ இவர் பண்ற அட்டகாசத்த பாத்தீங்க எண்டால்,
நீங்களா இருந்தா அதிலேயே கொன்னே போட்டிருப்பீங்க !!
பாக்கிறவங்களுக்கு ரசனை..
தோத்த பய புள்ளைக்கு??
டேபிள் டெனிஸ் ஆடுறாரா இல்ல......



சிரிச்சா ரசிச்சா,உங்க வேலையையும் பாத்திட்டு போங்க பாஸ்!!

Post Comment

Wednesday, April 20, 2011

ஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா??



நேத்து வேலை முடிஞ்சு பஸ்'ல ரொம்ப tired'ஆ வந்திட்டிருந்தேன்..
மழை வேற ஒரு பக்கம்..

ச்டாமினாமினா யெஹ் யெஹ்
வக்கா வக்கா யெஹ் யெஹ்...
ஒண்ணுமில்ல என்னுடைய தொலை பேசி ஒலித்தது.
பாத்தா புது நம்பர்..
"ஹலோ யாரு?"
டமார் டமார் டுமீல் டுமீல் டும் டம்"....

ஒரே வெடி சத்தம்..
"அட யாருப்பா இது"?
வருஷம் முடிஞ்சு வெடி சுடுறது?"

'நான் தான் ஒசாமா பின் லாடன்"

"என்னது ஒசாமாவா?"
"ஆமா ஒசாமா தான்"!

'என்ன விஷயம்?"

"இல்ல நான் உங்க நீண்ட நாள் வாசகன்..
எப்ப உங்கட ப்ளாக்'க வாசிக்க தொடங்கினேனோ
அண்டைக்கே குண்டு போடுறத நிறுத்திட்டன்...
வாழ்க்கை வெறுத்திட்டு..
பேசாம அல்கெய்டா'வ விட்டிட்டு உங்க ப்ளோக்ல சேர்ந்திடலாம்னு இருக்கேன்..
பேசாமல் நானும் அமெரிக்காவுக்கு குண்டு போடாம மொக்கை போட்டே சாவடிக்கலாம்னு இருக்கேன் பாஸ்"."

அப்பிடியா?அப்பிடீன்னா ஒரு கண்டிசன்..
நான் சொல்ற சில ப்லோக்கேர்ஸ்'ஐ போட்டு தள்ளுங்க..
உங்கள சேர்த்துக்கிறேன்..எண்டேன்..

ஓகே லிஸ்ட் அனுப்புங்க ஒரேடியா பாம் வைச்சுடுறேன் எண்டார்..
அனுப்பி இருக்கேன் பாப்பம்...
அவரு ஒசாமாவா இல்ல ஓட்டவடையா எண்டு!!
இது தான் லிஸ்ட்:
சி பி (முக்கிய புள்ளி)
நல்ல நேரம் சதீஷ் குமார்
தக்காளி விக்கி
நாஞ்சில் மனோ
கந்தசாமி
கவிதை வீதி சவுந்தர்
ரஹீம் ஹசாலி
ஜனா
நிருபன்
ஓடையிலிருக்கும் சுதா

ஓட்ட வடையை சேர்த்துக்கல..ஆல்ரெடி ஒரு ஓட்டையோட அலையுறாரு பாவம்
இன்னொரு ஓட்டைய அவரு உடம்பு தாங்குமான்னு தான்..!!

பட்டியல் நம்பர் ரெண்டு அப்புறமா குடுக்கலாம்னு இருக்கேன்...

இது தானுங்க மேட்டர்...போலோவேர்ஸ் ஆயிரத்தி ஐநூறு..இல்ல இல்ல .. நூத்தி அம்பது ஆகுது..
நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!தொடர்ந்து தொடர்பில் இருங்கள்..
தொடர்புக்கு அழையுங்கள் #123456789*


ஆமா யாரு அந்த நூத்தி அம்பதாவது பாவப்பட்ட போலோவர்??
ஆமா அந்த படம் யாரோடது??கண்டு பிடியுங்க...அவங்க போட்டிருக்கிற சட்டை பரிசாக தரப்படும்!!
(சட்டை மட்டும் தான்!!!ஐ மீன் பின்னால இருக்கிற பானை எல்லாம் கேக்கப்பிடாது!!)

Post Comment

Tuesday, April 19, 2011

வடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க!!


நேத்து அமெரிக்கால இருந்து எனது ரசிகர் ஒருத்தர் போன் பண்ணினார்..
என்னுடைய பதிவுகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தது,
அமெரிக்கன் டைம்ஸ்'ல உங்க பதிவுகள போட போகிறேன்..
அனுமதி தாங்கன்னு..
நானும் ஏன் ஓசில வாற புகழை விடுவான் எண்டு ஓகே
சொல்லிட்டேன்..அப்புறமா கை குலுக்கும் போது தான்
தெரிஞ்சுது நெசமாலுமே அது ஒரு கனவு அப்பிடீன்னு!!

சரி வடிவேலுக்கும் அமலா பாலுக்கும் என்ன புண்ணாக்கு
சமாசாரம்??வடிவேலு தான் கப்டன் கூட பிசி ஆகிட்டாரே..
அந்த கொமித்மென்ட் இன்னும் முடியலையே..\
அப்புறம் எப்பிடி அமலா....பால்!!?




ஹலோ துபாயா?
என் ப்ரதர் மார்க் இருக்காரா??
ஏய் நீ தானா??
ஹவ் ஆர் யூ?
இஸ் இட்??
வை ஆர் யூ க்ரையிங்?
லீவ் இட்..
பி ஹாப்பி...!!
கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்!!

ஆமா யாரா இருந்தாலும் கூல் டவுன் பிரதேர்ஸ்..
நான் ஒரு கவிதை சொல்ல போறேன்..
பார்த்துவிட்டு எப்படியென்று சொல்லுங்க உங்க கருத்தை..



ஆட்டுப் பால்
மாட்டுப் பால்
ஒட்டகப் பால்..
நீ எங்கள் அமலா பால்!!(என்ன ஒரு உவமானம் உவமேயம் பலே பலே!!)

அப்பால்
இப்பால்
எப்பாலும் நீ தான்
அமலா பால்!!"(மறுபடியும் பார்'ரா!!)

என் பால்
உன் பால்
அன்பால்
பண்பால் ஈர்த்த
அமலா பால்!!(ஏதாச்சும் புரியுது??)

இந்த கவிதைய பார்த்து மகிழ்ந்த அமலா பால் என்ன சொன்னாங்க தெரியுமா??

'மணி கம் டுடே கோ டுமோரோ..,
உங்க மாதிரி ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம்.
வரும் ஆனா வராது..
நீங்க எம் ஜி ஆர் மாதிரி செக்க செவேல்னு இருக்கீங்க,
சும்மா தக தக தகன்னு மின்னுறீங்க...

என்னய்யா சொல்றீங்கன்னு கேட்டேன்னு நானு இருக்க முடியாம,
அதுக்கு அமலா பால்,
இல்ல சும்மா பொதுவா சொன்னேன் அப்பிடீன்னாங்க..

விட்டிடுவனா நான்..படார்னு விழுந்தேன் பாருங்க காலில..
உடன ஆமா நீ தான்'னு ஒத்துகிட்டாங்க..
ஆல்ரெடி தப்சி,ஹன்சிகா மொத்வாணி எல்லாரும் என்ன லவ் பண்ணுங்கன்னு
அடிபட்டது அமலா பாலுக்கு தெரியாம இருக்குமா என்ன!!
அவங்க என்ன ஐடியால இருக்காங்களோ...

சப்பா..எத்தின பேர்னு நானும் சமாளிக்கிறது!!


தலைப்பு அர்த்தம் புரியுதாங்க??வடிவேலுவும் அமலா பாலும் என் பதிவில சேர்ந்திட்டாங்கப்பா!!

Post Comment

Saturday, April 16, 2011

ஹன்சிகா சின்னப்புள்ளையா??


அடியே கொல்லுதே...
அழகோ அள்ளுதே..
அப்பிடீன்னு பாடவும் முடியுதில்ல..

அடடா மழைடா
அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழை டா
அப்பிடீன்னும் பாட முடியுதில்லை..

நீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல
காந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..
டி கடை'ல நின்னு-அப்புறம்??
தின்னு பாரு பன்னு!!-ஹஹா இது சூப்பர்!!

ஹன்சிகா மொத்வாணி ஒரு பன்னு..
அங்க ஒரு மண்ணும் இல்லை..
So ,
மொக்கைய போடாம போயி ஆகுற வேலைய பாருங்க பாஸ்!!

கொசுறு:சக்க லக்க பூம் பூம்'ல நடிச்சிருக்காங்க ஹன்சிகா..அது தான் பூம் பூமா இருக்காங்களோ??
பிறந்தது ஆகஸ்டு 9 1991 !!
சின்னப்புள்ள!!
பாத்தா தெரியுதா??வயசு!?

பதிவு பெருசா போட்டா படிக்குறாங்க இல்லை..
போட்டோ பெருசா போட்டா பாக்குறாங்க..
அதனால சின்ன பதிவு..
பெரீய போட்டோ...என்ஜாய்!!

Post Comment

Friday, April 15, 2011

ஜூ ஜுவும் தமிழக தேர்தலும்!!



ஒரு பக்கம் ஐ பி எல் மேனியா..
இங்கால பாத்தாக்கா அரசியல் மேனியா...
பார்'ரா போல் போடுறவன கூட
கதிரைய போட்டு ஏத்திட்டாங்கையா மேல..
எனக்கு எவனாச்சும் போல் போடுங்களேன்???
ஒரு போல் போட்டா மாசா மாசம் ஐஞ்சு கிலோ புண்ணாக்கு இலவசம்!!!



ஒண்ணுமில்ல,வைகை புயலு இந்தப் பக்கமா வாராராம்லே!!
காப்டனையே கலக்கி அடிச்சவர்..
லம்ப்'பா எலெக்சன் நிதி வேற கைவசம் வந்திருக்கும்..
எதுக்கும் ஒரு சல்யூட் போட்டு வைச்சாக்கா
முதல்வர் ஆனப்புறம் நம்மள
தொலைத்தொடர்பு மந்திரி ஆக்கினாலும் ஆக்குவார்!!




நம்மள வோட்டிங் லிஸ்ட்'டில சேர்க்காம விட்டிட்டாங்கவா..
அதால போஸ்ட் பாக்ஸ்'ல லவ்வருக்கு லெட்டர் கூட
போட விடுறாங்களில்ல இந்த ஜனங்க...
சத்தியமா நான் எந்த இலவசத்துக்கும் வரிசையில நிண்டதில்லைங்கோ...!!
அட அம்மா சத்தியமாங்க!!



தேர்தல் முடிவுகள் வந்திட்டாம்லே..
நம்ம ஜூ ஜூ சார்பிலையும் ஒருத்தர் நிண்டவர் நம்ம
"வோடா போன்" தொகுதில...
வெண்டிருப்பாரோ??
அட தள்ளுங்கடா பாக்க விடுங்கடா..பிக்காலி பசங்களா...
அந்தா அட்வேர்டிஸ்மென்ட் மாமா வந்திருக்கிறார்,
போயி கிறுக்கு தனமா ஏதாச்சும் பண்ணி நம்ம சூப்பர் ஸ்டாருக்கு
அடுத்த படத்தில வைக்க ஏதாச்சும் சீனுகளுக்கு
ஐடியா குடுங்க..



என்னது வோடா போன் தொகுதில நம்ம ஆளு ஜெயிச்சிட்டாரா??
அண்ணன் தேடி அம்மாவும் ஐயாவும் வாராங்களா??
ஏன் தொங்கிருச்சா அவங்களுக்கு?
ஐ ஜாலி நாம பேமஸ் ஆக போறம்லே...
வாடா மச்சான் ஒரு பார்ட்டி போடுவம்!!



பார் ரா நம்மள வைச்சு ஒரு பதிவ ஓட்டுறான்...
இவன....

ஜூ ஜூவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ் !!

Post Comment

Wednesday, April 13, 2011

மங்காத்தா ரிலீஸ் புதுவருஷத்தில்...


மங்காத்தா ரிலீஸ் புதுவருஷத்தில்...
அஜித் நடிக்கும் மங்காத்தா,
வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தா என்று மங்காத்தா படம் வெகு சீக்கிரமாக
படப்பிடிப்புகள் நடந்து முடிவடைந்து எதிர்வரும் புது வருஷத்தில்
ரிலீசாகும் என்று நம்பகத்தகுந்த தகவல் எனது நண்பன் ஒருவனிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது!!

குறிப்பிட்ட நண்பன் உகண்டாவில் வேலை பார்த்து வருகிறார்.அவர் இதை பற்றி குறிப்பிடும்போது,

மன்காத்தாவின் சில காட்சிகள் முக்கியமாக அஜித் திரிஷா ரொமான்ஸ் காட்சிகள் உகண்டாவில் ஒரு வறண்ட பாலைவனத்தில்
மிக ரகசியமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
அது எனது நண்பன் சில முக்கிய கடன்களை நிறைவேற்றுவதர்க்காக பாலைவனப் பக்கம் ஒதுங்கிய போது தெரியவந்திருக்கிறது.
இதனால் அவரது கடன் கழிக்கும் நிகழ்வு கூட பாதிக்கப்பட்டுள்ளதாம்..காரணம் படக்குழுவினர் அடிக்கடி ஸ்பாட் லைட்ஸ்'ஐ சுத்தி சுத்தி அடித்திருக்கிறனர்.ரொமான்ஸ் சீன் என்பதால் ஷூட்டிங் இரவு நேரத்தில் தான் நடந்திருக்கிறது.

அத்துடன் இன்னொரு முக்கிய தகவலையும் அந்த நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார்..
அதாவது அஜித்துக்கு சில ரொமான்ஸ் சீன் நடிக்க வரவில்லையாம்..
அதனால் வெங்கட் பிரபு தானே அஜித்துக்கு டூப் போட்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறாராம்!
அப்ப பாருங்களேன்..


வர வர எது எதற்கு டூப் போடுவதென்று ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது....
அக்சன் காட்சிகளில் ஜான் சீனா டூப் போட்டு நடித்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே??
நடன காட்சிகளில் வழக்கம் போல ராஜு சுந்தரம் டூப் போட்டிருக்காராம்..

எனினும் பாடல்,பட வெளியீட்டு விழாவில் அஜித் குடும்பம் சகிதமாக கலந்து கொள்வாரென வெங்கட் பிரபு தரப்பில் கூறப்படுகிறது..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இந்திய நண்பர்கள் பெரும்பாலும் பல "இலவசங்கள்" சகிதம் புத்தாண்டை அமர்க்களப்படுத்துவீங்கன்னு
எனக்கு தெரியும்...
சான்சை விடக்கூடா பாருங்கோ...ஒவ்வொரு வருசமும் எலெக்சன் வராதில்லே!! என்ஜாய்!!
எனது நண்பன் கூறியது உண்மை போல தெரியேல...என்ன சொல்றீங்க நீங்க?
பொய் எண்டால் எனக்கு அடிக்காதீங்க...
அவன்ட அட்ரெஸ் தாரன் ப்ளைட் பிடிச்சு போய் அடியுங்க..
No:58,
பத்தாவது மணல் குன்று,

உகண்டா பெரிய பாலை வனம்,
உகண்டா 6000028

Post Comment

Saturday, April 9, 2011

இஞ்சி இடுப்பா...இலியானா இடுப்பா??


வாங்க...நீங்க தான் என்னுடைய டார்கெட் மார்க்கெட்..ஹிஹி இலியானா ரசிகர்களை சொன்னேன் பாஸ்!!

இப்பிடி ஒரு பதிவு போடனுமேண்டு எனக்கு மட்டும் என்ன ஆசையா பாஸ்??

சும்மா இலியானாவ பத்தி மொக்கை போட்டுக்கிட்டு சிவனே எண்டு இருந்தேனா...அந்த நேரம் பாத்து கொமெண்டு போட வருவாங்க பாருங்க இன்னும் சில மொக்கை பசங்க??அவங்களில ஒருத்தர் தந்த ஐடியா தான் இது!!

அத யார்னு சொல்லிடமாட்டேன் ஏன் சொல்லுங்க??அவரு பேமஸ் ஆகிடுவார்ன்னா??அப்பிடியெல்லாம் இல்லை..எங்க பெயர சொன்னா இலியானாவுக்கு அவர் மேல ஒரு "இது" வந்திடுமோ எண்டு பயம் தான் பாஸ்...

பாத்தீங்கன்னா நாம எவளவு கஷ்டப்பட்டு இலியான மனசில இப்ப தான் கொஞ்ச காலமா இடம்பிடிச்சிருக்கம்..அத மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்கலாமா??

சரி மேட்டருக்கு வருவம்..
அதென்ன இஞ்சி இடுப்பு??
1 )இன்ச் அளவிலானா இடுப்பா??இல்லை,
2 )இஞ்சி போல காரமான இடுப்பா??

இது தான் எனக்கு வந்த முதல் டவுட்டு!ப்ளீஸ் சம்பொடி கிளியர் திஸ்??அப்ப தானே நான் மேற்கொண்டு எழுத முடியும்??

ஓகே,அவரின் வாதம் நியாயமானது தான்..இலியானா மீது அளவுகடந்த "அது" இருக்கிற நான் தான்,எனக்கு தான் இலியானா இடுப்பு பத்தியோ மடிப்பு பத்தியோ எழுத உரிமை இருக்கு...


ஆனா, ரொம்பவே நம்பிக்கையோட என்கிட்டே அன்பா பழகி வருது அந்தப்பிள்ளை இலியானா. லாஸ்ட்டு டைம் கூட கரவேனுக்கு போயிருந்தப்போ(என்ன மேட்டர்னு முதல் பதிவ வாசியுங்க) இஞ்சி போட்ட டீ தான் குடிச்சம் நாம.. பாவம் அவங்களுக்கு எதோ மூட் அப்செட்டாம்,அவங்க ஸ்டாமக் கூட கொஞ்சம் அப்செட் எண்டிருந்தாங்க...உண்மை பொய் சரியா தெரியலங்க!!

அந்த நம்பிக்கையை நான் கெடுப்பேனா?? சோ,இவங்க என்ன எதிர்பார்க்கிராங்கன்னா, நான் இலியானா இடுப்ப பத்தி எழுதணும்,இலியானா கடுப்பாகி என் இடுப்பை உடைக்கணும்...இலியானாவுக்கும் பிரபல பதிவருக்குமிடையே ஊடல் அப்பிடீன்னு பத்திரிகையில நியூசு வரணும்..அதுக்கப்புறம் தாங்க மொக்கைய போட்டு இலியானாவ கவுக்கனும்!! பாத்தீங்களா பாஸ் இவங்கட மொக்கை பிளான்'ஐ!

இப்பிடி எத்தின மேட்டர பாத்திருப்பம்..இதென்ன புதுசா நமக்கு..இப்பிடி தான் கடந்த மாசம் தபசி கூட இருந்த ரிலேசன்ஷிப்"எ கட் பண்ணினவங்கள்..

இந்த தடவ நான் முளிச்சிகிட்டேன்..

சோ......................... இலியானா இடுப்ப பத்தி -நோ கமெண்ட்ஸ்!!!!



நீங்க கடுப்பானா ஆகுங்க...யாரு வேணாமெண்டா??நமக்கு அவங்க கூட இருக்கிற ரிலேசன்ஷிப் தான் முக்கியம் பாருங்கோ!!

Post Comment

Wednesday, April 6, 2011

நான் யாரையும் காதலிக்கவில்லை-இலியானா


ஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழில் நடிப்பதென்பது அனைத்து நடிகைகளுக்கும் வாய்க்காத ஒன்று.

அந்த வகையில் உள்ளடங்கும் ஷங்கரின் நண்பன் படத்தின் ஹீரோயின் தான் இலியானா!


கேடி என்ற மொக்கை படத்தில் நடித்த இலியானாவுக்கு நண்பன் படம் கிடைத்ததற்கு காரணம் சில பதிவுலக மொக்கை பதிவர்கள் தான் என

ஒரு கதை கொலிவூடில் உலாவருகிறது.

மொக்கை பிகராய் இருந்தாலும் சுப்பர் பிகர்னு சொல்லி ஒரு பதிவை தேத்துறதுக்கு எந்தவகையிலும் நம்ம பதிவர்கள் பின் நின்றதில்லை.


அவ்வாறு இருந்த இவர்கள் இப்போது ஒரு படி மேலே போயி இலியானாவுக்கும் எனக்கும் காதல் அப்பிடீன்னு தங்களையும் இலியானாவையும் சேர்த்து பதிவை போட்டு வந்தது எப்படியோ இலியானாவின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது.

இதனால் நண்பன் ஷூட்டிங்'இல் இருந்த இலியானா குடித்துக்கொண்டிருந்த ஆரேஞ் ஜூசை தூக்கி எறிந்து தனது கடுப்பை காட்டி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டிய இலியானா ,


"நான் காலையில் பாலும்,மதியம் இரண்டு சப்பாத்தியும் சாப்பிடுவது உண்மைதான்..நேற்று கூட இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டேன்.

நாளைக்கு வாழைப்பழம் கூட சாப்பிடலாம்னு இருக்கேன்..என்ன சாப்பிடுறதுன்னு நான் முடிவு பண்ணேக்க,

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு எப்படிப்பட்ட நபர் வேண்டும்,அவர் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்படனுமா இல்லையா என்று நான் தான் முடிவு பண்ண வேண்டும்!!

ஆனால் இந்த மொக்கை பதிவர்கள் என தங்களை தாமே அழைத்துக்கொள்ளும் பதிவர்கள் தங்களின் மொக்கைக்கு ஊறுகாயாக என்னை பயன்படுத்திக்கொள்வது எந்த வகையில் நியாயம்??




இப்படி தான் கடந்த மாதம் தப்சியை மட்டுமே வைத்து ஒரு பதிவர் ஐந்து பதிவுகளை போட்டிருந்தார்..

இம்மாதம் நானா???


அவங்களுக்கு ஒரு மூடு வந்தா தப்சினு அலைவானுக...அவங்க அலுத்திச்சுதுன்னு சொன்னா இலியானா என்று இளிப்பார்கள்..

நாளை ஹன்சிகா மொத்வானி என்று போனாலும் போவார்கள்...



இப்படிப்பட்ட பிழைப்பு பிழைக்கும் இவர்களை எந்த வகையிலும் நான் காதலிக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்..

இப்போது இவ்வளவு தான் கூற முடியும்,எனக்கு சூட்டிங்'கு டைம் ஆச்சு"


என்று கோபமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார் இலியானா!!





அப்புறம் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்னு கேக்கிறீங்களா??
பத்திரிகையாளர் சந்திப்பு முடிஞ்ச கையோட பக்கத்தில ஒரு கரவேனுக்கு போயிருந்தோம் நானும் இலியானாவும்.
அங்க தான் இம்புட்டையும் என்கிட்டே கொட்டிச்சு அந்த புள்ளை.. இத வெளிய சொல்லதைன்னு கேட்டிச்சு..எண்டாலும் சொல்லாம இருக்க மனம் வருதில்லை...
உங்களோட கூட பகிர்ந்துக்கேலைன்னு சொன்னா...அப்புறம் என்னுடைய ப்ளாக்'கு நீக வர்ரதில என்ன பயன் சொல்லுங்க பார்ப்போம்!!

குறிப்பு :போலோவேர்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றி ஐம்பதை நோக்கி நடை போடுகிறது..பார்க்கலாம் எப்போது தொடுகிறதென்று!!

தப்சி பத்தி சில பதிவுகள் பாருங்க:




Post Comment

Sunday, April 3, 2011

ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி?part -02


இதில பகுதி ஒன்னு வாசிக்க இஷ்டம்ன்னு நெனைச்சீங்க எண்டா இங்ககிளிக்குங்க.

படிப்பு வேண்டாம் வேலை வேண்டாம் எண்டு கிரிக்கட்டே கடவுள்னு பைனல் மேட்ச் பாத்தா...
இலங்கை தோத்திட்டு வந்து நிக்குது...
நாம வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சதால பக்கத்தி வீடு,முன்வீட்டு இந்திய ரசிகர்களெல்லாம்
கேவலமா பாக்குறாங்க...ஏன் உள்வீட்டுக்கையே அவமானம் வெட்கம்...
ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி??
வீட்டில இருந்து போட்ட கூச்சலில பக்கத்தி வீட்டு ஜனங்க சுற்றுலா கெளம்பி போயிட்டாங்களாம்...!!

கலர்புல்லா தலையை கலைத்து விட்டு கொஞ்சம் வெளில கலேர்ஸ் காட்டலாம்னு கேளம்பினாக்கா..
அக்கம் பக்கத்தில இருக்கிற பெருசுக அம்புட்டு பேரும்,பாரு காக்கா கூட்டுத்தலையன் போறான் எண்டுற மாதிரியே
ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க...
அத எப்பிடியோ கண்டுபிடிச்சு நம்ம வீட்டில நடக்குமே ஒரு அபிசேகம்..
பிள்ளையாருக்கு கூட இப்பிடி லென்த்'தா நடந்திருக்க சான்ஸ் இல்லை!!


எப்பிடியாச்சும் கிழமைக்கு ஒரு மூணு பதிவு ஓட்டிரனும்னு முதல் வாரமே ப்ளான் போட்டு
ரெண்டு பதிவை டிராப்ட்'ல சேவ் பண்ணி வைச்சிருப்பம்...
ஆனா அந்த கிழமைன்னு பாத்து பதிவு போடவே சான்ஸ் கிடைக்காது பாருங்க...
ஏதாச்சும் ஆட்டோமாட்டிக் முறையில பதிவு போட மிஷின் ஒண்ணுமே இல்லையேன்னு
மனசு சங்கடப்படும்..
கையில சொடக்கு போட்டா draft 'ல இருக்கிற பதிவு தானாவே பப்ளிஷ் ஆகணும்..
யாராச்சும் கண்டுபிடியுங்கப்பா!!

தப்சி,நமீதாவை வைச்சுகிட்டே மொக்கை பதிவுகள ஓட்டிகிட்டிருப்பம் நாம..
உடன நம்மள தூக்கி அவங்க ரசிகர் மன்ற தலைவரா போட்டிடுவாங்க நம்மள கூட
கேக்காம..
நாமளும் எத்தினை மன்றத்தில தலைவரா கொண்டு நடத்துறது??
பாக்கிறாங்க தப்பா நெனைக்க மாட்டாங்க??
எனுயா எங்கள மட்டும் தலைவரா போடுறீங்க??
ஆக்சுவலி நாம "அடி" மட்ட தொண்டன் தானுங்க!!

விஜயகாந்த்துக்கு குடை பிடித்த வடிவேலு...அப்பிடீன்னு தலைப்பு போட்டிருப்பாங்க..
போய் பார்த்தா சின்னக் கவுண்டர் படத்தில வடிவேலு குடை பிடித்த படத்தை போட்டிருப்பாங்க...
அதாச்சும் பரவாயில்லை..நமீதா குளியல் காட்சி(18 +)அப்பிடீன்னு போட்டிருப்பாங்க..
ஆவலா அடிச்சு பிடிச்சு போனாக்கா...
நமீதா தலையில தண்ணி ஒழுகிற போட்டோ ஒன்னு மட்டும் போட்டிருப்பாங்க..
ஏனுங்க இப்பிடி???

சுட சுட பதிவு ஒன்னு போட்டாக்கா,முன்னுக்கு முந்தியடிச்சு சில பயலுக வருவானுங்க ஓட்டு போடுலாம்ன்னு..அந்த நேரம்ன்னு பார்த்து தமிழ்மணம் ஓட்டளிப்பு பட்டை வேலை செய்யாம மக்கர் பண்ணும் பாருங்க..ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி?
(ஹிஹி விக்கி உலகத்திலயும் இதே பிரச்சனையாம்லே!)ஏனுங்க அவருக்கும் இப்பிடி?

போன பதிவுக்கு பாத்தாக்கா...வோட்டு தாராளமா வந்திச்சு...பின்னூட்டங்களை காணவில்லை..
நண்பர்கள் கோபித்துக்கொண்டுவிட்டனர் போலும்...
மன்னிச்சூ.....

Post Comment

Friday, April 1, 2011

மந்த்ரா பேடி'யும் விரேந்தர்+யுவராஜும்!!





எல்லாருக்கும் இப்படி கொஞ்ச நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்...அல்லது பார்த்திருப்பீர்கள்..
எனக்கும் இவ்வாறு ஒரு சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அவர்களை பற்றி என்ன சொல்வது??
சொல்லாமல் கூட விடலாம் ஆனால் என்னமோ சொல்லணும் போல ஒரு உறுத்தல்..
அதே போல அவர்களை பற்றி சொல்ல அவர்கள் பெரிய தலைகளும் கிடையாது.

இப்ப வேர்ல்ட் கப் கிரிக்கட் சீசன்.நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.
அவ்வாறு நான் சொல்லி இப்போது தான் உங்களுக்கு இந்த மேட்டர் தெரிய வந்திருக்குன்னு சொன்னா.......

அப்பிடியா??
வாங்க உங்கள பத்தி தான் நான் கதைச்சிக்கிட்டு இருக்கேன்.

சாதாரணமா ஒரு மூணு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர்....அப்பிடி இப்பிடி எண்டால் பரவாயில்லை..
வேலை....படிப்பு என்று பல்வேறு காரணங்களால் (அதான் பிசி)அதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

ஆனால் உலகக்கிண்ணம்...அதுவும் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் நடக்கின்ற மாபெரும் போட்டி..
இவ்வாறு ஒரு போட்டி நடக்கிறதென்றே தெரியாமல் சிலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள்..
நம்பாவிட்டால் பொங்கல்..அடச்சீ போங்கள்..இது உண்மை!!

என் நண்பன் ஒருத்தன் இருக்கான்..நாம எல்லாரும் சேர்ந்து கிரிக்கட் விளையாடினாக்கா(அவன் வீட்டுக்கு முன்னால தான்)
அவன் சைக்கிளை தூக்கிகிட்டு ஊர் சுத்த கெளம்பிருவான் ..அப்படி வளர்ந்த பய புள்ள..
அவனுக்கு வோர்ல்ட் கப் நடக்குதுன்னே தெரியாது...
எனக்கு ஷாக்!!வாடா என்று இழுத்துக்கிட்டு போயி அன்று நடந்துகிட்டிருந்த மேட்ச்'சை காட்டினேன்.
மலிங்க யோக்கர் ரக பந்துகளால் இங்கிலாந்தை தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பம்..
என்னுடைய நண்பன் அதை பார்த்து கொஞ்ச நேரம் ஜோசித்துவிட்டு கேட்டான்,
"பார்ரா மலிங்க எல்லா பந்தையும் இப்பிடி நேரா விக்கட்டுக்கு போடுறான்"
அப்பிடீன்னு.

நான் சொன்னேன் ஓமடா அதுக்கு என்ன இப்ப??
"இல்லடா எவ்வளவு கஷ்டம் நேர போடுறது"!!!!

இப்படிப்பட்ட நண்பன் யாராச்சும் உங்களுக்கும் சிக்கி இருப்பாங்களே??

நேராக பந்துபோடுதல் கஷ்டமா??
ஒரு வேளை சின்ன வயதில் நேராக பந்து வீச பழகும் போது ரொம்ப அடி வாங்கி இருப்பானோ???
அதிலிருந்து சில சமயம் கிரிக்கட்டே பிடிக்காமல் போயிருக்கலாம்..
......
....
...
...
எல்லாம் சரி அதென்ன மந்த்ரா பேடியும் விரேந்தர்'ரும்??
மந்த்ரா பேடியின் தந்தை பெயர் தான் விரேந்தர் சிங் பேடி...
பாருங்கள் தந்தையின் பெயருக்குள் மூன்று பிரபல இந்திய நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கிறார்கள்!!"சிங்" அது யுவராஜ் சிங்'ஆ இல்லை பாஜி ஹர்பஜன் சிங்'ஆ என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!!!

அதனால் தான் மந்த்ரா கிரிக்கெட்டில் மயக்குகிறாரோ??
கொசுறு:பிறந்த தேதி ஏப்ரல் பதினைந்து 1972 !!


கிசு கிசு படிக்கிறதுன்னா நம்ம பசங்களுக்கு இருக்கிற ஆர்வமே தனி தான் பாஸ்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...