Monday, July 11, 2011

மனதை திற காதல் வரட்டும்-பாகம் 1!!!

குறிப்பு:இது காதல் சம்பந்தமான எனது பார்வை மட்டுமே.சரியாகவும் இருக்கலாம்.ஏன் பிழையாகவும் கூட!!பிழைகளை சுட்டி காட்டுங்கள்.இது ஒரு தொடர் பதிவு.அதன் முதல் பாகம் இன்று.

"If you're gonna tell someone you love them, make sure you're not telling a lie"

வணக்கம் நண்பர்களே..
காதல் என்பது என்ன தான் கேட்டு கேட்டு சலித்த விடயமாக இருக்கட்டும்,திரைப்படங்களில் அரைத்த விடயமாக இருக்கட்டும்,ஒவ்வொருத்தர் மனதிலும் அது வந்துவிட்டால் அது முதன்மையானது,புதியது,தெய்வீகமானது!!ஒவ்வொருத்தருக்கும் அவரவர் காதல் தான் மற்றையவர்களது காதலை விட முதன்மையாக தெரியும்..யாருடைய காதல் பெரியது என்று போட்டி வைத்து முடிவு பண்ண கூடிய விடயம் அல்ல இந்த காதல்!


எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலேயோ காதலில் விழுகிறான்.நீ காதலித்திருக்கின்றாயா அல்லது காதல் வந்திருக்கிறதா என்று நீங்கள் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்து கேட்கும் பொது பதில் இல்லைஎன்று வருகிறதாயின் குறிப்பிட்ட நபர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்.
அனைத்துக்கும் முதல் படி இந்த சயிட் அடித்தல்..!!
இதற்க்கு நூலுவிடுதல்,ரூட்டு போடுதல்,கண்ணடித்தல்,கவர் பண்ணுதல் என்று பல பல சொல்ப்பிரயோகங்கள் பல்வேறு இடங்களில் வழக்கிலிருந்தாலும்,மேட்டர் ஒன்றே!!காலம் காலமாக மாறாது தொடரும் மனித நடத்தைகளில் இதுவும் ஒன்று என பெருமையாக கூறிக்கொள்ளலாம்!
உங்க தாத்தா சயிட் அடித்திருப்பார்.உங்க அப்பா சயிட் அடித்திருப்பார்..இப்போது நீங்கள்..நாளை உங்கள் பிள்ளைகளும் இதனை செய்வார்கள்.

சைட் அடித்தல் என்று வரும்போது,பெரும்பாலான ஆண்கள் அதனை தங்களது நாளாந்த கடமையாக செய்துவருகின்றனர்..அனைத்து ஆண்களும் அதை செய்வனே செய்கின்றனர்.நீ சயிட் அடிக்கிறாயா என்றால் ஆம் என்று ஒத்துக்கொள்வார்கள்.(சிலர் மனைவிமார்களுக்கு பயந்து இல்லை என்று கூறுபவர்களும் உண்டு).பெரும்பாலான மனைவிகளுக்கு கணவன் இன்னொரு பெண்ணை சயிட் அடிப்பது அறவே பிடிக்காமல் இருக்கலாம்.இதை பற்றி "நீயா நானா" கோபிநாத் ஒரு நிகழ்ச்சியை நடத்திருந்தார்.அதில் பெண்கள் கேட்ட கேள்வி,இதே மாதிரி நாங்கள் மற்றைய ஆண்களை சயிட் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சும்மா இருப்பீர்களா என்பதே!இது நிற்க,

இதே கேள்வியை பெண்களிடம் கேட்டு பாருங்கள் நீங்கள் சயிட் அடித்திருக்கிறீர்களா என்று?உங்களுக்கு கிடைக்கும் பதில் பெரும்பாலும் இல்லை என்பதே!காரணம்,ஒன்று வெட்கம்,மற்றையது இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!சிலருக்கு சில ஆண்களை பார்த்தால் ஸ்மார்ட்'டாக தோன்றும்..ரசிப்பார்கள்..ஆனால் சயிட் அடித்தாயா என்றால் இல்லை என்பார்கள்..
ஆகவே ஆண்களோ,பெண்களோ மொத்தத்தில் சயிட் அடிக்காதவர்கள் மிக மிக குறைவே..அவ்வாறு யாரும் இருந்தால்,அவர்களுக்கு வேறு ஏதும் வருத்தங்கள் இருக்ககூடும்!!
கூர்ந்து கவனித்தீர்களேயானால்,காதலுக்கு முதல் படியே இந்த சயிட் அடித்தல் தான்!
ஒரு பெண் அழகாய் இருந்தாளாயின் அவளை பார்க்க தூண்டும் எந்தவொரு ஆணுக்கும்.அது இயற்க்கை.அதே போல தான் பெண்களுக்கும்!
அதை முழுவதுமாய் தப்பென்று கூறமுடியாது.நான் சயிட் அடிக்கமாட்டேன் எந்தவொரு பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டேன் என்று எந்த ஒரு ஆம்பிளையாவது கூறுவானா?அவ்வாறு கூறினால் அவன் அடுத்த "நித்தியானந்தாவாக" முயற்ச்சிக்கிறான் என்று தெளிவாக கூறலாம்.
சில விடயங்களை பொத்தி பொத்தி வைக்கும் போது தான் அதன் வீரியம் கூடுகிறது.அந்தந்த நேரங்களில் அவற்றை அவ்வாறே விட்டு விடுவீர்களேயானால் விளைவுகள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்!

கல்யாணம் கட்டும் வரையில் தாராளமாக சயிட் அடியுங்கள்.உங்களை யாராலையும் தடுக்க முடியாது நிறுத்த முடியாது.உங்களுக்கென்று ஒருத்தி/ஒருவன் வந்துவிட்டால் வாழ்க்கையில்,அப்புறம் நீங்களாக தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும் இவற்றை நிறுத்துவோமா,குறைப்போமா,அல்லது தொடர்வோமா என்று.அது நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவில் தங்கியுள்ளது.அதை விடுத்து நான் நல்ல பையன் சயிட் அடிக்க மாட்டேன் என்று கூறி உங்களை மட்டுமல்லாது,உங்கள் துணையையும் வீணே ஏமாத்தாதீர்கள்.
சில விடயங்கள் நீங்கள் மனது வைத்தால் தவிர்க்க முடியும்..
Affectueux Couples Photo

படங்களில் காட்டுவதை போல ஒரு செக்கன்ட் பார்த்தவுடன் பத்திக்கொள்வதல்ல காதல்!கதைகளுக்கு சரிப்பட்டு வருமே ஒழிய நிஜத்தில் அல்ல!ஆனால் ஒரு செக்கன்ட் பார்த்தவுடன் பத்துவது வேண்டுமானால் காமத்துக்கு சரியாக இருக்கலாம்.ஒரு செக்கன்ட் பார்த்தவுடன்,வேறு ஒருவிடயங்களையுமே அலசாது காதலில் விழுந்து அவளை வாழ்க்கைத்துணையாக்கியோர் எத்தனை பேர் கூறுங்கள் பார்க்கலாம்??


சின்னப்பயல்..இவனுக்கென்ன தெரியும்..வெறுமனே பூச்சாண்டி காட்டுகிறான் என்று நினைப்பவர்கள் "எஸ்" ஆகிடுங்க.நாம எல்லாம் சாஜகானுக்கே அட்வைசு கொடுத்தவங்க !!

Post Comment

68 comments:

உலக சினிமா ரசிகன் said...

கல்யாணத்துக்கு முன்னாடி சைட்டு
கல்யாணத்துக்கு பின்னாடி பைட்டு

007 said...

"If you're gonna tell someone you love them, make sure you're not telling a lie"

பிடித்திருக்கிறது பதிவர்

கடம்பவன குயில் said...

//,ஒன்று வெட்கம்,மற்றையது இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!சிலருக்கு சில ஆண்களை பார்த்தால் ஸ்மார்ட்'டாக தோன்றும்..ரசிப்பார்கள்..ஆனால் சயிட் அடித்தாயா என்றால் இல்லை என்பார்கள்..//

ஆஹா ... இதுக்குப்பெயர்தான் சைட்டா?

கடம்பவன குயில் said...

,//இதே மாதிரி நாங்கள் மற்றைய ஆண்களை சயிட் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சும்மா இருப்பீர்களா என்பதே!//

இது நல்ல கேள்வி.

சக்தி கல்வி மையம் said...

Thanks for sharing..

Shiva sky said...

இருக்கிறார்கள் நண்பா ...நீங்கள் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை...

Shiva sky said...

ஒரு செக்கன்ட் பார்த்தவுடன்,வேறு ஒருவிடயங்களையுமே அலசாது காதலில் விழுந்து அவளை வாழ்க்கைத்துணையாக்கியோர் எத்தனை பேர் காத்து இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெண்கள் தான் ..சம்மதிப்பதில்லை........எனவே ஆண்களை குறை கூறாதீர்கள்

Unknown said...

நிறையப் புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்!
பகிர்தலுக்கு நன்றி!

Unknown said...

சாதாரணமாக ஒரு பெண் நண்பியுடன் பேசும்போது,
இன்னொரு பெண்ணை சும்மா ஒரு செக்கன்ட் பார்த்தாலும் உடனே ஒரு கேள்வி முறைப்பா வரும் 'என்ன சைட் அடிக்கிறியா?'
ஆனா அவங்க பசங்களை நல்ல வடிவாப் பாப்பாங்க! கேட்டா.. 'சும்மா பார்த்தேன்!' :-)

shanmugavel said...

சிவா கலக்கறீங்க போங்க! அனுபவம் பேசுது.

shanmugavel said...

வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

பாஸ் இவ்வளவு மேட்டர் இருக்கா இன்னும் கதைக்குள் வராமலே விளக்கம் கொடுத்தே ஒரு பதிவை தந்துவிட்டீர்கள் .

தனிமரம் said...

சைட் அடிக்க ஒரு துனிச்சல் வேண்டும் பாஸ் தொடருங்கள் பதிவை வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

மைந்தன் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

கூடல் பாலா said...

அடேங்கப்பா சைட் அடிக்கிறத பற்றி அருமையான ஆராய்ச்சி !இதை நீங்க வெற்றிகரமா முடிச்சா முனைவர் பட்டம் உறுதி மாப்ளேய் ...

கூடல் பாலா said...

கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறமும் வயசுப் பசங்களோட பிகர்களை நூல் விடும் மாமாக்களை என்ன செய்யலாம் ?

Anonymous said...

///இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!/// அப்ப பாருங்களன் எவ்வளவு அப்பாவியாய் இருக்கார்கள் என்று )))

A.R.ராஜகோபாலன் said...

காதலுக்கு பல வழிகளும் வலிகளும் உண்டு , அதை வார்த்தையால் வடிப்பது கடினமெனினும் அசத்தலாய் எழுதிய விதம் அருமை தலைவா

எப்பூடி.. said...

//நீ காதலித்திருக்கின்றாயா அல்லது காதல் வந்திருக்கிறதா என்று நீங்கள் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்து கேட்கும் பொது பதில் இல்லைஎன்று வருகிறதாயின் குறிப்பிட்ட நபர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்//

இதற்க்கு சில விதி விலக்குகளும் இருக்கத்தான் செய்யும், எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவருக்கு என் வயதிருக்கும், அவர் நிச்சயமாக யாரயும் காதலிக்கவும் இல்லை, அவருக்கு யார்மேலும் காதல் வந்ததும் இல்லை, குறிப்பிட்ட பொய் சொல்லவில்லை என்பது எனக்கு 100 சதவீதம் தெரியும்; நீங்கள் நம்புவது நம்பாதது உங்க இஸ்டம். ஆனால் அவர் தான் காதலில் விழாததை பெருமையாக எடுத்துக்கொள்ளவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவர் அதை கேவலமாவே பீல் பண்ணுகிறார்.


கதவை திற காற்று வரட்டும் என்றார் நித்தியானந்தா,
மனதை திற காதல் வரட்டும் என்கிறார் மைந்தானந்தா.

ரஞ்சிதாக்களே கவனம் :-))

சுதா SJ said...

பாஸ் உங்கள என்னவோ நினைச்சேன்
ஹும்ம்... புகுந்து விளையாடுறீங்க பாஸ்,
காதல் பத்தி இவ்லோ தகவல்களா
பாஸ் நீங்க ஒரு வில்லேஜே விஞ்சானி போஸ்

சுதா SJ said...

பாஸ் பாஸ்
சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க பாஸ்
மிச்சத்தையும் தெரிஞ்சாகணும் பாஸ்

உணவு உலகம் said...

//உலக சினிமா ரசிகன் said...
கல்யாணத்துக்கு முன்னாடி சைட்டு
கல்யாணத்துக்கு பின்னாடி பைட்டு//
நீங்க ரொம்ப ரைட்டு!

suthan said...

காதலிக்க தெரிந்தவனுக்கு காதல் ஒரு கடவுள்
காதலிக்க தெரியாதவனுக்கு அது ஒரு கத்தரிக்காய்
அவளவுதான் காதல்.........................

vidivelli said...

உங்க தாத்தா சயிட் அடித்திருப்பார்.உங்க அப்பா சயிட் அடித்திருப்பார்..இப்போது நீங்கள்..நாளை உங்கள் பிள்ளைகளும் இதனை செய்வார்கள்./


சகோ/நீங்க அண்ணளவாய் எத்தனை பேரை சைரடிதீங்க?பதிவைப்பார்க்க அப்படித்தான் தோன்றுது.....hahahaha!!!

இப்ப முன்னணியில் நிற்பது சைற்றடிப்பும்,ஏமாறுதலும் தானே....

வாழ்த்துக்கள் சைற்ரடிப்பிற்கு..

பாலா said...

சைட் அடிப்பது காதலுக்கு முதல்படி என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அடுத்த படியில் ஏற முயற்ச்சித்தால் காதல் கண்ணில் விழுந்த தூசிதான். நம்மால் எடுக்க முடியாது. வேறொருவர்தான் வந்து எடுக்க வேண்டும் அல்லது 'தண்ணி' ஊற்றி கழுவ வேண்டும்.

இப்படிக்கு சைட் மட்டும் அடிக்கும் தைரியசாலிகள் சங்கம்.

சென்னை பித்தன் said...

காதல் முனைவர்(சிறப்பு ஆராய்ச்சி, சைட் அடித்தல்) மைந்தன் சிவா அவர்களே,பகிர்வு தொடரட்டும்!

Unknown said...

//உலக சினிமா ரசிகன் said...
கல்யாணத்துக்கு முன்னாடி சைட்டு
கல்யாணத்துக்கு பின்னாடி பைட்டு//

என்ன ஒரு பைட்டு!!!

Unknown said...

//007 said...
"If you're gonna tell someone you love them, make sure you're not telling a lie"

பிடித்திருக்கிறது பதிவர்//

நன்றி பாஸ்!

Unknown said...

//கடம்பவன குயில் said...
//,ஒன்று வெட்கம்,மற்றையது இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!சிலருக்கு சில ஆண்களை பார்த்தால் ஸ்மார்ட்'டாக தோன்றும்..ரசிப்பார்கள்..ஆனால் சயிட் அடித்தாயா என்றால் இல்லை என்பார்கள்..//

ஆஹா ... இதுக்குப்பெயர்தான் சைட்டா?//

அட ஆமாங்க!

Unknown said...

//கடம்பவன குயில் said...
,//இதே மாதிரி நாங்கள் மற்றைய ஆண்களை சயிட் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சும்மா இருப்பீர்களா என்பதே!//

இது நல்ல கேள்வி.//

கேள்வி நல்ல கேள்வி தான்..விடை என்ன?

Unknown said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Thanks for sharing../

நன்றி நன்றி

Unknown said...

//Shiva sky said...
இருக்கிறார்கள் நண்பா ...நீங்கள் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை.../

இருக்கலாம் நண்பா!

Unknown said...

//Shiva sky said...
ஒரு செக்கன்ட் பார்த்தவுடன்,வேறு ஒருவிடயங்களையுமே அலசாது காதலில் விழுந்து அவளை வாழ்க்கைத்துணையாக்கியோர் எத்தனை பேர் காத்து இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெண்கள் தான் ..சம்மதிப்பதில்லை........எனவே ஆண்களை குறை கூறாதீர்கள்//

ஹிஹி நான் குறை கூற வில்லையே!!

Unknown said...

//ஜீ... said...
நிறையப் புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்!
பகிர்தலுக்கு நன்றி!/

உங்களுக்கு தெரியாததா பாஸ்??!!

Unknown said...

//ஜீ... said...
சாதாரணமாக ஒரு பெண் நண்பியுடன் பேசும்போது,
இன்னொரு பெண்ணை சும்மா ஒரு செக்கன்ட் பார்த்தாலும் உடனே ஒரு கேள்வி முறைப்பா வரும் 'என்ன சைட் அடிக்கிறியா?'
ஆனா அவங்க பசங்களை நல்ல வடிவாப் பாப்பாங்க! கேட்டா.. 'சும்மா பார்த்தேன்!' :-)///

ஹிஹிஹி அதே அதே!!!

Unknown said...

//shanmugavel said...
சிவா கலக்கறீங்க போங்க! அனுபவம் பேசுது.

July 11, 2011 11:21 AM //
ஹிஹி க க க போ!!

Unknown said...

//Nesan said...
பாஸ் இவ்வளவு மேட்டர் இருக்கா இன்னும் கதைக்குள் வராமலே விளக்கம் கொடுத்தே ஒரு பதிவை தந்துவிட்டீர்கள் ./

இன்னும் நிறைய மேட்டர் இருக்கு பாஸ்!

Unknown said...

//esan said...
சைட் அடிக்க ஒரு துனிச்சல் வேண்டும் பாஸ் தொடருங்கள் பதிவை வாழ்த்துக்கள்.//

ஹிஹி ஆமா ஆமா !

Unknown said...

//கவி அழகன் said...
மைந்தன் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்//

கேளுங்கோ சொல்லப்படும்!!

Unknown said...

//koodal bala said...
அடேங்கப்பா சைட் அடிக்கிறத பற்றி அருமையான ஆராய்ச்சி !இதை நீங்க வெற்றிகரமா முடிச்சா முனைவர் பட்டம் உறுதி மாப்ளேய் .../

அப்புடியா பாஸ்???

Unknown said...

//koodal bala said...
கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறமும் வயசுப் பசங்களோட பிகர்களை நூல் விடும் மாமாக்களை என்ன செய்யலாம் ?//

ஒண்ணுமே செய்ய முடியாது பாஸ்,..அது தான் சொன்னேனே அவங்க இஷ்டம்!

Unknown said...

//கந்தசாமி. said...
///இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் சில பெண்கள்!/// அப்ப பாருங்களன் எவ்வளவு அப்பாவியாய் இருக்கார்கள் என்று )))/

அப்போ பாருங்களேன்!!

Unknown said...

//A.R.ராஜகோபாலன் said...
காதலுக்கு பல வழிகளும் வலிகளும் உண்டு , அதை வார்த்தையால் வடிப்பது கடினமெனினும் அசத்தலாய் எழுதிய விதம் அருமை தலைவா/

நன்றிகள் பாஸ்!

Unknown said...

//எப்பூடி.. said...
//நீ காதலித்திருக்கின்றாயா அல்லது காதல் வந்திருக்கிறதா என்று நீங்கள் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்து கேட்கும் பொது பதில் இல்லைஎன்று வருகிறதாயின் குறிப்பிட்ட நபர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்//

இதற்க்கு சில விதி விலக்குகளும் இருக்கத்தான் செய்யும், எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவருக்கு என் வயதிருக்கும், அவர் நிச்சயமாக யாரயும் காதலிக்கவும் இல்லை, அவருக்கு யார்மேலும் காதல் வந்ததும் இல்லை, குறிப்பிட்ட பொய் சொல்லவில்லை என்பது எனக்கு 100 சதவீதம் தெரியும்; நீங்கள் நம்புவது நம்பாதது உங்க இஸ்டம். ஆனால் அவர் தான் காதலில் விழாததை பெருமையாக எடுத்துக்கொள்ளவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவர் அதை கேவலமாவே பீல் பண்ணுகிறார்.


கதவை திற காற்று வரட்டும் என்றார் நித்தியானந்தா,
மனதை திற காதல் வரட்டும் என்கிறார் மைந்தானந்தா.

ரஞ்சிதாக்களே கவனம் :-))//

இருக்கலாம் பாஸ்...

சிலர் விதிவிலக்காய் இருக்கலாம்....

ஹிஹி ரஞ்சிதாவா??அவங்க யாரு??

Unknown said...

//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
பாஸ் உங்கள என்னவோ நினைச்சேன்
ஹும்ம்... புகுந்து விளையாடுறீங்க பாஸ்,
காதல் பத்தி இவ்லோ தகவல்களா
பாஸ் நீங்க ஒரு வில்லேஜே விஞ்சானி போஸ்/

ஹிஹி அப்புடியா??

Unknown said...

//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
பாஸ் பாஸ்
சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க பாஸ்
மிச்சத்தையும் தெரிஞ்சாகணும் பாஸ்//

ஓகே ஓகே

Unknown said...

//idivelli said...
உங்க தாத்தா சயிட் அடித்திருப்பார்.உங்க அப்பா சயிட் அடித்திருப்பார்..இப்போது நீங்கள்..நாளை உங்கள் பிள்ளைகளும் இதனை செய்வார்கள்./


சகோ/நீங்க அண்ணளவாய் எத்தனை பேரை சைரடிதீங்க?பதிவைப்பார்க்க அப்படித்தான் தோன்றுது.....hahahaha!!!

இப்ப முன்னணியில் நிற்பது சைற்றடிப்பும்,ஏமாறுதலும் தானே....

வாழ்த்துக்கள் சைற்ரடிப்பிற்கு..//

ஹிஹி நன்றி

ம்ம் பெரும்பாலும் அப்படித்தான்..ஆனால் சில நல்ல காதல்களும் இருக்கத்தான் செய்கிறன!

Unknown said...

//பாலா said...
சைட் அடிப்பது காதலுக்கு முதல்படி என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அடுத்த படியில் ஏற முயற்ச்சித்தால் காதல் கண்ணில் விழுந்த தூசிதான். நம்மால் எடுக்க முடியாது. வேறொருவர்தான் வந்து எடுக்க வேண்டும் அல்லது 'தண்ணி' ஊற்றி கழுவ வேண்டும்.

இப்படிக்கு சைட் மட்டும் அடிக்கும் தைரியசாலிகள் சங்கம்.//

இதுக்கெல்லாம் ஒரு சங்கமா பாஸ்???

Unknown said...

//சென்னை பித்தன் said...
காதல் முனைவர்(சிறப்பு ஆராய்ச்சி, சைட் அடித்தல்) மைந்தன் சிவா அவர்களே,பகிர்வு தொடரட்டும்!//

என்ன கொடுமை பாஸ் இது?

நிருஜன் said...

///இதே கேள்வியை பெண்களிடம் கேட்டு பாருங்கள் நீங்கள் சயிட் அடித்திருக்கிறீர்களா என்று?உங்களுக்கு கிடைக்கும் பதில் பெரும்பாலும் இல்லை என்பதே!காரணம்,ஒன்று வெட்கம்,மற்றையது இது தான் சைட் அடித்தல் என்று தெரியாமலேயே அதை பண்ணிக்கொண்டிருப்பார்கள் /// சூப்பர் பாஸ்!

கார்த்தி said...

மைந்தன் சிவா காதலில விழுந்திட்டார் சார்!!!

ஹேமா said...

அப்பாடி...என்ன ஒரு சைட் அடிக்கிற அலசல் !

Yoga.s.FR said...

டேய்..டேய்..டேய்..என்னடா விட்டா பழம் திண்டு கொட்டை(மன்னிக்கவும்)போட்டவன் மாதிரி,டேய்...வந்தனண்டா............................!!!!!!!!!!

Yoga.s.FR said...

ஹேமா said...
அப்பாடி...என்ன ஒரு சைட் அடிக்கிற அலசல் !/////////பெருமையாயிருக்கு............ஆ........?

Yoga.s.FR said...

ஜீ... said...
நிறையப் புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்!
பகிர்தலுக்கு நன்றி!////வாயில விரல வச்சா சூப்ப?!த் தெரியாத பொடியள கெடுத்துப் போட்டான்!(எங்கடை அம்மா சொல்லுவா,அவனைச் சேர்க்காதயுங்கோ உங்கட புள்ளய கெடுத்துப் போடுவனெண்டு!)

Yoga.s.FR said...

shanmugavel said...
சிவா கலக்கறீங்க போங்க! அனுபவம் பேசுது./////இவர்?அனுபவசாலி?!நீங்க தான் மெச்சிக்கணும்!

Yoga.s.FR said...

அப்பவே சொன்னனான்,கொழும்புக்கு வர வேணாமெண்டு!(உங்கட பதிவை பொடிச்சியளும் படிக்குதுகள்)

Yoga.s.FR said...

சின்னப்பயல்..இவனுக்கென்ன தெரியும்..வெறுமனே பூச்சாண்டி காட்டுகிறான் என்று நினைப்பவர்கள் "எஸ்" ஆகிடுங்க.நாம எல்லாம் சாஜகானுக்கே அட்வைசு கொடுத்தவங்க !!////எல்லாம் தெரியும் தம்பி!பாப்பம் எத்தினை நாளைக்கெண்டு!எப்பிடியும்,கூனோ குருடோ,வத்தலோ,தொத்தலோ,குட்டையோ,நெட்டையோ ஒண்டு வரத்தான் போகுது,நானும் பாக்கத் தான்போறன்!

Yoga.s.FR said...

"If you're gonna tell someone you love them, make sure you're not telling a lie"///இங்கிலீசு??????????!!!

Yoga.s.FR said...

///எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலேயோ காதலில் விழுகிறான்./////ஏதோ இருட்டுக்கை கிடங்கு தெரியாமல் கால வச்சு விழுந்த மாதிரி சொல்லுறியள்?(சரி தான்.உண்மையும் தான்!.)

Mahan.Thamesh said...

மைந்தானந்த சுவாமியின் மனதை திற காதல் வரட்டும்.
சைட் அடிக்க கற்றுகொள்ள நல்ல பதிவு தல

நிரூபன் said...

மனதை திற காதல் வரட்டும்-பாகம் 1!!!//

தலைப்பிலே தத்துவமும் அல்லவா கலந்திருக்கிறது.

தாங்கள் கடந்த வாரம் முழுவதும் ஓய்வெடுத்ததற்கான காரணம் இது தானோ?

நிரூபன் said...

ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்து கேட்கும் பொது பதில் இல்லைஎன்று வருகிறதாயின் குறிப்பிட்ட நபர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்//

ஆகா....இந்த ஆராய்ச்சியா நீங்கள் போன வாரம் முழுவதும் செய்தீங்க.

ஆமா பாஸ். காதலிக்கும் எல்லோரும் உண்மை பேசமாட்டாங்களாம்;-))

ஹி...ஹி...

நிரூபன் said...

சைட் அடித்தல் என்று வரும்போது,பெரும்பாலான ஆண்கள் அதனை தங்களது நாளாந்த கடமையாக செய்துவருகின்றனர்..//

ஆமா மச்சி,
நாம எல்லாம் பிகருக்கு ஒரு கடமையாகத் தான் இதனைப் பண்ணிக்கிட்டிருக்கோம்.

நிரூபன் said...

ஆகவே ஆண்களோ,பெண்களோ மொத்தத்தில் சயிட் அடிக்காதவர்கள் மிக மிக குறைவே..அவ்வாறு யாரும் இருந்தால்,அவர்களுக்கு வேறு ஏதும் வருத்தங்கள் இருக்ககூடும்!!//

நாளைக்கு வெள்ளவத்தையிலை பூரிக் கட்டையடி கன்போம்.

நிரூபன் said...

கூர்ந்து கவனித்தீர்களேயானால்,காதலுக்கு முதல் படியே இந்த சயிட் அடித்தல் தான்!//

அடப் பாவி, நீங்க விஞ்ஞான பாடம் என்றாலோ, கணக்குப் பாடம் என்றாலோ இப்படி விளக்கம் கொடுத்திருப்பீங்களா?

இதுக்கு மட்டும் என்ன ஒரு மென்மையா- வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல விளக்கம் கொடுக்குறீங்க.

நிரூபன் said...

காத்திரமான ஒரு அலசல். காதல் பற்றிய தெளிவான பார்வையினை இப் பதிவு பலருக்கு கொடுக்கும் என நினைக்கிறேன். அத்தோடு காமம்- காதல் பற்றி இறுதிப் பந்தியில் நச்சென்று ஒரு பஞ்ச் கொடுத்திருக்கிறீங்க.

அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

இன்று முதல் நீர் சைட் சிவா என அழைக்கப்படுவீர்களாக..

Related Posts Plugin for WordPress, Blogger...