பெத்தவங்க பார்த்து தரும் மாப்பிள்ளையை கட்டிக்க இருக்கும் பொண்ணுங்களுக்கான பதிவு.அதே சமயம் அதே பெத்தவங்க பார்க்கும் பெண்ணை கட்டிக்கொள்ளும் மாப்பிளைகள் நான் சொல்லப்போவது உங்களை சில சமயம் நோகடித்தாலும் நோகடிக்கும்.அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.ஏதாச்சும் சொல்லனும்னா அதன் மூலம் ஒரு தரப்பு கட்டாயம் பாதிக்கும்.அது தவிர்க்கமுடியாதது.ஓகே மேட்டருக்கு போகலாம் வாங்க..
பெத்தவங்க பார்த்து நிச்சயிக்கும் திருமணம் எவ்வாறு இருக்கும்?ஜாதகங்கள் தொடக்கம் கிரக நிலைகள் வரை அலசி ஆராய்ந்து சோதிடமணிகளின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு தேடி அலைந்து பிடித்த "மாப்பிள்ளை"யை பெண்ணுக்கு அறிமுகம் செய்வார்கள்.பெண் தனக்கு முதலில் பார்வைக்கு நன்றாக இருந்தால் ஒத்துக்கொள்வாள். பின்னர் அவர்களை பழக அனுமதிப்பார் சிறிது நாட்களோ அல்லது சில மாதங்களோ.அதன்போது பிடித்திருந்தால் கல்யாணம் நடக்கும்.குறித்த காலப்பகுதியில் பிடிக்காவிட்டால் வேறு மாப்பிள்ளை பார்ப்பதெல்லாம் மிக அரிதாகவே நடக்கும்.
ஓகே,இதன் விளைவுகளை பார்ப்போம்.நிச்சயம் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பழகும் அந்த சில நாட்கள்-சில மாதங்களில் ஒருவரை பற்றி மற்றையவர் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா?ஒருவன் எத்தகைய கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருந்தாலும்(வெளியே தெரியாமல் தனக்குள்ளே) அவற்றை வெளியில் வெளிக்காட்டிக்க கூடாது என்று நினைத்தால் எவராலும் அந்த குறிப்பிட்ட "பழகும் காலத்தில்" அவற்றை கண்டுபிடிக்க முடியாது.இந்த பழகும் காலம் இரண்டு மாதங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.அந்த இரண்டு மாதங்களும் நல்லவனாக யாரால் நடிக்க முடியாது?
சில சம்பந்தங்கள் தெரியாத இடங்களில் இருந்து எல்லாம் வரக்கூடும்.அதிக வயது வித்தியாசத்தில் இருக்ககூடும்.சில வேளைகளில் குறிப்பிட்ட பையனை பற்றி விசாரித்து அறிய முடியாமல் கூட போகலாம்.அவ்வாறான சந்தர்ப்பத்தில் எப்படி அந்த பையனை பற்றி தெரிந்து கொள்வார்கள்?அந்த பழகும் காலத்தை வைத்து தானே?அதுவும் சில பெற்றோர் தான் இத்தகைய பழகும் காலம் ஒன்றை தங்கள் பிள்ளைகளுக்குவழங்குகின்றனர் .மாப்பிள்ளை பார்த்தோமா,பிடித்ததா,நிச்சயம் செய்தாகிவிட்டதா,கல்யாணத்தை கட்டி அனுப்பினோமா என்று இருக்கும் பெற்றோர்கள் எவ்வாறு இவ்வளவு இலகுவாக தங்கள் பிள்ளைகளை தெரியாத ஒரு இடத்தில் தள்ளிவிட முயலுகின்றனர்?
பிள்ளை வளரும் காலம் முழுவதும்,ஆண்களுடன் பழகாதே,கண்டவனை காதலிக்காதே என்று கூறி கவனமாக பொத்தி பொத்தி வளர்த்த பெற்றோர்,திருமணம் என்று வந்ததும் அதனை தங்கள் கடமை ஆக்கி அவசர அவசரமாக முடித்துவிடுகின்றனர்.இவை பெரும்பாலும் நடப்பது வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு தான்.அதற்காக வெளிநாட்டில் இருப்பவர்களை குறை கூறவில்லை.அனைவரும் கெட்டவர்கள் கிடையாது.உள்நாட்டிலும் அதே.ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து மாப்பிள்ளை வந்து நிற்கும் அந்த இரண்டு வார காலத்தில் நிச்சயம்,கல்யாணம் என அனைத்தையும் முடித்து அனுப்பிவிடுகிறார்கள்.எனது மகள் இப்போ வெளிநாடு என்று உறவுகளுக்கு கூறி பெருமைப்படும் தருணங்களை எண்ணிக்கொண்டு விரைவாக முடித்து அனுப்பிவிடுகின்றனர்..
மகளுக்கு தனது எதிர்கால கணவன் யார்?எப்படிப்பட்டவன்?என்று அறிந்து கொள்ள கிடைக்கும் கால அவகாசம் மிக சிறியதே.பெற்றோரின் விருப்புக்கிணங்க சம்மதித்து அவளும் திருமணம் செய்து கொள்கிறாள்.இவ்வாறு திருமணம் செய்தவர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று அங்கு படும் அல்லல்பாடுகள் எத்தனையோ எத்தனையோ.இதனை பற்றி தங்களது மகளின் திருமணத்துக்கு முன்னர் மற்றையோருக்கு அறிவுரை கூற வாய் கிழிய கதைத்திருப்பார்கள் .ஆனால் தங்களுக்கு என்று வரும் போது அவற்றை மறந்துவிடுகின்றனர்.
பெரும்பாலான சந்தர்ப்பத்தில் தங்களது வாழ்க்கை குறித்த எந்தவொரு அவதானிப்புகளும் இல்லாமல் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் சம்மதித்து விடுகின்றனர்.ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று கூறுவார்கள்.ஆனால் சில முக்கியமான ஒரு பொய்யோ அல்லது ஓரிரு பொய்களோ திருமண வாழ்க்கையை துவம்சம் செய்துவிடுகின்றன.பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணங்களில் தான் பெரும்பாலான "கெட்ட நடத்தைகள்/பழக்கவழக்கங்கள்" மழுங்கடிக்கப்பட்டு,மறைக்கப்பட்டு மாப்பிள்ளையின் கல்வி,வருமானம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன.
ஏதும் பிரச்சனை வந்தால் அதனை பின்னர் சமாளித்து கொள்ளலாம்.கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி பிறந்த பிறகு இதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.பிரிந்து செல்லமாட்டார்கள் என்பது தான் வழமையான பெற்றோர்களின் ஒருமித்த கருத்து.ஆனால் திருமணத்தின் பின்னர் அப்படி ஏதும் தெரியவந்தால் மிகவும் பாதிக்கப்பட போவது என்னமோ தங்களது மகள் தான் என்பதை உணர மறுத்துவிடுகிறார்கள்.அனைத்தையும் தங்களது "பாயிண்ட் ஒப் வியூ"வில் வைத்து பார்ப்பதால் மகளின் வாழ்க்கை-அதில் ஏற்பட கூடிய பிரச்சனைகள் அவர்களது கண்ணில் தெரிவதில்லை .
நிச்சயித்து திருமணம் முடிக்கும் அனைத்து சந்தர்ப்பத்திலும் இது நடக்கும் என கூறவில்லை.ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்னமோ கசக்கும் உண்மை தான்.ஒரு பெண்ணுக்கு பார்க்கும் மாப்பிள்ளை இருபத்தெட்டு,முப்பது வயதோ அல்லது அதற்க்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் தெரியாத ஒரு சம்பந்தம் என்றால் எவ்வாறு குறிப்பிட்ட மாப்பிள்ளையை அவரின் கடந்தகால விடயங்களை மதிப்பிடுவார்கள்?
சாதாரணமாய் ஒரு ஆணுக்கு இன்றைய காலத்தில் முப்பது வயதுக்குள் குறைந்தது ஓரிரு "மறைக்கப்பட்ட உறவுகள்" இருந்திருக்கும்.இது சாதாரணம்.அவ்வாறு இல்லையெனில் குறித்த நபருக்கு எதோ பிரச்சனை இருக்கவேண்டும்.அல்லது வாழ்க்கையில் ஏதும் இலட்சியத்தை நோக்கி முன்னேறிய இலட்சிய புருஷராய் இருப்பது அவசியம்.இதனையும் தாண்டி முப்பது வயது வரை எதுவகையான காதல்களோ/கள்ளங்களோ இல்லாமல் இருப்போர்கள் நூற்றுக்கு ஐந்து வீதத்துக்கும் குறைவானோரே.
இது தவிர அறியாத நோய்கள்,குடும்ப பிரச்சனைகள் என்று எத்தனையோ விடயங்கள் ஆராயப்பட்டு நிதானமாய் செய்யப்படவேண்டிய திருமணங்கள் எவ்வாறு இவ்வளவு சீக்கிரமாய் நடந்தேறுகின்றன என்று பார்க்கையில் எதோ ஒரு ஜீவனின் ஆசைகள் அமுக்கப்படுகின்றன அல்லது வாழ்வு சிதைக்கப்படுகிறது என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
இது பெண்களின் பார்வையில் எழுதியதால் தான் ஆண்களை பற்றி இவ்வளவு கூற வேண்டி ஏற்பட்டது.இது வகையில் ஆண்கள் பக்கமும் இருந்து எழுத முடியும்.மேலே கூறிய விடயங்கள் அத்தனையும் பெண்கள் மேலே மாற்றி பார்த்தால் அங்கும் இதே பிரச்சனை தான்.ஆனால் தினசரி கேள்விப்படும் கதைகள் ஒவ்வொன்றும் "பெண்கள் முட்டாள்கள்"என்பதை மனதில் பதியவைத்துவிடுகின்றன.கண்ணீர் என்னும் ஆயுதத்தால் எவ்வாறு ஆண்களை பணியவைக்கிரார்களோ இதேபோல தெரிந்தோ தெரியாமலோ செண்டிமெண்ட் என்னும் ஆயுதத்தால் பெண்கள் அடக்கப்படுகின்றனர்/அடங்கி போகின்றனர்.
"பெண் மனதின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை"என்று பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வேளையிலும் உலகின் எதோ ஓர் மூலையில் பெண்கள் இலகுவாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
நிச்சயம் செய்யப்படும் திருமணம் பெண்களை செய்யவேண்டாம் என்று நான் கூறவில்லை.நிச்சயித்து திருமணம் செய்து எம் கண்முன்னே அழகான வாழ்க்கை வாழ்வோர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.அவ்வாறான திருமணமாய் இருந்தால்,இது உங்களது வாழ்க்கை;தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.முடிந்த வரை உங்களுக்கு வர இருப்பவர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முற்படுங்கள்.அதற்க்கு முன்பதாக உங்கள் மனதை பறிகொடுத்துவிடாதீர்கள்.உங்கள் வாழ்க்கையை பெற்றோருக்காக அடைமானம் வைத்துவிடாதீர்கள்.என்னால் கூற முடிந்தது இவ்வளவே.தீயின் பிரகாசம் கண்டு தானே போய் விழும் விட்டில் பூச்சிகள் போல இருப்பவர்களை திருத்த முடியாது.அவர்களுக்கான பதிவல்ல இது.
"வாலிபங்கள் ஓடும்..வயதாக கூடும்..ஆனாலும் அன்பு மாறாதம்மா..
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா..
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி..நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..."
21 comments:
பெண்களுக்கு மட்டுமல்ல, சமயத்தில் நிச்சய திருமணங்கள் ஆண்களுக்கும் ஆபத்தாக முடிந்து விடுகின்றது! ஹி..ஹி..ஹி..
/கிஷோகர் said...
பெண்களுக்கு மட்டுமல்ல, சமயத்தில் நிச்சய திருமணங்கள் ஆண்களுக்கும் ஆபத்தாக முடிந்து விடுகின்றது! ஹி..ஹி..ஹி..
//
உண்மை தான் சகோ.அது தான் குறிப்பிட்டிருக்கிறேன்.பதிவை அப்படியே மறுபக்கம் கூட புரட்டி பார்க்கலாம்.ஆண்கள் பக்கமும் பொருந்தும்.
பலரும் யோசிக்கவேண்டிய பதிவு
இங்கே குறிப்பிட்டவிடயங்களை யாரும் மறுக்கமுடியாது அனைத்தும் சிறப்பான கருத்துக்கள் மைந்து
இது பற்றி என்னிடமும் சில கருத்துக்கள் இருக்கு முடிந்தால் பதிவு ஒன்று போடுகின்றேன்
என்னைப்பொறுத்தவரை திருமணமென்பது ஏதோ ஒரு சக்தியால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று; அது அமைவதும் அமையாமல் விடுவதும் அவரவர் விதி/அனுபவம்; இதைத்தான் தாரமும், குருவும் அவரவர் விதிப்படி என்று சொல்வார்கள்!! கல்யாணமே நடக்காமல் காலத்தை களித்தவர்களும், எங்கோ இருப்பவருடன் வேறெங்கோ இருப்பவர் இணைவதென்பதெல்லாம் சாதரணமாக நடப்பதாக எனக்கு தோன்றவில்லை; இந்த இடத்தில் நீங்கள் பகுத்தறிவு என்னும் 7 ஆம் அறிவை நுழைத்து பார்த்தால் இது புரியாது!! குஷி படத்தில் இதை எஸ்.ஜே.சூரியா அழகாக சொல்லியிருப்பார்!!!
அத்துடன் காதல் திருமணங்கள் ஒன்றும் 100 சதவிகிதம் வெற்றியை கொடுப்பதில்லை; இரண்டிலும் 50/50 தான் வெற்றியளிப்பது என்பது என் கருத்து!!! காதலோ, நிச்சயிக்கப்பட்டதோ இருவரும் ஒருமித்து விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அது அழகான வாழ்க்கை, இல்லையா அது வழுக்கைதான் :-))
மற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளகைளை பெற்றோர் விரும்ப காரணம், மாப்பிள்ளை வெளிநாடு என்று சொல்லும் பெருமையை விட இங்குள்ள படித்த/வசதியான மணாளர்களின் சீதன தொகை, வீடு, கார்...... போன்றவற்றால்த்தான் அதிகம் வெளிநாட்டை நாடுகின்றார்கள்!!!
"எனக்கு பொண்ணு பார்க்கவேண்டாம், நானே பாத்துக்கிறன்" என்னும் மேசெஜ்சை அதுக்கு இப்டி சுத்தி வளைச்சு உங்க வீட்டு பெரியவங்களுக்கு சொல்றீங்க (கோத்துவிடுவமல்ல) :p
//"பெண் மனதின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை"என்று பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வேளையிலும் உலகின் எதோ ஓர் மூலையில் பெண்கள் இலகுவாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.//
எப்படித்தான் உங்களால எளிமையாவும், அதேநேரத்துல ஆழமாவும் எழுத முடியுதோ?? அருமையான பதிவு.. எல்லாரும் நிச்சயம் வாசிக்க வேண்டியதும் கூட!
//K.s.s.Rajh said...
பலரும் யோசிக்கவேண்டிய பதிவு
இங்கே குறிப்பிட்டவிடயங்களை யாரும் மறுக்கமுடியாது அனைத்தும் சிறப்பான கருத்துக்கள் மைந்து ///
நன்றி தல..
/K.s.s.Rajh said...
இது பற்றி என்னிடமும் சில கருத்துக்கள் இருக்கு முடிந்தால் பதிவு ஒன்று போடுகின்றேன்///
நிச்சயம் போடுங்க :)
// எப்பூடி.. //
காதல் திருமணங்கள் எல்லாம் வெற்றிகரமானவை அல்ல தான்.
ஆனால் சிறிது காலம் காதலித்தவர்கள் தங்கள் துணையின் நல்ல கெட்ட விடயங்கள் பற்றி அறிந்திருப்பதர்க்கான வாய்ப்புகள் அதிகம் நிச்சயிர்த்த திருமணத்தை விட-அதுவும் இன்ஸ்டன்ட் கல்யாணத்தை விட :)ஹிஹி வீட்டுக்கு மெசேஜா? அவ்வவ்
//.உங்கள் வாழ்க்கையை பெற்றோருக்காக அடைமானம் வைத்துவிடாதீர்கள்//
என்னை மாதிரி இருப்பவர்களால் அடகு வைக்காமல் பொழப்பு ஓட்ட முடியாது ஜி.... வேர வழியே இல்ல அடகு வச்சு தொழில் பண்ணிப்பாப்போம் நாம பொறுப்பா இருந்தா வ்யாபாரம் லாபம் தரும் என நம்பலாம்
//JZ said...
//"பெண் மனதின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை"என்று பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வேளையிலும் உலகின் எதோ ஓர் மூலையில் பெண்கள் இலகுவாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.//
எப்படித்தான் உங்களால எளிமையாவும், அதேநேரத்துல ஆழமாவும் எழுத முடியுதோ?? அருமையான பதிவு.. எல்லாரும் நிச்சயம் வாசிக்க வேண்டியதும் கூட!///
நன்றி பாஸ் :)
யோசிக்க வேண்டிய விடயம், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மட்டுமல்லவே காதல் திருமணத்திலும் பல ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
வழிப்பூட்டும் பதிவு. இந்தக் காலத்திலாவது பெண்கள், அம்மா அப்பா பாத்து செய்து வைத்தா சரி என்று இருக்காது, தமது வாழ்க்கை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.
என் பார்த்த கேட்ட அனுபவத்தின்படி திருமண வாழ்க்கை காசைச் சுண்டிவிட்டதுபோல பூவா,தலையா மாதிரி அதிஷ்டம்தான்.சாதகம் பார்த்து பேசிச்செய்தாலும் சரி,விரும்பிச் செய்தாலும் சரி சமபங்கில்தான் சொல்ல முடியும் நல்லா வாழுறதும்,கெட்டழியிறதும் !
/கேரளாக்காரன் said...
//.உங்கள் வாழ்க்கையை பெற்றோருக்காக அடைமானம் வைத்துவிடாதீர்கள்//
என்னை மாதிரி இருப்பவர்களால் அடகு வைக்காமல் பொழப்பு ஓட்ட முடியாது ஜி.... வேர வழியே இல்ல அடகு வச்சு தொழில் பண்ணிப்பாப்போம் நாம பொறுப்பா இருந்தா வ்யாபாரம் லாபம் தரும் என நம்பலாம்///
உண்மை தான் சகோ ஹிஹி
http://nirujans.blogspot.com/2011/05/blog-post.html
நல்ல பகிர்வு/பதிவு!உண்மையை அப்படியே தொட்டிருக்கிறீர்கள்,மைந்தரே!
//கலைவிழி said...
யோசிக்க வேண்டிய விடயம், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மட்டுமல்லவே காதல் திருமணத்திலும் பல ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
வழிப்பூட்டும் பதிவு. இந்தக் காலத்திலாவது பெண்கள், அம்மா அப்பா பாத்து செய்து வைத்தா சரி என்று இருக்காது, தமது வாழ்க்கை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.////
தங்கள் வாழ்க்கை குறித்த அக்கறை இவர்களுக்கும் இருக்கவேண்டும்.
/ஹேமா said...
என் பார்த்த கேட்ட அனுபவத்தின்படி திருமண வாழ்க்கை காசைச் சுண்டிவிட்டதுபோல பூவா,தலையா மாதிரி அதிஷ்டம்தான்.சாதகம் பார்த்து பேசிச்செய்தாலும் சரி,விரும்பிச் செய்தாலும் சரி சமபங்கில்தான் சொல்ல முடியும் நல்லா வாழுறதும்,கெட்டழியிறதும் !//
ம்ம்ம் சரிபங்கு இருக்கத்தான் செய்கிறது :)
சபாஷ் ! அருமையான பதிவு சகோ. முதலில் நிச்சயத் திருமணங்கள் என்பது சுயநலம் சார்ந்தவை ... தமது மதம், சாதியம், பழம் வழக்கங்களை தக்க வைப்பதற்காக பிள்ளைகளை பலியாக்குவதே அதன் நோக்கம் !!!
அடுத்து நிச்சயத் திருமண ஏற்பாடுகளில் மணத்துக்கு முன்னரான காலப்பகுதியில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதெல்லாம் மண்ணாங்கட்டி .. சான்சே இல்லை !!! இருவரும் நன்றாக நடிப்பார்கள் ... !!!
திருமணத்துக்கு பின் சுயமுகம் தெரிய வரும் போது ஒன்று இருவரில் ஒருவர் சமாளித்து வாழப் பழகிக் கொள்வார்கள் அல்லது மணமுறிவில் முடியும்...
30 வயதில் ஆணுக்கும், 25 வயதில் பெண்ணுக்கும் எப்படியும் ஒரு காதல் அனுபவம் குறைந்தது ஒரு கிஸ் அனுபவமாவது இருக்கும் .. இவற்றை மறைத்துவைத்தாலும் மணத்துக்கு பின் தெரியவந்துவிடும் .. சிலர் சமாளித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்வார்கள்...
காதல் மணமோ, நிச்சய மணமோ - சமாளித்துக் கொண்டு வாழ்வதில் தான் வெற்றியே !!! அப்புறம் என்ன மண்ணுக்கு இந்த ஜாதகம், குலம், கோத்திரம், சாதி, மதம் எல்லாம் ---- திணிக்கப்பட்டவையே !!!
வணக்கம் சொந்தமே!நல்லதொரு விடயம் பற்றி பேசியிருக்கிறீர்கள்.
மனம் விரும்பி குணம் அறிந்து செய்யும் திருமணங்கள் கூட பின்னாளில் பொய்ப்பட்டுப்போகையில் பேசப்ட்டு செய்யப்படும் திருமணங்ளின் புரிதல்கள் எத்தனை நாட்களுக்கு தொடரும்.
தாமே தீர்மானிக்கும் போது அதனால் வரும் நல்மை தீமை இரண்டு பலன்களையும் முழு மன விருப்புடன் சகிப்புடனும் சமாளித்து வாழ்ந்து கொள்வார்கள் என்பதேஎன் கருத்து.விழிப்பூட்டும் பதிவு வாழ்த்துக்கள்.
சட்டப்படி சொல்லிருகிங்க சகோ
பெற்றோர்களையும் சிந்திக்க தூண்டும் பதிவு.
விழிப்பு முக்கியம் ஆனால் நிச்சயம் செய்து கொடுப்பது நல்ல வரம் என்றுதான் ஆனால் வரம் நரகம் ஆகுவது அவர்கள் விதி!ம்ம் இப்படித்தான் சொல்லமுடியும் என்னால்!
Post a Comment