Tuesday, April 9, 2013

ஜொள்ளு+மொக்கை+'கக்கா' =சேட்டை..!

                         

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பதிலாக 'அமெரிக்கன் பை' போன்ற செக்ஸி+காமெடி படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலாவது ரசிகர்களின் ஏகப்பட்ட வரவேற்பால் செமையாக இலாபம் பார்க்கலாம்.சென்சார் குழு படத்தை முழுமையாக பார்த்து தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்களா இல்லை சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் போல இங்கும் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றதா என்று ஜோசிக்க வைக்கிறது 'சேட்டை'.

ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்களும்,பொதுவில் கதைக்க கூச்சப்படும் சொற்களின் பாவனையும் என்று,ரசிகர்களை கலகலப்பாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற இப்போதைய இயக்குனர்கள் முதல்கொண்டு காமெடியன் சந்தானம் வரை எத்தகைய அடிமட்டம் வரைக்கும் சென்று நக்கி வைக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சீரியசாக கதை சொல்லபோய் அதில் இந்த லாஜிக் ஓட்டை அந்த லாஜிக் ஓட்டை என்று எதிர்மறை விமர்சனங்களால் அடிபட்டு தோல்வி படம் கொடுப்பதை விட,சிம்பிளாக 'மொக்கை'என்கின்ற பேஸ்மென்ட்டில் கொஞ்சம் மசாலா தடவி ஒப்பேற்றிவிட்டால், கதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை,லாஜிக் மற்றும் இன்னபிற தவறுகள், வீக்னெஸ்கள் பற்றியும் கவலைப்பட தேவை இல்லை என்று பல இயக்குனர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

             

ப்றாத்தல்,கக்கூஸ்,ஆயி போறது,கக்கா,ஜட்டி,கூமுட்டை,கு.... என்று இதை படிக்கும் போதே,என்ன கறுமத்தை எழுதி வைத்திருக்கிறான் என்று  நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள். ஆனால் படம் முழுவதுமாக இந்த  சொற்கள் தான் நிரம்பி வழிகின்றன.இவற்றுக்கு தான் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எத்தனையோ வருடங்களாக காமெடி கிங்காக இருந்த வடிவேல் கூட,இப்படி கீழ்த்தரமான நிலைக்கு என்றைக்கும் போனதில்லை. சந்தானத்திடம் சரக்கு தீர்ந்து போய்விட்டதோ தெரியவில்லை.'டெல்லி பெல்லி' கதை என்றாலும்,தமிழுக்கேற்ற வகையில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.அல்லது முழுமையாக முதலில் கூறியது போல அமெரிக்கன் பை போன்று கொடுத்திருக்கலாம்!'டெல்லி பெல்லி'யில் இதனைவிட அதிக அஜால் குஜால் இருந்திருந்தது.சரி அவற்றை அப்படியே போட்டிருந்தாலும் ஒரு பிட்டு படம் பார்த்த திருப்தியில் விமர்சனங்கள் ஆகா ஓகோன்னு வந்திருக்கும்.அதுவும் இல்லை.

இந்த படத்துடன் பெண்கள் மத்தியில் ஆர்யாவின் டிமாண்ட் சற்றே குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.ஹன்சிகாகூட திருமணம் நிச்சயமாகி இருக்கும் சமயத்தில் ஹன்சிகாவுடன் கிஸ் அடிக்கிறார்.அப்படியே அஞ்சலியை உதடையும் வஞ்சகமில்லாமல் அடிக்கடி கடித்து வைக்கிறார்.ஆர்யா வரைட்டியான படங்கள் தேடவேண்டியது அவசியம்.அனைத்து படங்களிலுமே ஆர்யாவின் பாத்திரம் என்னமோ ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.கடைசி வரைக்கும் என்னை குழப்பிய விஷயம் என்னன்னா,பவர்ஸ்டாருக்கா பிறேம்ஜிக்கா நடிப்பு கொஞ்சமாவது வரும் என்பது தான்.அவனோட வாயும் முடியும்..அவனோட வாயிலேயே தேங்காய் துருவி,வாய்க்குள்ளே அம்பது பேருக்கு சம்பல் இடிக்க முடியும்.ம்ம்ம் எல்லாம் செல்வாக்கு..! 

அஞ்சலி,ஹன்சிகான்னு இரண்டு பப்பாளி பழங்கள் படத்தில்.ஹன்சிகா நன்றாக மெலிந்திருக்கிறார்.முகம் மட்டும் அப்படியே ஊதிப்பருத்த பப்பாளி மாதிரி இருக்கிறது. காலிலிருந்து கமெரா மேலே தாராளமாக ஊடுருவி செல்ல இடம் கொடுத்திருக்கிறார்.ஆனால் மெலிந்திருந்தமையால் முகம் சுளிக்க வைக்கவில்லை.ஓகே ஓகே படத்தில் இருந்த சைஸில் இருந்திருந்தால் வாந்தி தான்.ஆனால் அந்த குறையை அஞ்சலி தீர்த்து வைக்கிறார்.முப்பது வயது தானே கை காலை மூடிக்கொண்டு நடிக்கலாம்.அடிக்கடி கையை தூக்கி காட்டி கடுப்பேத்துறார்.


தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும்,படத்துடன் ரசிக்க கூடியதாக இருக்கிறது.'அகலாதே அகலாதே.." பாடல் தான் ரொம்ப பிடித்திருக்கிறது பலருக்கு.சந்தானத்தை ஹீரோவாக்கி ஹீரோவை சப்போர்ட் நடிகராக்கி எத்தனை படங்கள் தான் வெளிவர போகின்றனவோ!சந்தானம் கவுண்டர் காமெடி பண்றதுக்காகவே கூட ஒட்டிக்கிட்டு இருக்க பிரேம்ஜி.வில்லனாக நாசர்.கூடவே காமெடி வில்லனுக பட்டாளம்.பல இடங்களில் 'கலகலப்பு' கதையை ஞாபகப்படுத்தி சென்றது.அங்காங்கே கிடைக்கும் காமெடிக்காக,பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம்.இந்தியில் 'சூப்பர் ஹிட்டாக' டிக்ளேர் செய்யப்பட்ட படம் இது,தமிழில் ஓரளவுக்கேனும் முதலுக்கு நட்டமில்லாமல் ஹிட் ஆகும் என்று நம்பலாம்.ஒஸ்தி மாதிரி இல்லாத வரையில் ஏனோ சந்தோஷம் !

டவுட்டு டோங்கிரி: ஏம்பா, இந்த படத்திலயும் கிலோ என்ன விலை என்று கேட்ககூடிய அளவுக்கு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்கே, இந்த ஓலக இலக்கியவாதிகள், ப்ராப்ள சினிமா விமர்சகர்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதி கிழிகிழின்னு கிழிப்பாங்கள்லே?

Post Comment

Monday, April 1, 2013

அம்மா பகவானும்,ஊடுருவல் தாக்குதலும்..!

        

முடிவு செய்தாகிவிட்டது.எப்படியும் இன்று பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்து உட்சென்று,தலைமையகத்தை இரவுக்குள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதில் நாம் அனைவரும் உறுதியாய் இருந்தோம்.சற்றே நடுக்கமாய் தானிருந்தது என்றாலும் யாரும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் ஆறு பேர் என்பதும்,தலைமையக எல்லைக்குள் 'பெரிய தலைகளும்' எமது வயதை ஒத்த பருவத்தினருமாய் எப்படியும் ஐம்பது பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பதும் தான் நடுக்கத்துக்கு காரணம்.

உள்ளே ஆட்கள் நடமாட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் இருந்தது.சிலர் வெளியே போவதும்,புதிதாய் சிலர் உள்ளே வருவதுமென்று வாகனங்களும் முழுவீச்சில் ஓடித்திரிந்தன.ஒரு சமயம் எங்களின் தாக்குதல் நடைபெறும் என்பதை முற்கூட்டியே உளவுத்துறையினர் அறிந்துகொண்டுவிட்டார்களா என்ன?சாத்தியம் மிக குறைவு என்று மனசு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டது.மிக குறுகிய காலகட்டத்தில் போடப்பட்ட திட்டம் இது.பெரிதாக வெளியாட்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை.

வாசலின் ஒரு பக்கமாய் நானும் இன்னொருவனுமாய் பொசிசன் எடுத்துக்கொண்டோம்.மூவர் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக பதுங்கி இருந்தனர்.ஒருத்தன் கொஞ்சம் தூரம் தள்ளி 'தலைமையிடம்'இருந்து வந்த அழைப்பில் பிசியாய் இருந்தான்.வாகனத்தின் பின்னால் பதுங்கி இருந்தவங்களில் ஒருத்தன் 'டைம் ஆகுதுடா சீக்கிரம் தொடங்குவம்' அப்பிடின்னு கத்திக்கிட்டிருந்தான்.அந்த சத்தம் உள்ளே இருந்தவங்களுக்கு கேட்டிருக்க வேணும்.இதுக்கு மேல தாமதிச்சால் எங்களுக்கு தான் ஆபத்து.அவங்கள் உசாராகி வெளியில வருவதற்கு முதல் முதல் அடியை நாங்கள் வைத்தாக வேண்டும்!

இப்படி தான் முதல் ஒருதடவை 'அட்டாக்' பற்றி எவ்வித திட்டமிடலும் இல்லாமல்,கிட்ட நெருங்கி சென்று வெளியிலிருந்து மெல்லிய தாக்குதல் நடாத்திவிட்டு இழப்புகளின்றி ஓடித்தப்பியிருந்தோம்.அப்போது இருந்ததை விட இம்முறை எத்தகைய தாக்குதல் வந்தாலும் திருப்பித்தாக்கும் வல்லமை கொண்டவர்கள் எமது அணியில் இருந்தார்கள்.அது போதாதென்று 'சம்பவ இடத்துக்கு'வர இயலுமானால் வருமாறு தலைமையகத்துக்கு அண்மையில் இருந்த ஓரிரு நண்பர்களிடம் உதவியும் கோரப்பட்டு,அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் அணியுடன் சேர்ந்துகொள்ளகூடும் என்று வந்த செய்தி சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாய் பட்டது அந்த சமயத்தில்!

'அட்டாக்க்க்க்க்.....' 'தலைமையுடன்' கதைத்துக்கொண்டிருந்தவன் உத்தரவிட்டதுதான் தெரியும்.திறந்திருந்த வாசலை நோக்கி ஆறு பேரும் ஒரே சமயத்தில் பாய்ந்தோம்.
சட் சட் சட் சட்சட் சட்சட் சட்சட் சட் ...... கட் கட் கட் கட்....

பாய்ந்த வேகத்தில் ஐந்து பேர் அப்படியே விறைத்து போய் நின்றனர் என்னை தவிர!அட்டாக்குக்கு வந்த இடத்தில் என்னடா சோதனைன்னு பாத்தால்,யாரோ அவிங்க ஸ்கூல் பழையமாணவர் சங்கத்திண்ட முக்கிய உறுப்பினராம்.'என்ன தம்பி இந்தப்பக்கம்' அப்பிடின்னு அவரு கேக்க,'என்னண்ணே இந்த பக்கம்'னு அட்டாக் பாண்டிகள் விறைக்க.. ஒரு அரைமணி நேர 'விளக்க உரையுடன்' அட்டாக் பெயிலியர் ஆனது தான் மிச்சம்!!

           

நம்ம பையன்களுக்கு அம்மா பகவான்-கல்கி பகவானை கண்ணில காட்டக்கூடாது.அப்பிடி தான் போன வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை ராஜசிங்க ரோட்டாலை இரவு எழு மணி போல போகேக்க அம்மா பகவான் 'க்ருப்'போட பஜனைகள் நடக்கும் இடம் நம்ம கண்ணுக்கு உறுத்திச்சு. ஏற்கனவே ஒருக்கா இப்பிடி தான் உறுத்தேக்க,ரோட்டில நிண்டு கத்திட்டு போனனாங்கள்..'இவனுகள் கள்ளர் நம்பாதீங்கோ வெங்காயங்களே'எண்டு. இந்தமுறை உள்ளுக்கு போய் ஒரு கலவரம் பண்ணலாம்னு மொக்கையா ப்ளான் பண்ணி ட்ரை பண்ணினோம்(நாங்களும் ரவுடியாம்லே).

என்கூட வந்த பசங்க அஞ்சு பேரும் ஒரே பாடசாலை எண்டதால(யாழின் படிப்புக்கு பெயர் போன பாடசாலை ;) ),அந்த OBA புள்ளிகிட்ட சிக்கிட்டாங்க.அந்தாளும் நிக்கவைச்சு அறுவை விளக்கம் குடுத்துட்டு தான் போங்கடான்னு விட்டிச்சு.பெரும்பாலும் படிச்சவங்க தான் இந்தமாதிரி கேவலம்கெட்ட வேலைகளில் ஈடுபடுறாங்க எண்டத அங்க வந்து போற ஆக்களை வைச்சு தெரிஞ்சுகொள்ள கூடியதா இருந்திச்சு.

என்னதான் இவனுக கள்ளனுக,எமாத்துறாணுக எண்டு விளங்க வைச்சாலும்,ஆதார பூர்வமாய் நிரூபிச்சாலும் கூட,சனம் போகத்தான் போகுது.இளசுகள் பின்னேரத்தில கிளம்பி ரோட்டு சுத்துறது போல, கிழடுகளுக்கு இது ஒரு 'என்டர்டெய்ன்மென்ட்'. பின்னேரங்களில போனோமா,அரட்டை அடிச்சோமா,தாறதுகள சாப்பிட்டோமா,மன நிம்மதிக்கு ஒரு சில பஜனை,பிரார்த்தனையில் ஈடுபட்டோமானு இருக்காங்க.அது சரி ஏன் இளவட்டாரம் இப்பிடி சுத்துதுகள்னு தான் தெரியலை.

அம்மா பகவான் பாடல்கள் தமிழ் சங்கத்தில வெளியிடுறோம் அப்பிடின்னு அழைப்பிதழ் வேறு தந்தார்கள்.பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடவே பணரீதியான பிரச்சனையில் தளர்ந்து போய் இருக்கையில்,இவர்கள் இத்தனை வேலை செய்கிறார்கள் என்றால் நிச்சயம் இந்தியாவிலிருந்து பண உதவி கிடைக்காமல் இல்லை.அல்லது உள்ளூர் விளக்கம் கெட்ட பணம் கொழித்தொர் கொடுப்பார்கள் போலும்!இவங்களுக்கு போட்டியா எதிர்ல நான் நித்தியானந்தா மடம் தொடங்கலாம்னு இருக்கேன்.நித்தி உதவாமலா போயிடுவார்!எனக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்க சில பொண்ணுகள் வராமலா போயிடுவார்கள்!!

        

அரும்பத விளக்கம்:
தலைமை- குறிப்பிட்ட நபரின் காதலி 
அணி- நம்ம வெட்டி பசங்க கூட்டம் 
அட்டாக்- மொக்கை போட்டு கலாய்த்தல் 
ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்டி பாக்கிறது. 

***************************************************************************

இது இவர்களின் திருகுதாளம் பற்றி வெளிவந்த செய்திகளில் ஒன்று.   

ல்கி பகவான் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் விஜயகுமார் நாயுடுவும், அம்மா பகவான் எனப்படும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் பெண்களுக்கு போதை லேகியம் கொடுத்து வருவது உண்மைதான் என்று, அங்கு போய் வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் வரதய்யபாளையம் மற்றும் திருவள்ளூருக்கு அருகில் உள்ள நேமம் போன்ற இடங்களில் இந்த விஜயகுமார் நாயுடு – புஜ்ஜம்மாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன.
இங்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு இந்த ஆசாமிகளைப் பார்க்க குறைந்தபட்சம் ரூ 25000 வரை வாங்குவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பேரின் பாதங்களையும் கழுவி பூஜை செய்ய ரூ 5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏராளமான பணக்காரர்கள் இப்படி பணம் செலுத்தி பாதங்களைக் கழுவியுள்ளனர்.
ஒரு முறை இந்த ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டால், மீண்டும் ஊர் திரும்ப முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் பலரும். இதற்குக் காரணம் கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை மருந்து கலந்து பிரசாதம் வழங்கப்படுவதுதான் என்று ஏற்கெனவே டிவி சேனல்கள் வெட்டவெளிச்சமாக்கின.
போதை மருந்து சாப்பிட்ட பெண்கள் மயங்கிச் சரிவதையும், சில நேரத்தில் சுயநிலை மறந்து ஆட்டம் போடுவதையும் ஆந்திராவின் ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த இரு தினங்களிலேயே மக்கள் அதை மறந்து, நித்யானந்தன் – ரஞ்சிதை கதைக்குத் திரும்பிவிட்டார்கள்.
கல்கி ஆசிரம மோசடி குறித்து ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையே நடத்தவில்லை!
இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி கல்கி ஆசிரமத்துக்குப் போய், போதை அனுபவம் பெற்று இப்போது தெளிந்துவிட்ட பக்தர் சுதாராணி என்பவர் இப்படிக் கூறியுள்ளார்:
நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனக்கும் இந்த அனுபவம் நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. தங்களை கடவுள் என்று கூறி எங்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி பணம் பறித்துவிட்டனர்.
எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுக்கு சொந்தமாக்கவேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம், தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர். கடவுளை எப்படி நோய் தாக்கும்? கடவுளே நோயாளியாக இருந்தால் பக்தர்களின் நோய்களை எப்படித் தீர்ப்பார்?” என்கிறார்.
இந்த சுதாராணியைப் போன்ற பலரும் இப்போது ஒன்றிணைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.

*************************************************************************

இதை இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட அம்மா பகவான் பக்தராக இருக்கலாம்.இல்லை, உங்கள் வீட்டில் அம்மாவோ சகோதரிகளோ அப்பாவோ இவர்கள் பின்னால் திரியலாம்..ஏன் உங்கள்  சாமியறையிலும் ஹாலிலும் கூட இந்த கேடுகேட்டவங்களின் படங்கள் கம்பீரமாய் வீற்றிருக்கலாம்!ஏன்,எங்களின் 'அட்டாக்'இல் எங்கள் அணியில் இருந்த ஒருவன் கூட,தனது நிறுவனத்தில் அம்மா பகவான் படம் வைத்து பூஜிப்பதை கண்டிருக்கிறேன்.அதனால் தான்,தாக்குதல் சமயம்,போனிற்கு அழைப்பு வந்ததாக பாசாங்கு காட்டி சற்றே விலத்தி நின்றிருந்தான்.என்ன செய்வது உங்களை,இவர்களை போன்றோர் இருக்கும் வரையில் போலிச்சாமியார்களுக்கு தொல்லை ஏது!நாளை நான் சாமியார் ஆனால்,என்னையும் வைத்து பூஜிக்கத்தான் போகிறீர்கள்.என்னை பற்றி பாடல் இயற்றி இசையமைத்து பாடத்தான் போகிறீர்கள்!என்ன,மடம் ஒன்று கட்டலாம்னா,கைவசம் காசுபணம் தான் இடிக்கிறது.பக்தர்கள் தயை கூர்ந்து உதவினால்,நாளை நானும் சாமியார் தான்!!

இவர்கள் மீதான 'அட்டாக்' காலத்தின் தேவை என்பதை உணர்ந்தால், இவர்களை ஒழிப்பது என்பதும்,எமது கைகளில் தான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.வேலை வெட்டி இல்லாத சில 'கம்னாட்டிகள்' மேலிடத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் ஒவ்வொரு பாகத்திலும் இது வேரூன்றி திறம்பட நடந்துவருகிறது.படித்த முட்டாள்கள் தொடக்கம் சமய முட்டாள்கள் வரை அனைவரையும் இங்கு காணலாம். இவங்களுக்காகவேனும் நாங்கள் 'பொதுபலசேனா' ஒன்றை உருவாக்கவேண்டும்!

மதப்பற்று கொண்டவனை விட்டுவிடலாம்.ஆனால் இந்த மதமாற்று வேலைகளிலும், களவாணி பயலுகளை ஆன்மீக தலைவர்னு சொல்லி ஆட்கள் சேர்ப்பிலும் டுபடும் so called 'கம்னாட்டிகளை' மன்னிக்கவே முடியாது.ஜேசு சீக்கிரம் வந்தாலாவது மன்னிப்பார்னு பார்த்தால்,அவர் தான் போன நூற்றாண்டிலிருந்து இந்தா வாறன் அந்தா வாறேன்னு தண்ணி காட்டிக்கிட்டிருக்காரே..!!

Post Comment

Saturday, February 9, 2013

"கடல்"துளசியும் நம்ம மணி சாரும்..!





"இருக்கின்றதா இல்லையா" என்பதை கண்டுபிடிப்பவன் உண்மையிலேயே ஒரு திறமைசாலி தான்.தொடர்ந்து பல வருடங்களாக தனது கூர்ந்த அவதானிப்பின் மூலமும், தேடல்கள், ஆய்வுகள் அதன் மூலம் மனம் நிலைநிறுத்திக்கொண்ட முடிபுகள் அடிப்படையில் தான் பெரும்பாலானவர்கள் "இருக்கின்றதா இல்லையா?" பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுக்கின்றனர்.

இது நிச்சயமாக ஒரு சிக்கலான பிரச்சனை;அதுமட்டுமல்ல பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் இந்த "இருக்கின்றதா இல்லையா" பிரச்சனையின் பதில் தான் தீர்மானிக்கும் சக்தியாக அமைகிறது. காரணம்,பெரும்பாலானோர் இல்லாமலிருப்பதை மறைக்க "அது" இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள், சிலர் இருப்பதை மறைத்து "அது" இல்லாமலிருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை.காரணம் எங்களில் தானே பல வகையினர் இருக்கின்றார்கள்.சிலருக்கு "அது"இருப்பது பிடிக்கும்.சிலருக்கு இல்லாமலிருப்பது தான் பிடிக்கும்!இரண்டாவது வகையறாவை சார்ந்தவர்களை சந்திக்கும்போது,'ஏன் இவர்களுக்கு இப்படியான ரசனை" என்று கேட்டுக்கொள்வேன்.நான் எப்போதும் முதல் வகையறாவுக்குள் தான்."அது"இருந்தால் தான் பிடிக்கும். இல்லாவிட்டால் சப்பென்று இருக்கும்.அதனால் பிடிப்பதே இல்லை.

இதனால் தான் என்னமோ,சிறுவயதிலிருந்தே தினசரி நான் பார்ப்பனவற்றை, அவதானிப்பனவற்றை மனதில் பதித்து வந்திருக்கிறேன்.அது இப்போது எனக்கு பெரிதும் கைகொடுக்கின்றது. "இருக்கின்றதா..இல்லையா"என்று எனது நண்பர்கள் குழம்பும் சந்தர்ப்பங்களில் என்னால் இலகுவாக கூறிவிட முடிகிறது அது இருக்கிறது அல்லது அது இல்லை என்று.முதலில் என்னுடன் முரண்பட்டுக்கொள்ளும் நண்பர்கள்,பின்னர் தங்களது கூர்மையான நுண் பார்வையினால் தெளிவடைந்து 'ஆமாண்டா அது இருக்கிறது"என்று தலையாட்டிக்கொள்வார்கள். 


ஆனால் எப்போதாவது என்னையே 'இருக்கின்றதா...இல்லையா'என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பிய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.நாம் பார்ப்பவர்கள் காலமாற்றத்துக்கேற்ப எப்படி மாறிக்கொள்கிறார்கள், மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் படிப்படியான வளர்ச்சியை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்.ஆனால் சிலரின் நடத்தை எப்போதும் குழப்பகரமாகவே இருக்கும்.நம்ம மணிரத்தினம் மாதிரி!(அப்பாடி மேட்டர் முடிஞ்சு மேட்டருக்கு வந்தாச்சு.)
------------------------
             http://www.tamilvix.com/wp-content/uploads/2012/02/Mani-Ratnams-Kadal.jpg

சிறுவயதுகளில் கெட்டவர்களோடு சேராதே,கெட்ட நண்பர்கள் சகவாசம் வைத்துக்கொள்ளாதே என்று படித்து படித்து வீட்டில் கேட்கும் அறிவுரைகளால் சில காலம் சிலரை விட்டு பிரிந்தே இருப்போம்,முக்கியமாக பள்ளி பருவத்தில்.ஆனால் நாம் வளர,எம்முடன் சேர்ந்து கூடவே வளரும் சிந்திக்கும் திறன் 'இது தாண்டா யதார்த்தம்'என்று பல உண்மைகளை உணரவைத்துவிடுகின்றது.கெட்டவர்களுடன் சேராதுவிட்டால் சமூகத்தில் தனித்துவிடப்பட்டுவிடுவோம் என்கின்ற உண்மையும்,எப்படியோ எங்களை சுற்றி இப்படியானவர்கள் தான் இருக்கப்போகின்றார்கள்,அவர்களை சமாளித்து செல்லும் வழியை நாங்கள் தான் கண்டுகொண்டு அதன்படி வாழவேண்டும் என்பதை வாழ்க்கை கற்றுத்தருகிறது.ஆமா இதற்கும் கடலுக்கும் என்னா சம்பந்தம்?படத்தின் கதை-விமர்சனம் படிக்கலாம்னு வந்தவர்கள் இந்த இடத்துடன் நிறுத்திவிட்டு கிளம்புங்கள்.

படத்தில 'டச்' பண்ணினது ரஹ்மான் மற்றும் ராஜீவ் மேனன் தான்.இருவரும் தங்கள் பங்கை திறம்பட முடித்து கொடுத்திருக்கிறார்கள்.அது படத்துக்கு பொருந்தியதா இல்லையா என்பது இயக்குனர் மணியின் தலை மேல் போடவேண்டிய பிரச்சனை.அங்காங்கே ஜெயமோகன் 'மதம்"சார்பாக வரும் வசனங்களில் ஜொலிக்கிறார்.அரவிந்தசாமியை பாதிரியார்/சர்ச் சார்ந்த கதைகளில் பார்த்து போதும் என்றாகிவிட்டது.அதே பழைய அரவிந்த சாமி தான்.எந்த மாற்றமும் இல்லை டயலாக் டிலிவரி,ஆக்சனிலிருந்து அனைத்திலுமே!அர்ஜூன் மற்றும்,கார்த்திக் மகன் கெளதம் இருவரும் என்னை கவர்ந்தனர்.

எத்தனையோ பெரிய பெரிய கடல் போன்ற விடயங்களை தொடுவதற்கு மணிரத்னம் முயன்றிருக்கின்றார்.ஆனால் அந்த விடய தலைப்புகளை மட்டுமே தனது 'கடல்' படத்தில் கொடுக்க முடிந்திருக்கிறது.இதுவே ஒரு புதுமுக இயக்குனரோ,அந்தளவு பெயர் பெறாத இயக்குனரோ இயக்கியிருந்தால் சிலசமயம் பேசப்பட்டிருக்கும்.ஆனால் இது 'மணி'சார் படம் என்கின்ற இடத்தில் தூக்கிவைத்து பார்ப்பதனால்/பார்த்திருப்பதால் அந்த ஏமாற்றம் தான்,படத்தில் இருந்த சில நல்ல விடயங்களையும் பேசாமல் முடங்க வைத்திருக்கிறது.

படம் ஆரம்பித்து ஒரு அரை மணிநேரம் எதோ ஒரு பெரிய 'ட்ரீட்' காத்திருக்கிறது என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுவிட்டு அதற்க்கு பின்னர் மணி சார் தனது அண்மைய படங்களை சுட்டிக்காட்டி நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி திரும்ப கேட்கிறார்..
'நான் எதிர்பார்ப்பை தூண்டினால் நீ எதிர்பார்த்து காத்திருப்பியா"?
(நான் காத்திருந்தேன் கடலில் கதை"இருக்கின்றதா-இல்லையா"என்கின்ற எதிர்பார்ப்போடு!)
**
**
**
**
**
**
**
**
**
**
****
********
**********
********************

என்ன நாக்கு தொங்குதா?சரி சொல்லிடறேன்.விடமாட்டீங்களே!நாயகி துளசி அந்தளவுக்கு ஒன்னும் 'ஒர்த்'கிடையாது.படத்தில அந்த கிஸ்ஸு ஸீன் கூட கிடையாது."துளசி" எல்லாமே  'ஈஸ்ட்'போட்டு பொங்கவைத்த பாண் பாஸ்.அவங்க அக்காவ போல ஒண்ணிரண்டு படங்கள் நடிக்கலாம். அதற்க்கப்புறம் 'பெருக்க வைத்தவற்றை சிறுக்க'வைக்க முயற்ச்சிக்கலாம். பிரச்னையை முடித்துவிடுகிறேன்.சொன்னால் வல்கரா பேசிறான்னு சொல்லிடமாட்டீங்களே!

'இருக்கின்றது...ஆனால் செயற்கையாக...!!"
| படத்தில் கதை -துளசியில் சதை

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...