Wednesday, December 21, 2011

பெருசுக ஆடும் ஆட்டம்!!வைக்கிறேன் பாரு வேட்டு !!



குறிப்பு:இந்த பதிவில் பெரியவர்களை இந்த வலைப்பதிவின் ஓனர் கேவலமாக திட்டி இருப்பதால் அதை பொறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டோர் மட்டும் மேலே வாசிக்கவும்.

"*********** மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இந்து உயர்குலம்,அரச சேவையில் ஓய்வு பெற்ற மணமகளுக்கு நல்ல துணியை(சாரி துணையை) தேடுகின்றனர்.மணமகன் 55 க்கும் 60 க்கும் இடைப்பட்டவர் ,ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது."

கடந்த ஞாயிற்று கிழமை இலங்கையின் நாளிதழ் வீரகேசரியில் பிரசுரமாகி இருந்த விளம்பரம் தான் இது.நாட்டில மழை பெய்யாம போறது சுனாமி அடிக்கிறதுக்கெல்லாம் இது தான் காரணமாக்கும்.அம்பத்தஞ்சு அறுபது வயசில என்ன கலியாணம் வேண்டி கிடக்குது?பிற்க்காலத்தில,வயசு போன காலத்தில பாத்துக்க ஒரு துணை வேணும்னு இந்த "மண ஆச்சிக்கு" முன்னமே தெரியாதாமா?
அறுபது எழுபது வயசில கல்யாணத்த கட்டி நம்ம உசிர வாங்கிறது.இத பாத்திட்டு ஊர்ல சும்மா சாக கிடக்கிற கிழடுகளும் விளம்பரம் போட்டாலும் போடுங்கள்.அப்புறம் நம்மள மாதிரி யூத்'துக நிலைமை என்னாகிறது?



இதே ஒரு ஆச்சி விளம்பரம் போட்டிருந்ததால ஓகே.ஒரு அங்கிள் விளம்பரம் போட்டிருந்தா எப்பிடி போட்டிருப்பார்?

******** மாவட்டத்தை சார்ந்த இந்து உயர் குளம்,அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மணமகனுக்கு(?) அழகான,சிவந்த,மெல்லிய,படித்த,நல்ல பழக்கவழக்கம் கொண்ட,முக்கியமா முதியோரை கனம் பண்ணும் மணமகளை எதிர்பார்க்கின்றனர்.சீதனம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதையும் பாத்திட்டு சில வீணா போன பெருசுக தங்க பெண்பிள்ளைகளை கட்டி வைக்குங்கள்.மாப்பிளை ஊர் சுத்தமாட்டார்.கண்ட கிண்ட சகவாசம் இருக்காது.காவாலி பசங்க ப்ரெண்ட்ஸ்'சா இருக்கமாட்டாங்கன்னு.கொய்யாலே.
இதை எல்லாம் பாத்துகிட்டு என்ன பண்ணுவீங்க இளைஞர்களே?பொங்கி எழவேண்டாம்?இல்ல சும்மா தான் கேக்கிறன் இவளுகளுக்கெல்லாம் வெக்கமே கிடையாதா?அறுபது வயசில கலியாணம் கட்டிவினம்,மாப்பிள தோழன் தன்னுடைய பேரப்பிள்ளை சகிதமா மணமேடைக்கு வந்திருப்பார் .பொம்பிள்ளை தோழி ஆஸ்பத்திரியில இருந்து படுக்கையோட தூக்கி வந்திருப்பாங்க...இந்த கேடுகெட்ட பிழைப்பு தேவை தானா?

கொஞ்சம் இளமை தூக்கலா இருக்கட்டுமேன்னு தாலி கட்டி முடிஞ்சாப்புறம் "வை திஸ் கொலைவெறி டி" பாட்டு போட்டு ஒரு குத்தாட்டமும் ஆடினீங்கன்னு வையுங்க அங்கிள்ஸ் அண்ட் ஆண்டீஸ்,முதல் கொலை பண்றது நானா தான் இருக்கும் ஆமா!

முளைச்சு மூணு இல்லை விடலை உனக்கெல்லாம் காதல் கல்யாணம் கத்தரிக்காய் கேக்குதான்னு இனி எவனாச்சும் கேட்டு பாருங்க...மவனே..முளைச்சு முப்பத்தாறு கழுதை வயசான இந்த கிழடுகளே இந்த ஆட்டம் போடும்போது,நம்ம வயசில நாம சரியான வேலை தான் பண்றம்னு சட்டை காலர தூக்கிவிடுங்க மச்சான்ஸ்!!

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா நீங்க போயி அம்மா அம்மா எனக்கு கல்யாணம் செய்ஞ்சு வையம்மான்னு கேட்டா அம்மா சொல்லுவா இப்ப தான் அந்த தாத்தாவுக்கே ஆகி இருக்கு..உனக்கு இன்னும் நாற்பது வருஷம் இருக்கு கம்னு கிட என்பா...தேவையா?இல்ல தேவையாங்கிறேன்?






எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அம்பத்தஞ்சு வயசில கல்யாணம் கேக்குதாம்...

கலிகாலம் கலிகாலம்னு அடிக்கடி புலம்பிற பெருசுகளே,ப்ளான் பண்ணி நம்மள புலம்ப வைச்சிட்டீங்கள்'ளே!விடமாட்டான் இந்த இளைஞர்களின் காவலன்,இளைஞர்களின் ஆழ்வார்,இளைஞர்களின் மாப்பிள்ளை மைந்தன் சிவா!!(அப்பாடி எல்லாத்தரப்பையும் திருப்திப்படுத்தியாச்சு!!)

இனி எந்த பெருசாச்சும் உங்களை கேவலப்படுத்தினா என் ப்ளாக்'ஐ காட்டி நச்சுன்னு அவங்க வாயை மூட வையுங்க மக்களே!(அவங்களாச்சும் நம்மள வாசிக்கட்டும்).
இப்படி ஏதாச்சும் 'காலாவதியான கல்யாணம்' நடப்பதாய் கேள்விப்பட்டால் உடனே நம்ம சங்கத்துடன் தொடர்புகொள்ளுங்க.மிச்சத்தை நாங்க பாத்துக்கிறம்!!

சங்கத்து முகவரி:
'இளைஞர்கள் தன்மான படையணி"
தலைமையகம்:நம்பர்......
என்ன எங்கடா நம்பர காணோமேன்னு தலைய பிச்சிக்கிறாங்க பாருங்க பெருசுக.ஏன் வீடு தேடிவந்து போட்டுத்தள்ளவா?
சிக்கமாட்டான் இந்த மைந்தன் சிவா!!

"சில்வண்டு சிக்கும்...சிறுத்தை சிக்காதிலே!!!


Post Comment

36 comments:

Yoga.S. said...

வணக்கம்,மைந்தன்!நல்லாவே பொங்கியிருக்கிறீங்க!(பொங்கலுக்கு இன்னும் முழுசா மூண்டு கிழமை இருக்கே எண்டு விதண்டாவாதம் பேசப்படாது)என்னைப் போல யுத்துங்க?!உங்கட பாதையில குறுக்கை நிக்கிறது கவலையாத்தானிருக்கு.என்ன செய்யிறது?கலிகாலம்!ஹி!ஹி!ஹி!!!!!

Unknown said...

//
Yoga.S.FR said...
வணக்கம்,மைந்தன்!நல்லாவே பொங்கியிருக்கிறீங்க!(பொங்கலுக்கு இன்னும் முழுசா மூண்டு கிழமை இருக்கே எண்டு விதண்டாவாதம் பேசப்படாது)என்னைப் போல யுத்துங்க?!உங்கட பாதையில குறுக்கை நிக்கிறது கவலையாத்தானிருக்கு.என்ன செய்யிறது?கலிகாலம்!ஹி!ஹி!ஹி!!!!/



ஹிஹி பிரச்சனை புரிஞ்சுதா??ம்ம்ம்

Yoga.S. said...

"பெருசுக ஆடும் ஆட்டம்!வைக்கிறேன் பாரு வேட்டு"அப்பிடி தலைப்பு போட்டிருக்கலாமோ?

Unknown said...

ஓகே மாத்திவிட்டேன்..நன்றி ஐயா!

Yoga.S. said...

வெளி நாட்டிலை(வசதியா,புள்ளகுட்டியோட)இருக்கிறவையும்,வன்னியில இருக்கிற விதவையளுக்கு வாழ்வு குடுக்கிறமெண்டும் கிளம்பின கதையும் கேள்விப்பட்டிருப்பியள்.

Yoga.S. said...

அப்பிடிப் போட்டா ஒரு அட்ராக்க்ஷன்(attraction) இருக்கும்போல தெரிஞ்சுது!

சுதா SJ said...

ஹா ஹா...... இளையர்களின் மானத்தை காப்பாற்ற வந்த கொழும்பு பெண்களின் கனவுக்கண்ணன் மைந்தன் வாழ்க... வாழ்க....

சுதா SJ said...

மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இந்து உயர்குலம்,அரச சேவையில் ஓய்வு பெற்ற மணமகளுக்கு நல்ல துணியை(சாரி துணையை) தேடுகின்றனர்.மணமகன் 55 க்கும் 60 க்கும் இடைப்பட்டவர் ,ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது<<<<<<<<<<<<<<<

யோவ் இது நிஜமாத்தான் நடந்திச்சா...?? அவ்வவ்

சுதா SJ said...

எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் <<<<<<<<<<<<<<<<<<

எதை சொல்லுறீங்க ?? ஓ அதையா??????? ஹீ ஹீ

சுதா SJ said...

எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் <<<<<<<<<<<<<<<<<<

பாஸ் அவங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நம்மள மாதிரி அழகு வயசு பசங்களுக்கு "நின்றாலே" போதும்தானே.... நாம என்ன இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டோமா??ஹா ஹா

சுதா SJ said...

"சில்வண்டு சிக்கும்...சிறுத்தை சிக்காதிலே!!!<<<<<<<<<<<<<<

இல்லையே.... இந்த சிறுத்தை எங்கயோ வசமா மாட்டி இருக்கே..... ஆதாரம் கூட நம்மட்ட இருக்கு பாஸ். :)

சுதா SJ said...

மைந்தன் ரிட்டேன்.... காமெடி சரவெடி ஆரமபம்ய்யா ஆரம்பம்

Unknown said...

ரசிக்கவைத்த விளம்பரம்...

கார்த்தி said...

அடங்கொக்கா மக்கா ஒரு விளம்பரத்த பாத்து பதிவா?
அவங்களுக்கு என்ன பிரச்சனையோ? யாருக்கு தெரியும்

காட்டான் said...

போயா போ... உனக்கு பொறாமை உங்கள ஒருத்தியும் ஏறெடுத்து பாக்கலைன்னு..

காட்டான் said...

Blogger துஷ்யந்தன் said...

எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் <<<<<<<<<<<<<<<<<<

பாஸ் அவங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நம்மள மாதிரி அழகு வயசு பசங்களுக்கு "நின்றாலே" போதும்தானே.... நாம என்ன இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டோமா??ஹா ஹா

ஏன்யா நீங்க ஹெல்ப் பண்ண போறீங்க தாத்தா "பொல்ல" என்னத்துக்கு வைச்சிருக்கார்????

rajamelaiyur said...

Super boss

பி.அமல்ராஜ் said...

கலக்கல் பதிவு பாஸ்.. மைந்தன் சிவாவா கொக்கா? எதுக்கும் கொஞ்சம் அலேட்டா இருங்க பாஸ்.. உங்களுக்கு எதிரா பெருசுக கொஞ்சம் சேர்ந்து கடப்பாரையோட வந்திடப்போகுதுகள்.

//இளைஞர்களின் காவலன்,இளைஞர்களின் ஆழ்வார்,இளைஞர்களின் மாப்பிள்ளை மைந்தன் சிவா//.

இன்னா பாஸ் இது. இவ்வளவு பெரிய ஆளுக்கு இவ்வளவுதானா அடை மொழி? இன்னும் ரெண்ட கூட்டுங்க பாஸ். இல்லேன்னா வரலாறு உங்கள கேவலமா கலாய்க்கப் போகுது...

எப்பூடி.. said...

இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்பதற்காக சொந்த செலவில் வார பத்திரிகையில் விளம்பரம் செய்ததே மைந்தன் சிவாதான் என்று கெகலிய ரம்புக்கல அவர்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன :p

Unknown said...

//எப்பூடி.. said...
இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்பதற்காக சொந்த செலவில் வார பத்திரிகையில் விளம்பரம் செய்ததே மைந்தன் சிவாதான் என்று கெகலிய ரம்புக்கல அவர்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன :p
December 21, 2011 10:18 PM //

ஹிஹி இப்போ எதுக்கு அந்த மனுசன இழுக்கிறீன்கப்பா!

தர்ஷன் said...

யாரு வேணா யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணலாம் தப்பில்லை. மைந்தன் சிவா மாதிரி ஒரு இளசு காய்ஞ்சு போயிருக்கையில் பெருசுக எல்லாம் பொல்லைத் தூக்கிகிட்டு கல்யாணம்னு கிளம்பின்னா
ஞாயமான ஆதங்கம் சிவா I totally agree with you

ஆகுலன் said...

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா நீங்க போயி அம்மா அம்மா எனக்கு கல்யாணம் செய்ஞ்சு வையம்மான்னு கேட்டா அம்மா சொல்லுவா இப்ப தான் அந்த தாத்தாவுக்கே ஆகி இருக்கு..உனக்கு இன்னும் நாற்பது வருஷம் இருக்கு கம்னு கிட என்பா...தேவையா?இல்ல தேவையாங்கிறேன்? ///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

தனிமரம் said...

பெருசுங்க சாபம் வேண்டாம் மைந்தன்சிவா இப்ப காசுக்காரங்களே இவங்க தானாம்!

KANA VARO said...

யோவ்! பல்லிருக்கிறவன் பகோடா தின்னுறான். உனக்கென்ன வந்திச்சு மைந்தா..

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பரே முதல் பதிவே அருமையாக ரசிக்கும் அருமையாக எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்.தொடர்ந்து பதிலுலகில் கலக்க வாழ்த்துக்கள்

ஓ ஓ சாரி சாரி நீங்க பழய பிரபல பதிவர் தானே மறந்தே போயிடுச்சி அதான் புதிய பதிவருக்கு கமண்ட் போடும் நினைப்பில் போட்டுட்டன் அடிகடி பதிவை போடும்யா இல்லை என்றால் பதிவுலகில் மைந்தன் என்றால் யார் என்று கேட்கும் நிலைவரலாம் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

////சங்கத்து முகவரி:
'இளைஞர்கள் தன்மான படையணி"
தலைமையகம்:நம்பர்......
என்ன எங்கடா நம்பர காணோமேன்னு தலைய பிச்சிக்கிறாங்க பாருங்க பெருசுக.ஏன் வீடு தேடிவந்து போட்டுத்தள்ளவா?
சிக்கமாட்டான் இந்த மைந்தன் சிவா!!

"சில்வண்டு சிக்கும்...சிறுத்தை சிக்காதிலே!!!////

ஹி.ஹி.ஹி.ஹி...................... மாப்ள பழய லொள்ளு இன்னும் உன்னைவிட்டு போகவில்லை ம்ம்ம் அதேல்லாம் ஒரு காலம் ஓட்டவடையுடன் ஹன்சிகாவுக்காக சண்டை போட்டது எல்லாம் பழய மைந்தனை பதிவுலகில் எதிர்பாக்கிறம்யா?

நிரூபன் said...

வணக்கம் மச்சி!
நியாயமான ஆதங்கத்தினைப் பதிவிட்டிருக்கிறீங்க.

நிரூபன் said...

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா நீங்க போயி அம்மா அம்மா எனக்கு கல்யாணம் செய்ஞ்சு வையம்மான்னு கேட்டா அம்மா சொல்லுவா இப்ப தான் அந்த தாத்தாவுக்கே ஆகி இருக்கு..உனக்கு இன்னும் நாற்பது வருஷம் இருக்கு கம்னு கிட என்பா...தேவையா?இல்ல தேவையாங்கிறேன்?
//

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

இனிமே நமக்கெல்லாம் கல்யாணம் ஆகாது என்பது உண்மை தான் பாஸ்,.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இப்படியே போனால் ஐம்பது வயசில தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க!

இளைஞர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறது இப் பதிவு., சமூகத்தில் முதியவர்களுக்குத் தம் இளம் பிள்ளைகளைத் தாரை வார்க்கும் பெற்றோரிற்குச் சாட்டை அடியாகவும் இப் பதிவு அமைந்திருக்கிறது.

கோகுல் said...

பல்லிருக்கறவன் பகோடா சாப்பிடுரான்னு கேள்விப்பட்டிருக்கேன்.பல்லே இல்லாதப்ப எதுக்கு பகோடா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மைந்தா... எப்படி இப்படி ஒரு பதிவு? நிரூபனுக்கு ஆதரவா இந்த பதிவு?


வாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

Mathuran said...

யோவ் மைந்தா.. இப்பவாவது வாழ்க்கைய அனுபவிக்கனும் எண்டு ஆசைப்பட்றாங்களே... விடுங்கய்யா

சென்னை பித்தன் said...

கலக்கல்!

அம்பலத்தார் said...

அடேங்கப்பா என்னமா திங்பண்ணுறிங்கப்பா யூத்ஸ். கலக்கிட்டிங்க மைந்தன்.

அம்பலத்தார் said...

//எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையா//
அப்புறம் எதுக்கப்பா கல்யாணம்?

Related Posts Plugin for WordPress, Blogger...