Tuesday, February 5, 2013

அனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..!!



          

கால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா...!

பட்டாபட்டி ஆண்ட்ராயர்,பனியன் சகிதமாக கிளு கிளுவென அனுஷ்காவின் கால்களை ரசித்து எப்பம்விடக்கூடிய மாதிரி,அனுஷ்கா காலடியில் மனோ பாலா...!

அனுஷ்காவின் ஒரு கை மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.மனோ பாலாவின் இரு கைகளுமே கட்டப்பட்டிருக்கின்றன.பாவம் மனோ!வெண்ணைக்குடமே பக்கத்திலிருந்தாலும்,கைகள் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்துவிட முடியும்...!

"என்னோட பாடிய பார்க்காதை "ப்ரெய்ன்"னை பார் என்று பன்ச் அடிக்கும் மனோ பாலா,தான் ஒரு ஐடியா குடோன் என்பதை நிரூபிக்கிறார்.எப்படி என்பதை திரையில் காணுங்கள் என்று கூறி ஆவலாக வந்த உங்கள் வாயில் அல்வா கொடுக்க மனம் இடம்தரவில்லை எனக்கு.

அனுஷ்கா கால்களை அப்படியே பார்த்தால் யாருக்கு தான் கிறக்கம் ஏற்படாது!படத்தில் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.நேரில் பார்த்த மனோ பாலா?வெட்கத்தை விட்டு அனுஷ்காவிடம் "சட்டு புட்டின்னு உன்னோட காலை என்னோட பனியனுக்க விடு" அப்பிடின்னு ஒப்பினா கேட்டிடுறார் மனோ!ஏது பனியனுக்க காலா????


என்னடா இதுவரை தமிழ் சினிமாவில் ஆம்லெட் போட்டிருக்கிறார்கள், பம்பரம் விட்டிருக்கிறார்கள் ஏன் பட்டாசு கூட போடுவதை தான் பார்த்திருக்கிறோம்.பொதுவாக இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டி இப்படியான விஷயங்களை வைத்து தான் அளவிடப்படுகிறது.ஆனால் இவை எல்லாமே ஹீரோயின்களுக்கு ஹீரோக்களால் செய்யப்பட்டவை.காமெடியன்கள் செய்ததே கிடையாது.அதுவும் அனுஷ்கா மாதிரி ஹீரோயின் போயி மனோ பாலாவின்ட பனியனுக்க....ச்சா சா நடக்கவே நடக்காதின்னு தான் நானும் நெனைச்சேன் பாஸ்..ஆனால் நடந்தது??

பெரும்பாலான பெண்கள் போலவே ஒன்றும் ஜோசிக்கவில்லை அனுஷ்கா(அவளும் பெண் தானே!!)., மனோ பாலா பனியனுக்குள் காலை விட்டால் மனோ பாலாவின் உசிர் போவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூட கருணை வரவில்லை.சரி அந்த நினைப்பு வராத வரையில் நமக்கு சந்தோசமே என்று காத்திருக்க,ஏற்கனவே தொடை தெரிய போட்டிருந்த குட்டை பாவாடையை கூட மறந்து,கீழே இருந்த மனோ பாலாவின் பனியனுக்குள் தனது காலை தூக்கி போடுகிறார் அனுஷ்கா!(விடுகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள், கிளுகிளுப்பாக இருக்கும்!)

உள்ளே விட்டு குடைய,வெளியில் கால்விரலால் தடவ...மனோ பாலா நெளிய கூனி குறுக...பார்க்கிறவன் கடுப்பிலே கருக...என்று மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஸீன் அது.இயக்குனர் சுராஜ்'க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.எங்களை விட மனோ பாலா தான் பாராட்டி தீர்த்திருப்பார்.ஏன் எக்ஸ்ட்ராவா அமவுண்ட் செட்டில் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை !!

சினிமாவுக்குள் நடிக்க வந்ததற்கு இந்த சீனில் நடித்த பின்னர் தான் முழுப்பயன்,பிறவிப் பெரும்பயன் அடைந்திருப்பார் மனோ பாலா என்று அடித்து கூறலாம்.ஏன்னா படத்தின் ஹீரோ கார்த்திக்கே இந்தளவு நெருக்கமான ஸீன் படத்தில் இல்லைன்னா பார்த்துக்கோங்க!!

           

அலெக்ஸ் பாண்டியன் பற்றி..!

அலெக்ஸ் பாண்டியன் படம் வெளிவர முன்னரே மசாலா ஹிட் அடிப்பதற்கான அனைத்துவித தகுதிகளையும் படம் கொண்டிருந்ததாக கருதியிருந்தேன்!காரணம் சிம்பிள்.இதுவரை தோல்விப்படமே கொடுக்காத ஹீரோ(சகுனி அவரேஜ்),சந்தானம் என்கின்ற காமெடி கிங், "கார்த்திக்-சந்தானம்" ஜோடி கல்லா கட்டிய படங்கள் பல! அப்புறம் ஹாட் ஹீரோயின் அனுஷ்கா,மசாலாவுக்கே உருவான இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஏற்கனவே வந்து ஹிட் ஆனா "பேட் பாய்"பாடல்(ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒருதடவை மீள மீள ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது), பிரமாண்ட ப்ரோமோசன் நடவடிக்கைகள்-பிரமாண்ட பாடல் வெளியீட்டு நிகழ்வு என்பன படம் நிச்சயம் வெற்றி தான் என்கின்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தது எனக்கு! 

படம் வெளிவந்தது முதல் கொண்டு வெளிவந்த விமர்சனங்களை வைத்து பார்த்தபோது அல்டிமேட் "சுறா","வில்லு" மற்றும் "ஏகன்","ஆழ்வார்" போன்ற படங்களை எல்லாம் மறக்க வைக்க கூடிய அவதார படம் வந்துவிட்டதாகவே அனைவரும் பேசிக்கொண்டனர். சுறா படத்தை முண்டியடித்து போய் முதல் ஷோ பார்த்த அனுபவம் இருந்தமையால் இதற்க்கெல்லாம் பயப்பிடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.ஆனால் தியேட்டர் போய் பார்க்க எனக்கும் பிடித்திருக்கவில்லை;என்னுடன் வருவதற்கு நண்பர்கள் எவருமே தயாராக இருக்கவும்மில்லை.ஏற்கனவே அவர்கள் அனைவரினது பேச்சிலும்,மூச்சிலும்  'ப்ளட்' வந்துகொண்டிருந்ததை பார்த்த போது அவர்கள் ஏற்கனவே பாண்டியனை பார்த்துவிட்டனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது!அப்புறம் என்ன,வீட்டில் 'சிடி' தான்!!



படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்த ஒரே சீனையும் மேலே சொல்லியாகிவிட்டது.வேறு ஏதாவது சொல்லியாகணுமே என்று கேட்போருக்கு:

*தெலுங்கு படங்கள் போன்றது என்று கூறியிருந்தனர் பலர்.ஆனால் அவர்கள் கூட எதோ சற்று நம்ப கூடிய வகையில் காட்டுவார்கள்.பத்தடி தூரத்தில்,பத்து பஜரோ ரக வாகனத்தில் அம்பது பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வர,அலெக்ஸ் பாண்டியனும் அனுஷ்காவும் ஓடி தப்புவதை பார்க்கும் போதே ரவுடிகள்  மேல இருந்த மதிப்பு சுத்தமா போச்சுயா எனக்கு!இனிமேல் நானும் யாராவது ரவுடியோட போயி வம்புக்கு இழுக்கலாம்னு இருக்கேன்..யார் வர்றீங்க?

*ஆரம்பத்தில கொஞ்சம் கலகலப்பாக இருந்தாலும் பின்னாடி பெரும்பாலான சந்தானம்-தங்கச்சிகள் மூணு பேர்-கார்த்தி அடிக்கும் லூட்டி கடுப்பேத்துது.செம போர்.அதில கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் என்று பார்த்தால் சில காட்சிகள் கூட... ஒரு காட்சியில் தங்கச்சிகளை குனிய வைத்து...(..!!? )எதோ விளையாட்டு விளையாடுவார் கார்த்தி.வழமை போல சந்தானம் போய் தடுக்க,சரி நீ குனி அவங்களுக்கு பதிலாக என்று சந்தானத்தை குனிய வைத்து.... மிகுதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

**வில்லன்கள் துரத்த,ஒரு வாகனத்தில் அலெக்ஸ் சந்தானம்,அனுஷ்காவுடன் பறக்கிறார்.இடையே ஒரு பெரிய மதில்(தூண்)வருகிறது.அப்படியே பாய்கிறார் வாகனத்துடன்.பாருங்கள் எந்த சேதாரமின்றி மதிலை உடைத்துக்கொண்டு மூவரும் வந்து இறங்குகின்றனர் மதிலுக்கு மறுபக்கம்!இதில் ஏற்கனவே வாகனத்தின் முன்,பின் கண்ணாடிகள் உடைந்திருந்தன.வாகனத்தின் முன்னாடி கார்த்தி,சந்தானம் இருந்தார்கள். நேரே வந்த மதில் கற்கள் இருவரையும் தொட்டு தடவிவிட்டு சென்றமையால் காயமே இல்லை இருவருக்கும்!

                                (அந்த மயிர் குச்-குச்செறியும் காட்சி இது தான் ) 

** துப்பாக்கி பட க்ளைமாக்ஸ்'ல் விஜய்யின் கையை அவிழ்த்துவிட்டு அடி பார்ப்போம் உண்மையான ஆம்பிளையாக இருந்தால் என்று ஒரு சீன் வருமே?அவிழ்த்துவிட்டு அடிவாங்கி வில்லன் இறப்பது போன்ற காட்சி?அது துப்பாக்கியில் வரும் போதே அதிகமாய் கலாய்க்கப்பட்டது ஞாபகமிருக்கலாம்.அதே க்ளைமாக்ஸ் தான் இங்கும்!அது தான் சன்டிவியில் பாஸ்கி சொல்வார்,மிக அருமையான,புதுமையான ஐடியா,இதை போல எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள் க்ளைமாக்ஸ் என்று!இனிமேல் "உண்மையான ஆம்பிளையாக இருந்தால் அவிழ்த்து விடு அடி பார்க்கலாம்"என்று யாரும் கேட்டால் ஏன் கெஞ்சினால் கூட வேண்டாம் பாஸ் போயிராதீங்க..உங்களுக்கு தான் ஆபத்து..!!  

படத்தின் ப்ரோமோ பாடல் "பேட் பாய்ஸ்" படம் வெளிவர முன்னமே வெளியாகி ஓரளவுக்கு ஹிட் ஆகியிருந்தாலும் கூட,அது படத்தில் இடம்பெறவில்லை.படத்தில் இடம்பெற்ற மிகுதி அத்தனை பாடல்களும் சுமார் ரகம் என்று தான் கூற முடியும்.ஒன்று கூட தேறவில்லை.மசாலா படம் ஒன்றுக்கு பாடல்கள் ஹிட்டாக அமைவது முக்கியமான விடயம்.விஜய்யின் பல மசாலாக்கள் ஓடியதற்கு பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது முக்கிய காரணம்.இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது வழமையான கடமையை செய்யவில்லை போல் தான் தெரிகிறது.அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மசாலா படங்கள் தான்.அவற்றிலும் சொதப்பலாமா!

                       

இவ்வளவும் தாண்டி படத்தின் கதை என்ன என்று கேட்கும் மகராசன்கள் படத்தின் முதல் பதினைந்து நிமிட காட்சியை மட்டும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.அப்புறம் தெரியும்யா படம் முழுசா பார்த்தவனோட வலி...!!

குறிப்பு:பதிவின் தலைப்புக்கு காரணம் அந்த பாழாப்போன இயக்குனர் சு.......னா பானா சுராஜ் தான். "பிட்டு" பிரியர்கள் இதற்க்கு எதிராக தடையுத்தரவு கேட்டு கோர்ட்டு கேஸுன்னு போயிராதீங்கப்பா!



Post Comment

Monday, January 14, 2013

பவர்ஸ்டாரும் பரதேசி நாய்களும்..!




  
இது கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை பேஸ்புக் இல் பகிர்ந்துகொண்ட  என்னுடைய  நிலைத்தகவல்கள்;இரண்டுமே திருட்டை பற்றியது..!

||ஒருவரின் உழைப்பை திருடுவதென்பது பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் நடந்தேறிவரும் ஒரு விடயம்.ஒருவரின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அதற்கேற்ற வெகுமதியோ,இல்லை 'இதற்கு சொந்தக்காரர் இவர்தான்"என்று கிரெடிட் கொடுப்பதையோ பலர் விரும்புவதில்லை.பேஸ்புக்கில் ஒருவருடைய நிலைத்தகவலை திருடி,உரியவரின் பெயர் குறிப்பிடாது தமது எண்ணம்போல பகிர்வதில் ஆரம்பித்து கீச்சுக்கள், வலைப்பதிவுகள்,பத்திரிகை முதல்கொண்டு ஊடகத்துறையிலும் இது சாதாரணமாக நடந்தேறிக்கொண்டே வருகிறது.உணர்ந்தே செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா என்று கூட ஜோசிக்கமுடிவதில்லை.வயதுக்கு வந்தோர் என்று மார்தட்டிகொள்வதை விடுத்து, அந்த வயதுக்கேற்ற செயல்களை செய்கிறோமா என்று இவர்கள் சிந்திக்கவேண்டும்.

உங்களது சொந்த ஆக்கமில்லாமல் வேறு யாராவது எழுதிய ஆக்கங்களையோ,பார்த்ததில் பிடித்தவற்றையோ பகிர தோன்றினால் அவற்றுக்கு சொந்தமானவரின் பெயரை ஒருமூலையிலேனும் குறிப்பிடுங்கள்.உங்களுடையதை,உங்கள் அனுமதியில்லாமல்,உங்கள் பெயர் குறிப்பிடாமல் வேறு எங்கையாவது பார்க்கும் கணத்தில் தான் அந்த வலியை உங்களால் உணரமுடியும்.||

||||"சமீபத்தில் தங்களின் blog பார்க்க நேர்ந்தது. தங்களின் கீழ்க்கண்ட post - ல் உபயோகபடுத்தபட்டிருக்கும் படங்கள் அனைத்தும் சென்னை ******* ***** மற்றும் சென்னை **** நண்பர்கள் மதுரை பேரணியில் கலந்துகொண்டபோது எடுக்கபட்டது, இவை அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி தாங்கள் blog - ல் உபயோகபடுத்தபட்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படங்களை உடனடியாக நீக்குமாறு கேட்டுகொள்கிறோம். இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும். தங்களின் இந்த தவறான செயலால் அப்படங்களில் இடம்பெற்ற பெண்கள், ஆண்களின் வாழ்கையில் பாதிப்பு ஏற்படுவதை தாங்கள் உணர வேண்டும்

"இணைய தேடியந்திரத்தில் பரவிக்கிடக்கும் படங்களை உபயோகிப்பதில் கூட சில பிரச்சனைகள் இருப்பதை இப்போது தான் உணர்கிறேன். ஓரினச்செயற்க்கையாளர்கள் பற்றிய பதிவில் நான் இணையத்தில் எடுத்து உபயோகித்த படங்கள் சம்பந்தமாக சென்னையிலிருக்கும் ஒரு "நிறுவனத்தின்"இயக்குனர் எனக்கு அனுப்பியிருந்த மெயிலின் ஒருபகுதி தான் இது.இனிமேல் இவற்றிலும் அவதானமாய் இருக்கவேண்டும் நான்.கொய்யாலே இனி என்னோட விஷயங்களை ஆட்டயப்போட்டு போடுற ஒவ்வொருத்தருக்கும் நானும் மெயில் அனுப்பலாம்னு இருக்கேன் ;)||||

--------------------------------------
இது நேற்று நான் பவர் ஸ்டார் பற்றி பகிர்ந்துகொண்டது:


தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்,விமர்சனங்களை எல்லாம் மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் நிதானமும் இருந்தால் யாராக இருந்தாலும்,அவர்கள் நினைத்ததை ஒருநாள் அடைந்துவிட முடியும் என்பதற்கு மிக சரியான நடைமுறை உதாரணம் பவர்ஸ்டார்.


ஆரம்பத்தில் ஒரு கோமாளியாக பார்க்கப்பட்டு பின்னர் சிலகாலம் செல்ல,காமெடியனாக பார்க்கப்பட்டு இன்று நிஜமாகவே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்டார் ஆக உருவெடுத்திருக்கிறார் என்றால் மேலே கூறிய பண்புகள் தான் காரணம்.கோமாளியாக பார்த்த சக நடிகர்கள் தொடக்கம் அவரை "நீயாநானா"நிகழ்வுக்கு அழைத்து இன்னமும் கோமாளியாக்க முயன்ற கோபிநாத் வரையில் எவருமே பவர்ஸ்டார் இந்த இடத்தை பிடிப்பார்,இத்தனை ரசிகர்களை பெறுவார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். 

2011 இல் பவர்ஸ்டார் என்றால்,அவர் யார் என்று கெட்டவர்கள் தான் அனைவரும்.ஆனால் இன்று இவரை தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது.ஜெயா டிவி,சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கை உயர்த்திக்க பவர்ஸ்டாரை சிறப்பு அதிதியாக அழைத்துக்கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஷங்கரின் கடல் படத்தில் ஒப்பந்தமான பவர், நேற்று வெளியான "கண்ணா லட்டு திங்க ஆசையா" படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் பட்டை கிளப்பியிருக்கிறார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் பல ரசிகர்கள் கிடைத்திருப்பது கண்கூடு.

எச்சந்தர்ப்பத்திலும் மாறாதது அவரது புன்சிரிப்பு தான்.(அது தான் எனக்கு பிடித்ததும் கூட.(Mister Cool !)) நிகழ்வுகளில் வந்து "என் இனிய ரசிகப்பெருமக்களே" என்று கூறும்போதோ,முகத்துக்கு நேரே இழிவாக எவராவது பேசும் போதோ,மாறாதது என்னமோ அந்த வசீகர புன்னகை தான்.தனக்கு ஐம்பது லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அன்று கூறியது கேட்டு சிரித்தவர்களில் பலர் இன்று இவர் ரசிகர்களாகி இருக்கிறார்கள்.ஐம்பது லட்சம் ரசிகர்களை பெறுவேன் என்கின்ற தன்னம்பிக்கையை நிகழ்த்தி காட்டியிருக்கும் பவர் ஸ்டாரின் அந்த துணிச்சல் எத்தனைபேருக்கு வரும்??

சினிமாவுக்குள் வந்ததற்கு காரணம் என்ன என்பதற்கு "புகழ்" என்பதே அவரின் பதிலாக இருந்தது.நினைத்ததை இருவருடங்களுக்குள் சாதித்துவிட்டார் பவர் ஸ்டார்.ஒவ்வொருத்தரிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விடயம் இருக்கும்.பவர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக்கொள்ள பலவிடயங்கள் இருக்கின்றன.அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையற்றதை விட்டுவிடுங்களேன்!!

#பவர்ஸ்டார்-நிகழ மறுத்த அற்புதம் இல்லை-நிகழ்ந்த சரித்திரம்!!

என்னுடைய பேஸ்புக்கில் நேற்று பகிர்ந்துகொண்டதை இங்கு சென்று உறுதிப்படுத்திகொள்ளலாம்.

------------------------------------------------
இதை அப்படியே காப்பி பண்ணி என்னுடைய பெயரை எங்கும் குறிப்பிடாமல் "அவ்ளோ பெரிய காமெடி இல்லை இது" என்கின்ற பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்,நான் பகிர்ந்த மறு கணமே.ஷங்கரின் கடல் படத்தில் என்று தவறுதலாக எழுதியிருந்தேன்.அது ஷங்கரின் "ஐ" படம்.அந்த தவறையும் அப்படியே ஒப்புவித்திருக்கிறார்கள்.

எத்தனை லைக்ஸ் எத்தனை ஷேர்ஸ் என்று பாருங்கள். எனது நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலர் கூட அங்கு லைக் செய்திருக்கின்றனர்.யாரை சொல்லி நொந்துகொள்வது? 




இந்த பேஜ் அட்மின் பெயர் "சிம்பு ரசிகன் டிஷாந்தன்". 

நானும் எனது நண்பர்கள் புவிகரன்,ஜீவதர்ஷன்,அஹ்மத் ஷாஜ் போன்றோரும் அவர்களின் பதிவுக்கு சென்று உரிமை கோரி போர்க்கொடி தூக்கிய பின் சில மணி நேரங்களின் பின்னராக எனது பெயர் "via மைந்தன் சிவா" என்று இணைக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எமது எக்கவுண்ட் மூலம் நிலைத்தகவல் பதிந்தால் எடிட் செய்ய வசதி கிடையாது.ஆனால் பேஜ் அட்மின்களுக்கு அந்த வசதி இருக்கிறது.அதன் மூலம் என் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

என்னுடையதை அவர் களவாடிவிட்டார் என்று அடிபடுவதற்க்காகவோ,என்புகழ் பரப்பவோ இதனை கூறவில்லை.என்ன தான் எடுத்து கூறினாலும் இவர்கள் திருந்துவது போன்று தெரியவில்லை.காப்பிரைட்ஸ் என்பது சமூக வலைத்தளங்களில் முக்கியமாக பேஸ்புகில் சாத்தியமில்லாதது.எவ்வித பாதுகாப்பும் கிடையாது.ட்விட்டரில் கூட ட்வீட்களை ப்ரொடெக்ட் பண்ணி வைக்கும் வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.அதனால் பதிவின் சொந்தக்காரருக்கு தெரிவிக்காமலும்,அவருடைய பெயரை குறிப்பிடாமலும் காப்பி பேஸ்ட் பண்ணும் நடவடிக்கைகள் தாராளமாக இடம்பெற்று வருகின்றன.சொந்தமாக சிந்தித்து பதிவு போட தெரியாத,சுயபுத்தி இல்லாத,கற்பனை வளம் இல்லாத,வெட்கம் மானம் ரோஷம் எதுவுமற்ற,சொல்புத்தி கேட்காத,சுயபுத்தி கூட இல்லாத "நாய்கள்"தான் இப்படியான காரியத்தை செய்வார்கள் என நம்புகிறேன்.ஆயிரம் பிரச்சனைகளை தாண்டி கல்யாணம் செய்பவன் ஒருவன்,முதலிரவுக்கு செல்பவன் இன்னொருவன் என்பது போல எழுதுவது ஒருவன் ஆனால் காப்பி பண்ணி பகிர்ந்து அதன் க்ரெடிட்ஸ் முழுவதையும் பெற்றுக்கொள்வது இன்னொருவனாக இருக்கும்.நாம் எழுதிய பதிவு இன்னொருவனால் ஷேர் செய்யப்பட்டு(அனுமதி இன்றி,நமது பெயர் கூட இன்றி) அங்கு இருநூறு ஷேர் நானூறு லைக்ஸ் வாங்குவதை பார்க்கையில் உங்களுக்கு புரியக்கூடும் அந்த வேதனை.


தேவையில்லாமல் டாக் செய்யவேண்டாம் என்று எத்தனையோ தடவை கூறியும் டாக் பண்ணுபவர்களை போன்றவர்கள் தான் இவர்களும்.இரு தரப்பையும் திருத்த முடியாது.ஒரு சமயம் டாக் பண்ண வேண்டாம் என்று நிலைத்தகவல் பகிர்ந்திருந்த அன்றே சிலர் டாக் பண்ணியிருந்தார்கள்.இவர்களை நினைத்து சந்தோசம் தான் கொள்ளமுடியும்!!வெட்கம்கெட்ட ஜென்மங்கள்.பேஸ்புக் பதிவுகளுக்கும் காப்பிரைட்ஸ் அல்லது ப்ரோடேக்சன் சக்கர்பெர்க் கொண்டுவந்தால் தான் இவர்கள் தொல்லையை நிறுத்த முடியும்.

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே...இது என்னுடைய இருநூற்றி ஐம்பதாவது பதிவு :) 

Post Comment

Thursday, December 20, 2012

கற்பழிப்புக்கு உண்மையான காரணம் என்ன?..!




தந்தை மகளை வன்புணர்வு செய்வது,சொந்தங்களுக்குள்ளேயே சீரழிப்புகள், சிறுமிகள் மீதான வன்முறைகள் என்று பெண்கள் மீதான வன்முறை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.அதனை சில பெண்ணியவாதிகள் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த ஆண் சமுதாயமே வக்கிரம் கொண்டவர்கள், அடக்குமுறை கொண்டவர்கள் என்று தங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவிழ்த்துவிடுகின்றனர். வெறி கொண்ட காமுகர்களை மற்றைய ஆண்களால் அடக்க முடியவில்லை,இவர்களும் அவர்களுக்கு நிகரே என்று சாதாரண பெண்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கி சமுதாய கட்டமைப்பில் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றனர் இந்த பெண்ணியவாதிகள்.சரி அவர்களை பற்றி பின்னால் ஒரு பதிவில் பார்ப்போம்.

இருபத்தி மூன்று வயதான கல்லூரி மாணவி ஒருவரை இந்திய தலைநகர் டெல்லியில் ஓடிக்கொண்டிருந்த பேரூந்தில் பலர் ஒன்றுசேர்ந்து கற்பழித்து,தலையில் இரும்பு கம்பியால் தாக்கி,உடல் முழுவதும் காயங்களுடன் விட்டு சென்றிருக்கின்றனர் சில காமுகர்கள்.பலத்த சர்ச்சையை தோற்றுவித்துக்கொண்டு,இந்திய பாராளுமன்றம் வரை பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது.உயிருக்கு போராடும் குறித்த மாணவியை சோனியா காந்தி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.இது டெல்லியில் நடந்தமையால் இந்தளவு தாக்கம் செலுத்தியிருக்கிறது.இதுவே வேறு சிறு மாநிலங்களாக இருந்திருந்தால் வெறும் பத்திரிகை செய்தியுடன் முடிவடைந்திருக்கும்.இந்தியா எங்கு செல்கிறது,வல்லரசாகுமா என்று ஆளுக்காள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,சத்தமே இல்லாமல் இந்தியா இங்கு தான் சென்றுகொண்டிருக்கிறது என்று "மொபைல் காங் ரேப்" மூலம் காட்டியிருக்கின்றனர் சில காமுகர்கள்!


இந்தியன் எக்ஸ்போ நெட் (Indianexponet) பத்திரிகையை நிறுவியோரில் ஒருவரும், இந்திய சமூக,அரசியல் விடயங்களை  எழுதிவருபவருமான இஷான் மோகன் (Ishaan  Mohan ), இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளுக்கான காரணங்களாக பத்து விடயங்களை தனது பத்திரிகையில் எழுதியிருந்தார்.அதனை தமிழாக்கி வெளியிடுகிறேன்,காரணம் அந்த பத்து காரணங்களையும் பார்க்கும் போது நிச்சயம் அவை உங்களுக்கு எதோ ஒருவகையில் மனதை உறுத்தக்கூடும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு
உயர் வாழ்க்கைத்தரமுள்ள குடும்பங்கள்,சாதாரண,கீழ்நிலை வாழ்க்கைத்தரம் கொண்ட குடும்பங்கள் என்று பல பொருளாதார வேறுபாடு கொண்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்த சமூகமாக தான் எமது சமூகம் இருந்துகொண்டிருக்கிறது.அடைய முடியா எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள கற்பழிப்பு ஒரு வழியாக பலருக்கு தென்படுகிறது.ஒரு தரப்பு மறு தரப்பை தாக்க/அடைய பெண்கள் தான் இலகுவான இலக்காக மாறிவிடுகின்றனர்.

ஒருதடவை ரேப் செய்பவன் அத்துடன் நிறுத்துவதில்லை-பிடிபடாதவரையில்!

ஒருவன் ஒருதடவை கற்பழிப்பவன் அத்துடன் நின்றுவிடாமல் இரண்டாவது,மூன்றாவது என்று தனது சாதனை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான்.கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களில் பலர் அதுபற்றி முறைப்பாடு செய்வதிலோ,குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலோ முனைப்பு காட்டுவதில்லை காரணம்,தமது பெயர் அடிபடும் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற பயத்தினால்.பெரும்பாலான வழக்குகள் உடனே முடிவடைந்துவிடுவதில்லை,காலம் காலமாக இழுபடும்.இப்படியான காரணங்களால் ஒதுங்கும் பெண்கள்,கற்பழிப்பவன் மேலும் தனது கைங்கரியத்தை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

சில சமயங்களில் இப்படி "பொது"வுக்கு பயந்த,குடும்ப மானம் மரியாதை என்று பயப்பிடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், இந்த காமுகர்களின் விருப்பத்தெரிவாக அமைந்துவிடுகின்றனர்.எப்படியோ தான் தப்பிவிடுவேன் என்று தெரிந்துகொண்டே காரியத்தில் இறங்குகிறான் அவன்.


       

பாலியல் குற்றம் புரிவோரை நாமே அங்கீகரிக்கின்றோம்!
கேவலமான விடயம் ஆனால் அதுதான் உண்மை..ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால்,அவள் தன்னால் கெட்டவள்-தூய்மையற்றவள் என்கின்ற எண்ணம்,மனப்பாங்கு தான் இங்கு பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது.அவள் அனைவராலும் ஒதுக்கப்படுகிறாள்.சமூகத்தால்,உறவினர்களால்,கூட இருப்போரால் ஏன் பெற்றோரால் கூட தமது மகள் தப்பிழைத்தவள் என்ற ரீதியில் தான் அவள் நோக்கப்படுகிறாள்.எந்த மாப்பிள்ளை வீடுகளும் அப்படியான ஒரு பெண்ணை தமது மருமகளாகக ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

காம களியாட்டங்கள்   
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் பல்வேறு "காம களியாட்ட"எண்ணங்கள் மனதில் உண்டு.இன்றைய இளைஞர்கள் சமந்தா மீது கிறுக்கு கொண்டிருப்பதும்,முன்னோர் குஷ்புக்கு கோயில் கட்டியதும் இந்த களியாட்டங்களில் ஒரு வகையே!இது ஆரோக்கியமானது தான் ஆனால்,ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தே அது அவருடன்,அவருக்கு சொந்தமானவருடன் முடிவடைகிறதாஅல்லது  மற்றைய பெண்களை வன்புணர்வு செய்யும் நிலை வரை கொண்டு சென்றுவிடுகிறதா என்பது அமைகிறது.

ஒருவன் பெண்கள் மீது எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறான் என்பது அவனது அப்பா அவன் அம்மா மீது கொண்டிருக்கும் மதிப்பு,மற்றைய பெண்கள் மீது பொதுவாக கொண்டிருக்கும் மதிப்பு என்று பல காரணங்கள் தீர்மானிக்கின்றன.இன்றும் உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் காமத்தேவைக்கு பயனாகும் ஒரு "உபகரணம்" என்கின்ற மனப்பாங்கு பல ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அனைத்து இடங்களிலும் போலீஸ் நிற்கமுடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இத்தகைய பாலியல் வன்புணர்வு செய்வோராக திருந்தாவிட்டால் கற்பழிப்பை தடுக்க முடியாது என்பதே உண்மை. கற்பழிப்பை தடுக்க நாட்டின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் போலீஸ் பாதுகாப்பு வைக்க முடியாது.எமது நாட்டின் மக்களில் ஒரு குறித்த வீதமானோர் கற்பழிப்போராக இருக்கின்றனர்.பலருக்கு சில பயங்கள்,தடைகள் காரணமாக முயற்ச்சியில் இறங்காமல் இருக்க,சிலர் மட்டும் துணிந்து இறங்கிவிடுகின்றனர்.

நடத்தை கெட்ட பெண்களே கற்பழிக்கப்படுகின்றனர். 

இந்திய போலீசில் கூட கற்பழிப்பு புகார் கொடுக்க எந்த பெண்ணாவது சென்றால், "நீ நடத்தை கெட்டவள்,அதனால் தான் இப்படி நடந்தது" என்று தான் போலீசாரே கூறுமளவுக்கு இந்திய கலாச்சாரம்,மெண்டாலிடி அனைவரிடமும் ஊறிப்போய் இருக்கிறது.போலீசார் கூட அதே சமூகத்திலிருந்து, அதாவது வாய்ப்பு கிடைக்காத-வெறுப்படைந்த,கீழ்த்தரமான சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்தே வந்திருப்பதால் அவர்களையும் திருத்த முடியாது.அவர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளையோ, முற்போக்கான எண்ணங்களையோ எதிர்பார்க்க முடியாது அதே சமயம் அப்படி எண்ணம் கொண்டவர்களை போலீஸ் வேலைக்கு சேர்த்துக்கொள்வது என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராதது.


               

அம்மாக்களால் முடியும்!
சமூகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர "அம்மாக்களால்"முடியும்.தனது மகள் எப்படி உடையணிகிறாள், ஜீன்ஸ் போடுகிறாளா,போடும் சட்டை உடலில் எங்கு தங்குகிறது எங்கு விலகுகிறது என்று பார்த்து திருத்தும் அம்மாக்கள் தமது ஆண் பிள்ளைகளையும் வளர்ப்பிலேயே திருத்த முடியும்,சீரிய எண்ணங்களை சிறுவயதிலிருந்தே அவர் மனங்களில் விதைக்க முடியும்.அத்தகைய ஆரம்பகால விதைப்பு தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக காரணமாகிறது. ஒருத்தி விபசாரியாக இருந்தாலும் கூட அடிப்படையில் அவள் ஒரு பெண் தான் என்கின்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் மனதில் வரவேண்டும்;அதற்க்கு அம்மாக்கள் உதவவேண்டும்-இது எதிர்கால அம்மாக்களுக்கும் பொருந்தும்.

பாலியல் கல்வி 
இன்றைய பெரும்பாலான இளைஞர் யுவதிகள், பாடசாலையில் கற்றுத்தரும் மேலோட்டமான பாலியல் கல்வியில் தெரிந்துகொள்ளும் விடயங்களை விட(சிலருக்கே அந்த வாய்ப்பும்!) போர்னோ படங்கள் பார்ப்பதன் மூலம் அது சம்பந்தமாக தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர்.ஆனால் பழமைவாத சிந்தனைகளோடு இருக்கும் சில ஊடகங்களும்,மக்களும் இத்தகைய பாலியல் கல்வி அவசியமற்றது என்று கூக்குரலிட்டு இந்த சமநிலையை குழப்பிவிடுகின்றனர்.சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வயது வந்தோருக்கும் இன்று பாலியல் கல்வி அவசியமாகிறது.ஆனால் பாலியல் என்ற வார்த்தையை கண்டாலே துடித்து ஒதுங்கும் பலர் எங்களை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

ஆங்கில-இந்தி சிந்தனை வேறுபாடு
ஆங்கில மொழியில் படித்தவர்கள் சமுதாயத்தில் செக்ஸ் என்பது எந்தளவு ஆரோக்கியமானது,எந்தளவு பொதுவானது என்பது பற்றிய புரிதல் தேவையான அளவு வந்துவிட்டது.ஆனால் மறுபக்கம் இந்தி பேசும் சமூகத்தில்(இது மற்றைய அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்) அத்தகைய புரிதல்கள் இன்னமும் வந்துவிடாமல் "செக்ஸ் என்பது ஒரு கெட்ட சமாசாரம்" என்கின்ற புரிதலுடன் தான் பெரும்பாலானோர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த இந்தி -ஆங்கில மொழி சமூகத்துக்கிடையிலான இடைவெளி வெகு சீக்கிரம் குறைக்கப்பட்டு பாலம் அமையப்பெறல் வேண்டும்.அல்லது தொடரும் காலங்களிலும் பெண்கள் மீது தான் முழுமையான குற்றச்சாட்டு இடம்பெற்றுக்கொண்டிருக்கப்போகிறது.

மனவுறுதி கொண்ட பெண்கள் வேண்டும் 
பெண்கள் என்றால் மென்மையானவர்கள், எதையுமே தீரமாக எதிர்கொள்ள தெரியாதவர்கள் என்கின்ற எண்ணத்தை மாற்றி,பெண்கள் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும்.அவர்கள் மீது குடும்ப பொறுப்பு என்கின்ற பெரிய பாரத்தை மட்டும் செலுத்திவிடாது இது போன்ற விடயங்களில் ஒரு தெளிவான மனப்பாங்கை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.எந்த சமூகத்திலும் கற்பழிப்பு இருக்கின்றது ஆனால் எங்கள் சமூகத்தில் தான் கற்பழிக்கப்பட்ட பெண் தப்பானவளாக,தூய்மையில்லாதவர்களாக கருதப்படும் மனப்பாங்கு இருக்கிறது..

மனதில் தூய்மையாக,எண்ணங்களில் சுத்தமான மனிதர்களை மதியுங்கள்-உடல் ரீதியாக பார்க்காமல்!

--------------------------------------



மருத்துவ கல்லூரி மாணவி தான் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்.இரவு படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு பஸ்ஸில் வரும்போது தான் இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.சாமம் பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாய் பெண்கள் நகைகளோடு(!) நடமாடும் காலம் இன்னமும் வந்துவிடவில்லை என்பதை படித்த பெண்கள் அறியாதவர்களா என்ன! எத்தகைய கல்விமுறைகளும்,சட்டதிட்டங்களும் காமுக மிருகங்களை காமம் வெறிக்கேறிய தருணங்களில் கட்டுப்படுத்தி விடுவப்போவதில்லை.அதை உணர்ந்து தங்களுக்கேற்ற பாதுகாப்பில் பெண்களும் கொஞ்சம் அவதானமாய் இருப்பது அவசியம்.   
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தான் இந்த செய்தியை கேட்கும் எந்த மனமும் துடிக்கும்.ஆனால் பாலியல் வறட்சியை உருவாக்கி விடுவதும் இதே மனங்கள் தான் இதே சமூகம் தான்.திருமண வயதை பிந்திய இருபதுகளாகவும்,முப்பதுகள்,நாற்பதுகளாகவும் கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் பாலியல் வறட்சியால் விரக்தியடையும் நிலைமை கானப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.தூக்கிலிடவேண்டும் என்று கூறும் மக்கள் தான் பாலியல் கல்வி வேண்டாம் என்கின்றனர் -விபசாரத்தை முற்றாக ஒழிப்போம் என்கின்றனர். பழமைவாத எண்ணங்களிலிருந்து எப்போது அனைவரும் வெளியேறுகின்றனரோ, அன்று தான் ஒரு விடிவு..! அதற்கு பின்னர் தூக்கிலிடுவோம் !!

குறிப்பு:கற்பழிப்புக்கு வன்புணர்வு என்றும் ஒரு நாகரிகமான பதம் உள்ளது.நான் கற்பழிப்பு என்பதை பாவித்த காரணம்,வன்புணர்வு எனும்போது பெரும்பாலானோர் மனதில் கற்பழிப்பு எனும் சொல் ஏற்படுத்தும் தாக்கத்தை இது ஏற்படுத்துவதில்லை.

இது பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர்.ஆனால் இந்த பதிவு நீண்டு செல்வதை நான் விரும்பவில்லை.வாசிப்போரும் (ஒரு சிலரை தவிர)விரும்பமாட்டார்கள் என்று தெரியும்.
  

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...