Friday, December 16, 2011

மயக்கம் என்ன+போராளி =யதார்த்தம்


கடந்த ஒரு வாரத்தினுள் வெற்றிகரமாக இரண்டு படங்களை பார்த்து முடித்துவிட்டேன்,சசிக்குமாரின் "போராளி" மற்றும் தனுஷின் "மயக்கம் என்ன".
தமிழ்ப்படங்கள் பார்பதற்கும்,பதிவுகள் போஸ்ட் பண்ணுவதற்கும் என்னமோ இப்போது பெரிய ஆர்வம் இருப்பதில்லை.இரண்டுக்குமே குறைந்தது மூணு மணிநேரம் ஒதுக்கிவிட வேண்டும்.அடிக்கடி பதிவுலக நண்பர்கள் முணுமுணுப்பது போல,இப்போதெல்லாம் பதிவுகளை வாசிப்பவர்களை விட எழுதுபவர்களே அதிகமாய் இருக்கிறார்கள்..எனக்கும் அதில் கொஞ்சம் உடன்பாடு தான் ஆனால் இன்ட்லி தனது சேவையில் ஏற்படுத்திய மாற்றம் தான் பெரிய தாக்கத்தை ப்ளாக் பார்ப்போரின் எண்ணிக்கையில் ஏற்படுத்தி இருந்தது என்பது நான் கண்ட உண்மை.

யதார்த்த சினிமா வகையறாவுக்குள் இந்த மயக்கம் என்ன மற்றும் போராளி படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.சசிக்குமார்,சமுத்திரக்கனியின் வழமையான போர்முலாவில் வெளிவந்திருந்தாலும் கூட "போராளி" சமூகத்துக்கு ஒரு நச் மெசேஜ் ஒன்றை வழங்கியிருக்கிறது.சமூகத்தாலேயே பல மனநலம்குன்றியவர்கள் உருவாகிறார்கள்,உருவாக்குபவர்கள் உருவாக்கிவிட்டு கைவிட்டு சென்றுவிடுகிறார்கள்.மனநலம் குன்றியோரில் பெரும்பாலானோரை உருவாக்கிய பெருமை இந்த சமூகத்துக்கே உடையது என்று சசிக்குமார் படத்தில் தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.முக்கியமாக உறவினர்கள்.சொந்த உறவை விட நட்பே பெரியது என்று நாடோடிகளில் தொடர்ந்ததை போராளியிலும் தொடர்ந்திருக்கிறார்.சசிக்குமாரின் வாயிலிருந்து வெளிவரும் வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஷார்ப்!!சமுத்திரக்கனியின் எழுத்து பிரகாசிக்கிறது.

"சொந்தமெல்லாம் சும்மா...அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் பாத்துக்கணும்"
"எப்பவோ கிடைக்கிற பால்கோவாவை விட இப்ப கிடைக்கிற பப்பரமிட்டாய் தான் முக்கியம்"
இப்படி படம் முழுவதும் பல பன்ச் வசனங்கள் கொட்டிக்கிடக்கிறது!இந்த இரண்டு வசனங்களும் படம் பார்த்த எபெக்ட்டில் பேஸ்புக்கில் பகிர்ந்துகிட்டது.





("சிலோன் பாராட்டா" ஸீன்)

நாடோடி படத்தில் காட்டு காட்டிய 'சம்போ சிவசம்போ"போல போராளியிலும் ஒரு சேசிங் சாங்,அத்துடன் முதல் பாடலான "வெடி போட்டு பாடடா" பாடலும்,அது காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் கட்டாயம் நாடோடிகளை ஞாபகப்படுத்தும்!அதை தவிர பாடல்களுக்கு படத்தில் பெரிதான முக்கியத்துவம் இல்லாததாலோ என்னமோ பெரிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளவில்லை.

நுனி நாக்கு இங்கிலீஸ் பேசும் கூட்டம் ஒரு பிரச்சனைன்னு வந்திட்டா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்வார்கள் என்று வரும் காட்சி உண்மைகளை தொட்டு செல்கிறது.சாதாரணமாக வீதியிலோ வேறு எங்கிலுமோ ஏதும் பிரச்சனைன்னு வந்திட்டா களத்தில் இறங்கி வேலை செய்பவர்களில் இந்த நுனி நாக்கு இங்கிலீஸ் கூட்டமோ,"ப்ரோபெஸ்சனல்ஸ்" என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கூட்டமோ இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்,ஏன் நாங்களும் அந்த கூட்டத்துள் ஒருவராய் இருக்கவும் கூடும்!

மனிதனின் மிருககுணம் வெளிப்படுவதும் வெளிப்படாமல் இருப்பதும் அவனை சுற்றி இருப்போர் கைகளிலேயே இருக்கிறது.தங்கள் சுயநலனுக்காய் மற்றவனை பைத்தியக்காரன் ஆக்கவும் இந்த சமூகம் பின்னிற்காது,மன நலம்குன்றியோர் மீது அதிக கரிசனை தேவை என்று பல நல்ல செய்திகளை சொல்லி முற்றுகிறது போராளி திரைப்படம்.இரண்டாம் பாதி சற்று அதிகமான வன்முறைக்காட்சிகள் காட்டப்பட்டிருந்தாலும் கூட,படத்தின் கருவுக்கு அது தேவைப்படுகிறது.சசிக்குமார்க்கு இன்னொரு வெற்றிப்படமாய் போராளி அமையும்!!




அடுத்த படைப்பில் இந்த நாடோடிகள்,போராளி படங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வித்தியாசமான படைப்பொன்றையே சசிக்குமாரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.அடுத்தபடத்தில் மறுபடியும் சுவாதியா??(சசிக்குமார்+சுவாதி எப்போ கல்யாணம்?அழகான ஜோடி!)

-------------------------------------------------------------------------------------

"மயக்கம் என்ன" செல்வராகவனின் அடுத்த வித்தியாசமான படைப்புன்னு சொல்லலாம்.தம்பி தனுஷை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில்,"கால- களத்தில்" பெரிய நட்சத்திர பட்டாளம் இன்றி ஆர்ப்பாட்டமின்றி வழங்கி இருக்கும் அடுத்த யதார்த்தமான படைப்பு.படம் வந்த சில நாட்கள் இணையப்பக்கம் தலைவைத்துப்பார்க்க முடியவில்லை.காச்சு மூச்சென்று படத்தை பற்றி ஏகப்பட்ட எதிர்மறையான,காரசாரமான விவாதங்கள்.அந்தளவுக்கு என்ன தான் இருக்கிறது படத்தில் என்று பார்க்கும் ஆவலும்,கடந்த வாரத்தில் கிடைத்த எதிர்பாராத ஓய்வான மணித்தியாலங்களும் "மயக்கம் என்ன" படத்தை பார்க்க வைத்துவிட்டன.




எனக்கென்னமோ செல்வராகவனின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால்,அவரின் அடுத்த படங்களின் கதைகளை கூட கண்டறியலாம் என்று தோன்றுகிறது.அவரின் படக்கதைகள் சொந்த வாழ்க்கையில் நடந்த கதை போலத்தான் தெரிகிறது.
ஒரு சராசரி இளைஞன் தன் வாழ்க்கையில் வெற்றி பெற,தனது இலட்சியத்தை அடைய போராடும் போது ஏற்படக்கூடிய தடங்கல்களும்,எதிர்பாராத திருப்பங்களும் ஒன்று சேர,எப்போது,எப்படி தன் இலச்சியத்தை அடைகிறான் அதற்காக எவற்றை எல்லாம் தாங்கிறான் என்பதை புகைப்பட கலைஞனாக ஆசைப்படும் தனுஷின் "ஜீனியஸ்"கரெக்டரின் மூலம் செல்வராகவன் எவ்வித குழப்பங்களுமின்றி காட்டி இருக்கிறார்.

பாத்திரத்துக்கு சரியான கதாநாயகன்.எத்தகைய நடிப்பையும் இலகுவில் வெளிப்படுத்திவிட்டு செல்கிறார் தனுஷ்..படத்தின் மையக்கருவை தவிர்த்து,படத்தில் இடம்பெறும் ஆண்-பெண் காட்சிப்படுத்தல்கள் தான் பலரின் கவனத்தை திசை திருப்பி எதிர்மறை விமர்சனங்கள் வெளிப்படுத்த தூண்டி இருக்கிறது.இவர்கள் எல்லாம் எந்தக்காலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.நாட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அறிவாவது இவர்களிடம் இருக்கிறதா?எங்கள் சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஆண் பெண்,டேட்டிங் கலாச்சாரம் இல்லை என்று முற்றாக மறுத்துவிட முடியுமா இவர்களால்?இன்னமும் ஒரு ஐந்து பத்து வருடங்களில்,சமூக வலைத்தளங்களின் அபரிதமான வளர்ச்சியாலும்,கலாச்சார முன்னேற்றம்,மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்கள் என்பவற்றால்,படத்தில் காட்டப்பட்டிருக்கும் விடயங்கள் சர்வசாதாரணமாய் நடந்தேறிக்க்கொண்டிருக்கப்போகிறது.

இயக்குனர் செல்வராகவன்,கதாநாயகன் தனுஷ்,நாயகி ரிச்சா,ஒளிப்பதிவாளர் ராம்ஜி,மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் ஆகிய ஐவருமே படத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.யாமினி மாதிரியான கேரக்க்டர்கள் நிஜ வாழ்வில் பையன்களுக்கு ஆபத்து தான்.அவதானம் அவசியம்!அதே சமயம் தனுஷின் நண்பர் போல எவனும் தான் செட் பண்ணும் பொண்ணை குளிக்கும்போது கூட அவளுக்கு பல்லி என்றால் பயம்,பார்த்துக்கொண்டிரு நான் அவசரமாய் ஆயி போயிட்டு வாறன் என்று விட்டுவிட்டு போகமாட்டான்.நண்பர் சுந்தர் அனைத்து காட்ச்சிகளிலுமே அப்பாவியாய் ரிச்சாவை தனுஷுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது போல காட்டி இருக்கிறார்கள்.சில சினிமாத்தனங்கள் இருந்தாலும் கூட,செல்வராகவன் தனது பாணியை இந்தப்படத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.





அடுத்த தலைமுறைக்கான படம் என்று செல்வா முன்னமே கூறி இருந்தார்.உண்மையில் அடுத்த தலைமுறைக்கும்,இன்றைய இளைஞர் தலைமுறைக்குமான படம் தான் மயக்கம் என்ன!
அடுத்ததாய் தனுஷை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தால் செல்வராகவன்,ப்ளீஸ் அதிலும் தனுஷை ஒரு பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு காட்டிவிடாதீர்கள்.
அதென்னமோ தெரியவில்லை அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடும் படங்கள் தனுஷுக்கு மட்டுமே வைத்துவிடுகிறது.முன்னர் "யாரடி நீ மோகினி".இப்போது "மயக்கம் என்ன":P

இலச்சியத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக...





Post Comment

11 comments:

ம.தி.சுதா said...

////.சமூகத்தாலேயே பல மனநலம்குன்றியவர்கள் உருவாகிறார்கள்,உருவாக்குபவர்கள் உருவாக்கிவிட்டு கைவிட்டு சென்றுவிடுகிறார்கள்.////

இந்த இடத்தில் சற்று நேரம் நின்று விட்டுத் தான் நகர்ந்தேன்..

நன்றி மைந்து..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

Unknown said...

போராளி பாடல்கள்தான் ஒன்றும் கவரவில்லை. இந்த படத்துக்கு தேவை இல்லாததும் கூடத்தான். ஆனாலும் சுவாதி போராளி பார்த்து விட்டு சில ஸ்டேட்டஸ் போட்டேன் தெத்திபல் மேலும் அழகாக காட்டுகிறது.அத்துடன் சுவாதி தங்கையா வருபவரும் நல்ல அழகு.செல்வா ஆயிரத்தில் ஒருவனை தவிர அந்த கருத்து பொருந்தும் என நினைக்கிறேன். பாப்போம் அடுத்த பகுதியில் என்ன சொல்லுகிறார் என்று.ரிச்சா பற்றி ஒன்றையும் காணோம் :p

சுதா SJ said...

மைந்தன் ரெண்டு படமும் நான் இன்னும் பார்க்கவில்லை..... மயக்கம் என்ன நல்லம் சூப்பர் பாரு என்று தம்பி சொன்னான், இனித்தான் பார்க்கணும்.....

தர்ஷன் said...

போராளி இன்னமும் பார்க்கவில்லை, மயக்கம் என்ன பற்றிய சுருக்கமான தெளிவான பார்வை

பி.அமல்ராஜ் said...

அருமை.. படத்த பார்த்துட்டு வாறன் பாஸ்..

தனிமரம் said...

வணக்கம் சிவா ஐயா!
நலமா? இரண்டு படத்தையும் இடியுடன் இசைந்து பார்த்து விட்டீர்கள் அதுதான் இப்படிப் குறும்புடன் பதிவாக்கி வந்து அசத்துறீங்க.
நான் இன்னும் பார்க்க வில்லை இருபடமும் மயக்கம் என்னவில் ஒரு பாடல் சூப்பர் என்று நண்பன் சொன்னான் இனித்தான் கேட்கனும்.
அடிக்கடி நேரம் ஒதுக்கி பதிவு போடுங்க இல்லை என்றால் மூத்தபதிவாளர் முன்னால் ஜானதிபதி போல் மறந்து போய்விடுவார்கள் நண்பர்கள்.ஹீ ஹீ

தனிமரம் said...

எனக்கு என்னவோ இண்ட்லி ஒரே தலையிடி கொடுக்குது வாக்குப் போடவும் முடியல பின்னூட்டம் போடவும் முடியல இப்ப அந்தப்பக்கம் போறதும் இல்லை அந்தளவு கடுப்பு!

KANA VARO said...

ஜதார்த்த படங்களுக்கு தமிழ்சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுப்பது அந்த சினிமா உற்பத்தியாளர்களுக்கும் ஊன்றுகோள் தான்.

Yoga.S. said...

வணக்கம்,மைந்தன்!நீண்ட இடைவெளிக்குப் பின் பதிவிட்டதால் கவனிக்கவில்லை.மன்னிக்கவும். நலமாக இருக்கிறீர்களா?இரண்டு படங்களுக்கும் நன்றாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.இரண்டு படமும் பார்த்தேன்!மயக்........................ஒட்டவேயில்லை.போராளி பிடித்தது.(கில்மாவே இல்ல,ஹி!ஹி!ஹி!!)

நிரூபன் said...

வணக்கம் மச்சி!
நல்லா இருக்கிறீங்களா?

நீண்ட நாட்களின் பின்னர் அத்தி பூத்தாற் போல இரு படங்களின் விமர்சனம்!

அருமை மச்சி!
இலங்கையில் போராளி காட்சி இணைப்பினை யூடியூப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் மச்சி!

அப்புறமா இண்ட்லி மூலம் வருகையாளர்கள் குறைந்திருப்பது உண்மை தான்.

Unknown said...

போராளி அருமயா இருக்குய்யா!

Related Posts Plugin for WordPress, Blogger...