Friday, September 7, 2012

தோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா?

                    

ரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்.

சைட் என்றால் என்ன?வீதியிலோ ஆபீசிலோ நீங்கள் செல்லும்,இருக்கும் எந்தவொரு இடத்திலும்,எதிரில் உங்களை கவரக்கூடிய வகையில்  எதிர்பாலினர் யாராவது செல்லும்போது அவர்களை நோக்கி உங்கள் பார்வை செல்லுமாயின் அதனை சைட் எனலாம்.ஆண்கள் சைட் அடிப்பார்கள்,பெண்கள் அப்படி இல்லை என்று இன்னமும் ஆதிகால மனநிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.சைட் அடிப்பது என்பது முன்னைய காலங்களில் ஒரு கெட்ட வார்த்தையாக(!!) கருதப்பட்டு இன்று ஒரு ஸ்டைலிஷான வார்த்தையாகி போய்விட்டது.ஆனால் சங்க காலத்திலிருந்து இது நடந்து வருகிறது என்பது பலருக்கு  தெரிந்த விடயம்.

கிளி என்று சொன்னால்;
பறவையை குறிக்கலாம்
பச்சையை குறிக்கலாம்
மூக்கை குறிக்கலாம்
பெண்ணை குறிக்கலாம்
சமயத்தில் அது 
கிளியையும் குறிக்கலாம்..!(யாரோ)
இதனை போல தான் சைட்டும்.ஒவ்வொருவரை பொறுத்து விளக்கம் மாறுபடலாம்.

ஒரு ஆணுக்கு பெண்கள் மீதும் பெண்ணுக்கு ஆண்கள் மீதும் ஒருவகையான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி.இல்லை இது இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கூற முடியாது.அந்த இயற்கையின் நியதியை நாமாக உருவாக்கி கொண்ட "நட்பு" என்கின்ற உறவால் கட்டுப்படுத்த முடியுமா?ஏலவே காதலின்னு வந்திட்டா நண்பர்களை கழற்றி விட்டுவிடுவார்கள் என்று ஒரு "கெட்ட(?!)" பெயர் காதலிப்பவர்கள் மீது காலம் காலமாய் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.இதற்குள் இது வேறையான்னு பலர் ஜோசிக்கலாம்.

அந்த பிரச்னையை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு இந்த நட்பு வட்டத்துக்குள் வருவோம்.ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனதில் நட்பு நட்பு & நட்பு மட்டும் தானா இருக்கும்,அல்லது ஒருவர் மீது மற்றையவருக்கு ஒரு வித "கிரஷ் (Crush)"ம்  அந்த நட்புடன் சேர்ந்திருக்குமா?குறிப்பாக நான் கூற வருவது காதல் அல்ல,ஒரு வகையான ஈர்ப்பு மட்டுமே.வடிவாய் இருக்கிறான் இருக்கிறாள் என்று ரசிப்பது/சைட் அடிப்பது பற்றி மட்டும் தான் நான் கூறுகிறேன்.அவ்வாறு நண்பனை/நண்பியை சைட் அடிப்பது தப்பா?

நட்புக்குள் காதல் வரக்கூடாது என்று நட்பின் வைராக்கியத்தை கடைப்பிடித்து நட்புக்கு இலக்கணமாய்(?!) இருக்கும் நட்பு "நட்சத்திரங்கள்" கட்டாயம் இதற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டு வரத்தான் போகிறார்கள்.ஆண்களின் குணம் யார் அழகாய் இருந்தாலும் ரசிப்பது தான்."அழகை ரசிப்பது தப்பு கிடையாது" என்று தங்களுக்கே கூறிக்கொண்டு அதனை பெண்கள் மனதில் பதிப்பதிலும் ஆண்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்.அதனால் தான் அவர்களால் பிஞ்சு முதல் கொண்டு பாட்டி வரைக்கும் பயமில்லாமல் ரசிக்க முடிகிறது.அதனை அனுமதிக்கவும்,அனுபவிக்கவும் பெண்கள் கூட பழகிவிட்டனர் இன்றைய காலங்களில்.


தன்னை ஒரு பெண் ரசிக்கிறாள்,சைட் அடிக்கிறாள் என்று பெருமை கொள்ளும் சந்தோசமடையும் ஆணைப்போலவே பெண்களும் தங்களை யாரும் ஆண்கள் சைட் அடிக்கிறார்கள் என்று சந்தோசப்படுகிறாள்,பெருமையடைகிறாள் தன் அழகை நினைத்து.இதை விட இன்னமும் "பெர்போமான்ஸ்" வெளிப்படுத்த வேண்டும் என்று இருபாலாரும் முனைவது இயல்பு.காதலனோ,நண்பனோ,வீதியால் செல்பவனோ,அலுவலகத்தில் வேலை செய்பவனோ,பக்கத்தி வீட்டு லொள்ளு மனிதர்களோ அனைவருமே பெண்களுக்கு "ஆண்கள்" என்கின்ற ஒரு  பெரிய வகுப்புக்குள்ளே அடங்கி விடுகின்றனர்.அதே போலத்தான் பெண்களும்.ஆத்துக்காரியில் இருந்து அடுத்த வீட்டு மாமி வரைக்கும் அனைவரும் ஆண்களை பொறுத்தவரை"பெண்கள்" தான்.

இவ்வுலகை படைத்தது கடவுள் என நம்புவோர்களுக்கு இந்த கண்களையும் அந்த கடவுள் தான் படைத்தான் என்பது சொல்லி தெரியதேவை இல்லை.அவ்வாறு கண்களை படைத்த கடவுள் ஒருவன் யார் யாருடன் நட்பாக இருக்க போகிறான்/போகிறாள் என்பதை முதலே அறிந்து அவர்கள் மீது அந்த "ஈர்ப்பு"/சைட் வராமல் முன்னமேயே அவர்களது மூளையில் பிளானிங் செய்துவிட்டிருப்பாரா என்ன?அல்லது அந்த நட்பு முறிவடைந்த பின்னர் குறித்த முன்னாள் நண்பர்கள்/நண்பிகளை சைட் அடிக்க கூடிய வகையில் ப்ரோக்ராமிங் செய்து விட்டிருப்பாரா?


கடவுளை விடுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு அத்தகைய எண்ணம் மனதில் தோன்றியது?அல்லது ஏலவே திறம்பட சைட் அடித்துக்கொண்டு அதனை வெளியில் மறைத்துக்கொண்டு தான் இங்கு பெரும்பாலான/அனைத்து நண்பர்களும் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.நீங்கள் அவ்வாறு இல்லையானால் கீழே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.உங்கள் உணர்ச்சி நரம்புகளை நிறுத்திவைத்துவிட்டா நண்பர்களுடன் பழகுவீர்கள் என்று அவர்களிடம் கேட்பதாக உசிதம்.

நண்பனோ/நண்பியோ வடிவாய் இருக்கிறான்/ள் என்று பார்க்கையில் தோன்றுவது கூட ஒருவகையான சைட் தான்.இல்லை அதுவல்ல,வெறும் பார்வையோடு இன்னமும் சில மசாலாக்கள் தூவப்பட்டு வெளிப்படுவது சிலரது சைட் என்றும் கூறலாம்.சில பெண்கள் நாங்கள் செய்வது சைட் அடிப்பது தான் என்று தெரியாமலேயே நாங்கள் நண்பர்களை  சைட் அடிப்பதில்லை என்று கூறிக்கொண்டு அந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

நான் உங்களை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு சைட் அடித்து நட்புக்குள் குழப்பங்களை உண்டுபண்ண நான் விரும்பவில்லை.சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம்.இது காதலை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்று பெண்கள் பயப்பிடக்கூடும்.ஆனால் நட்புக்குள் "சைட்டிங்" ரகசியமாய் இருப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் உணர்ச்சிகள் என்பவை பெரும்பாலும் நம் மனதுடன் மூளையுடன் சம்பந்தப்பட்டு வேலை செய்கின்றன.சில உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் ஆனால் முற்றாக இல்லாது ஒழிக்கமுடியாது.அந்த வகையான ஒன்று தான் இந்த நட்புக்குள் "சைட்டிங்".

                                                                    

நான் உன்னை சைட் அடிக்கிறேன் என்று கூறிக்கொண்டே நல்ல நண்பர்களாக இருக்கமுடிகிறது பலரால்.அது ஒவ்வொரு நண்பர்களுக்கும் இடையில் இருக்கும் அந்த நட்பின் வலிமையை பொறுத்து இது அமைகிறது.இல்லை நாங்கள் நண்பர்கள்.இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று ஆகமத்தில் கூறி இருக்கிறார்கள்,ஆச்சியம்மா கூறி இருக்கிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இதனை புரியவைக்க முடியாது.

இன்னமும் சில நண்பிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது,"நட்புக்குள் அப்பிடி தோன்றாது,தோன்றினாலும் நண்பன் என்ற எண்ணம் அதனை தடுத்துவிடும்" என்றார்கள்.சைட்டிங் என்பது ஒரு கண நேர ஒர்மோன் விளையாட்டு.அந்த உணர்வு தோன்றிய பின்னர் தான் அந்த நண்பன்/நண்பி என்கின்ற எண்ணம் வந்து அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போவதை தடுக்கிறது.சைட்டிங் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது.ஆனால் நட்பு என்கின்ற உணர்வால் அந்த சைட்டிங் வேறு படிநிலைகளுக்கு போகாமல் தடுக்கமுடியும். 

இந்த நட்புக்குள் சைட்டிங் தப்பில்லை,தவிர்க்கமுடியாதது  என்று நான் கூறுகிறேன்,தப்பு என்று யாராவது கூற இருப்பின் தெளிவான விளக்கங்களுடன் கூறுங்கள்."ஆஹா இவன் இப்பிடியானவனா,இவன் கூடவா நட்புடன் இருந்தோம்"னு நினைக்கின்ற நண்பிகள் தங்களது நட்பு ஒப்பந்தத்தை இத்துடனே கிழித்து எறிந்துவிடலாம்.உங்களுக்கு பூரண அனுமதி உண்டு.ஆனால் நானும் ஒரு ஆண்,எதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்க போகும் நண்பனும் ஒரு ஆண் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஒன்றை மட்டும் அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்;
 "அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!!

என்றும் இயல்பான நட்புடன், 


Post Comment

16 comments:

JR Benedict II said...

சூப்பரா சொல்லி இருக்கீங்க நண்பா.. வாசித்த பாதியில் உங்களோட ஏதோ one சைட் லவ்வில் உள்ள தோழிக்கு மடல் போல இருந்தது.. hi hi

ஆனாலும் கடைசியில் கருத்தை டெரர் ஆக சொல்லி இருக்கீங்க.. நீங்க கூறிய சைட் அடித்தல் என்ற வார்த்தை தான் கொஞ்சம் நெருடலாய் இருக்கும்.. காரணம் தோழியே நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதற்கும் நீ சைட் அடிக்க கூடிய பிகர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.. ஆனால் மேற்கூறிய ரெண்டிலுமே உண்மை நட்பு இருக்கலாம்.. பழகும் அளவு கோலை பொருத்தது என்றே நினைக்கிறேன்.. மற்ற படி எல்லா கருத்துக்களுமே நின்று நிதானமாக எழுதப்பட்ட வரிகள் போல நச்..

அழகான நட்பு அழகான காதலாக மாறலாம் என்ற கருத்து என்னுடையது.. அது கல்யாணத்திலும் முடிய வேண்டும்..

மற்ற படி பதிவு ரொம்ப யூத்புல்லா கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள் மச்சி

KANA VARO said...

பயபுள்ளை நல்லாத்தான்யா எழுதுது

ம.தி.சுதா said...

ஐயா எனக்கொரு தோழியை சிபாரிசு செய்து விடுங்களேன்...

நிராதன் said...

//"அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!//.
இந்த போஸ்டோட ஹைலைட்டே!

நீங்க சொல்லுறது வீதம் 90%உண்மை தான் பாஸ்.

கேரளாக்காரன் said...

எதிர்பால் ஈர்ப்பது இயல்புதான மைந்தன் :)

பெண்களுக்கு முதல் ஹீரோ அப்பா

நாம கூட சின்ன வயசுல அம்மா மாதிரியே பொண்டாட்டி கேப்பொம்

தோழிட்ட மட்டும் என்ன விதிவிலக்கா

கட்டுப்பாடா இருக்கலாம் அதுக்கு மேல ஹி ஹி ஹி.... நானும் உங்கள் இனம் தான்

கேரளாக்காரன் said...

நான் பார்த்தவரை நட்பை பலட் ஒரு SAFETY க்காகத்தான் உபயோகப்படுத்துகின்றனர்

Yoga.S. said...

நல்ல விடயங்களைஎல்லாம் மைந்தர் தொட ஆரம்பித்து விட்டார்!ஆண் ஒரு பெண்ணுடன் நட்பாக இருக்கும்போது/பழகும்போது வேறு ஒரு ஆணால் அந்தப் பெண் சைட் அடிக்கப்பட்டால்???............நாம் ஏன் சைட் அடிக்கக் கூடாது என்று........................ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்க தலைவர் மைந்த்ன் பாஸ் தொட ஆரம்பித்து விட்டபின் நானும் சைட் அடிக்க ஒரு தோழி நேரில் கிடைக்கவில்லை பாஸ்§ஈஈ

Yoga.S. said...

தனிமரம் said...
நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்க தலைவர் மைந்த்ன் பாஸ் தொட ஆரம்பித்து விட்டபின் நானும் சைட் அடிக்க ஒரு தோழி நேரில் கிடைக்கவில்லை பாஸ்§ஈஈ...//////////இருக்கிறதை வெச்சு அட்ஜஸ் பண்ணுங்கோ!பறக்க ஆசைப்படக் கூடாது!!!!ஹ!ஹ!ஹா!!!!!!

Unknown said...

@ ஹாரி பாட்டர் //
நல்ல பின்னூட்டம் நன்றிகள் தல!


@KANA வரோ
ஹிஹி எல்லாம் காலக்கொடுமை தான் :)

@♔ம.தி.சுதா♔
ஆஹா அது நானில்ல!

@நிராதன்
மிகுதி பத்து வீதத்தையும் சொல்லிட்டீங்கன்னா...

@கேரளாக்காரன்
பெரும்பாலானோர் நம்ம இனம் தான் தல :)

@Yoga.ச
நல்லா தான் இருக்கு... :ப

@தனிமரம்
அது தான் யோகா ஐயா பதில் தந்துவிட்டாரே!

நெற்கொழுதாசன் said...

வாசிச்சுவிட்டு நிமிர்ந்து தேடினேன் எங்காவது யாரவது இருக்கிறாங்களா என்று ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் ஒருத் தீ கூட இல்லைதலைவா ???
வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

மற்றவர் பார்வையை உறுத்தாத வரை தவறில்லை! என்பது என் கருத்து!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

ஜேகே said...

சைட் அடிக்க தானே கண்கள் பாஸ் .. தோழியை அடிக்கும்போது மிஞ்சி மிஞ்சி போனால் முறைபபாளே ஒழிய செருப்பால் அடிக்கமாட்டாள் என்பது ஒரு சௌகரியம். அவளுக்கு ஒரு ஆள் இல்லாத வரைக்கும் சிக்கலே இல்லாமல் சிக்ஸ் அடிக்கலாம் .. ஆனால் அவள் மனதில் எண்ணங்களை வளர்க்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது!!!

Athisaya said...

"அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!!இது சரி.
அண்ணே அது என்னய்யா சைட்டிங்??என்ன ஒரு அக்கறையா ஆழமா யோசிச்சா இந்த பதிவ போட்டிருப்பீங்க:).வாழ்த்துக்கள்இப்படி இயல்பாய்பேசுவதற்கு.

காப்பிகாரன் said...

நண்பா சூப்பரா சொன்னிங்க நட்பா பழகுனாலும் நாம அவர்களால் ஈர்க்க படுவது இயல்புதான் அது மாறி கண்டிப்பா தோணும் தோணி இருக்கு ஆனா அத சில பேரு வெளி காட்டுவாங்க சில பேரு காட்டமாட்டங்க

Anonymous said...

Hi, intha ennam enakku adikadi vanthu ullathu. ennai vaithu solkiren. ennudam thozhi enakku manasukku pidichi iruntha nan nallave site adippen. manasukku pidichinna ennakku avaloda azhaku. appadi ellati site adikkama friendship maintain pannuven. 99% nan site than adikiren. vegu sila peridam mattum athai seiya matten.

Related Posts Plugin for WordPress, Blogger...