தினசரி காலை மதியம் மாலை இரவு என்று நாலு ஸ்டாண்டர்ட் ஸ்டேடஸ்(நம்மள மாதிரி கொய்யாலே பிக்காலி எண்டு எல்லாம் வராது) போட்டு வரும் பதிவர் மருதமூரான் என்றழைக்கப்படும் புருசோத்தமன் தங்கமயில் அண்மைக்காலமாக அதிகப்படியாக அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக அடிக்கடி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் போன்றவற்றில் வெளிப்படுத்தி வருகிறார்.முன்னமே அரசியலில் நடுநிலையான கருத்துக்களை அப்பப்போ கூறி வந்த மருதமூரான்,சமீப காலங்களாக பல கருத்துக்களை கூறி வந்தமையானது பலரின் முக்கியமாக பல அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.பழைய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது,எதிர்கால அரசியல்வாதிகளும் சித்தம் கலங்கி பித்தம் தெளிந்து மறுபடி கலக்கத்திலிருப்பதாக செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
காந்திய வழியே தன் வழி எளிய நடை,எளிய உடை என்று சிம்பிளாக மக்கள் மனம் கவர்ந்தவர்(கன்னியர் கள்வன் கூட!) மருதமூரான்!இலங்கை ஊடக கல்லூரியில் பயின்றவர்!ஆனால் சில பல காரணங்களால் அன்னா ஹாசரேயை சற்றும் மதிக்காதவர்!
எத்தனை நாட்களுக்கு தான் நடுநிலமையான கருத்துக்களை வெறுமனே முன்வைத்துக்கொண்டிருப்பது என்று தீர்க்கமாக சிந்தித்து இன்றைய தமிழர் அரசியல் மேடையில் காணப்படுகின்ற வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு பதிவுலகம் மற்றும் ஊடகத்துறை,பொதுச்சேவை துறைகளில்,மற்றும் இன்னா பல துறைகளிலும் உள்ள செல்வாக்கையும் பயன்படுத்தி பாழாப்போன அரசியலில் விடி வெள்ளியாக பிரகாசிக்க அரசியல் களத்தில் மருதமூரான் குதித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு தெரிய வருகிறது.
இதற்க்கு மேலும் ஊக்கம் தரும் விதமாக அவரின் பின்வரும் பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் அறுதி கூறுகின்றன!
இன்று இரவு அரசியலில் இறங்குவது பற்றி படு பயங்கரமான சிந்தனைகளில் ஈடுபட்ட மருதமூரான்,ஆரம்பத்திலேயே பல அரசியல் வேலைகளை காட்டி தான் அரசியலுக்குள்ளே இறங்க வேண்டுமென்று ஒரு முடிவுக்கு வந்தவராய் அதனை பேஸ்புக்கில் ஸ்டேடஸ்'ஆக போட்டிருந்தார்.இதன் மூலம் தனது ஆதரவாளர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்று அறிய.அந்த பெரிய சுப்பர் ஸ்டாரே அரசியல் இறங்கலாமா என்று பார்க்க ஒரு தேர்தலில் அவர்களுக்கு போடாதீர்கள் இவர்களுக்கு போடுங்கள் என்று வெளிப்படை அறிக்கை விட்டு மண் கவ்விக்கொண்டவர்.ஆனால் எங்கள் மருதா அண்ணன்(இனி அப்பிடி தான்..இனிமேல் எல்லாமே அப்பிடித்தான்!)சாதாரண தொண்டனின் கருத்தை அறிய,போட்ட ஸ்டேடஸ் பலத்த வரவேற்பை பெற்றது!
இத்தகைய கண்மண் காணாத வரவேற்பை சற்றும் எதிர்பாராத அண்ணன் எங்கள் மன்னன் தன்னடக்க சிங்கம் மருதா அண்ணன் என்னை(பதிவர் மைந்தன் சிவா)அவர்களை தனது புதிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்திருக்கிறார் என்பது இன்று இரவு எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமாகும்!
எதிர்கால இலங்கை அரசியலில் கொடி கட்டி பறக்க இருக்கும் அண்ணனை வாழ்த்தி அவருடன் சேர்ந்து கை கோருங்கள்.எதிர்கால இலங்கையில் ஒரு தலைசிறந்த அரசியல் தலைமையின் அத்திபாரத்தை எழுப்பியோரில் நீங்களும் ஒருவன் என மார்தட்டுங்கள்!!!
இதற்க்கு மேலும் ஊக்கம் தரும் விதமாக அவரின் பின்வரும் பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் அறுதி கூறுகின்றன!
இன்னமும் கட்சியின் பெயர்,இலச்சினை,கொடி,கட்சி யாப்பு,உறுப்பினர் தெரிவு என பல விடயங்கள் செய்யப்படவேண்டி இருப்பதால் இந்தப்பதிவு போடும் சமயம் ஒரு தனிப்பட்ட பேட்டி தர இருந்த மருதா அண்ணன் நேரம் போதாமையால் பின்னர் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்படும் போது உங்களுக்கும் அழைப்பு தருகிறேன் என்று அன்பாக கூறியமையால் அவரின் கட்சிப்பணிகளை குழப்பாமல் விட்டுவிட்டோம்.
அண்ணன் தோள்களை பலப்படுத்துவோம்!கரங்களை முறுக்கேற்றுவோம்!!(என்ன அண்ணன் ஜிம்'முக்கா வந்திருக்காரு!)
குறிப்பு: நீண்ட நாட்களாக பதிவெழுதாமல் இருந்த நான் மருதா அண்ணன் அரசியலில் குதிக்கிறார்னு சொன்னதுமே தலை கால் புரியாமல் ஐந்து நிமிடத்தில் போடப்பட்ட பதிவு தான் இது!அந்த ஐந்து நிமிடத்தினுள் அங்கே எழுபத்தைந்து கமெண்டுகள் இந்த ஐம்பதுக்கு மேலாக வந்து குவிந்திருக்கின்றன என்பதிலிருந்து அண்ணனின் மக்கள் சக்தியை நீங்கள் கணிச்சு பாருங்களேன்!
47 comments:
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மருதமூரான் வாழ்க :)
ஏன்னா எவனையுமே காணோம்??நாம நிரந்தரமா போயிட்டோம்னு நினைச்சிட்டான்களோ!!அவ்வவ்
வெறுமனே வெளியில் இருந்துகொண்டு அரசியல் சாக்கடை என திட்டிக்கொண்டிருப்பதைவிட சமுதாய அக்கறையும் திறமையும் உள்ளவர்கள் அரசியலில் இறங்கினால்தான் நல்ல மாற்றங்கள் உண்டாகும்
ஏனுங்கோ! அந்த நிதி சம்மந்தமான பொறுப்பு ஏதாவது இருந்தால் என்னை போல அப்பாவிகளுக்கு கொடுங்கோ )
முடியல்ல ஒருத்தர உசுப்பேத்தி விடுறதே உங்க வேலையா ,?
அம்பலத்தார் said...
//
வெறுமனே வெளியில் இருந்துகொண்டு அரசியல் சாக்கடை என திட்டிக்கொண்டிருப்பதைவிட சமுதாய அக்கறையும் திறமையும் உள்ளவர்கள் அரசியலில் இறங்கினால்தான் நல்ல மாற்றங்கள் உண்டாகும்//
உண்மை தான் அண்ணே!!இந்த அண்ணனுக்கு அந்த காலம் பதில் சொல்லட்டும்!
//நிகழ்வுகள் said...
ஏனுங்கோ! அந்த நிதி சம்மந்தமான பொறுப்பு ஏதாவது இருந்தால் என்னை போல அப்பாவிகளுக்கு கொடுங்கோ )//
அண்ணன் அரசியலில் ஊழலே இருக்காது தெரியுமெல்லோ!
//Mahan.Thamesh said...
முடியல்ல ஒருத்தர உசுப்பேத்தி விடுறதே உங்க வேலையா ,?///
இது நிசமுங்கோ!!
அண்ணே எப்பவுமே ஆளுங்கட்சியில் இருப்பாரா?
இல்லே அடிக்கடி கட்சி மாறுவாரா?
பாஸ்...நான் ஏதாச்சும் பதிவுகளில் தப்பா எழுதியிருந்தா மன்னிச்சுக்குங்க.
எதுவா இருந்தாலும் வடிவேல் பாசையில் சொல்றேன்.
பேசித் தீர்த்துக்கலாம்./
வீட்டுக்கு வெள்ளை வான் அனுப்புற வேலை எல்லாம் வைச்சுக்க வேணாம்!
எங்கள் தங்கத் தமிழன்
தங்கமயிலோன் பெற்ற சிங்கம்
கொழும்பு மாநகரில் தமிழர்
பலத்தை கொளுத்திக் காட்டும் தன் மானத் தமிழன்!
அண்ணன் மருதமூரான்
வருங்கால தமிழ் எம்பி
மருதமூரான் வாழ்க!
வாழ்க!
(பாஸ் எம் பி ஆகியதும் எனக்கு விசேட கணிப்பு இருக்கும் தானே..
இப்பவே என் பெயரை டயரில் நோட் பண்ணிக்குங்க;-))))))))))
//நிரூபன் said...
அண்ணே எப்பவுமே ஆளுங்கட்சியில் இருப்பாரா?
இல்லே அடிக்கடி கட்சி மாறுவாரா?
பாஸ்...நான் ஏதாச்சும் பதிவுகளில் தப்பா எழுதியிருந்தா மன்னிச்சுக்குங்க.
எதுவா இருந்தாலும் வடிவேல் பாசையில் சொல்றேன்.
பேசித் தீர்த்துக்கலாம்./
வீட்டுக்கு வெள்ளை வான் அனுப்புற வேலை எல்லாம் வைச்சுக்க வேணாம்!//
கட்சி மாறுவது என்பது அண்ணனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது!!!
வெள்ளை வான் கலாசாரத்தை ஒழித்துக்கட்டுவேன் என்று தேர்தல் சபதம் விட போவதாக கேள்வி!
அண்ணா கட்சிமாறினாலும் காலம் எல்லாம் நான் தான் உங்களுக்கு காரிய தரிசி வேலை செய்வன் என்னையும் சேர்த்துக்குங்க நீங்கள் பச்சை என்றாலும் நிலம் என்றாலும் வேட்டியை மட்டும் மாற்றிவிடுவேன்!
கட்சிக்கு ஏற்ற பாடலை தனிமரம் தவளவிடும் தயங்காதே தலைவரே புறப்படு சிங்கமாக கொழும்பில் ஒரு இடம் இருக்கு நிரப்பலாம் சுயேட்சையாக போட்டியிட்டாலும்:
மருதமூரானுக்கு உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல வெளிநாட்டு அரசியலிலும் இடம் உண்டு பாரிஸ் வரை ஓட்டுப்போடும் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை எதிர்கட்சியினருக்கு கூறிக்கொள்கின்றேன் பிரச்சாரப்பீரங்கி கூட தயார் தலைவரே!
நீண்ட நாட்களாக தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவன் இல்லை என்னும் குறையை எங்கள் மருதமூரான் தீர்த்து வைப்பார்..!! இப்போதுதான் எனக்கு விளங்கியது ஏன் இவர் ஊரின் பெயரோடு தனது பெயரை சேர்ந்தார்ன்னு.. நீண்டகால திட்டமிடல் இல்லாமல் இப்படியெல்லாம் செய்ய முடியாது...!!?? வாழ்க தலைவர் வளர்க அவர் தன் புகழ்... கடைசி பஸ்சில் நான் உங்களோடு வந்தாலும் என்னையும் மறக்காதீர்கள் தலைவரே..!!
தனிமரம் said...
அண்ணா கட்சிமாறினாலும் காலம் எல்லாம் நான் தான் உங்களுக்கு காரிய தரிசி வேலை செய்வன் என்னையும் சேர்த்துக்குங்க நீங்கள் பச்சை என்றாலும் நிலம் என்றாலும் வேட்டியை மட்டும் மாற்றிவிடுவேன்!
September 24, 2011 12:20 AM
யோ என்னையா தனிமரம் இபோதுதான் கட்சியே ஆரம்பிச்சிருக்கிறார் தலைவர் அதுக்குள்ள துண்டு மாத்திறேன்னு நிக்கிறாய்.. உன்னை நம்பி என்னன்னு பொறுப்பு கொடுக்கமுடியுமையா..!!???
தலைவரின் பிரச்சார வாகணப்பொறுப்பு என்னுடையது அதற்கு கைமாறா நான் என்னத்த பெருசா கேக்கப்போறன்.. போக்குவரத்து,இல்லைன்னா கால்நடைதுரைய இந்தப்பக்கம் தள்ளி விடுங்க தலைவரே..!!!
மைந்தா என்னன்னு பயப்படாது அரசியல் பதிவு போட்டீங்க...? ஏன்னா எல்லா அரசியல் பதிவிலேயும் உங்கட கொமொண்டு இப்பிடித்தானே இருக்கும்:-ஹி ஹி,ம்,அப்புறம்,எனக்கு அரசியல் தெரியாது,)))),!!!,???, ஹி ஹி ஹி
அந்தவானத்தை போல மனம் படைச்ச மன்னவனே...இது ஆரம்பம்...
தொன்பாண்டிச்சீமையிலே...தேரோடும் வீதியிலே...மான் போல வந்தவனை யாரடித்தாரோ...யாரடித்தாரோ...இது.................
அடுத்த இனிங்ஸ்சில இறங்கிட்டீங்களா மாப்ள வழமை போல இனி பதிவு வருமா?அமலா பால் கூட எல்லாம் முடிஞ்சுதா?அதாவது..அவங்களை ரசிச்சு முடிஞ்சுதா?
தலைவர்கிட்ட..சொல்லி சுற்றூலாத்துறையை நம்ம பக்கம் தள்ளிவிடச்சொல்லுங்க..ஹி.ஹி.ஹி.ஹி
வணக்கமையா! வணக்கம்! என்னைத் தெரியுதா?
வலையுலகுக்கு மீண்டு ( ம் ) வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
மாப்ள இந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் 7 வது ஓட்டு நானு..எனவே முகப்பில் வரவச்சதுக்காக(பதிவ)எனக்கு ஏதும் நல்ல குட்டியா சாரி சாரி நல்ல பதவியா வாங்கித்தாங்க
ஐ ஆம் சப்போர்ட்டிங் ஃபோர் மருதமூரான்!
Powder Star - Dr. ஐடியாமணி said...
வணக்கமையா! வணக்கம்! என்னைத் தெரியுதா?///
யோவ் மச்சான் சார்..நீங்க அதிரடியா இறங்கினதை நினைச்சுதான்..மைந்தன் அமலாபாலை உங்கள் கிட்ட இருந்து காப்பாத்ததான் இத்தனை நாள் பதிவுலகுபக்கம் வரலையாம்..இதுல நீங்க வேற வந்து தெரியுதானு கேட்குறீங்க மீண்டும்..னைந்தன் எஸ் ஆகப்போறார்(அப்பா கோத்து விட்டாச்சு)
ஓ! கதை இப்பிடி வேற போகுதா
// ஒவ்வொரு புதிய அரசியலின் ஆரம்பத்திலும் கூட ஆயிரம் அரசியல் தங்கியிருக்கிறது!//
மருதமூரான் வாழ்க!வாழ்க!
மருதமூரான் வாழ்க
எங்கள் பிரச்சாரப்பீரங்கி, போர்வாள், அண்ணன் மைந்தன் வாழ்க வாழ்க
ஆமா நீங்க யாரோ சீமா என்ற பெண்ண கலியாணம் பண்ணீட்டிங்களாமே? ஃபேஸ்புக்கில எல்லாம் போட்டிருந்தாங்க..... உண்மையா
பாருங்களன் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட எத்தின பேர் ஆர்வமா இலையுறாங்கப்பா....! எனிவே, உங்களின் ஆமோகா ஆதரவுக்கு நன்றிங்கோ. ஹிஹிஹி
மைந்தன் என்னுடைய பிரச்சார பிராங்கியாக இருக்கும் வரை எங்களின் அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது என்பதை- இந்த உலகுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!! பாருங்களன் அரசியல்வாதி என்டவுடனேயே அந்த ஸ்டைலில பேச்சு வருது.
அவரின் அரசியல் பிரவேசத்திற்க்கு வாழ்த்துக்கள்
thamil manam ,indli voted
அரசியல் எல்லா இடத்திலும் இருக்கிறது...இறங்கிப்பார்ப்பது தவறொன்றுமில்லை மாப்ள!...வாழ்த்துக்கள்!
நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.. சகோ.. நலமா?
அப்படியா,வடம் பற்ற தயார்..ஆனால் கட்சி ஒண்ணா இருக்கணும்.பதவியேற்ற தங்களுக்கும் ஜே.. ஜே.....
வாழ்க .....வாழ்க ..தமிழன் அரசியல் வாழ்க..hahaha
பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்.
அண்ணன் மருதமூரானும், பிராப்ள பதிவர் மைந்தனும் சாக்கடைக்குள் இறங்கும் நன்னாளை ஆவலுடன் எதிரபார்க்கிறேன்! :-)
பாவம் மருதமூரான்!இப்பிடித் தான் முந்தி,எம்.சி.யார் ஒரு ஆளை கொள்கை பரப்புச் செயலாளரா போட்டவர்!அவர் போட்டுட்டு போய்ச் சேந்திட்டார்!இப்ப?????விளங்கும்(மருதமூரானுக்கு)எண்டு நினைக்கிறன்.ஹி!ஹி!ஹி!
அண்ணனின் மக்கள் சக்தியை நீங்கள் கணிச்சு பாருங்களேன்!///அதைக் கெடுப்பது எப்படி எண்டு நீங்கள் கணிச்சுப் பாப்பியளோ?
என்ன விஷயம்,உங்கட ப்ளக்கின்ரை ஸ்ரையில மாத்திப் போட்டீங்கள்?உங்கட அந்த "அழகான" வதனத்தைப் பாக்க ஆசையா இருக்கு!
உங்களிட்டப் பிடிச்சதே அந்த " நேர்மை" தான்!(இதோட நிமிந்தாச் சரி!)
எப்ப கொடி(பட்டம் இல்ல)ஏத்துற எண்டு சொல்லுங்கோ!வாழ்த்து அனுப்புறன்!
மச்சி!வந்துடீங்கல்ல !இனிமே கலக்கல்தான்!
வருங்கால உலகத்துக்கே ஜனாதுபதி அண்ணன் மருதமூரான் வாழ்க!
அவருக்கு இடக்கை,உலக்கை,மன்னிக்கவும் வலக்கையும் போர்குனம் கொண்ட போர்வாள்,எத்தனை நாள் ஆனாலும் எதிரிகளின் முகாமில் இருந்து எல்லாத்தையும் தாங்கும் இரும்புநெஞ்சம் கொண்ட எங்கள் மண்ணின் மைந்தன் கொ.ப.செ.மைந்தன் சிவா வாழ்க!
இப்படித்தான் சென்னைபித்தன் ஒரு கட்சி தொடங்கி மயிலாப்பூர் சட்ட மன்றத்தொகுதியில் நிற்கப் போவதாக ஒரு பதிவு போட்டார்!
எல்லாரும் அரசியலுக்கு வாராங்க சரி அவரும் வந்துட்டு போட்டுமே
அடுத்த தேர்தலுக்கு செம போட்டி தான்
உங்க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நீங்கள் தானே ? கட்சியின் கொள்கைகளை கொஞ்சம் சொல்லுங்கள்?(கொள்கையே இல்ல.. ஆனா கொள்கை பரப்பு செயலாளர் )
உங்க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நீங்கள் தானே ? கட்சியின் கொள்கைகளை கொஞ்சம் சொல்லுங்கள்?(கொள்கையே இல்ல.. ஆனா கொள்கை பரப்பு செயலாளர் )
Post a Comment